read.cash Log in

@ChemRaj

Joined 8 May 2020 · 101 posts

I am a Blogger and Part time Story Teller and Writter

120 KT

0 KT · $4.75 received · 0 KT · $2.60 given

Posts

@ChemRaj

Nalanthana Man Vesum Tamil 11 இங்குவருக அரசே வருகமுலை யுண்கவருக மலர்சூ டிடவருகஎன் தந்தையே வருக, ரகு நாயகனே வருக, மைந்தனே வருக, மகனே இனி வருக, என் கண் வருக, எனது ஆருயிரே வருக,, எனது ஆருயிரே வருக, அபிராம இங்கு வருக என்றுபரிவி னொடுகோ சலைபுகல -- வருமாயன் இங்கு வருக அரசே வருக முலை உண்க வருக மலர் சூடிட வருக என்று பரிவினோடு கோசலை புகல - வரும் மாயன் இங்கே வருக, அரசே வருக, முலைப் பால் உண்ண வருக (தாய் அழைக்கிறாள்), மலர் சூடிட வருக, என்று பரிவோடு, கோசலை சொல்ல , வரும் இராமன் சிந்தைமகிழு மருகா குறவரிள வஞ்சிமருவு மழகா அமரர்சிறை சிந்த அசுரர் கிளைவே ரொடுமடிய -- அதிதீரா

@ChemRaj

Nalanthana Man Vesum Tamil 10 மருத்துவராகப் போய் பார்த்து (பண்டிதன்), பிள்ளைகள் "இந்த கிழம் எவ்வளவு கடனை வச்சுட்டுப் போகப் போகுதோ" என்று துயருற மங்கை யழுது விழவே யமபடர்கள் நின்றிசருவ மலமே யொழுகவுயிர் மங்குபொழுது கடிதே மயிலின்மிசை -- வரவேணும் என் மனைவி என் மேல் விழுந்து அழ, யம பட்டர்கள் வரும் வேளையில், உடல் எல்லாம் மலம் ஒழுக, என் உயிர் மங்கும் போது, மயில் மேல் வரவேண்டும். எந்தைவருக ரகுநா யகவருக மைந்தவருக மகனே யினிவருக என் கண்வருக எனதா ருயிர்வருக -- அபிராம எந்தை வருக ரகு நாயக வருக மைந்த வருக மகனே இனி வருக என் கண் வருக எனது ஆருயிர் வருக - அபிராம

@ChemRaj

Nalanthana Man Vesum Tamil 9 தொண்டு கிழவன் இவன் யார் என இருமல் கிண் கிண் என உரையே குழற விழி துஞ்சு குருடு படவே செவிடு படு - செவியாகி தொண்டு கிழவன் இவன் யார் என (வினவ), இருமல் கிண் கிணி போல் எப்போதும் சத்தம் தந்து கொண்டே இருக்க, பேச்சு குழறி, ஒளி பொருந்திய விழிகள் தூங்கு மூஞ்சி விழிகள் மாதிரி மாற, என் காதுகள் செவிடாகி..... வந்தபிணியு மதிலே மிடையுமொரு பண்டிதனுமெ யுறுவே தனையுமிள மைந்தருடைமை கடனே தெனமுடுகு -- துயர்மேவி வந்த பிணியும் அதிலே இடையும் ஒரு பண்டிதனும் மெய் உறு வேதனையும் இள மைந்தர் உடமை கடன் ஏது என முடுகு - துயர் மேவி இல்லாத நோய் எல்லாம் வந்து சேர, அதை போக்க ஒவ்வொரு

@ChemRaj

Nalanthana Man Vesum Tamil 12 சிந்தை மகிழும் மருகா குறவர் இள வஞ்சி மருவும் அழகா அமரர் சிறை சிந்த அசுரர் கிளை வேரோடு மடிய - அதி தீரா சிந்தை மகிழ வந்த அவன் மருமகனே, இளைய குற மகளான வள்ளியை அணைக்கும் அழகா ! தேவர்கள் சிறை சிந்திப் போக, அவர்களை சிறை வைத்த அசுரர் சுற்றம் வேரோடு - அதி தீரா திங்களரவு நதிசூ டியபரமர் தந்தகுமர அலையே கரைபொருத செந்தி னகரி லினிதே மருவிவளர் -- பெருமாளே. திங்கள் அரவு நதி சூடிய பரமர் தந்த குமர அலையே கரை பொருத செந்தி நகரில் இனிதே மருவி வளர் - பெருமாளே திங்கள், அரவு, நதி சூடிய பரமர் (சிவன்) தந்த குமாரா, அலைகள் உரசும் கரையை கொண்ட திரு செந்தூரில் மருவி வளர் பெருமாளே

@ChemRaj

Nalanthana Man Vesum Tamil 8 கீழ் கண்ட பாடலில், முதுமையின் கஷ்டத்தை கூறி, அந்த முதிய காலத்தில் நீ வந்து என்னை காக்க வேண்டும் என்கிறார் அருணகிரி பெருமான்.... தொந்திசரிய மயிரே வெளிற நிரை தந்தமசைய முதுகே வளைய இதழ் தொங்கவொருகை தடிமேல்வர மகளிர் -- நகையாடி தொந்தி சரிய மயிரே வெளிற நிரை தந்தம் அசைய முதுகே வளைய இதழ் தொங்க ஒரு கை தடி மேல் வர மகளிர் - நகையாடி வயிறு தொப்பை வைத்து, வெளியே தள்ளிக் கொண்டு வர, முடி நரைத்து வெள்ளை நிறமாக மாற, வெண்மையான தந்தம் போன்ற பற்கள் லொட லொட என்று ஆட (தந்தம் அசைய), முதுகு வளைய, உதடுகள் தொங்கிப் போக, இரு கை வீசி நடந்த நான், இப்போது ஒரு கை கைத்தடியின் பிடித்துகொண்டு நடக்க, இளம் பெண்கள் எல்லாம் சிரித்து.... தொண்டுகிழவ னிவனாரென இருமல் கிண்கிணெனமு னுரையே குழறவிழி துஞ்சுகுருடு படவே செவிடுபடு -- செவியாகி

@ChemRaj

Nalanthana Man Vesum Tamil 7 நீண்ட நாள் பிரிந்த தவிப்பு இருக்கும் தானே? அவளிடம் அன்பாக "நீ எப்படி இருக்க, ரொம்ப கஷ்டப் பட்டியா...ரொம்ப மெலிஞ்சு போய்டியே..." என்று எல்லாம் கேட்பதை விட்டு விட்டு, காதில் கேட்க முடியாத சொற்களை அவள் முன் வீசுகிறான் ஊண்திறம் உவந்தனை; ஒழுக்கம் பாழ்பட, மாண்டிலை; முறைதிறம்பு அரக்கன் மாநகர் ஆண்டுறைந்து அடங்கினை; அச்சம் தீர்த்து இவண் மீண்டது என்? நினைவு, :எனை விரும்பும்" என்பதோ?'ஊண்திறம் உவந்தனை = நல்ல இரசிச்சு சாப்பிட்ட (இராவணன் அரண்மனையில்). (ஊண் = உணவு; உவத்தல் = சந்தோசப் படுதல் )ஒழுக்கம் பாழ்பட, மாண்டிலை = உன் ஒழுக்கம் கெட்ட பின்னும், நீ இறக்கவில்லைமுறைதிறம்பு = முறை கெட்ட (திறம்புதல் = பிறழ்தல் )

@ChemRaj

Nalanthana Man Vesum Tamil 6 மறுபுறம், அவனின் சகோதர பாசத்தை தொடுகிறான். உன் தம்பி விபிஷணன் போய் விட்டான், நீயும் போய் விடு, நான் தனியாக இருப்பேன் என்று மறைமுகமாக சுட்டுகிறான். அதாவது கும்ப கர்ணன் சொன்ன வாதங்களை எல்லாம் விட்டு விட்டான்...அதற்க்கு அவனிடம் பதில் இல்லை. அவனை உசுப்பு ஏத்தி விட்டு, அவனை போருக்கு செல்ல வைக்க வேண்டி, இப்படி சொல்கிறான். கும்ப கர்ணன் provoke ஆனானா இல்லையா ? இதற்க்கு கும்ப கர்ணன் என்ன சொன்னான். கம்ப இராமாயணம் - அக்னி பிரவேசம் இராமாயணத்தில், அக்னி பிரவேசம் ரொம்பவும் சங்கடமான இடம்...வாலி வதை போல. சீதையை காணாமல் இராமன் தவிக்கிறான், அழுது புலம்புகிறான், தூக்கம் வராமல் கஷ்டப்படுகிறான். பின் சண்டையிட்டு வென்ற பின் சீதை வருகிறாள்.

@ChemRaj

Nalanthana Man Vesum Tamil 5 மானுடர் இருவரை வணங்கி = இராம லட்சுமணர்களை வணங்கி மற்றும் அக் கூன் உடைக் குரங்கையும் கும்பிட்டு = அனுமன் மற்றும் இதர கூனுடைய குரங்குகளை கும்பிட்டு உய்தொழில் = உயிர் பிழைக்கும் தொழில் உம்பிக்கும் உனக்குமே கடன் = உன் தம்பியான விபீஷனனுக்கும் உனக்குமே கடன் யான் அது முடிக்கிலேன் = என்னால அது முடியாது ஒரு புறம் கும்ப கர்ணனின் தன் மான உணர்ச்சியை தூண்டி விடுகிறான் - மானிடர்களையும், குரங்குகளையும் உன்னால் வணங்க முடியுமா ? நீ செஞ்சாலும் செய்வ, நான் மாட்டேன் என்று அவனை சமாதானத்தில் இருந்து விலக்கி போருக்கு செல்ல தூண்டுகிறான். எழுக போகென்றான் = நீ எழுந்து போ என்றான்

@ChemRaj

Nalanthana Man Vesum Tamil 4 தெரியாமல் உன் கற்பை சந்தேகப் பட்டேன்" என்றோ "உலகுக்கு உன் கற்பை நிரூபிக்க தான் அப்படி செய்தேன்" என்றோ ஒன்னும் சொல்லவில்லை. அவள் அருகில் வருகிறான். அக்னி தேவனைப் பார்த்து சொல்கிறான்.... அழிப்பு இல சான்று நீ, உலகுக்கு; ஆதலால் இழிப்பு இல சொல்லி, நீ இவளை, ''யாதும் ஓர் பழிப்பு இலள்'' என்றனை; பழியும் இன்று; இனிக் கழிப்பிலள்' என்றனன் - கருணை உள்ளத்தான். அழிப்பு இல = அழிக்க முடியாத சான்று நீ = சாட்சி நீ (அக்னி சாட்சி) உலகுக்கு = இந்த உலகத்துக்கு ஆதலால் = ஆதலால் இழிப்பு இல சொல்லி = இவளைப் பற்றி நீ ஒன்றும் இழிவாக சொல்லவில்லை நீ இவளை = நீ இந்த சீதையை 'யாதும் ஓர் பழிப்பு இலள்'' என்றனை = எந்த ஒரு பழியும் இல்லாதவள் என்றனை

@ChemRaj

Nalanthana Man Vesum Tamil 3 இவ் அழுங்கல் ஊரே = அழுங்கல் என்றால் துன்பம், கஷ்டம். துன்பம் தரும் இந்த ஊரேகழறும் = கடிந்து கூறும் புரிஞ்சுக்கவே மாடேங்கறாங்கஆஅஹா! இத்தனை நூற்றாண்டுகளுக்கு முன்பு இப்படி ஒரு கவிதை எழுதப்பட்டிருந்தால் தமிழுக்கு ஒரு பெரிய பெருமைதான். ஒரு முறை தமிழ் இலக்கியத்தின் காலக் கோடு (time line) ஒன்று எழுதினால் நன்றாக இருக்கும்.கம்ப இராமாயணம் - சீதை தீக் குளித்த பின் சீதை தீயில் இறங்கிய உடன், அவள் கற்பின் சூடு தாங்காமல் அக்னி தேவன் அவளை கொணர்ந்து இராமனிடம் தந்து, இவள் கற்பில் சிறந்தவள் என்று சொல்கிறான்.அப்போது இராமன் சீதையிடம் ஒரு மன்னிப்பு கூட கேட்கவில்லை.

@ChemRaj

Nalanthana Man Vesum Tamil 8 அரக்கன் மாநகர் = அரக்கனின் பெரிய நகரமான (இலங்கையில் )ஆண்டுறைந்து அடங்கினை = நீண்ட நாள் தங்கி settle ஆகிட்ட (ஆண்டு = ரொம்ப நாள்; ஆண்ட்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டார் மீண்டு வருவதில்லை ) அச்சம் தீர்த்து = (இப்ப ) ஒரு பயமும் இல்லாமல் திருப் புகழ் - முதுமையின் சோகம் இளமையாய் இருக்கும் போது எல்லாம் இனிமையாய் இருக்கும். முதுமை வரும் போது துன்பங்களும் கூட வரும். இவண் மீண்டது என்? = நீ எப்படி இங்கு வந்தாய் ? நினைவு, எனை விரும்பும்" என்பதோ?' = நீ மனசுல நான் உன்னை இன்னமும் விரும்புவேன் என்று நினைத்துக் கொண்டாயா ? பாவம் இல்ல சீதை ? பெண்ணுக்கு அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை சோதனைதான்.

@ChemRaj

Nalanthana Man Vesum Tamil 4 இனிக் கழிப்பிலள் = இனி இவள் கழிக்க தக்கவள் அல்லள் என்றனன் = என்று இராமன் கூறினான்பழியும் இன்று = (எனவே) இவளிடத்தில் ஒரு பழியும் இல்லை கருணை உள்ளத்தான் = கருணை உள்ளம் கொண்டவன்.அக்னி சொன்னதால் சீதையை ஒப்புக்கொள்வதாக இராமன் சொல்கிறானா?! ஏன் சீதையிடம் நேரடியாகப் பேசவில்லை?! சுவாரசியமான கேள்வி! கம்ப இராமயாணம் - கும்ப கர்ணா, கெட் அவுட் கும்ப கர்ணன் எவ்வளவோ எடுத்து சொல்கிறான் சீதையை விட்டு விடும்படி. இராவண கேட்பதாய் இல்லை. கடைசியாக சொல்கிறான்.... மானுடர் இருவரை வணங்கி மற்றும் அக் கூன் உடைக் குரங்கையும் கும்பிட்டு உய்தொழில் ஊன் உடை உம்பிக்கும் உனக்குமே கடன்யான் அது முடிக்கிலேன் எழுக போகென்றான்

@ChemRaj

Nalanthana Man Vesum Tamil 2 பொருள்: எறும்பு வளை அயிர் = எறும்பு புத்து போல குறும் பல் சுனைய = சின்ன சின்னதாக இருக்கும் நீர் நிலைகள் (சுனை = குட்டி நீர் தேக்கம்) உலை கல் = உலையில் வைத்த கல் அன்ன பாறை ஏறி = போன்ற பாறையில் ஏறி (situation புரியுதா ? பாலை நிலம், தண்ணியே இல்ல, பாறை எல்லாம் கொதிக்குது. தலைவர் அந்த வழியா போறாரு_ கொடுவில் = கொடிய வில்லை ஏந்திய எயினர் = எயினர் இனத்தை சேர்ந்தவர்கள் (அம்பு எய்பவர்கள் எயினர்) பகழி மாய்க்கும் = பகழி அப்படினா அம்பு. அம்பை தீட்டும் அல்லது அம்பை விடும். கவலை என்ப = (என்னோட) கவலை என்னனா ? அவர் சென்ற ஆறே = அவர் சென்ற அந்த வழி தான். அது மற்று = அதை பற்றி அவலங் கொள்ளாது = கவலைப் படாது நொதுமல் = உதாசீனமாக, நட்புணர்வு இல்லாமல்,

@ChemRaj

Nalanthana Man Vesum Tamil எறும்பி யளையிற் குறும்பல் சுனைய உலைக்க லன்ன பாறை யேறிக் கொடுவி லெயினர் பகழி மாய்க்கும் கவலைத் தென்பவவர் சென்ற வாறே அதுமற் றவலங் கொள்ளாது நொதுமற் கழறுமிவ் வழுங்க லூரே என்ன இது ஏதோ சீன மொழிப் பாடல் மாதிரி இருக்கா? எறும்பு வளை அயிர் குறும் பல் சுனைய உலை கல் அன்ன பாறை ஏறி கொடுவில் எயினர் பகழி மாய்க்கும் கவலை என்ப அவர் சென்ற ஆறே அது மற்று அவலங் கொள்ளாது நொதுமல் கழறும் இவ் அழுங்கல் ஊரே அவர் போகின்ற வழி ரொம்ப கடினமானது. ரொம்ப வெயில் அடிக்கும். வழிப் பரி செய்யும் கொள்ளையர்கள் அந்த வழியில் நிறைய உண்டு. நான் அவரு எப்படி பத்திரமா போய் சேரனுமேணு கவலைப் பட்டுகிட்டு இருக்கேன், இவங்கல்லாம் அதை புரிஞ்சுக்காம என்னனமோ சொல்றாங்க

@ChemRaj

Nallayira divya pirabhantham Tamil 2 குறுந்தொகை - அவர் எப்படி இருக்காரோ ? கணவன் வெளியூர் போனால், மனைவி அவனைப் பற்றி கவலைப் படுவாள். சரியான நேரத்துக்கு சாபிட்டாரோ இல்லையோ, புது இடத்துல தூக்கம் வருமோ இல்லையோ, மாத்திரை எல்லாம் சரியான நேரத்துக்கு மறக்காம சாப்பிடணுமே, என்று ஆயிரம் கவலை இருக்கும். ஆனா ஊர் என்ன சொல்லும் ? "புருசன பிரிஞ்சு ஒரு நிமிஷம் கூட இருக்க முடியலையோ ? அதுக்குள்ள தேடிருச்சோ ?" என்று நையாண்டி செய்யும். பெண்ணின் மனதை யார் தான் புரிந்து கொள்ள முடியும் ? இங்கே ஒரு கணவனை பிரிந்த குறுந்தொகை பெண் சொல்கிறாள்:எறும்பி யளையிற் குறும்பல் சுனைய உலைக்க லன்ன பாறை யேறிக் கொடுவி லெயினர் பகழி மாய்க்கும்

@ChemRaj

Nallayira divya pirabhantham Tamil ஓலம் இட்டு = உன்னை முழுமையாய் உணர முடியாமல் ஓலமிட்டு வணங்கும்திரு வாசகம் - உண்மையையை தவிர வேறு இல்லை உணங்கும் = வாடி நிற்கும் நின்னை எய்தல் உற்று = உன்னை அடைய முடியாமல் மற்று ஓர் உண்மை இன்மையின் = உன்னை தவிர வேறு ஒரு உண்மை இல்லாததால் வணங்கியாம் = நாம் உன்னை வணங்கி விடேங்கள் என்ன = விட மாட்டோம் என்று வந்து நின்று = வந்து நின்று விட்டோம் அருளுதற்கு = எங்களுக்கு அருள் தருவதற்கு இணங்கு = இணைந்த கொங்கை = மார்பகங்களை கொண்ட மங்கை பங்க = மங்கையை பாகமாக கொண்டவனே என் கொலோ நினைப்பதே. = என்ன நினைத்து வைத்து இருக்கிறாய் ? (என்ன திருவுளமோ

@ChemRaj

Nalayira divya pirabhantham Tamil 3 உண்மை என்பது ஒன்றானதா ? அல்லது பலவானதா ? இன்று நாம் உண்மை என்று நினைப்பது நாளை மாறலாம் இல்லையா ? என்றுமே மாறாத உண்மை என்று ஒன்று இருக்கிறதா ?திரு வாசகம் - உண்மையையை தவிர வேறு இல்லை இருக்கிறது என்கிறார் மணி வாசகர் இந்தப் பாடலில் வணங்கும் நின்னை மண்ணும் விண்ணும் வேதம் நான்கும் ஓலம் இட்டு உணங்கும் நின்னை எய்தல் உற்று மற்று ஓர் உண்மை இன்மையின் வணங்கியாம் விடேங்கள் என்ன வந்து நின்று அருளுதற்கு இணங்கு கொங்கை மங்கை பங்க என் கொலோ நினைப்பதே. வணங்கும் நின்னை = உன்னை வணங்கும் மண்ணும் = இந்த மண்ணினல் உள்ள மனிதர்களும் விண்ணும் = அந்த விண்ணில் உள்ள தேவர்களும் வேதம் நான்கும் = நான்கு வேதங்களும்

@ChemRaj

Nalayira divya pirabhantham Tamil 2 திருக்குறள் -ரொம்ப போரடிக்குதா ? சில சமயம் நமக்கு வாழ்க்கை ரொம்ப போரடிக்கிற மாதிரி இருக்கும். என்னடா இது, யாருமே இல்லையா நமக்குன்னு ரொம்ப தனிமையா, வெறுப்பா கூட இருக்கும். இப்படி போரடிக்காம இருக்க வள்ளுவர் ஒரு வழி சொல்றார்.... துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும்-யார் மாட்டும் இன்புறூஉம் இன் சொலவர்க்கு துன்புறூஉம் = துன்புறுதல் துவ்வாமை = இல்லாமை இல்லாகும் = இல்லாமல் போகும். யாருக்கு ? யார் மாட்டும் = எல்லோரிடத்தும் இன்புறூஉம் = இனிமை தரக்கூடிய இன் சொலவர்க்கு = இனிய சொற்களை சொல்பவர்களுக்கு எல்லோரிடத்தும், எப்பவும், இன்பம் தரும் இனிமையான சொற்களையே பேசி வருபவர்களைத் தேடி எல்லோரும் வருவார்கள். அவர்களுக்கு வாழ்க்கை போரடிக்காது.

@ChemRaj

Nallayira divya pirabhantham Tamil 3 கம்ப இராமாயணம் - இராமனுக்கு எத்தனை உயிர் ? சீதையை பிரிந்து இராமன் இருக்கிறான். உடலும், உள்ளமும் சோர்ந்து போய் இருக்கிறான். அப்படி சோர்ந்து போன சமயம், இராமனைப் பார்த்தால் ஏதோ உயிர் இல்லாதாவன் மாதிரி தோன்றுகிறது. அத்தனை அயர்ச்சி. சுக்ரீவன் இராமனை தேற்றுகிறான். கொஞ்சம் தேறுதல் அடைகிறான். உயிர் வந்த மாதிரி இருக்கிறது. சற்று நேரம் கழித்து மீண்டும் சோர்வு...ஏதோ இராமன் ஒவ்வொருமுறையும் உயிர் இழந்து மீண்டும் பெற்றது மாதிரி தோன்றுகிறது... எத்தனை முறை தான் அவனுக்கு உயிர் போய் வருமோ ? கார் வரை இருந்தனன் கதிரின் காதலன், சீரிய சொற்களால் தெருட்ட, செங் கணான் ஆர் உயிர் ஆயிரம் உடையன் ஆம் எனா, சோர்தொறும் சோர்தொறும், உயிர்த்துத் தோன்றினான்.

@ChemRaj

Nallayira divya pirabhantham Tamil 2 அவர் = என் காதலர் / கணவர் பொய் வழங்கலரே = பொய் சொல்ல மாட்டானே (பொய் வழங்க மாட்டான்) மிக அழகான கவிதை. அற்புதம். ஒருவேளை எனக்கு இப்படியும் இருக்குமோ என்று தோன்றியது: "வண்டு படர்ந்த கொடி போன்ற இடுப்பு உடைய மகளிர் தம் கூந்தலில் கொன்றை மலர்களைச் சூடியிருக்கிறார்கள். இந்தக் கானகம் கார் காலம் என்று கூறினாலும் நான் நம்ப மாட்டேன். அவன் போகும் போது என்ன சொல்லி விட்டுப் போனான்என் காதலர் பொய் சொல்ல மாட்டர்." இந்த மாதிரி கவிதை 1700-2000 வருடஙளுக்கு முன் எழுதப்பட்டிருக்கிறது என்பது மிகவும் ஆச்சரியப்பட வேண்டிய செய்தி.குறுந்தொகை அவன் பொய் சொல்ல மாட்டான்

@ChemRaj

Nallayira divya pirabhantham Tamil 4 கார் = கரிய மேகங்கள் (கார் மேகம்) வரை = மலை இருந்தனன் = இருந்தவன். யாரு ? கதிரின் காதலன், = சூரியனின் காதலன் (மகன் சுக்ரீவன்) சீரிய சொற்களால் = உயர்ந்த சொற்களால் தெருட்ட = தேறுதல் சொல்ல செங் கணான் = சிவந்த கண்களை கொண்ட (உறங்காமல் விழிதிருந்ததால் சிவந்திருக்குமோ?) இராமன் ஆர் உயிர் = அருமையான உயிர் ஆயிரம் உடையன் ஆம் எனா = ஆயிரம் உடையான் என்று சோர்தொறும் சோர்தொறும் = சோர்ந்து போகும் தோறும் ,உயிர்த்துத் தோன்றினான். = உயிர் பெற்று மீண்டும் தோன்றினான். ஆர் உயிர் ஆயிரம் உடையன் ஆம் எனா, சோர்தொறும் சோர்தொறும், உயிர்த்துத் தோன்றினான். இந்த இரண்டு வரிகளும் அருமை! ஆனால் "கதிரின் காதலன்" என்பது யார்? ஏன் "மகன் சுக்ரீவன்" என்று எழுதி இருக்கிறாய்?

@ChemRaj

Nallayira divya pirabhantham Tamil யானோ தேறேன் அவர் பொய் வழங்கலரே பொருள்: வண்டு பட = வண்டுகள் வந்து தேன் உண்ண ததைந்த = அடர்ந்த கொடி இணர் = நீண்ட கொடிகள் இடை இடுபு = இடையில் இட்டு ஓர் இடை இடையே இட்டு பொன் செய் = பொன்னால் செய்யப்பட்ட புனை இழை = புனையக் கூடிய ஆபரணங்களை கட்டிய மகளிர் = அணிந்த பெண்கள் கதுப்பிற் = கூந்தலில் தோன்றும் = தோன்றக்கூடிய புதுப் பூங் கொன்றை = புதிய கொன்றை மலர்கள் கானம் = கானகம். பெண்கள் தங்கத்தால் ஆன ஆபரணங்களை அணிந்து இருப்பது மாதிரி, கானகம் கொன்றை மலர்கள் பூத்து அழகாக விளங்குகிறது கார் = கார் காலம் எனக் கூறினும் = என்று கூறினாலும் யானோ தேறேன் = நான் நம்ப மாட்டேன்

@ChemRaj

Nalayira divya pirabhandham Tamil 2 என மொழிய = என்று சொல்ல வருவாயே = வருவாயே சிந்தை மகிழ = மனம் மகிழ மலை மங்கை = மலை மகள், பார்வதி நகிலிணைகள் = மார்பின் மேல் சிந்து பயமயிலு = விளையாடும் மயில்வீரா = மயில் மேல் ஏறிய வீரனே திங்கள் = நிலவு (பிறை நிலவு) அரவு = பாம்பு நதி = கங்கை நதி துன்று = ஒன்றாக உள்ள சடில = ஜடா முடி உடைய (சிவன்) அருள் = அருளிய செந்தில் = திருச் செந்தூரில் உறை = வாழும் பெருமாளே = பெறும் ஆளே (நம்மை பெற்றுக் கொள்பவன், நாம் எப்படி இருந்தாலும், நாம் நம்மை அவனுக்குத் தந்தால், நம்மை வெறுக்காமல், பெற்றுக் கொள்பவன் = பெறும் ஆள் = பெருமாள், பெரிய ஆள் = பெருமாள்)

@ChemRaj

Nalayira divya pirabhandham Tamil 3 குறுந்தொகை - அவன் பொய் சொல்ல மாட்டான் சோலைகள் எல்லாம் பூத்து குலுங்குகின்றன. கார் காலம் வந்து விட்டதோ ? இருக்காது. அவன் போகும் போது என்ன சொல்லி விட்டுப் போனான் ? கார் காலத்தில் வந்து விடுவேன் அப்படினு தான சொன்னான் ? அவன் இன்னும் வரல...அதுனால இது கார்காலமா இருக்காது.... வண்டுபடத் ததைந்த கொடியிண ரிடையிடுபு பொன்செய் புனையிழை கட்டிய மகளிர் கதுப்பிற் றோன்றும் புதுப்பூங் கொன்றைக் கானங் காரெனக் கூறினும் யானோ தேறேனவர் பொய்வழங் கலரே சீர் பிரித்த பின் வண்டு படத் ததைந்த கொடி இணர் இடை இடுபு பொன் செய் புனை இழை கட்டிய மகளிர்

@ChemRaj

Nalayira divya pirabhandham Tamil வந்து = அந்த குறையை சொல்ல வந்து தலை நவிர் அவிழ்ந்து = தலை முடி அவிழ்ந்து தரை புக மயங்க = தரையில் மயங்கி விழுந்து ஒரு = ஒரு மகிட மிசையேறி = எருமை மாட்டின் மேல் ஏறி அந்தகனும் = குருடன் (எமனை குருடன் என்று சொல்வது வழக்கம். நல்லவர் கெட்டவர், தாய்க்கு ஒரு மகன் என்று எந்த பேதமும் பார்க்க மாட்டான்....எனவே குருடன்) எனை அடர்ந்து வருகையில் = என்னை பிடிக்க வருகையில் அஞ்சல் என = அஞ்சேல் என வலிய = வலிமை பொருந்திய மயில்மேல் = மயில் மேல் நீ = முருகனாகிய நீ அந்த மறலியொடு = அந்த எமனிடம் உகந்த மனிதன் = வேண்டிய மனிதன் (நம்ம ஆளு) நமது அன்பன் = என்னுடைய (முருகனின்) அன்பன்

@ChemRaj

Nalayira thivya pirabantham odi pogalama 11 அந்த கனுமெனைய டர்ந்து வருகையினி லஞ்ச லெனவலிய ...... மயில்மேல்நீ அந்த மறலியொடு கந்த மனிதனம தன்ப னெனமொழிய ...... வருவாயே சிந்தை மகிழமலை மங்கை நகிலிணைகள் சிந்து பயமயிலு ...... மயில்வீரா திங்க ளரவுநதி துன்று சடிலரருள் செந்தி னகரிலுறை ...... பெருமாளே. பதம் பிரித்து பொருள் பார்க்கலாம்: தந்த பசிதனை அறிந்து = குழந்தையின் பசியினை அறிந்து முலை அமுது தந்து = மார்போடு அணைத்து அதன் பசி போக்கி முதுகு தடவிய தாயார் = ஏப்பம் வர வேண்டி அதன் முதுகை தடவித்தரும் தாயார் தம்பி = உடன் பிறந்த தம்பி பணிவிடைசெய் தொண்டர் = பணிவிடை செய்யும் வேலை ஆட்கள் பிரியமு தங்கை = அன்பான தங்கை மருக (ர்) = மருமகன் மற்றும் மருமகள்

@ChemRaj

Nalayira thivya pirabantham odi pogalama 10 அழலாட அங்கை சிவந்ததோ அங்கை அழகால் அழல்சிவந்த வாறோ - கழலாடப் பேயோடு கானிற் பிறங்க அனலேந்தித் தீயாடு வாய்இதனைச் செப்பு சிவனே, உன் கையில் அனலை ஏந்தி இருக்கிறாய். அந்த அனலினால் உன் கை சிவந்ததா ? அல்லது உன் கையின் சிவப்பினால் அனல் சிவந்ததா ? சுடு காட்டில் பேய்களோடு இணைந்து ஆடுபவனே, நீயே சொல். அழலாட = தீ ஆட அங்கை சிவந்ததோ = அந்த கை சிவந்ததா? அங்கை அழகால் = அந்த கையின் அழகால் அழல்சிவந்த வாறோ = நெருப்பு சிவந்ததா? கழலாடப் = காலில் அணிந்த கழல் ஆட பேயோடு = பேய்களோடு கானிற் = சுடுகாட்டில் பிறங்க = பிறழ்ந்து, இணைந்து அனலேந்தித் தீயாடு வாய் = அனல் ஏந்தி ஆடுவாய் இதனைச் செப்பு = நீயே சொல்லு

@ChemRaj

Nalayira thivya pirabantham odi pogalama 12 சார் = சார்ந்து இருக்கும் மைந்தர் = பிள்ளைகள் மனைவியர் = மனைவி கடும்பு = சுற்றத்தார் கடன் = கடமை உதவும் அந்த = அந்த உறவுக் கடமையை செய்வதற்காக வரிசை = வரிசையாக மொழி பகர் கேடா = தங்கள் குறைகளை சொல்லி (நாம் இறந்த பின், நம்மை பார்க்க வருபவர்கள் "எப்படி இருந்த ஆள் பாவம் போய்டாறேனு குறை பட்டுக் கொள்வார்கள் இல்லையா?) வந்து = அந்த குறையை சொல்ல வந்து தலை நவிர் அவிழ்ந்து = தலை முடி அவிழ்ந்து தரை புக மயங்க = தரையில் மயங்கி விழுந்து ஒரு = ஒரு மகிட மிசையேறி = எருமை மாட்டின் மேல் ஏறி அந்தகனும் = குருடன் (எமனை குருடன் என்று சொல்வது வழக்கம். நல்லவர் கெட்டவர், தாய்க்கு ஒரு மகன் என்று எந்த பேதமும் பார்க்க மாட்டான்....எனவே குருடன்)

@ChemRaj

Nalayira thivya pirabantham odi pogalama 9 அற்புத திருவந்தாதி - எதிலிருந்து எதற்கு அழகுஅற்புத திருவந்தாதி - எதிலிருந்து எதற்கு அழகு நாயன்மார்களில் ஒரே பெண் நாயன்மார் காரைக்கால் அம்மையார். இவர் எட்டாம் நூற்றாண்டை சேர்ந்தவர். 1300 ஆண்டுகளுக்கு முற்பட்டவர். இந்து மதம் பெண்களுக்கு துறவை அனுமதிக்கவில்லை. மணிமேகலை துறவு பூண்டாள், அவள் சமண சமயத்தை சார்ந்தவள். ஆண்டாள் கூட துறவறம் மேற்கொள்ளவில்லை. காரைக்கால் அம்மையார் திருமணம் செய்து கொண்டபின் இல்லறம் துறந்து துறவறம் மேற்கொண்டார். அவர் எழுதிய பாடல்கள் பதினொன்றாம் திருமுறையில் உள்ளது. அதில், அற்புத திருவந்தாதியில் இருந்து ஒரு பாடல்

@ChemRaj

Nalayira thivya pirabantham odi pogalama 11 திருப் புகழ் - இவர் நம்ம ஆளு ! திருப் புகழ் - இவர் நம்ம ஆளு ! கடைசிக் காலத்தில் எமன் வந்து தன்னை இழுத்துக்கொண்டு போகும் போது, நம்முடைய அம்மா, அப்பா, மனைவி, மக்கள் மற்றும் உறவினர்கள் எல்லாம் வந்து அழுவார்கள், அப்போது, முருகா, நீ எமனிடம் "பாத்துப்பா, இவர் நம்ம ஆளு, நமது அன்பன்" னு நீ வந்து சொல்லனும்னு அருணகிரிநாதர் முருகனிடம் வேண்டுகோள் வைக்கிறார் இந்தப் பாடலில். தந்த பசிதனைய றிந்து முலையமுது தந்து முதுகுதட ...... வியதாயார் தம்பி பணிவிடைசெய் தொண்டர் பிரியமுள தங்கை மருகருயி ...... ரெனவேசார் மைந்தர் மனைவியர்க டும்பு கடனுதவு மந்த வரிசைமொழி ...... பகர்கேடா வந்து தலைநவிர விழ்ந்து தரைபுகம யங்க வொருமகிட ...... மிசையேறி