read.cash Log in
@ChemRaj

Nalanthana Man Vesum Tamil 4 தெரியாமல் உன் கற்பை சந்தேகப் பட்டேன்" என்றோ "உலகுக்கு உன் கற்பை நிரூபிக்க தான் அப்படி செய்தேன்" என்றோ ஒன்னும் சொல்லவில்லை. அவள் அருகில் வருகிறான். அக்னி தேவனைப் பார்த்து சொல்கிறான்....

அழிப்பு இல சான்று நீ, உலகுக்கு; ஆதலால் இழிப்பு இல சொல்லி, நீ இவளை, ''யாதும் ஓர் பழிப்பு இலள்'' என்றனை; பழியும் இன்று; இனிக் கழிப்பிலள்' என்றனன் - கருணை உள்ளத்தான். அழிப்பு இல = அழிக்க முடியாத சான்று நீ = சாட்சி நீ (அக்னி சாட்சி) உலகுக்கு = இந்த உலகத்துக்கு ஆதலால் = ஆதலால் இழிப்பு இல சொல்லி = இவளைப் பற்றி நீ ஒன்றும் இழிவாக சொல்லவில்லை நீ இவளை = நீ இந்த சீதையை 'யாதும் ஓர் பழிப்பு இலள்'' என்றனை = எந்த ஒரு பழியும் இல்லாதவள் என்றனை

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.