read.cash Log in
@ChemRaj

Nalanthana Man Vesum Tamil

எறும்பி யளையிற் குறும்பல் சுனைய உலைக்க லன்ன பாறை யேறிக் கொடுவி லெயினர் பகழி மாய்க்கும் கவலைத் தென்பவவர் சென்ற வாறே அதுமற் றவலங் கொள்ளாது நொதுமற் கழறுமிவ் வழுங்க லூரே என்ன இது ஏதோ சீன மொழிப் பாடல் மாதிரி இருக்கா? எறும்பு வளை அயிர் குறும் பல் சுனைய உலை கல் அன்ன பாறை ஏறி கொடுவில் எயினர் பகழி மாய்க்கும் கவலை என்ப அவர் சென்ற ஆறே அது மற்று அவலங் கொள்ளாது நொதுமல் கழறும் இவ் அழுங்கல் ஊரே அவர் போகின்ற வழி ரொம்ப கடினமானது. ரொம்ப வெயில் அடிக்கும். வழிப் பரி செய்யும் கொள்ளையர்கள் அந்த வழியில் நிறைய உண்டு. நான் அவரு எப்படி பத்திரமா போய் சேரனுமேணு கவலைப் பட்டுகிட்டு இருக்கேன், இவங்கல்லாம் அதை புரிஞ்சுக்காம என்னனமோ சொல்றாங்க

2 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.