Nalayira divya pirabhantham Tamil 2
திருக்குறள் -ரொம்ப போரடிக்குதா ? சில சமயம் நமக்கு வாழ்க்கை ரொம்ப போரடிக்கிற மாதிரி இருக்கும். என்னடா இது, யாருமே இல்லையா நமக்குன்னு ரொம்ப தனிமையா, வெறுப்பா கூட இருக்கும். இப்படி போரடிக்காம இருக்க வள்ளுவர் ஒரு வழி சொல்றார்.... துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும்-யார் மாட்டும் இன்புறூஉம் இன் சொலவர்க்கு துன்புறூஉம் = துன்புறுதல் துவ்வாமை = இல்லாமை இல்லாகும் = இல்லாமல் போகும். யாருக்கு ? யார் மாட்டும் = எல்லோரிடத்தும் இன்புறூஉம் = இனிமை தரக்கூடிய இன் சொலவர்க்கு = இனிய சொற்களை சொல்பவர்களுக்கு எல்லோரிடத்தும், எப்பவும், இன்பம் தரும் இனிமையான சொற்களையே பேசி வருபவர்களைத் தேடி எல்லோரும் வருவார்கள். அவர்களுக்கு வாழ்க்கை போரடிக்காது.
4 comments
Hey!Nice to see your post again..hope you did some great work....best wishes from me..
Keep writing...and inspiring us.. I am happy that you are using your mother language to write up your emotion and thought
முழுமையாய் உணர முடியாமல் ஓலமிட்டு வணங்கும்திரு வாசகம் நான்கு வேதங்களும்
உன்னை முழுமையாய் உணர முடியாமல் ஓலமிட்டு வணங்கும்திரு வாசகம் - உண்மையையை தவிர வேறு