Kummelavum magamamum Tamil 4
2018-இல் வெளியான் ஓர் ஆய்வறிக்கைச் சொல்கிறது, 2015-இல் நடந்த கும்ப மேளாவின் விளைவால் கோதாவரி நதியின் பாக்டீரியா தொகுப்பின் வகைமை மாறியதாம், மேலும் மருந்து எதிர்ப்பு சக்திக் கொண்ட சூப்பர் நுண்கிருமிகள் (super bugs) உண்டானவாம். அது மட்டுமல்ல இயற்கையாக நதிகளில் தோன்றும் பாக்ட்டீரியாக்களை விட மனித முகம், கைகள், மலம் ஆகியவற்றில் தோன்றும் பாக்ட்டீரியாக்கள் மிகுந்தனவாம். சுற்றுச் சூழல் பாதுகாவலர்களுக்கும், தொற்று நோய் தடுப்பாளர்களுக்கும் பிரத்யேக சவால் மக்களின் மூட நம்பிக்கை. புனித நீராடும் தலங்கள் நோய் அளிக்காது என்கிற மூட நம்பிக்கை பெரிய சவால். கும்ப மேளாவுக்கும் காலராவுக்கும் நீண்ட தொடர்புண்டு.
Kummelavum magamamum Tamil
கும்ப மேளாவும், மகாமகமும் காலராவும்: இறந்துப் போன கோடாக்கோடியும். பிளேக் நோய், திலகர், ஒரு கொலை பாதகம்
டில்லி நிஜாமுதீன் இஸ்லாமிய விழாவில் கரோனாவைரஸால் பாதிக்கப்பட்டவர்களை கண்டு பிடித்து மருத்துவம் பார்க்காமல் ஓரிடத்தில் அடைத்து வைத்து சாக விட்டு விட வேண்டும் என்று இந்துத்துவர் ஒருவர் பதிவிட்டிருக்கிறார்.
கருனைகளுள் மானுட அளவிலான கருணை, தெய்வாம்சமான கருணை என்று இரு வகைகளை பாரதி குறிப்பிடுகிறான். பின்னது தனக்கு கெடுதல் செய்வோருக்கும் நன்மைப் புரிவது. அத்தகைய கருணைக்கு உதாரண புருஷர்களாக அவன் முன்னிறுத்தியது இயேசு கிறிஸ்துவையும், புத்தனையும்.
Jeyakanthanin marumalarchikal
தி.மு.க எத்தகைய இயக்கமாக செயல்பட்டது, அது எப்படி ஒரு ஜனத்திரளைக் கவர்ந்து ஆட்சிப் பீடத்தில் அமர்ந்தது என்பது குறித்தும் அறிமுகமாவது செய்துக் கொள்ள வேண்டும். அந்தப் புரிதல் ஜெயகாந்தனின் உரையின் தேவையை உணர்த்தும்.
பெரியார் என்றழைக்கப்படும் ஈ.வெ.ராவின் தலைமையிலான திராவிடர் கழகமும் அதன் பின் அதிலிருந்து பிரிந்து அண்ணாத்துரையின் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழகமும் தங்களை ஒரு அரசியல் மாற்றத்தை உண்டுப் பண்ணுகிற இயக்கங்களாக மட்டும் முன்னிறுத்திக் கொள்ளவில்லை. ஈ.வெ.ராவும், அண்ணாத்துரையும் தங்களைக் கலாசாரக் காவலர்களாகவும், கலை இலக்கியங்களை கேள்விக்குட்படுத்தும் அறிவியக்கங்களாகவும் முன்னிறுத்தி அதன் பெயரில் அவர்கள் நிகழ்த்திய பிரசாரங்களே ஜெயகாந்தன் எனும் எழுத்தாளரை போர்குனமிக்க பிரசாரகாக வெளிக்கொணர்ந்தது.
Jeyakanthanin Munnuraikal Thoodakkam part 3
ஜெயகாந்தன் இறந்துவிட்டார் என்றவுடன் இணையம் மற்றும் ஊடகங்களில் குறிப்புகள் குவிய தொடங்கிய போது இரண்டு வார்த்தைகள் அதிகம் பயன்படுத்தப்பட்டன, அவை ‘சிங்கம்’, ‘ஆளுமை’. ஓரு இலக்கியவாதியை சிங்கமென்றும் ஆளுமையென்றும் விளிப்பது அரிது மட்டுமல்ல ஒரு வகையில் அச்சொற்கள் அவரின் இலக்கிய தரத்தை குறைத்து மதிப்பிடுபவர்களின் வாய்க்கு அவலானது. வயிற்றெரிச்சலில் ஒரு எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு இருந்தது பிம்பம் என்றும் அது ஊடகங்கள் கட்டமைத்தது என்றும் சொன்னார். ஜெயகாந்தன் எழுதுவதை நிறுத்தியபோது ஊடகம் என்று இன்று நாம் விளிக்கும் எதுவும் கிடையாது. வெகு ஜனப் பத்திரிக்கைகள் தவிர அன்று இருந்தது அரசாங்கக் கட்டுப்பாட்டில் இயங்கிய ஒரு திராபைத் தொலைக் காட்சி தான். அப்புறம் எப்படி இந்த ‘சிங்கம்’, ‘ஆளுமை’ என்பதெல்லாம், குறிப்பாக, ஏன் அந்த பிம்பம் உருவானது?
Oru ilakiyavathiyin Kathai Tamil
தமிழ் பல்கலைக் கழகத்தின் ராஜராஜன் விருதைப் பெற்றுக் கொண்ட ஜெயகாந்தன் தன் ஏற்புரையில், "நான் தமிழில் எழுதியதால் என்னை நான்கு கோடிப் பேருக்கு தான் தெரியும், இதையே ஹிந்தியில் எழுதியிருந்தால் என்னை நாற்பது கோடிப் பேருக்குத் தெரிந்திருக்கும், ஆகவே தமிழர்களே ஹிந்திப் படியுங்கள்" என்றார். அவர் அப்படிப் பேசும் போது மேடையில் பல்கலைக் கழக துணை வேந்தரும் அன்றைய ஆட்சியில் இரண்டாமவராக இருந்த அமைச்சர் நெடுஞ்செழியனும் அமர்ந்திருந்தார்கள். அந்த நிகழ்ச்சியை நேரில் பார்த்தவன் நான்.
அதிகார பீடத்தை நோக்கி உண்மயை பேசுதல் என்று மார்ட்டின் லூதர் கிங்கின் ஒரு சொற்றொடர் ஒன்றுண்டு (‘speaking truth to power’). உண்மயைப் பேசுவதென்பதே அருகிவிட்ட ஒரு சமூகத்தில் அதிகார பீடத்தை நோக்கி உண்மயை பேசுதல் என்பது கான்பதற்கரிய காட்சியாகிவிட்டதையே ஜெயகாந்தனுக்குக் கிடைத்த ‘சிங்கம்’ எனும் பாராட்டுரை சொல்லுகிறது.
Karpanai Kaviyangal Jeyakanthan Tamil
அந்த இரங்கல் உரையும் ஜெயகாந்தனின் அரசியலும்
நானறிந்த எந்த எழுத்தாளருக்கும் இல்லாத ஒரு திறமை ஜெயகாந்தனுக்குண்டு. அவர் சிறந்த பேச்சாளர். ‘கேட்பினும் கேளாத் தகையவே வேட்ப மொழிவதாம் சொல்’ எனும் குறளுக்கு ஜெயகாந்தனைத் தயக்கமின்றி அடையாளம் காட்டலாம். அனல் கக்கும் அவரின் பேச்சுகள் வெறும் உணர்வெழுச்சிகளல்ல. மிக மிகக் கோர்வையாக மையக் கருத்தை நிருவி, அதற்கு தர்க்க ரீதியாக வலு சேர்த்து ஏற்ற இறக்கங்களோடு மேடைப் பேச்சிற்கான அனைத்து உயரிய பன்புகளையும் தன்னகத்தே கொண்டவையே ஜெயகாந்தனின் பேச்சுகள்.
ஜெயகாந்தன் பேசியதிலும் எழுதியதிலும் மிக அதிகமாக சர்ச்சைக்குட்பட்டது அவர் கண்ணதாசன் அழைப்பின் பேரில் அண்ணாத்துரைக்கான இரங்கல் கூட்டத்தில் ஆற்றிய உரை தான். ‘அவரை அறிஞர் என்று மூடர்களேக் கூறுவர். பேரறிஞர் என்று பெருமூடர்களேக் கூறுவர்’ என்று இரங்கல் கூட்டத்தில் இடி முழக்கம் செய்தார் ஜெயகாந்தன். அப்படி அவர் பேசி கிட்டத்தட்ட அரை நூற்றாண்டிற்குப்பின் இப்போதும் இணையத்தில் அதிகம் படிக்கப்படும் ஒரு பேருரை என்றால் அதுவாகத்தான் இருக்கும். அண்ணாத்துரையை பேரறிஞர் என்று நினக்காதப் பலரும் கூட அந்தப் பேருரைக் கேட்டு முகம் சுளித்தார்கள் அல்லது ‘அப்படிப் பேசி இருக்க வேண்டாம். அதுவும் இறந்து விட்ட ஒருவரைப் பற்றி’ என்று நினைத்தார்கள். இன்றும்.
Jeyakanthanin Munnuraikal Thoodakkam Tamil
ஒருநாள் காலை பத்திரிக்கையில் கண்ட ஒரு பத்து வயதுப் பயனின் சந்நியாசக் கோலம் நமது ஹிந்து சமயவாதிகளின் ஹிருதயமற்ற, உணர்ச்சியற்ற, ஆண்மையற்ற, குறூரச் செயலின் கொடுமை பொறுக்காது என்னை உள்ளூரக் குமுறி அழ வைத்தது. அதன் விளைவு ‘கழுத்தில் விழுந்த மாலை’". இந்த முன்னுரைக்குப் பிறகு வாசகன் எதற்கு அந்தக் கதையைப் படிக்க வேண்டும்? வேடிக்கையென்னவெனில் இந்தக் கதைக்காக அவரை தூஷித்தவர்களும் கொண்டாடியர்வகளும் அவர் ‘ஜய ஜய சங்கர’ எழுதிய போது அப்படியே இடம் மாறினார்கள்.
சில நேரங்களில் சில மனிதர்கள்’ சினிமாவில் லட்சுமியின் நடிப்பினால் உந்தப் பட்டு ‘கங்கை எங்கே போகிறாள்’ என்றார் ஜெயகாந்தன். நாவலுக்குள் நுழையும் முன்பே வாசகனுக்கு கங்காவின் கதி என்னாகும் என்பது தெளிவாகிவிடும். அந்நாவலின் முன்
Jeyakandhan Eluthum Pirapala Kathaapathurangal Tamil Part 2
எழுதியிருந்தாலும் ஜெயகாந்தனின் உயிருக்கு உத்தரவாதமிருந்திருக்காது. ஆனால் அதற்காக தேவையேயில்லாத இடங்களிலும் கூட அவர் தன்னிச்சையாக பிராமண வீடுகளையே கதையின் பின்னனியாக வைத்ததும் நடந்தது.
சினிமாவுக்குப் போன **ஜெயகாந்தன்**
சினிமா எனும் கனவு தொழிற்சாலைக்குள் நுழைந்து தனக்கும் தன் கலைக்கும் கிஞ்சித்தும் கவுரவம் குறையாமல் மீண்ட கலைஞன் ஜெயகாந்தன் ஒருவராக மட்டுமே இருக்கக் கூடும். அவருடைய ‘ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்’ ஒரு ரசமான வாசிப்பனுபவம். சுய எள்ளல், சுய மதிப்பீடுகள், கலை என்பது என்ன, சினிமாவின் வர்த்தக சமரசங்கள் பற்றியெல்லாம் தெளிவான அபிப்பிராயங்கள் கொண்டவர் ஜெயகாந்தன். சந்திரபாபு, கண்ணதாசன் போன்றவர்கள் உற்ற நண்பர்களாக இருந்த போதிலும் அவர்களின் உயரிய பண்புகளும் கீழ்மைகளையும் அவர் நன்கே அறிந்திருந்தார்.
Jeyakanthanin Trichi Nigalvukal Tamil
திருச்சியில் நடந்த எழுத்தாளர் மாநாட்டில் “ஐவருக்கு ஒருத்தி என்பது என்ன ஒழுக்கம். அது என்ன இதிகாசம். அதைக் கொளுத்துங்கள்” என்றார் ஈ.வே.ரா. சிங்கமென எழுந்தார் ஜெயகாந்தன், “நான் எழுத்தாளன். நான் என்ன எழுத வேண்டுமென்பதை நானே தீர்மானிக்க வேண்டும்” என கர்ஜித்தார்.
தாலி, ஊழ், ஊரை எரிப்பது என்றெல்லாம் பேசிய சிலப்பதிகாரம் ‘தமிழர் காவியம்’ எனக் கொண்டாடப்பட்டது. கம்ப ராமயாணமோ ‘ஆரிய சூழ்ச்சியாகவும்’ ஆபாசக் குப்பையாகவும் ஏசப்பட்டது, அதை தோலுரிப்பதற்காகவே ‘கம்ப ரசம்’ எழுதி தன்னை இலக்கியவாதியாக நிறுவிக் கொண்டதோடல்லாமல் பொது மேடைகளில் ரா.பி. சேதுபிள்ளையை சமர் செய்து தோற்கடித்துவிட்டதாகவும் பேரறிஞர் தம்பட்டம் அடித்தார்.
முத்தமிழ் என்று இல்லாத ஒன்றை வழிமொழிந்தனர். அது என்ன முத்தமிழ் என்றால் இயல், இசை நாடகம் என்றனர். சிலப்பதிகாரம் நாடக இலக்கியம் என்று சொல்லப்பட்டது. முத்தமிழ் என்பது பிழை, ‘நாடக இலக்கியம் என்று சொல்லத் தக்க ஒன்று தமிழில் இல்லை’ என்று தமிழர்களுக்கு சொல்லிகொடுத்தார் ஜெயகாந்தன்.
Jeyakanthanin Ninaivukal Tamil
அந்த உரையை சாடுபவர்களும் சரி அதைக் கொண்டாடுபவர்களும் சரி அதிலுள்ள சில வரிகளை மட்டுமே மீண்டும் மீண்டும் மேற்கோள் காட்டுகின்றனர். முதற்கண் ஒன்றை எல்லோரும் புரிந்துக் கொள்ள வேண்டும். இரங்கல் கூட்டத்தில் பேசுவதற்காக கண்ணாதாசன் அழைத்த போது தன்னால் கடுமையான விமர்சனத்தையேக் கூற முடியுமென்று தெளிவாகக் கூறிவிடுகிறார் ஜெயகாந்தன். கண்ணதாசன் ஒப்புக் கொண்டதன் பேரிலேயே தான் பேசச் சென்றதாகப் பின்னர் எழுதினார் ஜெயகாந்தன்.
ஒரு சங்கடமான உண்மையை ஒரு ஜனத் திரளுக்கு சொல்லுவது எப்படி என்பதற்கு ஒரு சீரிய எடுத்துக்காட்டு அவ்வுரை ஒரு சீரிய எடுத்துக்காட்டு. ‘Mob’ என்பதற்கும் ‘gathering’ என்பதற்கும் உள்ள வித்தியாசத்தை விளக்கி எப்படி இறந்து போனவர் பொது வாழ்க்கையில் ஈடுபட்ட மனிதரென்றும் அப்படிப் பட்டவர்கள் சராசரியான ‘இறந்தவரைப் பற்றிக் குறைச் சொல்லலாகாது’ என்ற பன்பாட்டு முறைக்கு விதி விலக்கானவர்கள் என்று விளக்கிய பின் தான் தன் விமர்சணங்களை அடுக்குகிறார்.
Pretty interesting fact about Jeyakanthan Tamil
சினிமா கவர்ச்சியைக்கொண்டே ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆரை மையமாக வைத்து ‘சினிமாவுக்குப் போன சித்தாளு’ எழுதினார். அதை அன்று எழுதி வெளியிடுவதற்கு அவருக்கே தைரியமிருந்தது. இன்றும் சினிமா மோகத்தில் தன் ஆன்மாவைத் தொலைத்துவிட்ட சமூகத்தைப் பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடி அந்தக் கதை. மிகை நடிப்புக்குப் பெயர்போன மற்றொரு நடிகரை அவரை மேடையில் வைத்துக் கொண்டே சாடினார் ஜெயகாந்தன். அந்நடிகரின் ‘பிள்ளைகள்’ போன்ற ரசிகர்கள் முஷ்டியையுயர்த்த அவர் பதிலுக்கு ‘வாங்கடா’ என்றாராம்.
இதுபோன்ற கதைகள் பல இப்போது வலம் வந்து கொண்டிருகின்றன. அவற்றுள் பல apocryphal என்று சொல்லத்தக்கவை. ஆனால் அவற்றை அவர் செய்திருப்பார் என்று நம்பும்படியான வாழ்க்கையை அவர் வாழ்ந்ததாலேயே அந்தக் கதைகளுக்கு ‘aprocryphal’ என்று சொல்லத்தக்க நம்பகத்தன்மை இருந்தது.
Cinemavukku pona Jeyakanthan
சினிமாவுக்குப் போன ஜெயகாந்தன்
சினிமா எனும் கனவு தொழிற்சாலைக்குள் நுழைந்து தனக்கும் தன் கலைக்கும் கிஞ்சித்தும் கவுரவம் குறையாமல் மீண்ட கலைஞன் ஜெயகாந்தன் ஒருவராக மட்டுமே இருக்கக் கூடும். அவருடைய ‘ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்’ ஒரு ரசமான வாசிப்பனுபவம். சுய எள்ளல், சுய மதிப்பீடுகள், கலை என்பது என்ன, சினிமாவின் வர்த்தக சமரசங்கள் பற்றியெல்லாம் தெளிவான அபிப்பிராயங்கள் கொண்டவர் ஜெயகாந்தன். சந்திரபாபு, கண்ணதாசன் போன்றவர்கள் உற்ற நண்பர்களாக இருந்த போதிலும் அவர்களின் உயரிய பண்புகளும் கீழ்மைகளையும் அவர் நன்கே அறிந்திருந்தார்.
Cinemavukku pona Jeyakanthan Part 2
திரையிசைப் பாடலாசிரியனை கவிஞன் என்று கூறலாகாது. நண்பனே என்றாலும் கண்ணதாசன் கவிஞர் இல்லை’ என்று சினிமா மோகத்தில் தன்னை தொலைக்க ஆரம்பித்த சமூகத்தை சாடினார்.
பீம் சிங்கோடு அவர் உருவாக்கிய இரு திரைப்படங்களும், பின் அவரே இயக்கிய சினிமாவும், அவற்றின் குறைகளைத்தாண்டி, தமிழ் சினிமாவின் மைல்கற்கள் என்றால் மிகையாகாது. சினிமாவிலும் ஜெயகாந்தன் ஜெயிக்கவே செய்தார். வெற்றியோத் தோல்வியோ அதுப் பற்றிக் கவலைப்படாமல் தன் கலைப் பார்வையை சமரசமில்லாமல் காப்பாற்றிக் கொண்ட நிம்மதி அவருக்குண்டு எழுத்தாளான் என்கிற பிம்பமும் ஜெயகாந்தனும்
எழுத்தாளர்களுக்கென்று இருக்கும் பிம்பத்திற்குள் தன்னை என்றும் சிறை வைத்துக்கொண்டதில்லை ஜெயகாந்தன். அதனாலேயே ஜெயகாந்தனுக்கென்று ஒரு பிம்பம் உருவானது.
Jeyakanthanin Pirapala Kathaapathurangal Tamil
அந்நாவலின் முன்னுரையிலேயே எப்படி அந்தப் பாத்திரம் தன் பாட்டுக்கு பயணித்து ஒரு சோக முடிவில் தன்னைச் செலுத்திக் கொண்டது எனக் கூறி சரயு நதியில் ஜல சமாதியாகும் ராமனை ஒப்புமைக் கூறியிருப்பார். 'பாரீஸுக்கு போ' லட்சியவாதத்தை முன் வைத்தது என்றால் ‘கங்கை எங்கேப் போகிறாள்’ லட்சியமற்றப் பயணம் என்பது முன்னுரையிலேயே வாசகனுக்குத் தெளிவாக கட்டமைக்கப்பட்டிருக்கும்.
பிராமண **கதாபாத்திரங்கள்**
ஜெயகாந்தன் அதிகம் தன் கதைகளை பிராமணக் கதா பாத்திரங்களைக்கொண்டே அமைத்துக் கொண்டார். அதற்கு மிகப் பெரியக் காரணம் அந்த சமூகத்தின் முரன்பாடுகள். ஒரு புரம் சநாதன வைதீக பிற்போக்காளர்களும் மறுபுறம் சமூகத்தைப் புரட்டிப் போட வேண்டுமென்ற சீர்திருத்தவாதிகளும் தோன்றியது அந்த சமூகத்தில் தான். இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்களில் பலர் பிராமணர்களே. இன்னொன்று, அந்த சமூகத்தின் சகிப்புதன்மை. ரிஷிமூலம் கதையை வேறெந்த சமூகத்தை வைத்து
Jeyakanthanin Munnuraikal Tamil
ஜெயகாந்தனின் முன்னுரைகள்
பெர்னார்ட் ஷாவின் முன்னுரைகளைப் போல் ஜெயகாந்தனின் முன்னுரைகள் பிரசித்தியானவை. தன்னுடைய முன்னுரைகள் அதிகப் பிரசங்கித்தனங்கள் அல்ல, அவை வாசகனோடு உரையாடுவதற்கு தனக்கொரு வாய்ப்பு என்றொரு முன்னுரையில் கூறியிருப்பார். ஷாவின் முன்னுரைகள் எப்படி ஒரு பிரசார தொனியைக் கொடுத்து இலக்கியத் தன்மையை சிதைக்குமோ அப்படியே அது ஜெயகாந்தனின் முன்னுரைக்கும் பொருந்தும்.
நேரிடயான பாத்திரப் படைப்புகள் இருக்கும் கதைகளுக்கு முன்னுரை என்ற ஒன்றின் மூலம் தன் மனதில் எழுந்த எந்த தத்துவ முடிச்சு அந்தக் கதையை எழுதத் தூண்டியதென்பது முதல் தன் நிலைப்பாடு என்னவென்பதையும் சொல்லிவிட்டால் அப்புறம் வாசகன் தனக்குள்ளாக எதை, தன் வசிப்பனுபவம் மற்றும் வாழ்வியல் பின்புலம் கொண்டு, மீளுருவாக்கம் செய்ய தலைப்படுவான்?
Kamma Karai Oram andhimalail sayum Tamil
சரியான வெய்யில் . "Constitution Day"ஞாபகத்தில் வந்தது. எனக்கு நானே சொல்லிக் கொண்டேன் "WE, THE PEOPLE OF INDIA, having solemnly resolved to constitute India into a SOVEREIGN SOCIALIST SECULAR DEMOCRATIC REPUBLIC and to secure to all its citizens; JUSTICE, social, economic and political; LIBERTY of thought, expression, belief, faith and worship; EQUALITY of status and of opportunity; and to promote among them all
FRATERNITY assuring the dignity of the individual and the unity and integrity of the Nation;
IN OUR CONSTITUENT ASSEMBLY this 26th day of November 1949, do HEREBY ADOPT, ENACT AND GIVE TO OURSELVES THIS CONSTITUTION." (இது முழுவதும் ஞாபகத்தில் வரவில்லை) . நமக்கு பள்ளியில் இந்திய அரசியலமைபைப் பற்றி ஏன் சொல்லிக் கொடுக்கவில்லை என்று யோசித்துக்கொண்டே பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்திய அரசியலமைப்பு முழுவதும் தெரியுமா என்ற கேள்வியுடன் அலுவலகம் அடைந்தேன்.
Jeyakandhan Eluthum Arasiyalum Tamil Part 3
அன்பு, ஆக்கிரமிப்பு, அந்தரங்கம்
ஜெயகாந்தனின் கருத்தியலை சுருக்கமாகக் கூற வேண்டுமென்றால் அது தனி மனித (Individual) சுதந்திரத்தை விதந்தோதுவது தான். அன்பு செலுத்துவது என்கிற பெயரில் நிகழும் ஓர் அற்பத்தனத்தை ‘ஓரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ நாவலின் முன்னுரையில் “ஆக்கிரமிப்பு என்பது ஸ்தூல அளவிலானதே என்று புரிந்துக் கொள்வது ஒரு ஆரம்ப அறிவே ஆகும்” என்று விளக்கினார்.
சமூகத்தில் ஒருவர் இன்னொருவர் மீது அன்பு செலுத்துவதே, குறிப்பாக பெற்றோர் மற்றும் காதலர்கள், “உன்னை நான் எவ்வளவு நேசித்தேன் நீ நான் சொல்வதை தான் கேட்க வேண்டும், அப்படி கீழ் படிவது தான் நீ எனக்கு செலுத்தும் நன்றிக் கடன்” என்பது அருவருக்கத்தக்க ஆக்கிரமிப்பே.
‘Individual’ என்கிற வார்த்தையை ‘தனி மனித’ என்று கூறுவதே ஒரு குறைபாடான மொழிபெயர்ப்பு என்று சொல்லலாம். ‘Individual’ என்பதற்கு சரியான ஒரு வார்த்தைக் கூட நம் மொழியிலோ பன்பாட்டு தளத்தில் இல்லை. ஆனால் ‘Individual’ என்பது ஐரோப்பாவில் கருத்தியலாக காலூன்றி குறைந்தது இருநூற்றாண்டுகளாகிறது. "பாரீசுக்கு போ" சாரங்கனின் தந்தை, ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் ரங்கா, மோக முள் ரங்கண்ணா மற்றும் பாபுவின் தந்தை எனப் பலரும் மீண்டும் மீண்டும் அன்பென்ற பெயரில் ஆக்கிரமிப்பே செய்கின்றார்கள். கல்யாணியும் சாரங்கனும் அதை நிராகரித்து தங்களை ஒரு ‘independent individual’ என்பதை நிறுவுவதற்கே வியர்த்தப்படுகிறார்கள். ‘சமூகம் என்பது நாலு பேர்’ கதையும், அவரே முன்னுரையில் கூறியதை போன்று, ஒரு மனிதனின் வாழ்வில் சமூகம் சார்ந்த விழுமியங்களின் ஆக்கிரமிப்பே.
இந்தியப் பன்பாட்டு தளத்தில் இன்றும் வேரூன்றாத இன்னொரு கருத்தியல் ‘privacy’. அதற்கும் ‘அந்தரங்கம்’ என்பது ஒருக் குறைபாடான மொழிபெயர்ப்பே. இன்னொருவரின் அந்தரங்கம் நாம் அனுமதியின்றி நுழையக் கூடாத ஓரிடமென்பதே அவர் ‘அந்தரங்கங்கள் புனிதமானவை’ எழுதியக் காலக் கட்டத்தில் ஒரு நற்பண்பு என்ற புரிதலே இல்லாதக் காலக் கட்டம்.
Jeyakandhan Eluthum Arasiyalum Tamil Part 4
**பெண் பாத்திரப் படைப்பும் ஜெயகாந்தனும்**
பல ஆண் எழுத்தாளர்களைப் போன்றே ஜெயகாந்தனுக்கும் பெண் கதாபாத்திரங்கள் கைக்கூடுவதில்லை. தன் மேல் முறை தவறிய மோகம் கொண்ட மாமா ‘you can only be a concubine’ என்று அடிக்கடிக் கூறுவதையே வேத வாக்காகக் கொண்டு ஒரு மாலை வேளையில் தன்னை ஆட்கொண்ட படிப்போ பண்போ இல்லாத ஒரு சாதாரணனை தேடிப் பிடித்துக் காதலிக்க ஆரம்பிக்கிறாள் கங்கா. படித்த, வேலைப் பார்த்து சம்பாரித்த சுயமாக வாழ்க்கை நடத்தும் கங்கா.
பாரீஸுக்குப் போ" லலிதா முற்போக்கெல்லாம் பேசி விட்டு தனக்கு வாழ்க்கைக் கொடுத்த, இசையென்றாலென்ன, புத்தகங்களென்றால் என்னவென்றே தெரியாத மஹாலிங்கத்தின் தோளில் சாய்ந்து ஷைக்காவ்ஸ்கியின் நான்காவது ஸிம்பொனியில் லயித்துவிடுகிறாள்.
பலஹீனமான நேரத்தில் தன்னை இழந்த மனைவியை, அவள் பால் பேரன்பு கொண்ட கணவன், மன்னிப்பதைத் தவிர வேறு என்ன செய்துவிட முடியும் என்று கூறினாலும் அங்கே தவறிழைத்து விட்டு மன்னிப்புக் கேட்டு நிற்பது ஆண் தான். ‘தவறுகள் குற்றங்களல்ல’ என்று முறை தவறிய ஆண் தான் மீண்டும் மன்னிப்புக் கோருகிறான். பெண் மன்னிக்க வேண்டிய பாக்கியவாதியாக இருக்கிறாள். ‘அந்தரங்கங்கள் புனிதமானவை’ கதையிலும் புனித்தத்தைக் காக்க வேண்டியக் கடன் பெண்ணுக்கே.

Great kirikalan Story Tamil
திடீரென்று எதிரே வருபவர் தெரிந்தவர் மாதிரி தெரிந்தது. ஆம் தெரிந்தவர்தான். எங்களோடு கைப்பந்து விளையாட வருபவர். ஹலோ சொல்லிவிட்டு ஓடிச்சென்றேன். எண்ணங்கள் அப்படியே கைப்பந்து மேல் சென்றது. பாம்பனில் கைப்பந்து விளையாடுவது ஒரு பெரும் அனுபவம். விளையாடுபவர்கள் அனைவரும் என் உறவினர்கள்தான் ஆனால் அதட்டலும் கெட்ட வார்த்தைகளும் அனல் பறக்கும். அந்த மைதானமே ஒரு திகில் தரக்கூடியது .volleyball court தவிர மற்ற இடங்கள் எல்லாம் மலம் தான். மலத்தில் படாமல் பந்தைப் துரத்துவத்துவதிலேயே tired-ஆகி விடுவோம்.அங்கிருந்து மாறி ஆலமர திடலுக்கு மாறினோம். அங்கு காற்றோடு விளையாடியதுதான் அதிகம். அது ஒரு அழகிய நிலாக் காலம். அப்படியே நினைவு பாட்டில் திரும்பியபோது "The Litany of the Saints" ஓடிக் கொண்டிருந்தது. அந்த அமைதியிலேயே வீடு திரும்பினேன்.
Jeyakandhan Eluthum Arasiyalum Tamil Part 1
பொது வாழ்வில் ஈடுபட்ட மனிதன் இறந்தாலும் விமர்சனத்திற்குட்பட்டவனே என்று நமக்கு சொல்லிக் கொடுத்தது ஜெயகாந்தன். ஒருவர் மரணமெய்திவிட்டால் ‘அவர் எழுதிய குப்பைகளெல்லாம் குறுக்கத்திப் பூக்களாகிவிடுமா’ என்று இரங்கல் கூட்டத்தில் கேட்டாலும் தவறில்லை என்று அறிவுறுத்தியவர் ஜெயகாந்தன். தமிழ் இலக்கியம், அரசியல், சினிமா மற்றும் வரலாற்றில் ஜெயகாந்தனின் இடம் என்ன என்பதை அவர் வழியிலேயே பாரபட்சமில்லாமல் பார்க்கலாமே.
**பாரீஸுக்குப் போ**
ஜெயகாந்தனின் படைப்புலகுக்குள் நான் நுழைந்த நுழைவாயில் ‘பாரீஸுக்கு போ’. படைப்பாளியாக அவரின் பலம் மற்றும் பலவீனம் தெளிவாகத் தெரியும் படைப்பு அது. வெகுஜனப் பத்திரிக்கையில் தொடராக வெளிவந்ததால் அதற்கே உரித்தான திடுக் திருப்பங்கள், நேரிடையானப் பாத்திரப் படைப்பு, எளிமையான கதைச் சொல்லல், கொஞ்சம் அங்குமிங்குமாக அலைந்தக் கதை, கடைசியாக ஒரு கிளைமாக்ஸ் ஆனால் செறிவான தத்துவ விசாரணைகள் ஊடும் பாவுமாய் அந்தக் கதைக்கு ஒரு ஜெயகாந்தன் முத்திரையைக் கொடுத்தொருக்கும்.
மோக முள்ளில் ‘integral’ என்று சொல்ல முடியாத இசை பாரீஸுக்கு போவில் பிரிக்கமுடியாமல் கதையோடு பின்னிப் பினைந்து ஊடாடுயிருக்கும். பாபு ஒரு சிறந்த மேஸ்திரியாகவோ, மருத்துவராகவோ ஆவதற்கு முயல்பவனாகவோ வைத்துக் கொண்டாலும் அந்தக் கதையைச் சிதையாமல் சொல்ல முடியும். பாரீஸுக்கு போ அப்படியல்ல. கர்நாடக சங்கீதத்தில் மட்டுமே ஊறித்திளைக்கும் தந்தைக்கும் பாரீஸில் தன் வாழ்நாளில் பெரும் பகுதியைக்கழித்துவிட்ட கர்நாடக சங்கீதத்திலும் மேற்கத்திய செவ்வியல் இசையிலும் தேர்ச்சிப் பெற்ற மகனும் மோதும் பண்பாட்டு தளமாக இசையே இருக்கும். ஜெயகாந்தனுக்கு மேற்கத்திய செவ்வியல் இசையிலும் நல்ல அறிமுகமுண்டு அது இக்கதையில் துல்லியமாகத் துலங்கும்.
Jeyakandhan Eluthum Arasiyalum Tamil Part 2
இசையைப் பற்றிப் பேசுவதென்பது பல தளங்களில் நிகழக் கூடிய ஒன்று. தி.ஜா இசையை பற்றிப் பேசும் முறை ஒரு ஆரம்ப நிலையே. ராகங்களைக் குறிப்பது, ஒரு ஆலாபனையை சிலாகிப்பது, ஸ்ருதி மீட்டலில் திளைப்பதெல்லாம் ஒரு ஆரம்ப நிலை ரசிகனுக்கே உரியது. கர்நாடக சங்கீத விற்பண்ணர்கள் பலரும், ஜாம்பவான்கள் உட்பட, ரசிகர்களும் அந்த நிலையில் தான் இன்று வரை இருக்கிறார்கள். இசையென்பது ஒரு கலை அதற்கு மற்றக் கலைகளின் கூறுகள் உள்ளன, சமகால அரசியலைப் பேசுவது உட்பட, என்பதை மேற்கத்திய செவ்வியல் இசையை நன்கறிந்தவர்கள் புரிந்துக் கொள்வார்கள். அத்தகையப் புரிதலை ஜெயகாந்தன் சாரங்கனின் வாயிலாக சொல்லியிருப்பார். அதனாலேயே அந்த நாவல் இன்று வரை சர்ச்சைக்குள்ளானது, கர்நாடக சங்கீத பிரியர்களுக்கு அந்நாவல் மற்றும் அது இசைக்குறித்து வைக்கும் விவாதங்கள் எட்டிக்காயாக கசந்ததால் அந்நாவலை ஏற்க மறுத்ததோடல்லாமல் அதன் தத்துவ விவாதங்களையே அதன் குறைகளாகக் கூறுகிறார்கள். இவர்கள் தாமஸ் மானின் ‘Faust’ படித்தால் என்ன சொல்லுவார்களோ?
தவறிழைப்பதும் மன்னிப்பதும் அவர் கதைகளின் மற்றொரு முக்கியமான கூறு. கதையில் முக்கியமானத் தருணத்தில் மன்னிப்பு என்கிற கோட்பாட்டை வலியுறுத்துவார். ஏதோ ஒரு கனத்தில் தன் வசமிழந்துவிடும் மனைவியைக் கணவன் என்ன செய்வது என்றக் கேள்விக்கு ‘வெறுக்கவே முடியாத அளவுக்கு அன்பு செய்துவிட்ட ஒருவனால் வேறென்ன செய்ய முடியும்’ அவளை மன்னித்து ஏற்றுக் கொள்வதைவிட' என்று தன் கதாபாத்திரனூடாகப் பதில் சொன்னார். அந்தத் தவறு மீண்டும் மீண்டும் நடந்தால் என்னச் செய்வது என்கிற குதர்க்கமானக் கேள்விக்கு, “அம்மா நான் தவறிழிப்பதையே வாழ்க்கையாகக் கொண்டவர்களைப் பற்றிச் சொல்லவில்லை” என்றார்.
‘தவறுகள் குற்றங்களல்ல’ கதையின் கருவும் மன்னிப்பே. பிராமண கதாபாத்திரங்களையேக் கொண்டு பெரும்பாலும் கதைச் சொல்லும் ஜெயகாந்தன் இக்கதைக்கு கிறிஸ்தவ பெண்ணை பயன்படுத்தியிருப்பார். அக்கதையில் அத்துமீறி அப்பெண்ணிடம் நடந்துக் கொள்ளும் ஒரு மேலாளர் தன் தவறுணர்ந்து மன்னிப்புக் கோர அப்பெண்ணின் கிறிஸ்தவப் பின்னனியை வைத்து தன் செய்கைக்கு வருத்தம் தெரிவிப்பார்.
Grow Knowledge Self learning Tamil
நம்முடைய பாவங்களுக்காக மரிக்க கடவுள் தம்முடைய ஒரே குமாரனை அனுப்பினார்.
இயேசு தேவனுடைய குமாரன். அவர் பாவமற்ற வாழ்வை வாழ்ந்து, நம்முடைய பாவங்களை கழுவும்படி சிலுவையில் அவருடைய உயிரை தியாகம் செய்தார். “நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்”
இயேசு மரித்தோரிலிருந்து எழும்பி, இப்பொழுது பரலோகத்தில் பிதாவோடு இருக்கிறார். அவர்கள் நமக்கு நித்திய ஜீவனின் வரத்தை தருகிறார்கள் – நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாக நாம் அவர்களை ஏற்றுக்கொண்டல் பரலோகத்தில் என்றென்றைக்கும் அவர்களோடே வாசம்பண்ணுவோம்.
அதற்கு இயேசு, நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
Idli Globalization and Medieval Tamil Traders
இந்தப் பதிவு , எனக்கு ஒரு மைல் கல் போல் . ஏனெனில் 'Voice Blogging' (தங்கள் குரல் மூலம் தாம் சொல்ல நினைப்பதை பதிவு செய்வது) இல் இது தான் என்னுடைய கன்னி முயற்சி.
இந்தப் பதிவில் தமிழகத்தின் மத்திம கால சரித்திரத்தில் பெரிதும் பேசப்படாத கடல் தாண்டி வாணிபம் செய்த வணிகர்கள் பற்றியும் இட்லி தென் இந்தியாவிற்குள் வந்ததும் அதற்கு எப்படி அவர்கள் ஒரு காரணமாய் அமைந்தார்கள் என்பதற்கான சுவாரசியமான செய்தியையும் பதிவு செய்துள்ளேன் .
ஆக இட்லி எங்கிருந்து வந்தது ?
வணிகர்களுக்கு இதில் என்ன சம்பந்தம் ?
இந்த வணிகர்கள் எந்த இடத்தைச் சார்ந்தவர்கள் ?
இந்த கேள்விகளுக்கு பதில் வேண்டுமா ?
தெரிந்து கொள்ள : https://soundcloud.com/jeyankarunanithi/idli-globalization-and-medieval-tamil-merchants
Thinam thinam unai nesippen Tamil Story
இன்று அலுவலகம் செல்லவில்லை. மகளுக்கு சிங்கப்பூர் பள்ளியில் சேர நடக்கும் நுழைவு தேர்வு இன்று. தேர்வு முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் walkman-ஐ எடுத்துக் கொண்டு ஓட ஆரம்பித்தேன். லேசாக வெய்யில் அடித்தது. ஓட ஆரம்பித்ததிலிருந்து அந்த நுழைவுத்தேர்வுப் பற்றியே எண்ணம். பிள்ளைகள் எக்ஸாம் ஹாலை விட்டு வெளிய வந்தவுடன் பெற்றோர்கள் அவர்களை கேள்விகளால் துளைத்து எடுத்தனர். எனக்கு ஏனோ கோபம்.இந்தியாவின் அனைத்து மொழிகளையும் அங்கு கேட்டேன். நான் என் மகளிடம் "had fun?" என்று கேட்டேன். அவளும் சிரித்துக் கொண்டே தலையை ஆட்டினாள். அதன் பிறகு அவளிடம் அந்த தேர்வைப் பற்றி எதுவும் கேட்கவில்லை.
Walk Street along the Sea Tamil
கடவுள் உன்னை நேசிக்கிறார்
வேதாகமம் கூறுகிறது, “தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரை தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.”
பிரச்சனை என்னவென்றால்…
நம் அனைவருமே தீய காரியங்களைச் செய்துகொண்டிருக்கிறோம் அல்லது தீய எண்ணங்களைக் கொண்டிருக்கிறோம். இததைத்தான் பாவம் என்று சொல்கிறோம், நம் பாவங்கள் நம்மை தேவனிடமிருந்து பிரிக்கின்றன.
வேதாகமம் கூறுகிறது: “எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையை இழந்துபோனார்கள்.” கடவுள் பாவமற்றவர் , பரிசுத்தவானவர், நம் பாவங்கள் நம்மை கடவுளிடமிருந்து பிரிக்கிறது. வேதாகமம் கூறுகிறது, “பாவத்தின் சம்பளம் மரணம்”
இது நற்செய்தி 2000 ஆண்டுகளுக்கு முன்பு,
Kachchar Kochchar Vivek Shanbhaak Part - 1
***கட்டாயங்களை விருப்பங்களாகக் காட்டிக்கொள்வது குடும்பத்தின் வலிமைகளில் ஒன்று.***
இந்தப் புத்தகத்தைப் பற்றி பலபேர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். சென்ற வாரம் நூலகத்தில் இந்த புத்தகத்தைப் பார்த்தவுடன் வாசிக்க ஆரம்பித்தேன். ஒரே நாளில் வாசித்து முடித்த சிறிய புத்தகம் . பல முறை கேள்விப்பட்ட கதைதான். ஆனால் அதை வாசிக்கும்போது தற்போதைய குடும்ப கட்டமைப்புகளைப் பற்றி கேள்விகள் எழுந்தது. இது ஒரு கன்னட புத்தகம் . தமிழில் கே நல்லதம்பி மொழிப்பெயர்த்துள்ளார்.
ஒரு கீழ் நடுத்தரக் குடும்பம் அதில் வேலையில்லாத அப்பா ,வீடே எல்லாமென்று எண்ணும் அம்மா கணவனை விட்டுத் தனியாக வாழும் தங்கை மாலதி ,குடும்பத்தின் பொருளாதார மய்யம் சித்தப்பா மற்றும் கதைச்சொல்லி .இந்த குடும்பம் மேல்தட்டுக்கு முன்னேறும் பொது அவர்கள் எவ்வாறு வாழ்கிறார்கள் என்பதுதான் கதை. கதைச்சொல்லி திருமணம் முடிக்கிறான் அவனின் மனைவி அனிதா. அனிதா அக்குடும்பத்தில் புதிதாக வந்தவள் அவள் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறாள். புதிய வசதியும் பொருட்களும் அவர்களை புது உறவுகளை ஏற்க மறுக்கிறது. இது ஒரு புரியாத புதிர் அதுவரை மகிழ்ச்சியாக இருந்த குடும்பம் மற்றொருவர் வந்தவுடன் அதை இழக்கிறது.
***பணம் நம்மை ஆட்டிவைக்கும் என்ற பேச்சு பொய்யல்ல.அதற்கும் ஒரு இயல்பு,பலம் இருக்குமோ என்னமோ.குறைவாக இருக்கும்போது நம் கட்டுப்பாட்டிலிருந்து,அதிகமானதும் அதன் வலு பெருகி நம்மையே ஆட்டிப் படைக்கும் என்று தோன்றுகிறது.***
Being Mortal - Atul Gawande Tamil
இறப்பைப் பற்றி பேசுவதே தவறென கருதும் சூழலில் எத்தனை மருத்துவர்கள் இறப்பைப் பற்றி தங்களின் நோயாளிகளுக்கு விவரித்து கூறுகிறார்கள். பெரும்பாலும் எந்த மருத்துவரும் அதை பற்றி பேசுவதில்லை ஏனென்றால் அவர்களுக்கு எப்படி நோயை குணப்படுத்த வேண்டுமென்று மட்டும்தான் சொல்லிக் கொடுக்கப்பட்டுள்ளது.அதுல் மருத்துவர்களை மூன்று விதமாகப் பிரிக்கிறார் :
***1.Paternalistic*** - தந்தைப் போல நோயாளி என்ன செய்ய வேண்டும் என்பதை மட்டும் கூறுபவர்.
***2.Informative*** - மேலே கூறியவருக்கு எதிர் இவர். அனைத்து விவரங்களையும் நோயாளியிடம் சொல்பவர். இறுதி முடிவை நோயாளியிடம் விட்டுவிடுவார்.
***3.Interpretive*** - இவர் மேலே கூறிய இருவரின் கலப்பு. நோயாளியிடம் எடுத்துக் கூறி அவரிடம் அவருக்கு முக்கியமானது எது என்று கேட்பவர்.
ஒவ்வொரு வகையும் ஒவ்வொரு விதமான நோய்களுக்கு பொருந்தும். குணப்படுத்த முடியாத நோய்களுக்கு மூன்றாவது வகை மருத்துவர்கள் தான் பொருந்தும் ஏனென்றால் அவர்கள் வாழப்போகும் காலம் குறுகியது. அதுல் இந்த மூன்று வகையையும் தனது தந்தையின் சிகிச்சையின் போது எதிர்கொள்கிறார்.
***Courage is strength in the face of knowledge of what is to be feared or hoped. Wisdom is prudent strength.***
***Your chances of avoiding the nursing home are directly related to the number of children you have.***
எப்படி முதியவர்களைப் பரமரிக்கும் நிறுவனங்கள் தோன்றின மற்றும் அது எப்படி சேவையிலிருந்து தொழிலாக மாறியது என்பதையும் விரிவாக எழுதியுள்ளார். முதுமை என்றவுடன் பணம் செலவழிப்பு என்று சொல்லும் அளவுக்கு அது வியாபாரமானது என்றால் மிகையாகாது. இறுதி காலத்தைப் பற்றி நோயாளிகள் மற்றும் முதியவர்களுடன் உரையாடுவதே சிறந்தது என்கிறார் அதுல். அது கடினம் தான் ஆனால் அதுவே அனைவருக்கும் சிறந்தது.
***We’ve been wrong about what our job is in medicine. We think our job is to ensure health and survival. But really it is larger than that. It is to enable well-being.***
இந்த புத்தகத்தை நான் ஏன் கீழே வைக்காமல் படித்தேன் என்று எனக்கே தெரியவேயில்லை இதில் எனக்கு முன்னரே தெரியாத விசயங்கள் பெரிதும் ஏதும் இல்லை ஆசிரியரின் வாதங்களும் புதிதல்ல ஆனால் அவர் கூறிய முறை . மிகவும் எளிய முறையில் எடுத்துக்காட்டுகளுடன் கூறியதுதான். ஒவ்வொன்றையும் ஒரு கதையின் மூலம் சொல்கிறார். முதலில் அவரின் தந்தையின் நோய் பற்றி இரண்டாவது குணப்படுத்த முடியாத நோயாளிகளின் வாழ்க்கை அவர்களின் எதிர்பார்ப்பு மற்றும் அவர்களை கவனித்துக் கொள்பவர்கள் பற்றி மூன்றாவது இறப்பை பற்றி நான்காவது மருத்துவர்களை பற்றி ஐந்தாவது மருத்துவச் செய்திகள். மருத்துவத்தை இவ்வளவு அழகாக கதையினுடன் சொல்வது மிகவும் கடினம் ஆனால் அதுல் அதை மிக அற்புதமாக செய்துள்ளார்.
அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்.
Kachchar Kochchar Vivek Shanbhaak Tamil Part - 2
கதைச்சொல்லி படிக்கும் போது எப்படியாவது நல்ல வேலையில் சேரவேண்டுமென்று நினைத்ததும் தான் பணக்காரனாக பிறகு அது அப்படியே தலைகீழாக மாறியதும் தற்கால புது பணக்காரர்களை கண்முன் காட்டுகிறது. மாதம் மாதம் சம்பளம் வரும்போது தான் ஏன் வேலைக்கு செல்லவேணுடுமென்று கூட நினைக்கிறான். அம்மா மருமகளிடம் சமையலை விடுவதாக இல்லை. மகளும் தன் பங்கிற்கு தனது அதிகாரத்தை விடுவதாக இல்லை. அவர்கள் மூவருக்கும் அப்பா வேறுயாருக்காவது சொத்தை எழுதிவிடுவார் என்ற பயம் .மருமகள் அனைவரையும் கேள்வி கேட்கிறாள். அவளால் அக்குடும்பத்தின் சமநிலை தடுமாறுவதாக கதைசொல்லி நினைக்கிறான்.
சித்தப்பா ஒரு புரியாத புதிர் யாரும் அவரைக் கேள்வி கேட்பதில்லை. அவரை மகிழ்ச்சியாக வைத்திருப்பதே அக்குடும்பத்தின் ஒரே நோக்கம் .அதற்க்காக எதுவும் செய்ய அவர்கள் தயார்.அவரைத் தேடி பெண் ஒருத்தி வருகிறாள் அங்கு பெரும் குழப்பம் நிலவுகிறது ஆனால் சித்தப்பாவோ எதுவும் பேசாமல் தன் அறையிலேயே இருக்கிறார். அவர் தொழிலின் பொருட்டு வன்முறையையும் பயன்படுத்தினார். அவர் அதைப் பற்றி பேசும்போது யாரும் எதுவும் சொல்லவில்லை. அப்பா ஒருவரே சிறிது தயங்கினார். அப்பா அவரை யாரும் மதிப்பதில்லை அவர் அவரின் சொந்த ஜோக்குகளுக்கு சிரித்து கொள்கிறார்.
அப்பா ஏன் யாரிடமும் தைரியமாக பேசுவதில்லை ? சித்தப்பா ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை? மாலதி ஏன் கணவன் வீட்டிலிருந்தே அதிகாரம் செய்யாமல் மீண்டும் இவ்வீட்டிற்கே வந்தாள் ? கதைச்சொல்லி ஏன் தனது மனைவியிடம் அனைத்தையும் மறைக்கிறான் ? இப்படி பல கேள்விகள் எழுகிறது .அவர்கள் ஒருவரையொருவர் அன்பு செய்கிறார்களா என்பதே ஒரு பெரிய கேள்விக்குறிதான். குடும்பம் என்ற ஒன்றிற்காக சேர்ந்து வாழ்கிறார்கள் வேறுவழியின்றி . அறம் இல்லாத வாழ்வு. இறுதியில் அனிதா வீடு திரும்பினாளா இல்லையா என்று சொல்லாமலேயே கதை முடிகிறது.
இக்கதையில் மற்றொரு முக்கிய கதாப்பாத்திரம் அந்த காபி கடையும் அங்கு வேலை செய்யும் வின்செண்டும். காலையிலும் மாலையிலும் கதைச்சொல்லி அங்குதான் தன் நேரத்தை செலவிடுகிறான். அவ்வப்போது வின்சென்ட் ஒரு வரி செய்திகளையும் பழமொழிகளையும் அவனிடம் சொல்கிறான். கதைச்சொல்லிக்கோ அந்த ஒரு வரிகள் பல சிந்தனைகளுக்கு இட்டுச்செல்கிறது. கதை தொடங்குவதும் முடிவதும் அங்குதான். காச்சர் கோச்சர் என்றால் விடுவிக்கமுடியாத சிக்கல் எனலாம்.
இப்புத்தகம் 103 பக்கங்கள்தான் ஆனால் அது உருவாக்கிய குடும்ப சித்திரம் நம் கண்முன்னே நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது.வறுமை தந்த மகிழ்ச்சியும் ஒற்றுமையும் வணிக செல்வம் தரவில்லை. மனிதர்கள் ஏன் செல்வம் வந்தவுடன் அப்படி மாறுகிறார்கள் என்பதுவும் ஒரு கேள்விக்குறிதான் .
கே நல்லதம்பி மிக அருமையாக மொழிப்பெயர்த்துள்ளார்.சரளமான மொழி நடை.
அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்.
Being Mortal - Atul Gawande
இந்த வருடத்தில் நான் வாசித்த முதல் புத்தகம். மருத்துவம் முதுமை மற்றும் இறப்பை பற்றி பேசும் புத்தகம்.அதுல் கவாண்டே ஒரு மருத்துவர். அவரின் அப்பாவின் நோய் பற்றி தெரிந்த பின்பு அவருடைய எண்ணங்களை இந்த நூலில் எழுதியுள்ளார் . குணப்படுத்த முடியாத நோய் வந்தால் நாம் எப்படி நடந்து கொள்கிறோம் நோயாளியிடம் அவரின் விருப்பதைக் கேட்கிறோமா மருத்துவர் அதை ஏற்றுக்கொள்வாரா இப்படி பல முக்கியமான கேள்விகளைக் கேட்கிறார்.
***For human beings, life is meaningful because it is a story. A story has a sense of a whole, and its arc is determined by the significant moments, the ones where something happens.***
முன்பு கிராமங்களில் வயதானவர்களை அதிலும் நோய்வாய்ப்பட்டவர்களை எப்படி குடும்பங்கள் பார்த்துக்கொண்டன என அவர் மிகவும் அழகாக விவரிக்கிறார். அவரின் தாத்தா தனது இறுதிவரை தனக்கு பிடித்ததை செய்துக் கொண்டிருந்தார் என்கிறார் அதுல் அதற்கு முக்கிய காரணமென கருதுவது அவரின் குடும்பத்தாருக்கு அவருக்கு என்ன பிடிக்கும் என்று தெரியும் அவர்களும் அவரை அவரின் விருப்பத்திற்கு விட்டதுதான். காலங்கள் மாற குடும்ப அமைப்பும் மாறின நாம் எப்படி நோய்களையும் வயதானவர்களையும் நடத்துகிறோம் என்பதும் மாறிக்கொண்டே வருகிறது.
***Our ultimate goal, after all, is not a good death but a good life to the very end.***
***Life is choices, and they are relentless. No sooner have you made one choice than another is upon you.***
Visaranai Commission Sa.Kandhaswami Tamil Story Part - 2
பேருந்து டெப்போவில் நடக்கும் சம்பவங்கள் உண்மையாக சித்தரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பேசும் தற்கால அரசியல்தான் கதையின் மய்யம். நடத்துனர்கள் ஓட்டுனர்களின் பிரச்னைகள் மற்றும் அங்கு நடக்கும் அரசியல் ஒரு பக்கமென்றால் மற்றொரு பக்கம் ஆசிரியர்களின் உலகம். இந்த இரண்டிற்கும் இடையில் அவர்கள் இருவரின் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையில் நாட்டின் அரசியலிலும் மாற்றங்கள் நடந்து கொண்டே இருக்கிறது. ஒரு சாதராண ஆசிரியரும் பேருந்து நடத்துனரும் எப்படி அரசியல் தலைவர்களாக மாறுகிறார்கள் என்பதை பாரதிவாணன் மற்றும் கணபதி மூலம் கூறியுள்ளார். இவர்கள் இருவரும் சுயநலவாதிகள். பாரதிவாணன் ருக்குமணிக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் புத்தகம் தருவதாக சொல்லி இறுதிவரை அவளிடம் கொடுக்கவே இல்லை.தற்போது அவன் அமைச்சர்.
போலீசுக்கும் ஓட்டுநர் நடத்துங்கருக்கும் இடையே நடந்த சண்டையில் சம்பந்தமே இல்லாமல் தங்கராசு கைது செய்பப்டுகிறான். அந்த கலவரத்தை ஆய்வு செய்ய ஒரு விசாரணைக் கமிஷன் நியமிக்கப் படுகிறது. இது கூறும் நீதியே இந்த நாவலின் அடிநாதம். தங்கராசு போலீசாரால் கொல்லப்படுகிறான்.அரசியல்வாதிகள் தங்களுக்கு எது தேவையோ அதை மட்டுமே செய்வார்கள் என்பதற்கு இந்த கொலையும் ஒரு எடுத்துக்கட்டு. கதையில் அங்கும் இங்குமாக சாதி எட்டிப் பார்க்கிறது அதிலும் ஆசிரியர்களுக்கு இடையே நடக்கும் உரையாடல்கள் அதின் உச்சம்.ஆனால் இறுதிவரை தங்கராசும் ருக்குமணியும் என்ன சாதி என்று ஆசிரியர் கூறவில்லை.
எனக்கு இக்கதையில் வரும் நாய் டைகர் பிடித்திருந்தது. டைகருக்கு பின்னல் ஒரு கதையுண்டு அது ருக்குமணியின் கதாபாத்திரத்திற்கு மேலும் வழுச் சேர்க்கிறது.டைகருக்கு தெரிந்திருந்தது யாரை வீட்டிற்கு உள்ள விடவேண்டும் என்று. எனக்கு பிடித்த மற்றொரு கதாபாத்திரம் ஓட்டுநர் சையத் முகமது. அவர் பேசுவதும் செய்வதும் தொழில் பக்கிதியின் உச்சம். சில இடங்களில் தேவையில்லாத தலபுராணங்கள் வருகின்றன. ஏன் என்று தெரியவில்லை. ஒரு காலகட்டத்தின் சமூக அரசியல் மற்றும் கலாச்சாரத்தை கண்முன் கொண்டுவந்துள்ளார் சா.கந்தசாமி. இந்நூல் 1998 ஆண்டு சாகித்ய அகாடமி பரிசைப் பெற்றது.
வாசிக்க வேண்டிய புத்தகம் .