read.cash Log in
@Muthuking

Jeyakandhan Eluthum Arasiyalum Tamil Part 4

**பெண் பாத்திரப் படைப்பும் ஜெயகாந்தனும்** பல ஆண் எழுத்தாளர்களைப் போன்றே ஜெயகாந்தனுக்கும் பெண் கதாபாத்திரங்கள் கைக்கூடுவதில்லை. தன் மேல் முறை தவறிய மோகம் கொண்ட மாமா ‘you can only be a concubine’ என்று அடிக்கடிக் கூறுவதையே வேத வாக்காகக் கொண்டு ஒரு மாலை வேளையில் தன்னை ஆட்கொண்ட படிப்போ பண்போ இல்லாத ஒரு சாதாரணனை தேடிப் பிடித்துக் காதலிக்க ஆரம்பிக்கிறாள் கங்கா. படித்த, வேலைப் பார்த்து சம்பாரித்த சுயமாக வாழ்க்கை நடத்தும் கங்கா.

பாரீஸுக்குப் போ" லலிதா முற்போக்கெல்லாம் பேசி விட்டு தனக்கு வாழ்க்கைக் கொடுத்த, இசையென்றாலென்ன, புத்தகங்களென்றால் என்னவென்றே தெரியாத மஹாலிங்கத்தின் தோளில் சாய்ந்து ஷைக்காவ்ஸ்கியின் நான்காவது ஸிம்பொனியில் லயித்துவிடுகிறாள். பலஹீனமான நேரத்தில் தன்னை இழந்த மனைவியை, அவள் பால் பேரன்பு கொண்ட கணவன்,  மன்னிப்பதைத் தவிர வேறு என்ன செய்துவிட முடியும் என்று கூறினாலும் அங்கே தவறிழைத்து விட்டு மன்னிப்புக் கேட்டு நிற்பது ஆண் தான். ‘தவறுகள் குற்றங்களல்ல’ என்று முறை தவறிய ஆண் தான் மீண்டும் மன்னிப்புக் கோருகிறான். பெண் மன்னிக்க வேண்டிய பாக்கியவாதியாக இருக்கிறாள். ‘அந்தரங்கங்கள் புனிதமானவை’ கதையிலும் புனித்தத்தைக் காக்க வேண்டியக் கடன் பெண்ணுக்கே.

1 comment

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.