read.cash Log in
@Muthuking

Kachchar Kochchar Vivek Shanbhaak Part - 1

***கட்டாயங்களை விருப்பங்களாகக் காட்டிக்கொள்வது குடும்பத்தின் வலிமைகளில் ஒன்று.*** இந்தப் புத்தகத்தைப் பற்றி பலபேர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். சென்ற வாரம் நூலகத்தில் இந்த புத்தகத்தைப் பார்த்தவுடன் வாசிக்க ஆரம்பித்தேன். ஒரே நாளில் வாசித்து முடித்த சிறிய புத்தகம் . பல முறை கேள்விப்பட்ட கதைதான். ஆனால் அதை வாசிக்கும்போது தற்போதைய குடும்ப கட்டமைப்புகளைப் பற்றி கேள்விகள் எழுந்தது. இது ஒரு கன்னட புத்தகம் . தமிழில் கே நல்லதம்பி மொழிப்பெயர்த்துள்ளார். ஒரு கீழ் நடுத்தரக் குடும்பம் அதில்  வேலையில்லாத அப்பா ,வீடே எல்லாமென்று எண்ணும் அம்மா  கணவனை விட்டுத்  தனியாக வாழும் தங்கை மாலதி  ,குடும்பத்தின் பொருளாதார மய்யம் சித்தப்பா மற்றும் கதைச்சொல்லி .இந்த குடும்பம் மேல்தட்டுக்கு முன்னேறும் பொது அவர்கள் எவ்வாறு வாழ்கிறார்கள் என்பதுதான் கதை. கதைச்சொல்லி திருமணம் முடிக்கிறான் அவனின் மனைவி அனிதா. அனிதா அக்குடும்பத்தில் புதிதாக வந்தவள் அவள் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறாள். புதிய வசதியும்  பொருட்களும் அவர்களை புது உறவுகளை ஏற்க மறுக்கிறது. இது ஒரு புரியாத புதிர் அதுவரை மகிழ்ச்சியாக இருந்த குடும்பம் மற்றொருவர் வந்தவுடன் அதை இழக்கிறது. ***பணம் நம்மை ஆட்டிவைக்கும் என்ற பேச்சு  பொய்யல்ல.அதற்கும் ஒரு இயல்பு,பலம் இருக்குமோ என்னமோ.குறைவாக இருக்கும்போது நம் கட்டுப்பாட்டிலிருந்து,அதிகமானதும் அதன் வலு பெருகி நம்மையே ஆட்டிப் படைக்கும் என்று தோன்றுகிறது.***

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.