read.cash Log in
@Muthuking

Jeyakandhan Eluthum Arasiyalum Tamil Part 3

அன்பு, ஆக்கிரமிப்பு, அந்தரங்கம் ஜெயகாந்தனின் கருத்தியலை சுருக்கமாகக் கூற வேண்டுமென்றால் அது தனி மனித (Individual) சுதந்திரத்தை விதந்தோதுவது தான். அன்பு செலுத்துவது என்கிற பெயரில் நிகழும் ஓர் அற்பத்தனத்தை ‘ஓரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ நாவலின் முன்னுரையில் “ஆக்கிரமிப்பு என்பது ஸ்தூல அளவிலானதே என்று புரிந்துக் கொள்வது ஒரு ஆரம்ப அறிவே ஆகும்” என்று விளக்கினார். சமூகத்தில் ஒருவர் இன்னொருவர் மீது அன்பு செலுத்துவதே, குறிப்பாக பெற்றோர் மற்றும் காதலர்கள், “உன்னை நான் எவ்வளவு நேசித்தேன் நீ நான் சொல்வதை தான் கேட்க வேண்டும், அப்படி கீழ் படிவது தான் நீ எனக்கு செலுத்தும் நன்றிக் கடன்” என்பது அருவருக்கத்தக்க ஆக்கிரமிப்பே. ‘Individual’ என்கிற வார்த்தையை ‘தனி மனித’ என்று கூறுவதே ஒரு குறைபாடான மொழிபெயர்ப்பு என்று சொல்லலாம். ‘Individual’ என்பதற்கு சரியான ஒரு வார்த்தைக் கூட நம் மொழியிலோ பன்பாட்டு தளத்தில் இல்லை. ஆனால் ‘Individual’ என்பது ஐரோப்பாவில் கருத்தியலாக காலூன்றி குறைந்தது இருநூற்றாண்டுகளாகிறது. "பாரீசுக்கு போ" சாரங்கனின் தந்தை, ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் ரங்கா, மோக முள் ரங்கண்ணா மற்றும் பாபுவின் தந்தை எனப் பலரும் மீண்டும் மீண்டும் அன்பென்ற பெயரில் ஆக்கிரமிப்பே செய்கின்றார்கள். கல்யாணியும் சாரங்கனும் அதை நிராகரித்து தங்களை ஒரு ‘independent individual’ என்பதை நிறுவுவதற்கே வியர்த்தப்படுகிறார்கள். ‘சமூகம் என்பது நாலு பேர்’ கதையும், அவரே முன்னுரையில் கூறியதை போன்று, ஒரு மனிதனின் வாழ்வில் சமூகம் சார்ந்த விழுமியங்களின் ஆக்கிரமிப்பே. இந்தியப் பன்பாட்டு தளத்தில் இன்றும் வேரூன்றாத இன்னொரு கருத்தியல் ‘privacy’. அதற்கும் ‘அந்தரங்கம்’ என்பது ஒருக் குறைபாடான மொழிபெயர்ப்பே. இன்னொருவரின் அந்தரங்கம் நாம் அனுமதியின்றி நுழையக் கூடாத ஓரிடமென்பதே அவர் ‘அந்தரங்கங்கள் புனிதமானவை’ எழுதியக் காலக் கட்டத்தில் ஒரு நற்பண்பு என்ற புரிதலே இல்லாதக் காலக் கட்டம்.

1 comment

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.