read.cash Log in
@Muthuking

Being Mortal - Atul Gawande Tamil

இறப்பைப் பற்றி பேசுவதே தவறென கருதும் சூழலில்  எத்தனை மருத்துவர்கள் இறப்பைப் பற்றி தங்களின் நோயாளிகளுக்கு விவரித்து கூறுகிறார்கள். பெரும்பாலும் எந்த மருத்துவரும் அதை பற்றி பேசுவதில்லை ஏனென்றால் அவர்களுக்கு எப்படி நோயை குணப்படுத்த வேண்டுமென்று மட்டும்தான் சொல்லிக் கொடுக்கப்பட்டுள்ளது.அதுல் மருத்துவர்களை மூன்று விதமாகப் பிரிக்கிறார் : ***1.Paternalistic*** - தந்தைப் போல நோயாளி என்ன செய்ய வேண்டும் என்பதை மட்டும் கூறுபவர். ***2.Informative***  - மேலே கூறியவருக்கு எதிர் இவர். அனைத்து விவரங்களையும் நோயாளியிடம் சொல்பவர். இறுதி முடிவை நோயாளியிடம் விட்டுவிடுவார். ***3.Interpretive*** - இவர் மேலே கூறிய இருவரின் கலப்பு. நோயாளியிடம் எடுத்துக் கூறி அவரிடம் அவருக்கு முக்கியமானது எது என்று கேட்பவர். ஒவ்வொரு வகையும் ஒவ்வொரு விதமான நோய்களுக்கு பொருந்தும். குணப்படுத்த முடியாத நோய்களுக்கு மூன்றாவது வகை மருத்துவர்கள் தான் பொருந்தும் ஏனென்றால் அவர்கள் வாழப்போகும் காலம் குறுகியது.  அதுல் இந்த மூன்று வகையையும் தனது தந்தையின் சிகிச்சையின் போது எதிர்கொள்கிறார். ***Courage is strength in the face of knowledge of what is to be feared or hoped. Wisdom is prudent strength.*** ***Your chances of avoiding the nursing home are directly related to the number of children you have.***  எப்படி முதியவர்களைப்  பரமரிக்கும் நிறுவனங்கள் தோன்றின  மற்றும் அது எப்படி  சேவையிலிருந்து தொழிலாக மாறியது என்பதையும் விரிவாக எழுதியுள்ளார். முதுமை என்றவுடன் பணம் செலவழிப்பு என்று சொல்லும் அளவுக்கு அது வியாபாரமானது  என்றால் மிகையாகாது. இறுதி காலத்தைப் பற்றி  நோயாளிகள் மற்றும் முதியவர்களுடன் உரையாடுவதே சிறந்தது என்கிறார் அதுல். அது கடினம் தான் ஆனால் அதுவே அனைவருக்கும் சிறந்தது. ***We’ve been wrong about what our job is in medicine. We think our job is to ensure health and survival. But really it is larger than that. It is to enable well-being.*** இந்த புத்தகத்தை நான் ஏன் கீழே வைக்காமல் படித்தேன் என்று எனக்கே தெரியவேயில்லை இதில் எனக்கு முன்னரே தெரியாத விசயங்கள் பெரிதும் ஏதும் இல்லை ஆசிரியரின் வாதங்களும் புதிதல்ல ஆனால் அவர் கூறிய முறை . மிகவும் எளிய முறையில் எடுத்துக்காட்டுகளுடன் கூறியதுதான். ஒவ்வொன்றையும் ஒரு கதையின் மூலம் சொல்கிறார். முதலில் அவரின் தந்தையின் நோய் பற்றி இரண்டாவது குணப்படுத்த முடியாத நோயாளிகளின் வாழ்க்கை அவர்களின் எதிர்பார்ப்பு மற்றும் அவர்களை கவனித்துக் கொள்பவர்கள் பற்றி மூன்றாவது இறப்பை பற்றி நான்காவது மருத்துவர்களை பற்றி ஐந்தாவது மருத்துவச் செய்திகள். மருத்துவத்தை இவ்வளவு அழகாக கதையினுடன் சொல்வது மிகவும் கடினம் ஆனால் அதுல் அதை மிக அற்புதமாக செய்துள்ளார். அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்.

1 comment

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.