Being Mortal - Atul Gawande
இந்த வருடத்தில் நான் வாசித்த முதல் புத்தகம். மருத்துவம் முதுமை மற்றும் இறப்பை பற்றி பேசும் புத்தகம்.அதுல் கவாண்டே ஒரு மருத்துவர். அவரின் அப்பாவின் நோய் பற்றி தெரிந்த பின்பு அவருடைய எண்ணங்களை இந்த நூலில் எழுதியுள்ளார் . குணப்படுத்த முடியாத நோய் வந்தால் நாம் எப்படி நடந்து கொள்கிறோம் நோயாளியிடம் அவரின் விருப்பதைக் கேட்கிறோமா மருத்துவர் அதை ஏற்றுக்கொள்வாரா இப்படி பல முக்கியமான கேள்விகளைக் கேட்கிறார். ***For human beings, life is meaningful because it is a story. A story has a sense of a whole, and its arc is determined by the significant moments, the ones where something happens.*** முன்பு கிராமங்களில் வயதானவர்களை அதிலும் நோய்வாய்ப்பட்டவர்களை எப்படி குடும்பங்கள் பார்த்துக்கொண்டன என அவர் மிகவும் அழகாக விவரிக்கிறார். அவரின் தாத்தா தனது இறுதிவரை தனக்கு பிடித்ததை செய்துக் கொண்டிருந்தார் என்கிறார் அதுல் அதற்கு முக்கிய காரணமென கருதுவது அவரின் குடும்பத்தாருக்கு அவருக்கு என்ன பிடிக்கும் என்று தெரியும் அவர்களும் அவரை அவரின் விருப்பத்திற்கு விட்டதுதான். காலங்கள் மாற குடும்ப அமைப்பும் மாறின நாம் எப்படி நோய்களையும் வயதானவர்களையும் நடத்துகிறோம் என்பதும் மாறிக்கொண்டே வருகிறது. ***Our ultimate goal, after all, is not a good death but a good life to the very end.*** ***Life is choices, and they are relentless. No sooner have you made one choice than another is upon you.***
1 comment
பாக்கெட்டுகள் நம் கைகளில் வந்துவிடும். அது நமக்கு வேண்டிய காய்கறியா,