read.cash Log in

@Muthuking

Joined 8 May 2020 · 106 posts

120 KT

0 KT · $3.50 received · 0 KT · $3.60 given

Posts

@Muthuking

World's Very long Toilet Tamil Story - AgaraMudhalvan ஐந்து குறுநாவல்களைக் கொண்ட இத்தொகுப்பு ஈழத்தின் போர் வாழ்க்கையின் ஆவணங்கள் என்றால் மிகையாகாது. நான் இதற்கு முன் இந்த மாதிரி ஈழக் கதைகளைப் படித்ததில்லை. ஒரு விதமான பரிதாபம் கோபம் மற்றும் பயத்தின் வெளிப்பாடுதான் இந்தக் கதைகள். *வெள்ளி விழுவதற்கெல்லாம் நீ கூச்சலிடாதே.. எங்களுக்கு வானமே இல்லை. கொஞ்சநேரம் இந்த கடலையே பார்த்துக்கொண்டிரு.. இதுதான் உன் மூதாதையருக்கான கல்லறை.* இக்கதைகளில் வரும் போராளிகள் அனைவரும் தியாகத்தின் உருவமாக சித்தரிக்கப்பட்டுள்ளனர். இடிமுரசு என்னும் போராளியின் சித்தரிப்பு என்னை ஏதோ செய்ததென்றால் போராளியாக்காவின் செயல் கண்ணில் நீர் வர வைத்துவிட்டது. கடும் சண்டைக்கிடையில் நாய்க்குட்டியைக் காப்பாற்றும் போராளியாக்கா வேனை ஒட்டிச் சென்று எதிரியின் அர்ட்லெறியின் மேல் மோதி ஈழத்திற்காக உயிரை விடுகிறாள். *சொல்லத்துடிக்கும் இத்துன்பமே இன்பம்.* "எனக்கு சொந்தமில்லாத பூமியின் கடல்" என்னும் கதையில் காதலும் காமமும் கடலைப் போல வருகிறது. அகதி என்பவன் ஓரிடமும் இல்லாதவனாகிறான். அதே கதையில் வரும் கிரேசி அக்காவின் வாழ்க்கை மற்றும் ஒரு பெரும்துன்பம். அதுவும் வெளிநாட்டில் வாழும் ஈழத்தமிழர்களால் தமிழ் நாட்டில் வாழும் ஈழத்துப் பெண்களுக்கு வரும் துன்பத்தை இக்கதையில்தான்  முதன்முதலாக படித்தேன்.

@Muthuking

World's Very long Toilet Tamil Story - AgaraMudhalvan Part II *நீ வாழ்க்கையின் உவகையை அடைய வேண்டுமெனில் சாவின் சமீபத்தையாவது தரிசிக்க வேண்டும்.* "சித்தப்பாவின் கதை"  என்னும் கதையில் வரும் ஒசாமா சித்தப்பா கதாப்பாத்திரம் பல தமிழக அரசியல்வாதிகளை ஞாபகப் படுத்துகிறது. அவரும்தான் என்ன செய்வார்.அவரால் என்னதான் செய்ய முடியும் பணத்திற்காக இயக்கத்தினரை காட்டித்தான் கொடுக்க முடியும். இயக்கமும் தண்டனை விதிப்பதில் இராணுவத்திற்கு நிகரானதுதான். "அகல்" என்னும் கதையில் இயக்கத்தினரால் கட்டாயமாக சேர்க்கப்படும் வாலிபர்களை பற்றியது. இரண்டு பக்கமும் சாவுதான். எதிர்காலம் அற்ற வாழ்வு .ஒன்று வீரச்சாவு மற்றொருன்று தண்டனைச் சாவு. *எனக்கு போரும் பிடிப்பதில்லை.போர் செய்பவர்களையும் பிடிப்பதில்லை.* "உலகின் மிக நீண்ட கழிவறை " என்னும் கதையில் வரும் இன்பம் மற்றும் ஆமைக்குளம் மறக்க முடியாதது. காலங்காலமாக தாங்கள் குளித்து திரிந்த ஆமைக்குளம் ஆர்மிக்குளமாக மாறிய கதை. இறுதியில் அவர்கள் வாழ்வில் எல்லா சூழ்நிலையிலும் இருந்த கடல் அவர்களுக்கு உலகின் நீண்ட கழிவறையாக மாறுகிறது. அகரமுதல்வன் என்ற கவிஞன் இந்த புத்தகம் முழுதும் எட்டிப் பார்க்கிறான். எல்லாவாற்றையும் வர்ணனையுடன் விவரிக்கிறார் . போர்ச்சுழலின் வாழ்க்கையை கண்முன் கொண்டுவந்திருக்கிறார் அகரமுதல்வன். இக்கதைகளை வாசகனால் எளிதில் தாண்டிச் செல்ல முடியாது. அரசியலுக்கு அப்பாற்பட்டு மனிதம்தான் கொல்லப்பட்டது ஈழத்தில். போர் வாழ்க்கையைப் பற்றிய கதைகள் மேலும் எழுதப்பட வேண்டும். அப்போதுதான் அது நினைவில் இருந்து கொண்டே இருக்கும். யூதர்கள் அதை மிகச் சரியாக செய்து கொண்டிருக்கின்றனர. அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்

@Muthuking

Penguins Stopped Playing - Harry Thompson பழைய புத்தகக் கடையில் என்னை எடு என்று என்னைப் பார்த்து ஏங்கி கேட்டுக் கொண்டிருந்தது. விட்டுவிட்டு வரமுடியாமல் வாங்கி வந்தேன். நான் இந்த அளவுக்கு விளையாட்டு சம்மந்தமான புத்தகங்களில் சிரித்ததில்லை.   இது இரண்டு நண்பர்கள் சேர்ந்து உருவாக்கிய கிரிக்கெட் குழுவின் கதை.ஹரி தாம்சன் மற்றும் பெர்க்மன் இருவரும் சிறுவயது முதலே நெருங்கிய நண்பர்கள். கிரிக்கெட் மேல் இருந்த ஆர்வத்தால் அருகில் இருந்த நண்பர்களை சேர்த்து "Captain Scott Invitation XI" என்ற அணியை உருவாக்குகிறார்கள். பெர்க்மன் வேலையின் நிமித்தம் அணியை விட்டு விலகுகிறார். ஹரி தாம்சன் அணியின் கேப்டனாக நியமிக்கப்படுகிறார். இதிலிருந்தான் இந்த புத்தகம் தொடங்குகிறது. அனைத்து கண்டங்களிலும் சென்று கிரிக்கெட் விளையாட வேண்டுமென்று முடிவு செய்த அப்படியே செய்கிறார்கள். இந்த அணியில் பல நாட்டவரும் உண்டு. பலரும் சராசரிக்கு கீழாக கிரிக்கெட் விளையாடுவார்கள். கிராமத்து அணிகளைவிட சற்று மோசமாக விளையாட கூடியர்கள். இவர்களை வைத்துக் கொண்டு உலகைச் சுற்றி வந்தால் எப்படி இருக்கும். நான் நகைச்சுவையாக இருக்கும் என்று எண்ணினேன் ஆனால் இந்த அளவுக்கு நகைச்சுவையாகவும் ரசிக்கும்படியாகவும் இருக்கும் என்று கனவிலும் நினைக்கவில்லை.  ஒவ்வொரு நாட்டிற்கும் சொல்லும் முன்னும் சென்ற பின்னும் விளையாடும் போதும் நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் நம்மை காட்டுப்படுத்தமுடியாமல் சிரிக்க வைக்கிறது.ஹரி தாம்சனுக்கும் பிரிட்டிஷ் ஏர் பணியாளருக்கும் நடக்கும் உரையாடல்கள் நகைச்சுவையின் உச்சம்.அணியின் வீரர்கள் ஒவ்வொருவரின் திறமைகளை கூறும்போது வாசகனுக்கு சிரிப்பு வராமல் இருக்க வாய்ப்பே இல்லை .விளையாடிய கிட்டத்தட்ட அனைத்து போட்டிகளிலும் Captain Scott Invitation XI தோல்வி அடைகிறது. பெரும்பாலான போட்டிகளில் சில வீரர்கள் வேண்டுமென்றே வெற்றிக்கு எதிராக செயல்படுகிறார்கள். இந்த குணத்தைத்தான் ஹரி தாம்சனால் மாற்றவே முடியவில்லை . சிங்கப்பூரில் அவர்கள் சிங்கப்பூர் ஸ்ரீலங்கா கிளப் அணியுடன் விளையாடுகிறார்கள். அங்கு நடக்கும் குளறுபடிகள் -கிளாசிக்! அதேபோல மலேசிய அணியுடன் விளையாடி வெல்கிறாரக்ள். அவர்கள் "கிளப்பிடம் தோற்றாலும் ஒரு தேசிய அணியை வென்றோம்" என்று பெருமையாக சொல்லிக்கொள்கிறார்கள். ஒவ்வொரு நாட்டின் உணவுகளை பற்றி ஹரி தாம்சன் மிகவும் ரசித்து எழுதியுள்ளார். இந்த புத்தகம் வாசிக்கும் போது நான் விளையாடிய அனைத்து கிரிக்கெட் குழுக்களும் நினைவில் வந்தது.முதலில் த்ரி ஸ்டார் குழு.அது என் குடும்பம். அனைவரும் ஓரளவு விளையாடுபவர்கள்.ஒவ்வொருவருக்கும் ஒரு பணி அதனால் எங்களுக்கு எந்த பிரச்சனைகளும் வந்ததில்லை. பல பந்தயங்களில் வென்றோம்.பலவற்றில் தோற்றோம். அடுத்து கல்லுரியில் விளையாடியது அதுவும் ஹாஸ்டல் அணியில் விளையாடியது. எங்கள் ஹாஸ்டல் அணியும் கிட்டத்தட்ட ஹரியின் அணிபோல தான்.எல்லோருக்கும் கிரிக்கெட்டில் ஈடுபாடுண்டு ஆனால் நன்றாக விளையாடதான் மாட்டோம்.இப்போது அந்த போட்டிகளைப் பற்றிப்  பேசி பேசிச்  சிரிக்கிறோம். இறுதியில்தான் வாசகருக்கு தெரிகிறது ஹரி தாம்சன் கேன்சர் நோயால் இறந்து விட்டார் என்று. இறுதிவரை Captain Scott Invitation XI அணிக்காக விளையாடினார். விளையாட்டு எழுத்தில் இவர் தனி ஒரு வகையை உருவாக்கினார் என்றுதான் சொல்ல வேண்டும். கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம்.

@Muthuking

Visaranai Commission Sa.Kandhaswami Story நீண்ட காலமாக வாசிக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்த புத்தகம் இது, ஏனோ இந்த நாவலின் பெயர் என்னுள் ஏதோ செய்தது. ஏதோ கிரிமினல் நாவலாக இருக்கும் என்று எதிர்பார்த்து இருந்தேன்.கடந்த வாரம் நூலகத்தில் பார்த்தவுடன் எடுத்து விட்டேன் ஆனால் இரண்டு நாட்களுக்கு முன் தான் வாசிக்க நேரம் கிடைத்தது. ஒரே மூச்சில் வாசிக்க கூடிய புத்தகம்தான். ***வாழ்விலே மதிப்பு , மரியாதை எனபதை உணர்த்த நல்லது தீயது என்ற பாகுபாட்டில் எல்லாமே அடங்கி இருக்கிறது.*** முதலில் நான் எதிர்பார்த்த மாதிரி இது ஒரு கிரிமினல்நாவல் இல்லை.இது ஒரு காலகட்டத்தின் பிரதிபலிப்பு. தங்கராசு ஒரு பேருந்து நடத்துனர். தான் உண்டு தன் வேலையுண்டு என்றிருப்பவர். அவரின் மனைவி ருக்குமணி ஒரு ஆசிரியர். இவர்கள் இருவரின் நட்பு மிகவும் எதார்த்தமாக சித்தரிக்கப்பட்டுள்ளது.  தங்கராசு பத்தாம் வகுப்பில் தோற்றவன் ஆனால் ருக்குமணியோ படித்தவள். அந்த வித்தியாசம் அவர்களின் தினசரி வாழ்க்கையிலும் பிரதிபலிக்கிறது. அவன் கோபப்படும்போது இவள் அமைதியாய் இருப்பதும் திரும்பி அவனே அவளிடம் பேசுவதும் வெகு இயற்கையாக நடக்கிறது. தொண்டை வலியால் பத்து நாட்களுக்கு மேலாக ருக்குமணி அவதிப்படுகிறாள்.

@Muthuking

Silence - Erling Kagge **எர்லிங் ககே** மூன்று துருவங்களை அடைந்த முதல் மனிதன். வாட துருவம் தென் துருவம் மற்றும் எவெரெஸ்ட் மலை மூன்றையும் தனியாக அடைந்தவர்.  அவருடைய இந்த புத்தகம் அமைதியின் தியானம் என்றே சொல்லலாம்.இந்த புத்தகத்தில் அவர் மூன்று கேள்விகளை எழுப்புகிறார். அதாவது 1)what is silence?  அமைதி என்றால் என்ன ? 2)Where is it?  அமைதி எங்கு இருக்கிறது ? 3)why is it more important than ever ?  அது ஏன் அவசியம் ? இந்த மூன்று கேள்விகளுக்கும் முப்பத்திமூன்று பதில்களை அளித்துள்ளார். புத்தகத்தின் அட்டையே பல விசயங்களை நமக்கு உணர்த்துகிறது.நீல நிற பின்னணியில் மலைகள் தங்கநிறத்தில் ஜொலிக்கிறது. https://en.wikipedia.org/wiki/Erling_Kagge

@Muthuking

Vaasamill Flower This need Happiness Novel வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது வைகை இல்லா மதுரை இது மீனாட்க்ஷியை தேடுது ஏதேதோ ராகம் என்னாளும் பாடும் அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும் (வாசமில்லா) பாட்டுக்கொரு ராகம் ஏற்றி வரும் புலவா உனக்கேன் ஆசை நிலவவள் மேலே மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை உனக்கேன் ஆசை கலைமகள் போலே (வாசமில்லா) என்ன சுகம் கண்டாய் இன்று வரை தொடர்ந்து உனக்கேன் ஆசை ரதியவள் மேலே வஞ்சி அவள் உன்னை எண்ணவில்லை இன்றும் உனக்கேன் ஆசை மன்மதன் போலே (வாசமில்லா) மாதங்களை எண்ண பன்னிரண்டு வரலாம் உனக்கேன் ஆசை மேலொன்று கூட்ட மாது தன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே உனக்கேன் ஆசை உறவென்று நாட (வாசமில்லா)

@Muthuking

Naan Oru Rasiyilla Raja - Oru Thalai Raagam Novel நான் ஒரு ராசியில்லா ராஜா என் வாசத்துக்கில்லை இது வரை ரோஜா ஆயிரம் பாடட்டும் மனது என் ஆசைக்கு இல்லை உறவு (நான்) பாட்டிசைக்க மேடை கண்டேன் ராகங்களை காணவில்லை பலர் இழுக்க தேர் ஆனேன் ஊர்வலமே நடக்கவில்லை கண்ணிரெண்டும் மிதக்கட்டும் நீரினிலே கை இரண்டும் போடட்டும் தாளங்களே (Repeat First Paragraph நான் ) என் கதையை எழுதிவிட்டேன் முடிவினிலே சுபம் இல்லை இயன்ற வரை வாழ்ந்துவிட்டேன் மனதினிலே சாந்தி இல்லை தோல்விதனை எழுதட்டும் வரலாறு துணைக்கென்று இனிமேல் யார் கூறு (நான் ஒரு ராசியில்லா ராஜா என் வாசத்துக்கில்லை இது வரை ரோஜா ஆயிரம் பாடட்டும் மனது)

@Muthuking

Koodayila Karuvadu Novel கூடையில கருவாடு கூந்தலிலே பூக்காடு என்னாடி பொருத்தம் ஆயா எம்பொருத்தம் இதைப் போல தாளமில்லாப் பின்பாட்டு ஆஹா தாளமில்லாப் பின்பாட்டு தட்டு கெட்ட எங்கூத்து என்னுயிர் ரோசா எங்கடி போறே மாமனை கண்டு வாடுது இங்கு அம்மாளே ஹே நம்மாளே பொழுதோட கோழி கூவுற வேளை ராசாத்தி ராசன் வாராண்டி முன்னே பொழுதோட கோழி கூவுற வேளை ராசாத்தி ராசன் வாராண்டி முன்னே அள்ளி வட்டம் புள்ளி வட்டம் நானறிஞ்ச நிலா வட்டம் பாக்குறது பாவமில்லே புடிப்பது சுலபமில்லே புத்தி கெட்ட விதியாலே ஆஹா புத்தி கெட்ட விதியாலே போனவதான் எம்மயிலு என்னுயிர் ரோசா எங்கடி போறே மாமனை கண்டு வாடுது இங்கு அம்மாளே ஹே நம்மாளே (பொழுதோட) ஆயிரத்தில் நீயே ஒண்ணு நானறிஞ்ச நல்ல பொண்ணு மாயூரத்துக் காளை ஒண்ணு பாடுதடி மயங்கி நின்னு ஓடாதடி காவேரி ஆஹா ஓடாதடி காவேரி உம்மனசில் யாரோடி என்னுயிர் ரோசா எங்கடி போறே மாமனை கண்டு வாடுது இங்கு அம்மாளே ஹே நம்மாளே (பொழுதோட)

@Muthuking

Venal Kalapriya Novel இது கலாப்ரியாவின் முதல் நாவல் என்றால் நம்ப முடியாது. மிக அழகாக ஒரு நாவலை எழுதியுள்ளார் . ஒரு குடும்பத்தின் மூன்று தலைமுறை கதையை சொல்கிறது வேனல். பிரதான கதாபாத்திரங்கள் அனைத்தும் பெண்களே. இது அப்பெண்களின் கண்ணீர் நிறைந்த கதை.இந்த நாவல்  ஒரு காலகட்டத்தின் பிரதிபலிப்பு. பெரியாரின் பேச்சு  திமுகாவின் வளர்ச்சி மற்றும் திரைப்படங்களின் தாக்கம் என்று அந்த காலகட்டத்தின் அனைத்தும்  இக்கதையில் வருகிறது. பல அடுக்கு கதைகளை கொண்டது இந்த நாவல். கொட்டகை வீடு தான் இக்கதையின்  மய்யம் . இந்த வீட்டின் மனிதர்கள் மட்டும் அல்ல வீடும்தான் சூழ்நிலையால் மாறுகிறது . வீட்டின் பெரியார் சிவசுப்பிரமணியன் முன்னாள் அரசு அதிகாரி பெரிய பணக்காரர் .வீட்டம்மா சிவஞானம் . இவர்களுக்கு ஒரே மகன் திரவியம். அவனது மனைவி மீனா .அவர்களுக்கு ஒரு பெண்குழந்தை மற்றும் இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கிறது. பெரியவரின் தம்பி தொய்வு அவனின் மனைவி சாந்தா. திரவியம் எதையுமே பெரிதாக செய்பவன். செலவைப் பற்றி யோசிக்கவே மாட்டான். அவளது மனைவியை சரியாக கவனிக்காதவன். அவனுக்கு மற்றொரு பெண்ணுடன் தொடர்பும் உள்ளது. தொய்வு மற்றும் சாந்தாவின் கதைதான் இந்நாவலின் கதாப்பாத்திரங்களை ஒன்றோடொன்று இணைக்கிறது. இருவரும் நாடகத்தில் ஒன்றாக நடித்தவர்கள். சாந்தா ஒரு மலையாளியாக இருந்தாலும் அவளை விரும்பி தொய்வு திருமணம் செய்கிறான்.சாந்தா எப்படி இருப்பாள் என்று ஏங்கும்  அளவுக்கு அவளின் அழகை சிலாய்த்து எழுதியுள்ளார் கலாப்ரியா. அவர்கள் இருவருக்கும் நடக்கும் சிறு சிறு நிகழ்வுகள் கவிதைகள் போல எழுதப்பட்டுள்ளது.  சாந்தாவை  பார்க்கும் அனைத்து ஆண்களும் அவள் மேல்  மோகம் கொள்கிறார்கள். அதற்கு திரவியமும் அவன் மருமகனும் விதிவிலக்கல்ல. ஆணின் காமத்திற்கு எல்லையே இல்லை போல. சாந்தா இந்த மாதிரி பார்வைக்கு பழக்கமானாலும் அது அவளை வருத்தப்படத்தான் செய்கிறது. மற்றொரு குறிப்பிடத்தக்க குடும்பம் வெங்கு அண்ணாச்சி உமையாள் மற்றும் அவர்களின் மகன். இக்குடும்பம் கொட்டகை வீட்டிற்கு எதிர்மாறானது.இங்கு  உமையாளுக்கு அனைத்து சுதந்திரமும் உள்ளது. அவள் நினைத்தத்தைச் செய்கிறாள். வெங்கு அண்ணாச்சியும் அவளின் சுதந்திரத்திற்கு தடையாக இல்லை. மகனை அவனது விருப்பத்திற்கு ஏற்ப திருமணம் முடித்து வைக்கிறாள். அவள் எம்.ஜி.ஆர் -ஐ பார்க்க செல்லும் பகுதி குறிப்பிடத்தக்கது.  இந்த இரண்டு குடும்பங்களைப் பார்த்தல் அந்தஸ்தில் கீழே இருக்கும் குடும்பத்தில்தான் பெண்களுக்கு சுதந்திரம் அதிகம்.சாந்தாவின் பக்கத்து வீட்டு பாலம்மா இக்கதையின் மற்றொரு முக்கிய கதாப்பாத்திரம். கணவனை இழந்தவள். மிகவும் அழகானவள். இவள்தான் சாந்தாவிற்கு அனைத்தையும் எடுத்துக் சொல்கிறவள். அவளின் தனிமையும் காமமும் சாந்தாவிற்கு புரிந்தது. நாடக கலையின் வீழ்ச்சியும் திரைப்படத்தின் வளர்ச்சியும் மிக அழகாக இக்கதையினூடே வெளிப்படுகிறது.நாவலில் ஒரு பக்கம் சமய சடங்குகள் , தீர்த்தயாத்திரை இருந்தால் அடுத்த பக்கம் materialistic வாழ்க்கை என்று மாறி மாறி வருகிறது.விதவிதமான மனிதர்கள் கதை முழுவதும் வந்துகொண்டே இருக்கிறார்கள்.அவர்களின் வாழ்க்கையும் நுணுக்கமாக சொல்லப்பட்டிருக்கிறது. குறிப்பாக திரவியத்தின் நண்பர்களின் கதைகள். கதையில் வரும் உணவு பண்டங்களின் விவரிப்பு வாயில் எச்சில் வர வைக்கிறது. அதுவும் போத்தி கடை சாப்பாடும் சாந்தாவின் பாயாசமும் மறக்க முடியாதது.  தமிழ் இலக்கியத்தில் மற்றொரு பெரும் படைப்பு வேனல். அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்.

@Muthuking

Alaivarisai M.Kamuththurai இந்த புத்தகமும் "முள்" போல ஒரு பெண்ணின் போராட்டத்தை சித்தரிக்கிறது. நாயகி பிறப்பதோடு தொடங்குகிறது கதை. குடும்பத்தின் அன்பில் வளர்ந்த அவள். ஆசிரியர் கோபித்துக் கொண்டார் என்பதற்காக அவளை பள்ளிக்கு செல்ல வேண்டாமென்று படிப்பை நிறுத்துகிறாள் அம்மாயி. அவள் எவ்வளவோ சொல்லியும் அவளை மீண்டும் பள்ளியில் சேர்க்கவில்லை. அவள் வாழ்வின் முதல் முடிவு அவளைக் கேட்டு எடுக்கப் படவில்லை. அவள் வயதுக்கு வந்ததை மிகச் சிறப்பாக கொண்டாடுகிறார்கள்.  பதினான்கு பதினைந்து வயதிலேயே திருமணம் நிச்சியக்கப் பட்டு சில மாதங்களிலேயே திருமணமும் நடக்கிறது.  தாய் மாமன் தான் கணவன். அவன் தான் அவளை தூக்கிக் கொண்டு பள்ளியில் சேர்த்தவன். இன்றோ அவனே கணவன். அவளால் அதைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. அம்மாயின் பேச்சில் நம்பி திருமண உறவுக்குள் நுழைகிறாள். ஒரு சில மாதங்கள் தான் சேர்ந்து வாழ்ந்தார்கள். மாமனின் விடுமுறை கழிந்து மீண்டும் இராணுவத்திற்கே சென்றுவிட்டான் . சென்றவன் திரும்ப வரவில்லை. போரில் கொல்லப்படுகிறான். அவளோ கர்பமாக இருக்கிறாள் .அவள் அழவே இல்லை. குழந்தை பிறந்த சில வருடங்களில் அவளுக்கு அவளின் பெற்றோர்கள் மீண்டும் திருமணம் செய்கிறார்கள். அவனை அவளுக்குத் தெரியும் .இருவரும் ஒரே இடத்தில் வேலை செய்பவர்கள். முதலில் அன்பாக இருந்தவன் அவர்களுக்கு குழந்தை பிறக்காததால் அவளைக் கொடுமைப் படுத்துகிறான். பல பிரச்னைகளுக்குப் பிறகு அவனைவிட்டு பிரிகிறாள்.அதற்கு பிறகு அவளுக்கு பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. கதைக்கு ஆசிரியர் சரியான பெயர் வைத்துள்ளார். அலை மாதிரி வரிசையாக அவளுக்கு துன்பங்களும் துயரங்களும் வந்து கொண்டே இருந்தாலும் அவள் எல்லாவற்றையும் எதிர் கொண்டு கடந்து செல்கிறாள். கிராம குடும்ப சித்தரிப்பு எதார்த்தமாக உள்ளது. அதிலும் அம்மாயி மாதிரி உறவுகள் கிட்டத்தட்ட அனைத்து குடும்பங்களிலும் இருக்கும். நாயகி பிறக்கும் போது அம்மாயி எல்லா அம்மன்களின் பெயரைச் சொல்லி நல்ல முறையில் குழந்தைப் பிறக்க வழி  செய்யவேண்டும் என்று குழந்தை இயேசு முன்னாள் நின்று மன்றாடுவாள். அந்த காட்சி என்னை ஏதோ செய்தது. இன்று இந்தியாவில் அப்படி செய்ய முடியுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் பெரியவர்களுக்கு தெரியும் அனைத்து சாமியும் ஒன்றுதான் என்று. கதை தட்டையாக இருக்கிறது.ஏனோ என் மனதில் கதை நிற்கவில்லை. வாசிக்கலாம்.

@Muthuking

Three Face Swaami Sangli Boothathaar திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தாலுகா சிங்கம்பட்டி கிராமம் மணிமுத்தாறு அருவிக்கரை அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் மூன்று முக சுவாமி சங்கிலி பூதத்தார். ஆதிகாலத்தில் தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து அமிர்தத்திற்காக திருப்பாற்கடலை கடையும்போது ஆலகால விஷத்தோடு பாரிஜாத மரம், காமதேனுப் பசு மற்றும் மேலும் பல அதிசயங்களும், அற்புதங்களும் வெளியே வந்தன. அப்படி அமிர்தத்தோடு பலதரப்பட்ட விஷயங்கள் வெளிவரும் நேரத்தில் விசித்திரமான, வீரியமான பல விதமான பூதகணங்களும், அந்த பூதகணங்களுக்கு எல்லாம் ராஜாவான சுவாமி சங்கிலி பூதத்தார் சங்கொலி முழங்க கையில் தண்டத்தை ஆயுதமாகவும், உடல் மேல் கனத்த இரும்புச்சங்கிலிகளை ஆபரணமாகவும் அணிந்தவாறு பார்த்தாலே பதற வைக்கும் பிரமாண்ட ஆங்கார, ஓங்கார உருவத்தோடும், ஆரவார சப்தத்தோடும் ஆக்ரோஷமாக, பாற்கடலில் இருந்து வெளியே வருவதைக் கண்ட தேவர்களும், அசுரர்களும் மற்ற முனிவர்கள், சித்தர்கள் அனைவரும் அஞ்சி நடுநடுங்கி ஓடிப்போய் ஒளிந்து கொண்டனர். அமிர்தத்தோடு பிறந்ததால் சங்கிலி பூதத்தாருக்கு ‘அமிர்த பாலன்’ என்றொரு பெயரும் உண்டு. கையில் குண்டாந்தடியான தண்டத்தை ஆயுதமாக ஏந்தியுள்ளதால் 'தண்டநாதன்' என்றும் கூறுவர். திருப்பாற்கடலில் பிரமாண்ட உருவத்தோடும், அனைவர் கண்ணையும் பறிக்கும் முத்து போன்ற பிரகாசத்தோடும் தோன்றியதால் 'ராக்‌சஷ முத்து' என்றும் அன்பர்களால் அழைக்கப்படுகிறார். அண்டமெல்லாம் நடுங்கச் செய்த அதிபயங்கர ஆலகாலவிஷத்தை விழுங்கி அனைத்துலக ஜீவராசிகளையும் அழிவில் இருந்து காப்பாற்றிய கைலாய நாயகரும், சித்தருக்கெல்லாம் சித்தரும், வித்தகருக்கெல்லாம் வித்தகரும், முக்கண் மூத்தவருமான எம்பெருமான் சிவபெருமான் பூதகணங்களையும், பூதகணங்களுக்கெல்லாம் ராஜாவான சங்கிலி பூதத்தாரையும் அமைதிப்படுத்தி, ஆசுவாசப்படுத்தி தன்னோட பிள்ளைகளாக பொறுப்பு ஏற்றுக்கொண்டு கைலாயத்தில் வைத்துக் கொண்டார். இப்படியாக சிவபெருமான் ஆணையின் பேரில் பூதராஜாவான நமது சங்கிலி பூதத்தார் சுவாமி மற்ற பூதகணங்கள் உதவியோடு மிகவும் சிறப்பாக கைலாய நிர்வாகம் செய்து கொண்டு இருந்தார். ஒருமுறை சிவபெருமான் சங்கிலி பூதத்தாரிடம் மொத்த கைலாய நிர்வாகப் பொறுப்பையும் கொடுத்து விட்டு ‘பூலோகப் பயணம் போய் வருகிறேன்’ என்று கூறிச் சென்றார்.அப்படி போன சிவன் திரும்பி வரவேயில்லை. நெடுங்காலமாக பொறுத்திருந்து பார்த்த பார்வதி அன்னை ஆனவர் பூதத்தாரை அழைத்து,‘அமிர்த பாலனே, பூமிக்கு போன உங்கள் தந்தையை வெகுநாட்களாக காணவில்லையே.விபரம் ஏதும் அறிவாயா…' என்று விசாரிக்க, 'இன்னும் சிறிது நாளில் வந்து விடுவார் அன்னையே’ என்று பூதத்தார் பதில் கூறினார். இப்படியாக பல நாள்கள் கழிந்தன. கேட்கும் போதெல்லாம் பூதத்தார் இதே பதிலை சொல்ல பார்வதி அன்னை ஒருநாள் கோபப்பட்டு, 'என்ன செய்வாய், ஏது செய்வாய், என்று நான் அறியேன். நீயே நேராக பூலோகம் சென்று உங்கள் தந்தையை கையோடு அழைத்து வா' என்று உத்திரவிட, மீறமுடியாத பூதத்தாரும் தந்தையைத் தேடி பூலோகம் கிளம்பினார். அப்படி அவர் தேடி வரும்போது தூரத்தில் சிவனும் கைலாயத்துக்கு திரும்பி வருவதை பூதத்தார் பார்த்து விட்டார். ஆனால் பூதத்தார் வருவதை சிவபெருமான் கவனிக்கவில்லை. 'ஆஹா.., நாம் கைலாயம் விட்டு கீழிறங்கி வருவதை அப்பா பார்த்தால் கொடுத்த கைலாயப் பொறுப்பை கவனிக்காமல், ஊர் சுற்றுவதாக தவறாக நினைத்து, கோபப்பட்டு, சத்தம் போடுவாரே.., ஏன் இப்படி வந்தாய் என்று கேட்டால் பார்வதி அன்னை ஆணை இட்ட விபரம் சொல்ல வேண்டி வருமே…, நாம் சாபம் வாங்கினாலும் பரவாயில்லை, நம்மால் அன்னை பார்வதி ஏச்சும், பேச்சும் வாங்கக்கூடாது, குடும்பத்தில் குழப்பம் வந்து விடக்கூடாது’ என்றெல்லாம் பலவாறு எண்ணிய பூதத்தார், பாதை ஓரத்தில் கிடந்த பாம்புச்சட்டையில் புகுந்து சிவபெருமான் கண்ணில் படாமல் மறைந்து கொண்டார். இதனால்தான் சங்கிலி பூதத்தாருக்கு 'சட்டநாதன்' (சட்டைநாதன்) என்றொரு பெயரும் உண்டு. மேலும் சங்கிலி பூதத்தார் சுவாமி இருக்கிற இடத்தில் எல்லாம் பாம்பு இருக்கும். சுவாமி பாம்பாகத்தான் பக்தர்கள் கண்ணில் படுவார். ஆனால் யாரையும், எந்த தொந்திரவும் செய்ய மாட்டார். தன்னை வேண்டி வழிபடுகிற பக்தர்களது கனவிலும் பாம்பாகத் தான் வருவார். ஆபத்து நேரங்களில் ‘ சட்டநாதா, சங்கிலிபூதம்’ என்று அபயக்குரல் கொடுத்தால் சரசரவென்று வந்து உதவிடுவார். ‘தாய் அறியாத சூல் உண்டோ’, ‘தந்தை அறியாத பிள்ளை உண்டோ’ சங்கிலி பூதத்தார் தன் கண்ணில் படக்கூடாது என்பதற்காக பாம்புச்சட்டையில் புகுந்ததை ஞானதிருஷ்டியில் கண்ட சிவபெருமான் சங்கிலி பூதத்தாரை அழைத்து, ‘மகனே, சட்டநாதா, சங்கிலிபூதம், அமிர்த பாலா, கைலாயத்தில் சிறப்பாக காவல் நிர்வாகம் செய்து வரும் உனது பாதுகாப்பும், திருவருளும் பூலோக மக்களுக்கும் வேண்டும் என்பதற்காகவே யாம் இந்த திருவிளையாடல் புரிந்தோம். நீதி, நேர்மை, நியாயம், நிர்வாகங்களில் சிறந்த காக்கும் கடவுளான அன்பு மைந்தன் உனக்கு இப்போது எமது அன்பு பரிசுகளாக ஆக்கும் வரம், காக்கும் வரம், அழிக்கும் வரமும் தந்தோம். உன்னை வணங்குவோர் எந்தக் குறையுமின்றி அன்பிலும், அறத்திலும், செல்வத்திலும் சிறந்து விளங்குவார்கள். நீ பூலோகம் சென்று சிறப்பான திருவிளையாடல்கள் புரிந்து, மக்களுக்கு நன்மைகள் பல செய்து யாம் இருக்கும் தென்கைலாயமாம் பொதிகை மலை வந்து எம்மை அடைவாய்.’ என்று ஆசி வழங்கி அனுப்பி வைத்தார். இப்படியாக பூலோகம் வந்து சேர்ந்த பூதத்தார் ஒரு இடமென்று தங்காமல் பல புண்ணிய ஷேத்திரங்களுக்கும் பயணம் சென்றார். எனவேதான் அவருக்கு ‘ஷேத்திரபாலன்’ என்றொரு பெயரும் உண்டு.அப்படி சென்ற இடங்களில் எல்லாம் பல திருவிளையாடல்கள் செய்து மக்களினால் கோயில்கள் கட்டி கும்பிடப்படுகிறார். இவ்வாறு அய்யன் சிவபெருமானிடம் ஆக்கும் வரம், காக்கும் வரம், அழிக்கும் வரம் பெற்றதையே மூன்று முகமாக கொண்டு மணிமுத்தாறு அருவிக்கரை அம்மன் கோவிலில் தன்னை வணங்கும் அனைத்து பக்தர்களுக்கும் அருள்பாலித்து வருகிறார் சுவாமி சங்கிலி பூதத்தார்.

@Muthuking

Fourth Wall Bhagiyam Sankar படித்து முடித்தவுடன் தோன்றியது. இப்புத்தகத்தில் வரும் மனிதர்களை என் மகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டுமென்று தான். இப்புத்தகத்தைப் படிக்கும் போது பல தடவை அழுதேன். ஒரு நாள் பேருந்து நிலையத்தில் வாசித்துக் கொண்டிருக்கையில் என்னை அறியாமேலேயே கண்ணில் கண்ணீர் வடிந்தது.  அருகில் நின்று கொண்டிருந்த பாட்டி என்னையே பார்த்துக் கொண்டிருப்பதை அப்போதுதான் பார்த்தேன். கண்ணீரைத் துடைத்துக் கொண்டேன். அவரை பார்த்து சிரித்தேன். புத்தகத்தை படித்து முடித்த பிறகுதான் தெரிந்தது இது ஆனந்த விகடனில் தொடராக வந்ததென்று. இதில் வரும் மாந்தர்கள் உண்மையில் இருக்கிறார்களா இல்லையா என்பது கேள்வியே இல்லை. இது வாழ்க்கை கதை. நாம் தெரிந்து கொள்ளவேண்டிய கதை.புத்தகத்தின் தொடக்கமே பிணவறையில். அங்கு வேலை செய்யும் இருவரைப் பற்றியது. "***அன்பு தான் இன்னொரு உயிரக் கொல்லும்… மரியாத எப்பவுமே மரியாதையாத்தான் இருக்கும்…*** " . திருப்பாலை என்னால் வாழ்வில் மறக்க முடியாது என்று நினைக்கிறேன். அவர்களின் தினசரி வாழ்வே நமக்கு பல விசயங்களை கற்றுக் கொடுக்கிறது. இந்த கதையில் இறுதியில் நடிகையின் நிர்வாண உடலை அந்த 'பெரிய' டாக்டர்கள் கண் மூடாமல் பத்து நிமிடங்களுக்கு மேல் பார்த்துக் கொண்டிருந்தனர் என்று வருகிறது. ஒரு பக்கம் திருப்பால் மற்றுமொரு பக்கம் இப்படியான ஆட்கள். அதுதானே உலகம். "மாமா பையா"- வில் வரும் சட்டநாதன் மற்றும் கல்யாணியின் உறவு , "மைலோ"-வில் வரும் மைலோ மற்றும் அந்த பெண்ணின் உறவு , "பசுமை போர்த்திய பிள்ளைகள்"-லில் வரும் மனிதர்களின் உறவு - இவை எதையும் நம்மால் புரிந்து கொள்ள முடியாது. ஆனால் தூய்மையான கள்ளம் கபடம் அற்ற நட்பு. சாமானிய மனிதர்களாகிய நமக்கு அந்நட்பு  அவ்வளவு எளிதல்ல ஏனென்றால் நமக்கு சமூகம் வேறொன்றை சொல்லிக் கொடுத்திருக்கிறது. ***மகிழ்ச்சி என்பது ஒரு நிறத்தினாலானது அல்ல . அது , ஒவ்வொருவரின் அகத்திற்கேற்ப அதன் நிறங்கள் மாறுபடும் . மகிழ்ச்சியைப் பழகத் தேவையில்லை. ஆனால் துக்கங்களை நாம் பழக்கவேண்டி இருக்கிறது.***  டீ.எம்.எஸ் என்கிற திருச்சி லோகநாதன் ,கால்பந்தே வாழ்கை என்று இருக்கும் மெஸ்ஸி மற்றும் அரசியல் பிரச்சாரம் செய்யும் பூகம்பம் பூமணி இவர்களின் வாழ்வில் எவ்வளவு கற்றுக் கொள்ள வேண்டும் . வாழ்க்கையை அதில் உள்ள இன்ப துன்பங்களை அப்படியே ஏற்றுக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ்வதென்பது எளிதல்ல.இவர்களால் அது முடிகிறது. ***ஒருவரின் வலியை மட்டும் நாம் வாங்கி கொள்ளவே முடியாது என்பதுதான் நிஜம்.*** பெயின்டர் டீஸோசா மற்றும் பாடிமேன் தருமனின் கதை நாம் அறிந்த ஆனால் உணராமல் இருக்கும் வாழ்க்கையை நம் கண்முன்னால் காட்டியிருக்கிறார் பாக்கியம் சங்கர்." காற்றில் மிதக்கும் கூடாரம்" மற்றும் "தொம்பரக் கூத்தாடிகள் " நம்மிடம் பல கேள்விகளைக் கேட்கின்றன. "மலாரம் ..ஒய்யாரம்"-மில் வரும் "*நமது கழிவுகளை வாரிக் கொட்டுகிற ஒரு சமூகத்தை இப்படி நோயிலும் சகதியிலும் வாழப் பழக்கிவிட்ட நாம் எவ்வளவு கீழ்மையானவர்கள்.*" என்ற வரி எவ்வளவு உண்மையானது. ***இருள் என்பது குறைந்த ஒளிதான் .ஆனால் , துக்க வாசனையின் மேல் இருள் என்பது அடர்ந்த இருள்தான் .***  பலவிதமான மனிதர்கள் பெரும்பாலும் அவர்களின் வேலையின் மூலம் நாம் அறிந்தவர்கள் ஆனால் ஒருபோதும் அவர்களின் வாழ்வை நம்மால் புரிந்து கொள்ளவே முடியாது. இந்த புத்தகம் மனிதர்களை புரிந்து கொள்வதற்கு நமக்கு ஒரு அறிமுகத்தைக் கொடுக்கிறது. அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்

@Muthuking

Kaliyugathil Iyanggar Mattrum Iyar நானும் என் ஜோதிடம் பார்க்கும் நண்பர்கள் பேசி கொண்டு இருந்தோம். அதில் குறிப்பாக நீங்கள் பிராமணர்கள் என்றால், உங்களுக்கு கொஞ்சம் தைரியம் இருந்தால் மட்டுமே மேலும் படிக்கவும். 1. நீங்கள் பிறந்த வருடம் 1977 முதல் 1982 வரையா? 2. நீங்கள் 2006 அல்லது 2007 வருடத்தில் திருமணம் செய்து கொண்டாவரா? இதில் இரண்டுமே ஆம் என்றால், மனதை இன்னும் கொஞ்சம் தைரியம் வைத்து படிக்கவும் இன்னும் 30 வருடங்களில் ஐயர் மற்றும் ஐய்யங்கார் என்ற பிரிவு உள்ள பிராமணர்கள் இனி உலகில் இருக்காது. காரணங்கள் :- 1. இந்த வயதில் உள்ள ஆண்களுக்கு திருமணம் இது வரை நடக்கவில்லை 2. அப்படியே நடந்து இருந்தாலும் பலர் இந்தியாவில் விட்டு வெளி நாட்டில் குடியேறி விட்டார்கள். 3. அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு வேறு மதம் அல்லது சாதியில் திருமணம் நடந்து, பிராமணர்கள் என்ற தகுதி இழப்பார்கள் 4. திருமணம் 2006 - 2007 வருடத்தில் திருமணம் செய்து கொண்டாவரா இருந்தால் - 100 க்கு 90 சதவீதம் ஏதாவது ஒன்று நடந்து இருக்க வேண்டும் 4.1 அவர்கள் மன முறிவு நடந்து இருக்கும் 4.2 கணவனோ அல்லது மனைவி இறந்து விட்டதாக இருக்க வேண்டும் 4.3 இல்லை என்றால் புத்திர பாக்கியம் அதாவது குழந்தைகள் பிறந்து இருக்காது. 5. அதனால் ஒரு சந்ததியினர் அழிந்து வருகிறது. 6. 100 க்கு 80 சதவீத பிராமண பெண்கள் மற்ற மதம் சார்ந்த அல்லது சாதியை திருமணம் செய்து கொண்டு சென்று விட்டனர் 7. பல பெண்கள் எதிர்பார்ப்பு அதிகமாகி பிராமணர்கள் தவிர்த்து மற்ற சாதி மற்றும் மதங்கள் சார்ந்தவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். 8. 1-2% சதவீதம் மீதமுள்ள மட்டுமே உள்ள இந்த பிராமணர்கள் அழிந்து விடுவார்கள். 9. இந்த வருடங்கள் பிறந்தவர் மிகவும் பாவம் செய்தவர்கள் மற்றும் சபிக்கப்பட்டவர்கள் 10. கடவுள் இவர்களை சரியாக வாழ விடவில்லை. 11. மற்றவர்களை விட பல அவமானங்கள், துரோகங்கள் இவர்களுக்கு தந்து கொண்டு இருக்கிறது வாழ்க்கை 12. மரணமும் தராமல், வெற்றி தராமல் இவர்கள் வாழ்க்கை இப்போது வாழ்ந்து வருகின்றனர் இனி மொத்தமா பிராமணர்கள் அழித்து போவார்கள் . ஒரு இனம் மொத்தமாக 90% அழிந்து விட்டது. இன்னும் சில நாட்களில் மீதியும் அழிந்து விடும். நன்றி,

@Muthuking

Sri Rama naga Mandhira Magimai Part - 2 7. எந்த இடத்திலும், எந்த நிலையிலும் 'ராம நாமா' சொல்லலாம். எங்கும் உணவு உண்ணுமுன் 'ராம நாமா' சொல்லிசாப்பிடலாம். இறைவனும் அவனது நாமாவும் ஒன்றே! 8. 'ராம நாமா' எழுத மனம், உடம்பு, கைகள் ஒருமித்து செயல்படவேண்டும். ஆனால் 'ராம நாமா' சொல்ல மனம் மட்டும் போதும். இதைதான் "நா உண்டு, நாமா உண்டு" என்றனர் பெரியோர்கள் . 9. ஒரு வீட்டில் உள்ள பெண் 'ராம நாமா' சொன்னால் அந்த பெண்ணின் குடும்பம், கணவன் குடும்பம், குழந்தைகள், பெற்றோர்கள் அனைவரும் பிறப்பு, இறப்பு சக்கரத்திலிருந்து விடுபடுவார்கள். அந்த வீட்டினில் தெய்வீகம் நிறைந்துவிடும். அதுவே கோவிலாகும் . 10. எல்லாவித சாஸ்திர அறிவும் 'ராம நாமாவில் அடங்கும். எல்லாவித நோய்களுக்கும் 'ராம நாமா' சிறந்த மருந்து, துன்பங்களுக்கும் அதுவே முடிவு . 11. நமது இலட்சியம் அழியா ஆனந்தமே. அது 'ராம நாம ஜெபத்தால் பெற முடியும். 'ராம நாமாவினால் வினைகள் எரிந்து, எரிந்து நோய்கள் குறையும். சஞ்சிதம், ஆகாமியம் கருகி ப்ராரப்தம் சுகமாக அனுபவித்து ஜீரணிக்கபடும். 12. நமது பயணத்தில் பஸ்சிலோ, காரிலோ , ரயிலிலோ, பைக்கிலோ செல்லும்போதும் 'ராம நாமா' சொல்லலாம். அதனால் விபத்துக்கள் தவிர்க்கப்படும். காசி விஸ்வநாதர் கோவிலில் மாலை வழிபாட்டின் போது ( சப்தரிஷி பூஜையின் போது ) ஒவ்வொரு நாளும், வில்வ தளங்களில் சந்தனத்தால் ராம நாமம் எழுதி, அவற்றை விஸ்வநாதருக்கு சமர்ப்பிக்கிறார்கள். 13. பெண்களின் இயற்கை உபாதை நாட்களிலும் 'ராம நாமா' சொல்லுவதன் மூலம் அந்த பிரபஞ்ச சக்தியிடமே அடைக்கலமாகிறோம்.'ராம நாமா' சொல்ல எந்த ஒரு விதியும் இல்லை. மனமிருந்தால் மார்க்கமுண்டு. பெண்கள் சமைக்கும்பொழுது ராம நாமம் சொல்லி சமைத்தால், அந்த உணவே ராம பிரசாதமாகி ......அதை உண்பவருக்கு தூய குணங்களையும் , நோயற்ற தன்மையையும் அவர்களது உடல் ஆரோக்கியத்தையும் பெறும். நோய்கள் இருப்பின் குணமாகும். 14. வேதங்களின் படி ஒருவன் புண்ணிய நதிகளில் நீராடி பின்பு வேதம் கற்று, பூஜைகளை நியதிப்படி செய்தவனாய், யோகியாய் முந்தய ஜன்மங்களில் வாழ்ந்தவனாக இருந்தால், சுமார் 40,00,000 பிறவிகளை கடந்தவனாக இருந்தால் மட்டுமே அவனால் 'ராம நாமா' வை ஒரு முறை சொல்லமுடியும். 15. 'ராம நாமாவை உரக்க சொல்லுங்கள். காற்றில் ராம நாம அதிர்வு பரவி, உங்களை சுற்றிலும் காற்றில் ஒரு தூய்மையை ஏற்படுத்தும். கேட்கும் மற்றவருக்குள்ளும் அந்த தூய அதிர்வு ஊடுருவி தூய்மை மற்றும் அமைதியை கேட்பவருக்கும் தரும். சுற்றியுள்ள மரம், செடி கொடிகள் , பறவைகள், விலங்குகள் எல்லாம் 'ராம நாமா' கேட்டு கேட்டு ..... அவைகளும் மிக உயர்ந்த பிறவிகளை பெறலாம். இதுவும் சேவையே! ..... யார் அறிவர்? நமது முந்தய பிறவிகளில் நாமும் 'ராம நாமா' கேட்டு கேட்டு இப்போதைய பிறவியினை பெற ஏதேனும் ஒரு பக்தரின் வீட்டருகில் மரமாய், ..செடியாய் ...பறவையாய் ....விலங்காய் இருந்தோமோ ! என்னவோ ........ அப்புண்ணிய பலனை ..... ராமனே அறிவான்.

@Muthuking

Nanga Onnum Mittal Alla *1. நாங்க பாக்குற மரத்திலெல்லாம் மஞ்சத் துணிய சுத்தி பூ பொட்டு வச்சிருந்த வரைக்கும் ஒரு பயலும் மரத்த வெட்டாமத்தான் இருந்தான். என்றைக்கு இதெல்லாம் மூட நம்பிக்கைன்னு கூவ ஆரம்பிச்சானோ அன்றைக்கே இருக்குற மரத்த பூராத்தையும் வெட்ட ஆரம்பிச்சிட்டன்.* *2. நாங்க ஆல மரத்துக்கு கீழேயும், அரச மரத்துக்கு கீழேயும் பிள்ளையார வச்சி வழிபட்டுகிட்டு இருக்கும் போதெல்லாம் மனுச மக்க சுத்தமான காத்த சுவாசிச்சிட்டு இருந்தான். இதையெல்லாம் மூடநம்பிக்கைன்னு என்றைக்கு பினாத்த ஆரம்பிச்சானோ அன்றைக்கே சுத்தமான காத்த தேடி ஓடிட்டு இருக்கான்.* *3. நாங்க விளையுற நிலத்த சாமியா நினைச்சு பூஜை பண்ணிட்டு இருந்தப்போ மனுஷ மக்க சுத்தமான இயற்கையான சாப்பாட்ட சாபிட்டுட்டு ஆரோக்கியமா இருந்தான். இதையெல்லாம் மூடநம்பிக்கைன்னு என்றைக்கு பொலம்ப ஆரம்பிச்சானோ அன்றைக்கே இரசாயன சாப்பாட சாப்பிட்டுட்டு ஆஸ்பத்திரிக்கு ஓடிட்டு இருக்கான்.* *4. நாங்க வீட்டுக்கு முன்னாடி கோலம் போடுறப்பவும், சூடம் ஏத்துறப்பவும், சாணியால வாச தொளிக்குறப்பவும், விளக்கு ஏத்துறப்பவும் இருந்த நோய் நொடியில்லாத வாழ்க்கை,  இதையெல்லாம் மூடநம்பிக்கைன்னு இவன் நினைக்க ஆரம்பிச்ச உடனே எதிர்ப்பு சக்தி குறைச்சு துவண்டு போயிட்டான்.* *5. நாங்கெல்லாம் பய பக்தியா சாமி கும்பிடுறவரைக்கும் ஒரு முதியோர் இல்லமும் இல்லாமல் இருந்தது, மனுஷ மக்களும் நீதி நேர்மையோடு வாழ்ந்து வந்தனர். இதையெல்லாம் என்றைக்கு மூட நம்பிக்கைன்னு நாத்திகம் பேசினானோ அன்றைக்கு பெத்த அப்பன் ஆத்தால முதியோர் இல்லத்துல கொண்டு போய் தள்ளிட்டான்.* *இதெல்லாம் சில தகவல்கள் தான்....* *இன்னும் சொன்னா எலவு வீடு தோத்துடும்.....* *இனிமேலாவது போலிபகுத்தறிவு* *கொள்கையைவிட்டுபுட்டு திருந்த பாருங்கள்.* *நமது முன்னோர்கள் சொன்னதை செய்யுங்கள்* *பொறுமையைவிட மேலான தவமுமில்லை* *திருப்தியை விட மேலான இன்பமுமில்லை* *இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை* *மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை* *தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்*     *முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்!*                             *அன்பான இனிய நற்காலைப்பொழுது வணக்கம் நட்பே* *வாழ்க வளமுடன்*

@Muthuking

Sri Rama naga mandhira Magimai ஸ்ரீ இராம நாம மந்திர **மகிமை** 🌷 1. நமக்கு நன்மை வரவேண்டுமானால் 'ராம நாமத்தை இடைவிடாமல் கூறவேண்டும். நமது ஒவ்வொரு மூச்சும் 'ராம் 'ராம்' என்றே உட்சென்றும் , வெளியேறுதலும் வேண்டும். 2. நாம் அறியாமல் செய்த தவறுக்கு ராம நாமமே மிகச்சிறந்த பிராயசித்தம். அறிந்தே செய்த தவறானால் அதற்கு வருந்துவதும் , தண்டனையை ஏற்பதுவும், பிராயசித்தமும் ராம நாமமே. காலால் நடக்கும் ஒவ்வொரு அடியும் 'ராம் ' என்றே நடக்கவேண்டும் . 3. எல்லா விதமான கஷ்டங்களுக்கும் நிவாரணம் 'ராம நாம ஜெபமே.' கிழக்கு நோக்கி செல்ல செல்ல மேற்கிலிருந்து விலகிடுவோம். அதுபோல ராம நாமாவில் கரைய கரைய தூக்கத்திலிருந்து விலகிசெல்கிறோம். 4. ' ராம நாம' ஜெபத்திற்கு குரு கிடைக்கவேண்டும் என்று கால தாமதம் செய்தல் கூடாது. ஏனெனில் 'ராம நாமமே ' தன்னுள் குருவையும் கொண்டுள்ளது . நாமமே பிரம்மம், நாமமே குரு, நாமமே எல்லாம். 5. காலை படுக்கையில் விழிப்பு வந்தவுடனே சொல்லவேண்டியது 'ராம நாமம்.' எழுந்து கடமைகளை செய்யும்போதும் சொல்லவேண்டியதும் 'ராம நாமம்.' அந்த நாள் நமக்கு 'ராம நாம' நாளாக இருக்கவேண்டும். 6. ' ராம நாம ' ஜெபத்தில் நாம் இருந்தால் , நமது கர்ம வினையின்படி ஏதேனும் துக்கமோ , அவமானமோ நிகழவேண்டியதாயின் அவைகள் தடுக்கப்படும் அல்லது நமக்கு அது பாதிப்பு இன்றி மாற்றி அமைக்கப்படும். பாதிப்பினை தாங்கும் வலிமையையும், அதுவும் பிரசாதமாக ஏற்கும் பக்குவமும் வரும்,