Hijaboo Sagunthala Narasimman Tamil Life Changing Story Part 12
அந்தப் பெண், நவீன கலாச்சாரச் சூழலில் வளர்ந்தவர் என்பது பார்க்கும் பார்வையிலேயே தெரிந்தது. படித்த, பகட்டான உடையணிந்த பெண் என்பதால் ஹிஜாப் குறித்த மாற்றுச் சிந்தனையை எதிர்பார்த்து அணுகினேன்."நீங்கள் ஹிஜாபை விரும்பித்தான் அணிகிறீர்களா?" என்று கேட்டு விட்டேன்.
நொடிக்கூட தாமதிக்காமல் பதில் வந்தது: "இது எனக்கு கண்ணியத்தைப் பெற்றுத் தருகிறது. மேலும் ஒரு உள்ளாடையை அணிவது போன்று எளிமையாகவும் இருக்கிறது" என்றார்.
என்னை ஏறிட்டு நோக்கியவர், என் மனதில் உள்ள குழப்பங்களைப் படித்தது போன்று எதிர்கேள்வி ஒன்றையும் என்னிடமே போட்டார்:
செரினா வில்லியம்ஸ், இப்போது அணிந்துள்ள ஸ்கர்ட்டை விடச் சிறிய, பிகினி உடையினை அணிந்தால் இன்னும் வேகமாக அவரால் ஆட முடியும்தான். ஆனால் அது அவருக்கு சவுகரியமாக இருக்காது என்பதால் அவர் செய்ய மாட்டார் இல்லையா?" என்றார்.
Hijaboo Sagunthala Narasimman our Life Changing Tamil Story Part 14
மும்பையில் ஒரு சமுதாயத்தின் பாரம்பரிய கலாச்சாரத்திற்காக ஒரு பெண் தலையை மறைப்பது பெருமையாக கருதப்படுவதும் அது ஆண்களிடையே 'அடிமைத்தனம்' என்ற கூக்குரலாக வெளியே வருவதில்லை. ஆனால், இஸ்லாத்தில் பெண்கள் ஹிஜாப் அணிகையில் மட்டும் 'பெண்ணடிமை'த் தனமாக உருவகப்படுத்தப் படுவது ஏன்? என்ற நெருடல் அவ்வேளையில் எழுந்தது.
ஒவ்வொரு நாட்டிலும் பெண்ணின் உடை அளவிலான கோட்பாடுகள் என்பது உள்ளது என்பது மறுக்கவே முடியாத உண்மை. ஆனால் அது அவரவர் கலாச்சாரம், பாரம்பரியத்திற்கு ஏற்று மாறுபடுகிறது. செரினா வில்லியம்ஸின் உதாரணம் உட்பட.
என்னுடைய ஆறாவது நாளின் முடிவில் அபாயா (ஹிஜாப்) அணிந்த பெண்களில் ஒருத்தியாக என்னை நானே கேட்டுக்கொண்டேன்.
இந்த உடை அணிந்ததன் மூலம் நான் எதுவும் சிரமமாக உணர்கிறேனா?
Hijaboo Sagunthala Narasimman Tamil Life Changing Story Part 8
"இல்லவே இல்லை! இத்தனை அலங்காரங்களையும் என் சந்தோஷத்திற்காக மட்டுமே செய்கிறேன். நம் சுவைக்குத் தக்கவாறு உணவைத் தேர்ந்தெடுத்துச் சுவைத்துச் சாப்பிடுவது நமது தனிப் பட்ட விருப்பமில்லையா அது மாதிரி...!" என்றார்.
அத்துடன் நில்லாமல், "இந்த அழகு அலங்காரங்கள் எல்லாம் வேற்று ஆண் ஒருவரை ஈர்ப்பதற்காக அல்லவே? பின்பு ஏன் கவலை?" என்றார்.
அப்படியென்றால் இத்தனை காலம் மேற்கத்திய மற்றும் கீழத்தேய எழுத்தாளர்கள் அனைவரும், "புர்கா என்பது பெண்ணடிமைத்தனம் என்று கூறி வந்தது பொய்யா?" என்ற பெரிய கேள்வி ஒன்று பூதாகரமாக என் மனதில் உருவாவதை உணர்ந்தேன்.
என் கேள்விக்கு விடை தேடும் முயற்சியில் வாரிசுதாரரான ஜித்தாப் பெண்ணிடமும் இது பற்றி உரையாடினேன்.
Facts of Storm warning signs Tamil
ஐந்தாவது எண் கூண்டு, துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கடப்பதால் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படலாம் என்பதற்கான எச்சரிக்கை ஆகும்.
ஆறாவது புயல் எச்சரிக்கை விடப்படுமானால், துறைமுகத்தில் புயல் வலது பக்கமாக கரையைக் கடந்து செல்லும் நேரத்தில் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும் என்று பொருள்
ஏழாம் எண் கூண்டு ஏற்றப்பட்டால், கடுமையான வானிலைக்கு துறைமுகம் உட்படக்கூடிய ஆபத்து என்பதற்கான எச்சரிக்கை.
எட்டாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கரையைக் கடப்பதால் கடுமையான வானிலைக்கு உட்படும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.
ஒன்பதாம் எண் புயல் கூண்டுக்கு, துறைமுகத்தை புயல் வலது பக்கமாக கரையைக் கடந்து செல்லும் நேரத்தில் கடும் புயலினால் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும்.
பத்தாம் எண் புயல் எச்சரிக்கை விடப்படுமானால், துறைமுகம் அல்லது அதன் அருகே கடந்து செல்லும் புயலினால், பெரிய அபாயம் ஏற்பட்டிருப்பதாக அர்த்தம்.
Source: http://tamil.oneindia.com/news/tamilnadu/cyclone-warning-flag-number-1-was-hoisted-at-the-pamban-cuddalore-266293.html
பதினொன்றாம் எண் புயல் எச்சரிக்கை விடப்படுகிறது என்றால், வானிலை எச்சரிக்கை மையத்துடனான தகவல் தொடர்பற்றுப் போன நிலையில், மோசமான வானிலையால் கேடு விளையலாம் என்று பொருள்.
Hijaboo Sagunthala Narasimman Tamil Life Changing Story Part 9
"உங்களுக்குத் தெரியுமா?" என்று என்னிடம் கேள்வி எழுப்பினார் செல்வச் சீமாட்டியான அந்த பெண். "மேற்கத்திய நாடுகளின் என் பயணங்களில் கவனித்திருக்கிறேன். அலுவல் சார்ந்த உயர் நிகழ்ச்சிகளில் உடல் முழுமையாக மறையும் வண்ணம் பிஸினஸ் சூட் அணிந்து வரும் மேற்கத்தியப் பெண்கள் பலர் இருக்கிறார்கள். இத்தகையோரின் உடைக்கும் ஹிஜாபுக்கும் பெருத்த வித்தியாசம் ஏதுமில்லை!" என்றார்.
"கறுப்பு நிறக் கலாச்சார உடையினை உடல் முழுவதும் சுற்றிக் கொள்ளுதல்" என்று பலரை இதுநாள் வரை கேலி செய்திருந்த எனக்கு, யதார்த்தமான இப்பதில் வெகுவாக யோசிக்க வைத்தது.
பொறுமையின் எல்லையைக் கடந்தவளாக ஆர்வம் மிகுதியில் என் கையில் கொண்டு வந்திருந்த புர்காவை எடுத்து அணிந்து பார்த்தேன். எடுத்த எடுப்பில் சற்றே வெறுப்பாய் உணர்ந்த நான், அடுத்த சில நாழிகைகளில் எனது வெறுப்புத் தளர்வதை உணர ஆரம்பித்தேன். பிற்பாடு ஹிஜாப் அணிந்தவண்ணம் வெளியே செல்லவும் ஆரம்பித்தேன்.
Hijaboo Sagunthala Narasimman Tamil Life Changing Story Part 11
இந்தியத் தூதர் M.O.H ஃபாரூக் அவர்கள் எங்களுக்காக அவர் வீட்டில் அளித்திருந்த உயர் ரக விருந்தில்கூட பெண்கள் (அதிகாரிகளின் மனைவிகள்) அனைவருக்குமான தனித்த இடத்தில் விருந்து நடந்தது.
அதன் பிறகு ஒரு நாளில், கோல்டு மார்க்கெட் எனப்படும் தங்க நகைகள் விற்கும் கடைவீதிக்குச் சென்று வந்தேன். (பார்ப்பதற்கு மும்பையின் ஜாவேரி பஜார் போன்று ஆனால் அதைவிடச் சிறப்பாக இருந்தது இப்பகுதி) அப்பகுதியில் உள்ள ஷாப்பிங் மால்கள் அனைத்திலும் ஹிஜாபுடன் ஏறி இறங்க எனக்கு மிக மிக எளிமையாகவே இருந்தது.
அந்நேரத்தில் அப்பகுதிகளில் சவூதி நாட்டு படித்த இளம் பெண்கள் பலரைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. அப்படி பார்த்த பல பெண்கள் தங்கள் கைகளில் லேட்டஸ்ட் டெக்னாலஜி மொபைல் ஃபோன்களை வைத்துக் கொண்டு மகிழ்வுடன் பேசிக் கொண்டிருந்தனர். பெண்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த பகுதியில் அமர்ந்து, தன் மொபைல் ஃபோனில் டயல் செய்து கொண்டிருந்த ஓர் இளம் பெண்ணை அணுகினேன்.
Hijaboo Sagunthala Narasimman Tamil Life Changing Story Part 10
என் போன்றே ஹிஜாப் அணிந்து பார்த்த, மருத்துவத்துறைக்கான பரிசினை வென்ற அமெரிக்கர் ஒருவரின் மனைவி பெண்களின் கூட்டத்திற்கிடையே பேசுகையில், "தான் அணிந்துள்ள ஹிஜாப் மூலம், தான் மிகவும் சவுகரியமாகவே உணர்வதாக"க் குறிப்பிட்டார். "சுருக்கங்கள் நிறைந்த, அடிக்கடி விலகும் எனது ஸ்கர்ட் பற்றி இனிக் கவலையில்லை!" என்று கூறி அங்குள்ள பெண்கள் அனைவரையும் சிரிக்கச் செய்தார்.
வியப்பில் என் விழிகள் அகலும் வண்ணம் நாங்கள் பார்வையிடச் சென்ற தேசியக் கண்காட்சி மையம், பல்கலைக் கழகம், மருத்துவ-ஆராய்ச்சி மையம் என்று எங்கு, எப்பணியில் நோக்கினாலும் பெண்கள் தடங்கலின்றி சுறுசுறுப்பாகப் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் ஹிஜாப் அணிந்தவண்ணம் பணிகளில் ஈடுபட்டிருந்ததைத் தனியாகச் சொல்லவும் வேண்டுமா?
அறிவியல், தொழில்நுட்ப ஆய்வாராய்ச்சி நிலையங்களிலும் உயர் தொழில்நுட்பப் பணிகளிலும் அநாயசமாகவும் எளிமையாகவும் அப்பெண்கள் ஹிஜாபுடன் எவ்வித இடைஞ்சலுமின்றி செயற்படுவதைக் கண்டு வியப்பின் எல்லைக்குச் சென்றேன்.
Hijaboo Sagunthala Narasimman Tamil Life Story Part 2
என் கணவர் மட்டும் எவ்வித இஸ்லாமிய ஆடையையும் அணியாதபோது, நான் மட்டும் ஏன் அணியவேண்டும்? என்பதே எனது மறுப்பிற்கு முதல் காரணமாக இருந்தது. என்றாலும் எனது ஆர்வம் வெறுப்பை வென்றது.
சவூதி அரேபியாவின் ரியாத் ஏர்போர்ட்டில் நான் கால்வைத்த கணத்திலேயே மிகவும் பண்போடு "பெண்கள் பகுதி" க்கு அழைத்துச் சென்று அமர வைக்கப்பட்டேன். விசாச் சடங்குகளை முடித்துவர என் கணவர் சென்றிருக்கும் வேளையில் ஒரு குட்டி அரண்மனை போன்று மிக அழகாக வடிவமைக்கப் பட்டிருந்த அந்த அறையின் அலங்காரங்களில் மனம் லயித்துப் போனேன். செல்வச் செழிப்புடன் கூடிய கண்ணியமும் கெளரவமும் ஆண்-பெண் பாகுபாடின்றி அனைவருக்கும் கொடுக்கப்படுவது என் மனதை முதன் முதலாகத் தொட்டு விட்டது!
Hijaboo Sagunthala Narasimman Tamil Life Story Part 4
"சவுகரியமா? இதன் மூலமா?" என்று மனதில் கேட்டுக் கொண்டேன்.
எனது தோற்றத்திற்கும், தனித்தன்மைக்கும் வேட்டு வைக்கும் இந்த உடை, எனக்கு சவுகரியத்தை அளிக்கப்போகிறதா? என்ற கேள்வியை வெளிக்காட்டாமல் சற்றே சினத்துடன் வாங்கி வைத்துக் கொண்டேன்!. ஆனால் நான் ரியாதில் தங்கியிருந்த அடுத்த ஆறு நாட்களில் என் எள்ளலுக்கும் சினத்திற்கும் தகுந்த பதில் கிடைத்தபோது வியப்பிலாழ்ந்து போனேன்.
நோபல் பரிசுக்கு இணையாக அறிவியல், மருத்துவம் ஆகிய துறைகளில் உலகளாவிய அளவில் சாதனை படைக்கும் விஞ்ஞானிகளுக்கான விருதுகளையும் இரண்டு லட்சம் அமெரிக்க டாலர்கள் பரிசுகளையும் ஆண்டுதோறும் வழங்கும் சர்வதேசப் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்கான அழைப்பு எனக்கு விடுக்கப்பட்டிருந்தது.
Hijaboo Sagunthala Narasimman Tamil Life Changing Story Part 13
இதுநாள் வரை எனக்குக் கிடைக்காத சில விடைகள் சரசரவென்றுக் கிடைக்க ஆரம்பித்தன.
இச்சூழலில், மும்பையின் மலபார் ஹில் பகுதியில் ஒருமுறை நான் கலந்து கொண்ட திருமண டின்னர் பார்ட்டி ஒன்று நினைவுக்கு வந்தது. மணமகளாக அலங்காரம் செய்யப்பட்ட பெண் ஒருத்தி, பல்லாயிரம் ரூபாய்கள் செலவழித்து சிகை அலங்காரம் செய்திருந்தாலும் கூன்கட் (Ghoonghat) எனப்படும் முக்காடு கொண்டு தலைப்பகுதியினை நிகழ்ச்சி முழுவதும் தன்னை மறைத்திருந்தாள். அவளது அலங்கரித்த தலைமுடியை மறைத்திருப்பது பற்றி நான் எழுப்பிய வினாவிற்கு, "கூன்கட் எனப்படும் தலையினை மறைப்பதுதான் பெரியோர்களுக்குச் செய்யும் மரியாதையாகும். இது எங்கள் பாரம்பரிய கலாச்சாரமாகும்; நான் ஏன் அதை மீற வேண்டும்?" என்று பெருமையாகக் கூறியதே விடையாகக் கிடைத்தது.
எனவே எனக்கு ஏற்பட்ட பலவித அனுபவத்திலிருந்து சில முடிவுகளுக்கு வந்தேன்.
Hijaboo Sagunthala Narasimman Tamil Life Story Part 3
சவூதிக்குக் கிளம்பும் முன்னரே அங்குள்ள ஹிஜாப் பற்றிய விதிமுறைகளைப் பற்றி அறிந்திருந்த காரணத்தினால், புர்காவினைக் கையோடு கொண்டு வந்திருந்தேன். என்றாலும், ஏர்போர்ட் ஃபார்மாலிட்டீஸ்களை முடித்து நகரத்தின் அழகான வீதிக்களைக் கடந்து ஃபைஸலியா ஹோட்டல் வந்து சேரும் வரை நான் புர்காவை அணிந்து கொள்ள வேண்டும் என்று என்னிடம் யாரும் சொல்லவேயில்லை.
மறுநாள் காலையில், ஹோட்டல் நிர்வாகத்தினர் அழகான எம்ராய்டரிங் செய்யப்பட்ட புதிய கறுப்பு நிற அபாயா (இந்தியாவில் நாம் புர்கா என்று சொல்லும் உடையை சவூதியில் இவ்வாறு தான் அழைக்கிறார்கள்) ஒன்றினைக் கொடுத்தார்கள். இதனை நான் அணிந்து கொண்டால் வெளியே செல்லும் வேளையில் அதிக சவுகரியமாக இருக்கமுடியும் என்று கனிவோடு ஆலோசனை கூறினார்கள்.
Hijaboo Sagunthala Narasimman Tamil Life Story Part 5
மறுநாள் காலையில், அரண்மனையின் உயரிய கம்பீரத்தோடு, பிரம்மாண்டமாய் அலங்கரிக்கப்பட்டிருந்த "பிரின்ஸ் சுல்தான் க்ராண்ட் செரமோனியல் ஹால்" இல் அடியெடுத்து வைத்த எனக்குப் புதிய வியப்பு ஒன்று அறிமுகமானது. அத்துணை பெரிய சபையில் பெண்களுக்காகத் தனிப் பகுதி ஒதுக்கப்பட்டிருந்தது.
பூக்களை மொத்தமாக இறக்குமதி செய்யும் பெரும் நிறுவனம் ஒன்றின் பெண் உரிமையாளர் எனது வலப் பக்கத்திலும் அவருக்கு அருகில் ஒரு பல்கலைக் கழகத்தில் பொருளாதாரம் போதிக்கும் பெண் நிபுணரும் அமர்ந்திருந்தனர். ஒரு முழு ஆண்டின் பெரும்பகுதி நேரத்தினை நியூயார்க்கில் செலவழிக்கும் தனியார் நிறுவனம் ஒன்றின் தலைவியும் ஜே ஆர் டி டாட்டாவின் நெருங்கிய தோழி என்று அறியப் பட்டவருமான ஒரு பெண்மணி எனது இடப்பக்கத்திலும் அவருக்கு அருகில் இளம் பத்திரிகையாளர் பெண் ஒருவரும் அமர்ந்திருந்தார். ஜித்தாவிலிருந்து வந்திருந்த 'மிகப் பெரும் சொத்துக்களுக்கு வாரிசுதாரர்' என்று அறியப் பட்ட ஒரு பெண்ணும் எங்களோடு அமர்ந்திருந்தார்.
Hijaboo Sagunthala Narasimman Tamil Life Story
ஹிஜாபுக்குப் பின் கண்ட வாழ்க்கை! - சகுந்தலா நரசிம்ஹன்
திருமதி. சகுந்தலா நரசிம்ஹன் பிரபல எழுத்தாளரும், பெண்ணுரிமைக்குக் குரல் எழுப்பும் சங்கங்களின் பிரதிநிதியுமாவார். சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்ற இவர், பெண்களின் முன்னேற்றத்திற்கான பயிற்சிப் பட்டறைகளை நடத்தி வருபவராவார். பிராமண சமூகத்தைச் சேர்ந்தவரான இவர் துணிச்சலுடன் "சதி" (இந்தியாவில் விதவைகள் உயிரோடு எரிக்கப்படுதல்) பற்றிய நூலை எழுதி பரபரப்புக்குள்ளானவர். தனது கணவருடன் சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறார்.
ஹிஜாபை அணிந்தால்தால் உள்ளே வரமுடியும்' என்ற நிலை வந்தால் நான் சவூதி அரேபியாவிற்கே செல்ல மாட்டேன்
Pudhu Varavugal Tamil Thootam
காய்க்கும் பருவத்தில் அங்கங்கே மாமரம் காய்ந்தது போல தெரிந்தது. அச்சோ, ஏதோ நோய் போல என்று நினைத்து பெரிதாய் ஏதும் பார்க்கவில்லை. காய் பறிக்க மேலே ஏறிய போது தான் அத்தனையும் பூச்சி தாக்குதல் என்று தெரிந்தது. கம்பளி பூச்சி மாதிரி, ஆனால் வித்தியாசமாய். உடம்பில் லேசாய் பட்டுவிட்டால் கூட ஊசி குத்தின மாதிரி ஒரு வலி. அப்படியே அந்த இடம் முழுவதும் தழுத்து விடுகிறது. இன்னும் கொஞ்சம் விட்டிருந்தால் மாமரம் மொத்தமும் காலி ஆகி இருக்கும். நிறைய கிளைகளை வெட்டி மொத்தமாய் போட்டு கொளுத்தி காலி செய்தேன். இந்த கோடை சீசனுக்கு மறுபடி நிறைய பூத்து பிஞ்சி பிடித்திருக்கிறது.
மொத்தத்தில் போன ஆடிப்பட்டம் (ஜூன்-ஜூலை சீசன்) அடிப்படை காய்கறிகளில் நாட்டு ரகம் கொண்டு சிறப்பாய் அமைந்தது. கொடிகளை சாதாரணமாக எடுத்து ஆரம்பிக்காமல் இன்னும் கவனம் எடுத்து இந்த தை பட்டத்தில் செய்ய வேண்டும். இந்த தை பட்டத்திற்கு விதை போட்டு இப்போது தான் விதைகள் எல்லாம் முளைத்து விட்டன. சில புது வரவுகள், புது முயற்சிகள் இருக்கிறது. விவரமாய் அடுத்த பதிவில் பார்க்கலாம்.
July Brinjal Harvest nirayaMagasoul Kedaika Tamil Thootam
கத்தரிக்காய்
பரமேசிடம் இருந்து வாங்கிய மூன்று வகை நாட்டுக் கத்தரி, என்னிடம் இருந்த வெள்ளை கத்தரி, முள் கத்தரி என்று இந்த சீசன் ஒரு கத்தரி ஸ்பெஷல் ஆகி போனது. ஊதா, பச்சை, வெள்ளை என்று கலர் பல்புகள் போல அழகாய் தோட்டத்தை மாற்றின.
நண்பர் பரமேசிடம் இருந்து பச்சை கத்தரி, ஊதா கத்தரி, ஊதா குண்டு கத்தரி என்று மூன்று வகை வாங்கி இருந்தேன். ஒவ்வொன்றிலும் மூன்று செடிகள் வீதம் தரையில் வைத்து விட்டேன். பச்சைக் கத்தரி மட்டும் மாடியில் பையில் வைத்து விட்டேன். பெரிதாய் ஏதும் பராமரிப்பு தேவைப்படவில்லை. நோய் தாக்குதலும் இல்லை. செப்டம்பரில் இருந்து டிசம்பர் வரை காய் பறித்து விட்டோம். இன்னும் கூட நிறைய பூத்து கிடக்கிறது.
Hot Chilly Plant Home Growth Tamill Thootam Part - 2
மொத்தம் பத்து விதையில் எட்டு போல முளைத்திருக்கும். அதில் ஒரு மூன்று செடியை மாடியில் பையில் வைத்துவிட்டு, சிலவற்றை தரையில் வைத்து விட்டேன். தரையில் வைத்த செடிகள் சுமாராகவே காய்த்தது. ஆனால் மாடியில் வைத்த செடி காய்த்து கொட்டிவிட்டது. பறித்ததில் நிறைய காயபோட்டு வற்றலுக்கே பயன்படுத்தும் அளவுக்கு மூன்று செடிகளிலும் விளைச்சல்.
மிளகாயை பார்க்கவே அழகு. இதை சிலர் ‘வானம்பாடி மிளகாய்’ ‘வானம் பார்த்த மிளகாய்’ என்றார்கள். மற்ற மிளகாய் எல்லாம் தரை பார்த்து கொண்டிருக்க, இந்த மிளகாய் வானம் நோக்கி வளர்கிறது. வெளிர் பச்சை நிறத்தில் ஆரம்பித்து ஆரஞ்சு நிறம் மாறி கடைசியில் சிவப்பு நிறத்தில் மாறுகிறது. எல்லா நிறத்திலும் செடியில் மிளகாய் பார்க்க கிட்டத்தட்ட Ornamental Chilli மாதிரி இருக்கிறது. தோட்டத்தில் வரிசையாய் வைத்து விட்டால் ஒரு அலங்கார செடி போல ஆகிவிடும் போல.
காரம் பட்டையை கிளப்புகிறது (அதான் Hot Pepper என்று பெயர் வைத்திருக்கிறார்கள்). இந்த தை பட்டத்திற்கும் ஒரு பாக்கெட் வாங்கி வைத்திருக்கிறேன்.
Kodikalin Vagaikal Tamil Vettu Thootam
கொடிகள்
கொடியை பொறுத்த வரையில் சொதப்பல் இந்த சீசனிலும் தொடர்கிறது. நான் என்ன தான் முயற்சித்தாலும் எல்லாமும் கருப்பு கொடியை தான் காட்டுகின்றன. எல்லாவற்றிலும் சொல்லி வைத்தது போல ஒரே ஒரு காய். அதையும் பறித்து குழம்பு வைத்து சந்தோஷ பட்டுக் கொண்டோம். செடியில் அவரை காய்க்கிற மாதிரி, செடி பாகல், செடி புடலை, செடி சுரை என்று இருந்தால் நல்லா இருக்கும் போல. ஜூலையில் தரையில் வைத்த புடலை, பாகல் எல்லாம் ஏகத்துக்கு சொதப்ப ஒரு கட்டத்தில் எல்லாவற்றையும் பிடுங்கி விட்டு பைகளிலேயே காயர் பித் வைத்து செய்து பார்க்கலாம் என்று செப்டம்பரில் இன்னொரு நடவு செய்தேன். பாகல் செமையாக வந்தது. வெற்றி.. வெற்றி என்று மனசு லேசா கூவ ஆரம்பிப்பதற்குள் செடியின் தண்டு எல்லாம் தடித்து செடி அப்படியே குன்றி போனது. புடலையும், பீர்கனும் ஏகத்துக்கு பூத்து கடைசியில் ஒரே ஒரு காய் மட்டும் கொடுத்தது. சுரையில் வெறும் பூ மட்டும் தான். கடுப்பில் செடி வாடி போகட்டும் என்று தண்ணீரே ஊற்றாமல் ஒரு வாரம் விட்டு விட்டேன். திடீரென்று ஒரு காய் மட்டும் கண்ணில் தட்டுபட, இதிலும் ஒரு காய் பறிக்கனும்னு இருக்கும் போல என்று மறுபடி நீர் ஊற்ற ஆரம்பித்து இருக்கிறேன்.
செடிக்கும் கொடிக்கும் சில வித்தியாசங்கள் இருக்கிறது. முக்கிய வித்தியாசம் கொடியில் மட்டும் தான் ஆண் பூ, பெண் பூ என்று இருக்கிறது. பெண் பூவில் பூவின் காம்பிலேயே சிறிதாக காய் இருக்கும். அது மட்டும் தான் காய்க்கும். தவிர பெண் பூ பூத்தாலும் அது அயல் மகரந்த சேர்க்கையை நிறைய சார்ந்திருக்கிறது. தோட்டத்தில் தேனீ, வண்ணத்து பூச்சிகள் வரத்து ஏதும் இல்லை என்றாலும் பிரச்சனை தான். அதை சரி செய்ய நாமே hand pollination செய்யலாம் (ஒரு ஆண் பூவை பறித்து காயோடு பூத்திருக்கும் மலர் மேல் லேசாய் தேய்த்து விடலாம்). கொடிக்கு அதற்குண்டான சத்துக்களோ, தகுந்த சீசனோ அமையவில்லை என்றால் ஆண் பூவாக தான் வருகிறது. சீசன் பற்றி இன்னும் கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும் (நண்பர் ஒருவர் கொடி அவரை பனி காலத்தில் (மார்கழி) நன்றாக காய்க்கும் என்றார். அதற்கு ஏற்றார் போல ஆகஸ்ட், செப்டம்பரில் விதைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்).
கொடியை பொறுத்தவரை சவால் நிறையவே இருக்கிறது. சீக்கிரம் கற்றுக் கொண்டு எதாவது உருப்படியாய் இந்த தை படத்திலாவது செய்ய வேண்டும்.
Mul Brinjal Harvest Tamil Thootam
தெரிந்தவர் ஒருவர் கத்தரி நாற்றுகள் ஒரு பத்து இருக்கும் கட்டு ஒன்றை கொடுத்தார். நெருங்கிய வட்டத்தில் யாருக்காவது செடி, விதை கிடைத்தால் முதலில் என் நியாபகம் தான் வருகிறது. அந்த நாற்றுகளை பிரித்து தரையில் வைத்து விட்டதில் இரண்டு செடிகள் மட்டும் முள் கத்தரியாக வந்தது. முதலில் இது தோட்டத்தில் ஒரு ஸ்பெஷல் செடியாக மாறும் என்று தெரியாது. செடியில் எல்லாமே முட்கள் தான். தண்டு, மொட்டு, இலை என்று ஒரே முள் மாயம். மிதித்தால் காலிலேயே குத்தும் அளவுக்கு உறுதியான முட்கள். ஆனால் கத்தரிக்காய் ரொம்ப அழகாக, குண்டு குண்டாய் நிறையவே காய்த்தது. கத்தரிக்காய் சில 200 கிராம் அளவுக்கு மிக பெரிதாய் வந்தது. காய் பார்க்க பெரிதாக இருந்தாலும், உள்ள மிக மென்மையாக ருசியாக இருக்கிறது. எல்லா கத்தரியை விட இது தான் ருசி என்று வீட்டில் கூறினார்கள். இதை பார்த்த எல்லோருமே நாற்று கிடைக்குமா என்று கேட்டிருந்தார்கள். ஒரு காயை விதைக்கு விட்டு எடுத்து வைத்திருக்கிறேன். கோவை நண்பர்கள் வேண்டுமென்றால் ஒரு மடல் அனுப்புங்கள்.
இதோடு மேலே கொடுத்திருக்கும் எல்லா கத்தரியிலும் விதை எடுத்து வைத்திருக்கிறேன். அடுத்த சீசனுக்கு விதை வாங்க வேண்டியதில்லை. கத்தரியில் விதை எடுப்பது எப்படி என்று ஒரு வீடியோ ஓன்று எடுத்திருக்கிறேன். சீக்கிரம் கொடுக்கிறேன்.
White Brinjal Harvesting Tamil Thootam
வெள்ளைக் கத்தரி, இதை பற்றி முன்பே சில முறை கூறி இருக்கிறேன். ஊரில் வருடமும் இருந்து கொண்டு வந்த விதை. கடந்த மூன்று வருடமாக விதை எடுத்து அதில் இருந்தே இந்த வருடமும்செடிகளை வருடா வருடம் கொண்டு வந்து கொண்டிருக்கிறேன். விளைச்சல் எந்த வருடமும் சொதப்பியதில்லை. எந்த நோய், பூச்சி தாக்குதலும் வந்ததில்லை. எங்கள் தோட்டத்தின் ஸ்பெஷல் கத்தரி இது தான். வெள்ளை கத்தரியை பார்த்ததும் ‘அட.. நம்ம ஊரு கத்தரி’ என்று வருபவர்களிடம் இருந்து ஒரு வார்த்தை வருடமும் வருமே, அதற்காகவே இந்த செடி என் எல்லா சீசனிலும் பட்டியலில் இருந்து தவறுவதில்லை.
Next month Brinjal Harvest July Tamil Thootam
ஒரு வழியாக ஜூலையில் தொடங்கிய சீசன் ஒரு முடிவுக்கு வருகிறது. அடுத்தது ஜனவரி (தை) சீசனுக்கான திட்டமிடல் போய்க் கொண்டிருக்கிறது. இப்போது தான் விதைகள் எல்லாம் ஆர்டர் செய்து கொண்டிருக்கிறேன். அடுத்த சீசனை தொடங்குவதற்கு முன் இந்த சீசன் அறுவடை பற்றி ஒரு முடிவுரை கொடுத்து விடலாம்.
இந்த சீசனை பற்றி சொல்வதென்றால் ‘சுமார்’ என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் நிறைய கற்றுக் கொள்ள முடிந்தது. சில செடிகள் ஹிட் லிஸ்டிலும், சில ஃபளாப் லிஸ்டிலும் போனது. அதுல வழக்கம் போல கொடிகள் சூப்பர் ஃபளாப் ஆகி போனது..அதனால் மக்களே ‘பாவக்கா செடி தண்டு வீங்கி போச்சு, சுரைக்கா வெம்பி போச்சு. என்ன செய்ய’ என்று மடல் அனுப்பினால் என் பதில் ‘உங்களுக்குமா....அவ்வ்வ்வவ்’ என்று தான் இருக்கும் :) (வரும் சீசனில் இதுல ஜெயித்தே ஆகவேண்டிய கட்டாயம்.. அப்படி கொடிக்கும் நமக்கும் என்ன ஜென்ம பகை என்று தெரியவில்லை. பார்க்கலாம் :) )
இந்த சீசனின் சிறப்பு என்றால் நண்பர் பரமேசிடம் வாங்கிய நாட்டு விதைகள் கொண்டு ஆரம்பித்தது தான். முக்கியமாக தக்காளி, கத்தரி, மிளகாய் செடிகளை பெரிதும் எதிர்பார்த்திருந்தேன். வழக்கம் போல நிறைய பூச்சி தொல்லைகள். வழக்கமான பூச்சிகளை விட்டு இந்த முறை புதிய வரவுகள் நிறைய இருந்தன. ஒவ்வொன்றும் நமக்கு எதாவது ஒன்றை கற்றுக் கொடுத்து விட்டு, வந்ததற்கு செடிகளையும் காலி செய்து விட்டு போய் விட்டன. ஒவ்வொன்றாய் விவரமாய் பார்க்கலாம்,
In my Home Plant Hot Chilly Plant Tamil Thootam
நாம ஏதாவது கண்காட்சி போனால், வீட்டுக்கு ஏதாவது வாங்குகிறோமோ இல்லையோ ஒரு ஐநூறு ரூபாய்க்காவது விதைகள் வாங்கினால் தான் வெளியே வருவது. அதிலும் இந்த ஹைப்ரிட் விதை பாக்கெட் நிறைய படம் பார்த்தே விதை பாக்கெட்டுகள் நம் கைகளில் வந்துவிடும். அது நமக்கு வேண்டிய காய்கறியா, நம்ம ஊருக்கு ஒழுங்கா வருமா என்பதெல்லாம் இரண்டாவது தான். அப்படித்தான் இந்த Hot Pepper விதையும். மிளகாய் பச்சை, ஆரஞ்சு, சிவப்பு என்று ஒரு கலவையாக மெழுகு போல அடுக்கிய அட்டை படத்தை பார்க்கவே ரொம்ப அழகாய் இருந்தது. அப்புறம் என்ன, ஒரு பாக்கெட் வாங்கியாகி விட்டது. பத்து விதைக்கு விலை வெறும் 55 ரூபாய் தான்.
இந்த சீசனில் மற்ற மிளகாய்கள் ரொம்பவே சொதப்பியது. காலாவதியான ஹைப்ரிட் விதையும், நண்பர் பரமேசிடம் வாங்கிய நாட்டு விதைகளும் சுமாரான விளைச்சலையே கொடுத்தது. நிறைய செடிகள் இலை சுருண்டு போய் சரியாகவே வரவில்லை (இது கற்றுக் கொள்ள வேண்டிய இன்னொரு ஏரியா). அதை எல்லாம் ஈடுகொடுக்கும் வகையில் இந்த Hot Pepper விளைச்சல் தேவையான மிளகாயை கொடுத்தது (அதனால் நான் ஹைப்ரிட் விதையை எல்லாம் பரிந்துரைக்கவில்லை.
Pudhu varavugal Thootam naduthal Tamil
புது வரவுகள்
ஏற்கனவே நாம அசுவினி, மாவுப் பூச்சி என்று போராடிக் கொண்டிருக்க, இந்த சீசனில் புதிதாய் இரண்டு பூச்சிகள் வந்து கடுப்பை கிளப்பிவிட்டு செத்து போயின.
கொடி எல்லாம் சொதப்பிக் கொண்டிருக்க மிதிபாகல் மட்டும் அழகாய் காய்த்துக் கொண்டிருந்தது. இது பொறுக்காமல் மஞ்சளாய் ஒரு பூச்சி கூட்டம் வந்து மொத்தமாய் செடியை மொட்டை அடித்துவிட்டது. கொடி முழுவதும் பரவி இலையை தின்று தீர்த்துவிட்டது. கடுப்பில் மொத்த செடிக்கும் தீ வைத்து காலி செய்தேன். கொடுமை என்னன்னா, பெரிய பாகல் சரியாய் வரலை என்று மீண்டும் விதை போட்டு அப்போது தான் முளைத்த நாற்றுகளையும் காலி செய்துவிட்டன.
ஆச்சரியமாய் இந்த முறை மாமரம் கோடை சீசன் முடிந்தவுடன் மறுபடி ஜூலையிலும் பூத்தது. டிசம்பர் குளிரில் கொத்து கொத்தாய் மாம்பழங்கள் சாப்பிட்டோம் J. கோடை சீசன் அளவுக்கு இல்லை என்றாலும் பதினைந்து கிலோ அளவுக்கு காய் கிடைத்தது
Chilly Valarpugal and There Vagaikal Tamil Thoottam
மிளகாய்
நாட்டு விதைகளில் ரொம்பவே சொதப்பியது மிளகாய் தான். இலைச் சுருட்டல் நோய் வந்து பெரிதாய் விளைச்சல் எடுக்க முடியவில்லை. மிளகாய் மறுபடி போட்டும் சில பிரச்சனைகள் வருகிறது. சீசன் பிரச்சனையா, நோய் பிரச்சனையா என்று என்று தெரியவில்லை. இந்த சொதப்பலை நான் போன பதிவில் கூறிய கார மிளகாய் (Hot Pepper) விளைச்சலை கொண்டு சரி செய்து கொண்டேன். மிளகாய் இந்த தை பட்டத்தில் சரியாய் கொண்டுவர முடியும் என்று நினைக்கிறேன்.
குடை மிளகாய்
குடை மிளகாய் செடி கத்தரி, தக்காளியை விட ஒரு எளிதாக காய்க்கும் செடி ஆகி போனது. இந்த விளைச்சலை ஏற்கனவே என்னுடைய முதல் வீடியோவின் இறுதியில் கொடுத்திருந்தேன். விதை Omaxe Hybrid Seed, இணையத்தில் வாங்கியது. அதில் அடர் ஊதா நிறத்தில் நிறைய காய்த்தது. ஆரஞ்சு மஞ்சள், சிவப்பு நிறமும் நிறைய கிடைத்தது. வெள்ளை நிறம் முயற்சித்து எந்த செடியிலும் வெள்ளை நிற குடைமிளகாய் வரவில்லை.
Cherry and Nattu Thakkali Vettu Thootam Tamil
நாட்டுத் தக்காளி
விதை நண்பர் பரமேசிடம் வாங்கியது. ஜூலையில் நடவு செய்த செடிகள் காய்த்து கொட்டியது என்று சொல்ல முடியாவிட்டாலும் ஓரளவுக்கு விளைச்சல் எடுக்க முடிந்தது. அதனால் அக்டோபர் வாக்கில் மறுபடி கொஞ்சம் நாற்று எடுத்து நிறைய பைகளில் வைத்து விட்டேன். இப்போது அந்த செடிகள் நன்றாகவே காய்த்து பலன் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அதுவும் தக்காளி கிலோ ஐம்பது, அறுபது என்று போன இந்த வேளையில் தேவைக்கு அதிகமாகவே காய்த்து கொண்டிருக்கிறது.
செர்ரி தக்காளி (Cherry Tomato)
ரொம்ப நாள் செர்ரி தக்காளி முயற்சிக்க வேண்டும் என்று ஒரு கண்காட்சியில் ஹைப்ரிட் விதை பாக்கெட் ஓன்று வாங்கி வந்திருந்தேன். செடி கன்னாபின்னாவென்று நீளமாய் வளர்கிறது. ஒரு கயிறு கட்டி அதில் சுற்றி விட்டால் நல்லது. கிட்டதட்ட மேலே பார்த்த குட்டி மஞ்சள் தக்காளி மாதிரி தான். ஆனால் நிறம் மட்டும் நல்ல அடர் சிவப்பு. தற்போது விளைச்சல் கொடுத்து கொண்டிருக்கிறது
Kutti Takkali Valarpathu Vettu Thoottam
குட்டி மஞ்சள் தக்காளி
பார்ப்பதற்கு செர்ரி தக்காளி (Cherry Tomato) மாதிரி இருந்தாலும் இது நாட்டுத் தக்காளி தான். நண்பர் பரமேசிடம் வாங்கிய விதைகளில் இதுவும் ஓன்று. நான் ‘குட்டி’ என்பதை சரியாக கவனிக்காமல் ‘மஞ்சள் தக்காளி’ என்பதை மட்டும் படித்து நிறைய செடிகளை போட்டு விட்டிருந்தேன். கொத்து கொத்தாய் பூக்கும் போதே இது சாதாரண தக்காளி மாதிரி இல்லையே என்று கொஞ்சம் சந்தேகம் வந்தது. பிறகு விதை பாக்கெட்டை படித்து பார்த்ததில் ‘குட்டி மஞ்சள் தக்காளி’ என்றிருந்தது. நாட்டு தக்காளியில் இப்படி ஒரு வகை இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. தட்டில் வைத்துப் பார்த்தால் புதிதாய் ஏதோ ஸ்வீட் அடுக்கி வைத்த மாதிரி ஒரு அழகு. சாம்பாருக்கு ஒரு கை நிறைய அப்படியே அள்ளி போட்டுக் கொள்ளலாம்.
Maadi Thoottam New Tips Part - 2
நன்றாக உழைக்கும், பிடித்து லாக் செய்து விட்டால் காலத்திற்கும் அப்படியே இருக்கும் என்று நினைத்து மொத்த தோட்டத்திலும் கட்ட வேண்டிய இடத்தில் எல்லாம் Tag வைத்து கட்டி விட்டது பெரிய தவறாக போய்விட்டது. வெயிலில் எல்லா Tag-ம் இத்து போய், ஆறு மாதத்தில் எல்லாமே தானாகவே பிரிந்து போய் விட்டது. வலை எல்லாம் அந்தரத்தில் கட்டாமலேயே விட்டது மாதிரி ஆகி, கம்பியில் உராய்ந்து கிழிய ஆரம்பித்தது.
இன்னொன்றையும் செய்திருக்கலாம். உராய்வினால் கிழிந்து விடக்கூடாது என்று தான் உருளை கம்பிகளாய் அமைத்தோம். அந்த கம்பிகளை சுற்றி ஒரு சுற்று நிழல் வலையில் மிச்சமாய் கிடந்ததை சுற்றி கட்டி அதன் மேல் வலையை அமைத்திருந்தால், உராய்வு இருந்தாலும் சேதம் இருந்திருக்காது.
கிட்டத்தட்ட எல்லா Tag-ம் வாயை பிளக்க, நிழல் வலைக்கு கட்ட என்று கிடைக்கும் பச்சை நிற கயறு வாங்கி எல்லா இடத்திலும் கட்டி சரி செய்தேன். எல்லா இடத்திலும் பெரிய ட்ரே வைத்து விட்டதால் ஏணி வைத்து ஏற இடம் இல்லை. முடிந்த அளவுக்கு இருக்கும் இடைவெளியில் ஏணியை வைத்து இப்போது வலை எந்த காற்று வந்தாலும் அசைவது இல்லை.
Thoottam amaippathu Eppadi New Tips
நான் முன்பு சொன்னது மாதிரி 35% Shade Grade தான் சரியாக இருக்கும். 50% Shade செடி செழிப்பாக வளர உதவும். ஆனால் விளைச்சல் கிடைக்காது.
காற்றின் தாக்கம் அதிகமாக இருந்தால், அந்த திசையில் காற்று அதிகமாக வீசுமோ அந்த பக்கம், பக்கவாட்டில் வலை அமைக்காமல் Sheet Metal வைத்து அமைத்தால் வலை அமைப்பு நீண்ட காலம் சேதாரம் இல்லாமல் இருக்கும்.
கொஞ்சம் தோட்டம் பக்கம் பார்க்கலாம். இந்த கோடை வெயிலைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. சொந்த ஊருக்கு வேறு கோடை விடுமுறைக்கு ஒரு வாரம் செல்ல வேண்டிய இருப்பதால் பெரிதாக ஏதும் புதிய செடிகள் வைக்கவில்லை. ஜூன் மாதத்தில் தான் எல்லாவற்றையும் ஆரம்பிக்க வேண்டும். தரை தோட்டத்தில் இந்த முறை புதிதாய் ஒரு கத்தரி ஓன்று சேர்ந்திருக்கிறது. காய்கறிகளில் கத்தரியில் மட்டும் தான் ஒரு நூறு வகை இருக்கும் போல. எல்லாவற்றையும் தோட்டத்தில் வளர்க்க ஆசை தான். ஆனால் அத்தனையையும் வளர்த்து குடும்பமாய் உட்கார்ந்து கத்தரிகாயாக சாப்பிட்டுக் கொண்டிருக்க முடியாது. இருந்தாலும் முயற்சிக்கும் கத்தரியில் நமக்கு பிடித்த கத்தரியை விதை எடுத்து நிரந்தரமாய் வருடா வருடம் வளர்த்துக் கொள்வதுண்டு.
இந்த முறை வாங்கிய நாட்டு விதைகளில் இந்த கொத்துக் கத்தரியும் இருந்தது. ஒரு காம்பில் மூன்றில் இருந்து ஐந்து கத்தரி என்று கொத்து கொத்தாய் காய்க்கிறது. கத்தரி பார்ப்பதற்கும் ஊதா நிறத்தில் பளபள என்று அழகாய் இருக்கிறது. நமது நிரந்தர பட்டியலில் வைத்துக் கொள்ளலாம் என்று ஒரு கொத்தை விதைக்கு விட்டிருக்கிறேன்.
Sodakku Thakkali En Vettu thoottam
தேவையான காய்கறிகள் விளைவிப்பது தவிர்த்து வீட்டுத் தோட்டத்தின் இன்னொரு முக்கிய பங்கு குழந்தைகளுக்கு இயற்கை மீது ஈடுபாடு கொண்டு வருவது. அதற்காக குட்டீஸ்களுக்கு தோட்டத்தில் வைத்து பாடம் எல்லாம் எடுத்தால் ஓடி விடுவார்கள். அவர்களை செடிகள் மீதான ஈடுபாட்டை அவர்களுக்கு பிடித்த விசயங்களை தோட்டத்தில் கொண்டு வருவதன் மூலம் உருவாக்கலாம். எங்க வீட்டுக்கு வரும் குட்டீஸ் முதலில் கொய்யா மரத்தை பார்ப்பார்கள். பிறகு மணத்தக்காளி பழுத்து கிடந்தால் அதை பறிப்பார்கள். அடுத்தது சொடக்கு தக்காளி செடியை உலுப்பி பழம் தேடுவார்கள். இப்படி தோட்டத்தில் குழந்தைகளுக்கு பிடித்த செடிகள் வைப்பது இன்னும் தோட்டத்தை அழகாக்கும்.
சொடக்கு தக்காளி. இது நிறைய பேருக்கு ஒரு புது பெயராக இருக்கும். கீழே பார்க்கும் பழத்தை உங்க ஊரில் என்னவென்று சொல்வீர்கள் என்று தெரியவில்லை.
எங்க ஊரில் சொடக்கு தக்காளி. இதன் காய் ஒரு பலூன் போல இருக்கும். உள்ளே பழம் பொதிந்து இருக்கும். நாங்கள் இதை வாயில் வைத்து ஊதி அதை அடுத்தவன் மண்டையில் ஓங்கி அடிப்போம். சொடக்கு விடுவது போல சத்தத்தோடு வெடிக்கும். அதனால் இதற்கு சொடக்கு தக்காளி என்று பெயர். எங்கள் விளையாட்டுகளுள் இதுவும் ஓன்று. தவிர நாங்கள் வீட்டில் இருந்ததை விட தேரிக்காட்டுக்குள் சுற்றியதும், ஊரை சுற்றி கருவேலங்காட்டுக்குள் காட்டுப்பயல்களாக சுற்றியதும் தான் அதிகம். அது ஒரு தொலைந்து போன சொர்க்கம். சொடக்கு தக்காளி, புட்டு முருங்கை என்று காட்டில் பழுத்து கிடக்கும் அத்தனை பழங்களையும் இஷ்டத்துக்கு பறித்து சாப்பிட்டுக் கொண்டு சுற்றிக் கொண்டிருப்போம். இதை பற்றி எழுத ஆரம்பித்தால் போய்க் கொண்டே இருக்கும், So.. Back to gardening..
சொடக்கு தக்காளியில் இரண்டு வகை உண்டு. ஓன்று சாதாரணமாக பச்சை நிறத்தில் இருக்கும். இது பொதுவாக ஊரில் எல்லா இடத்திலும் முளைத்து கிடக்கும். நிறமும் ருசியும் கொஞ்சம் குறைவு.
இன்னொன்று ‘நெய்’ தக்காளி என்போம். அதன் பழம் கொஞ்சம் வரி எல்லாம் போட்டு இருக்கும். பழமும் கூடுதல் ருசியோடு இருக்கும். (அதனால் நாங்கள் ‘நெய்’ தக்காளி என்போம்). இதில் நெய் தக்காளி இங்கே கோவையில் தோட்டத்தில் நிறைய தானாக வளரும். நானும் ஒரு சில பைகளில் விட்டு வைத்து நிறைய பழம் பறிப்போம்.
Maadi Thoottam New Tips
மாடித் தோட்டம் என்றவுடன் நிறைய பேர் நிழல் வலை அமைத்தால் தான் செய்ய முடியுமா என்று கேட்கிறார்கள். முதல் மாடி என்றால் நிழல் வலை தேவை இல்லை. நான் இரண்டு வருடங்களாக நிழல் வலை இல்லாமல் தான் மாடியில் செடிகள் வளர்த்துக் கொண்டிருந்தேன். காற்றின் தாக்கம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் உயரமாய் வளரும் வெண்டை, கார்ன் மாதிரி செடிகள் மற்றும் கொடிகள் வளர்க்க முடியாது. அதனால் நிழல் வலை அமைக்க வேண்டியதாகிவிட்டது. மற்றபடி நிழல் வலை இல்லாமல் தாரளமாக தோட்டம் ஆரம்பிக்கலாம். இரண்டாம், மூன்றாம் மாடி என்று போகும் போது வெயில் அதிகமாக இருந்தால் நிழல் வலை தேவைப்படும். நிழல் வலை அமைக்கும் போது காற்றின் தாக்கத்திற்கு ஏற்ற மாதிரி கட்டமைப்பை உறுதியாக அமைத்துக் கொள்ளுங்கள்.
எனது பசுமைக் குடில் தோட்டம் ஒரு வருடத்தைக் கடந்து வெற்றிகரமாக போய்க் கொண்டிருக்கிறது. போன வருடம் பிப்ரவரியில் முடித்து முழுமையா தோட்டத்தை ஆரம்பித்திருந்தேன். இது வரை கற்றுக் கொண்ட சில விஷயங்கள் புதிதாக தோட்டம் ஆரம்பிப்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
பலமான காற்று பலவற்றை தாங்கி இது வரை பெரிதாக சேதாரம் ஏதும் இல்லாமல் தோட்டம் நன்றாகவே இருக்கிறது. இரண்டு இடங்களில் மட்டும் வலை கம்பியில் காற்றில் உரசி கிழிந்து விட்டது. அதற்கு முக்கிய காரணம் ஹார்ட்வேர் கடையில் வாங்கி பயன்படுத்திய Cable Ties (Tags).
Maadi Thottam Do it yourself kit
சென்னை மற்றும் கோவை நண்பர்களுக்கு ஒரு தகவல். போன பதிவில் மாடி தோட்டம் பற்றி பார்த்தோம். ஒரு சிறிய மாடி தோட்டம் அமைக்க (இருபது Grow Bags வைத்து) தேவையான எல்லா பொருட்களையும் அரசு ‘நீங்களே செய்து பாருங்கள் – ‘ என்ற பெயரில் தோட்டக்கலை துறை மூலமாக கொடுக்க ஒரு திட்டம் அறிவித்து இருக்கிறார்கள். விவரங்கள் கீழே.
இதில் இருபது பாலிதீன் Grow Bags, ஒவ்வொன்றின் உள்ளேயே அதற்கு தேவையான Coir Pith Block.ஒரு பெரிய பாலிதீன் தரை விரிப்பு ஓன்று. விதைகள், தெளிப்பான் என்று ஒரு பெரிய பட்டியல் கொடுத்திருக்கிறார்கள். இதன் விலை Rs.3300 என்றும், இதை 50% மானியத்தில் Rs.1650 ல் கொடுப்பதாக கூறுகிறார்கள். Coir Pith Block, Grow Bags, Nursery Tray என்று தனி தனியாய் தேடி அலையாமல் ஒரு முதல் முயற்சியாய் செய்து பார்க்க நினைப்பவர்களுக்கு பயன் படலாம்.
இணையத்தில் உள்ள பதிவு செய்யும் முறையில் Bank details எல்லாம் கேட்டிருந்தார்கள். நான் இங்கே கோவில்பாளையம் யூனியன் ஆபீசை தொடர்பு கொண்டு நேரில் போய் பேசினேன். நான் ஒரு Kit க்கு பதிவு செய்தேன் (ஒருவர் ஐந்து வரை வாங்கலாம். அதாவது மொத்தம் நூறு Grow Bags) . இப்போதைக்கு பேரையும், முகவரியையும் கேட்டு பதிவு செய்து கொண்டார்கள். முன் பணம் ஏதும் செலுத்த தேவை இல்லை. எப்போது கொடுப்பார்கள், எப்படி கொடுப்பார்கள் என்று கேட்டதற்கு, இதை Contract எடுத்திருக்கும் நிறுவனம் பெப்ருவரி, மார்ச் மாதத்திற்குள் கொடுக்க கெடு இருப்பதாக கூறினார். வீட்டிலேயே கொடுத்தாலும் கொடுக்கலாம் என்றார். ஆனால் தெளிவாக விவரம் இல்லை.
பொருள் வரும் வரை பணம் கொடுக்க தேவை இல்லை. அதனால் தைரியமாய் பதிவு செய்து விட்டேன். இது Rs.3300 க்கு மதிப்பு உடையதா என்றால், இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அவர்கள் கொடுத்திருக்கும் சைஸ் Grow Bags ஓன்று Rs.30 தான் பெறும. இப்படி கணக்கு போட்டாலும், Rs.1650 க்கு நஷ்டமில்லை. அது, அந்த நிறுவனம் கொடுக்கும் தரத்திலும் இருக்கிறது. எப்படி இருந்தாலும், முதல் முயற்சியை செய்ய நினைப்பவர்களுக்கு பயன்படும்.