read.cash Log in
@Mani

Pudhu Varavugal Tamil Thootam

காய்க்கும் பருவத்தில் அங்கங்கே மாமரம் காய்ந்தது போல தெரிந்தது. அச்சோ, ஏதோ நோய் போல என்று நினைத்து பெரிதாய் ஏதும் பார்க்கவில்லை. காய் பறிக்க மேலே ஏறிய போது தான் அத்தனையும் பூச்சி தாக்குதல் என்று தெரிந்தது. கம்பளி பூச்சி மாதிரி, ஆனால் வித்தியாசமாய். உடம்பில் லேசாய் பட்டுவிட்டால் கூட ஊசி குத்தின மாதிரி ஒரு வலி. அப்படியே அந்த இடம் முழுவதும் தழுத்து விடுகிறது. இன்னும் கொஞ்சம் விட்டிருந்தால் மாமரம் மொத்தமும் காலி ஆகி இருக்கும். நிறைய கிளைகளை வெட்டி மொத்தமாய் போட்டு கொளுத்தி காலி செய்தேன். இந்த கோடை சீசனுக்கு மறுபடி நிறைய பூத்து பிஞ்சி பிடித்திருக்கிறது. மொத்தத்தில் போன ஆடிப்பட்டம் (ஜூன்-ஜூலை சீசன்) அடிப்படை காய்கறிகளில் நாட்டு ரகம் கொண்டு சிறப்பாய் அமைந்தது. கொடிகளை சாதாரணமாக எடுத்து ஆரம்பிக்காமல் இன்னும் கவனம் எடுத்து இந்த தை பட்டத்தில் செய்ய வேண்டும். இந்த தை பட்டத்திற்கு விதை போட்டு இப்போது தான் விதைகள் எல்லாம் முளைத்து விட்டன. சில புது வரவுகள், புது முயற்சிகள் இருக்கிறது. விவரமாய் அடுத்த பதிவில் பார்க்கலாம்.

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.