Mul Brinjal Harvest Tamil Thootam
தெரிந்தவர் ஒருவர் கத்தரி நாற்றுகள் ஒரு பத்து இருக்கும் கட்டு ஒன்றை கொடுத்தார். நெருங்கிய வட்டத்தில் யாருக்காவது செடி, விதை கிடைத்தால் முதலில் என் நியாபகம் தான் வருகிறது. அந்த நாற்றுகளை பிரித்து தரையில் வைத்து விட்டதில் இரண்டு செடிகள் மட்டும் முள் கத்தரியாக வந்தது. முதலில் இது தோட்டத்தில் ஒரு ஸ்பெஷல் செடியாக மாறும் என்று தெரியாது. செடியில் எல்லாமே முட்கள் தான். தண்டு, மொட்டு, இலை என்று ஒரே முள் மாயம். மிதித்தால் காலிலேயே குத்தும் அளவுக்கு உறுதியான முட்கள். ஆனால் கத்தரிக்காய் ரொம்ப அழகாக, குண்டு குண்டாய் நிறையவே காய்த்தது. கத்தரிக்காய் சில 200 கிராம் அளவுக்கு மிக பெரிதாய் வந்தது. காய் பார்க்க பெரிதாக இருந்தாலும், உள்ள மிக மென்மையாக ருசியாக இருக்கிறது. எல்லா கத்தரியை விட இது தான் ருசி என்று வீட்டில் கூறினார்கள். இதை பார்த்த எல்லோருமே நாற்று கிடைக்குமா என்று கேட்டிருந்தார்கள். ஒரு காயை விதைக்கு விட்டு எடுத்து வைத்திருக்கிறேன். கோவை நண்பர்கள் வேண்டுமென்றால் ஒரு மடல் அனுப்புங்கள். இதோடு மேலே கொடுத்திருக்கும் எல்லா கத்தரியிலும் விதை எடுத்து வைத்திருக்கிறேன். அடுத்த சீசனுக்கு விதை வாங்க வேண்டியதில்லை. கத்தரியில் விதை எடுப்பது எப்படி என்று ஒரு வீடியோ ஓன்று எடுத்திருக்கிறேன். சீக்கிரம் கொடுக்கிறேன்.
1 comment
முறியும் வரலாற்று அம்பை ஏற்கனவே றுகதைகள்மாவுப் ஆதவன் வரலாற்று