read.cash Log in
@Mani

Maadi Thoottam New Tips

மாடித் தோட்டம் என்றவுடன் நிறைய பேர் நிழல் வலை அமைத்தால் தான் செய்ய முடியுமா என்று கேட்கிறார்கள். முதல் மாடி என்றால் நிழல் வலை தேவை இல்லை. நான் இரண்டு வருடங்களாக நிழல் வலை இல்லாமல் தான் மாடியில் செடிகள் வளர்த்துக் கொண்டிருந்தேன். காற்றின் தாக்கம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் உயரமாய் வளரும் வெண்டை, கார்ன் மாதிரி செடிகள் மற்றும் கொடிகள் வளர்க்க முடியாது. அதனால் நிழல் வலை அமைக்க வேண்டியதாகிவிட்டது. மற்றபடி நிழல் வலை இல்லாமல் தாரளமாக தோட்டம் ஆரம்பிக்கலாம். இரண்டாம், மூன்றாம் மாடி என்று போகும் போது வெயில் அதிகமாக இருந்தால் நிழல் வலை தேவைப்படும். நிழல் வலை அமைக்கும் போது காற்றின் தாக்கத்திற்கு ஏற்ற மாதிரி கட்டமைப்பை உறுதியாக அமைத்துக் கொள்ளுங்கள். எனது பசுமைக் குடில் தோட்டம் ஒரு வருடத்தைக் கடந்து வெற்றிகரமாக போய்க் கொண்டிருக்கிறது. போன வருடம் பிப்ரவரியில் முடித்து முழுமையா தோட்டத்தை ஆரம்பித்திருந்தேன். இது வரை கற்றுக் கொண்ட சில விஷயங்கள் புதிதாக தோட்டம் ஆரம்பிப்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன். பலமான காற்று பலவற்றை தாங்கி இது வரை பெரிதாக சேதாரம் ஏதும் இல்லாமல் தோட்டம் நன்றாகவே இருக்கிறது. இரண்டு இடங்களில் மட்டும் வலை கம்பியில் காற்றில் உரசி கிழிந்து விட்டது. அதற்கு முக்கிய காரணம் ஹார்ட்வேர் கடையில் வாங்கி பயன்படுத்திய Cable Ties (Tags).

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.