Maadi Thottam Do it yourself kit
சென்னை மற்றும் கோவை நண்பர்களுக்கு ஒரு தகவல். போன பதிவில் மாடி தோட்டம் பற்றி பார்த்தோம். ஒரு சிறிய மாடி தோட்டம் அமைக்க (இருபது Grow Bags வைத்து) தேவையான எல்லா பொருட்களையும் அரசு ‘நீங்களே செய்து பாருங்கள் – ‘ என்ற பெயரில் தோட்டக்கலை துறை மூலமாக கொடுக்க ஒரு திட்டம் அறிவித்து இருக்கிறார்கள். விவரங்கள் கீழே. இதில் இருபது பாலிதீன் Grow Bags, ஒவ்வொன்றின் உள்ளேயே அதற்கு தேவையான Coir Pith Block.ஒரு பெரிய பாலிதீன் தரை விரிப்பு ஓன்று. விதைகள், தெளிப்பான் என்று ஒரு பெரிய பட்டியல் கொடுத்திருக்கிறார்கள். இதன் விலை Rs.3300 என்றும், இதை 50% மானியத்தில் Rs.1650 ல் கொடுப்பதாக கூறுகிறார்கள். Coir Pith Block, Grow Bags, Nursery Tray என்று தனி தனியாய் தேடி அலையாமல் ஒரு முதல் முயற்சியாய் செய்து பார்க்க நினைப்பவர்களுக்கு பயன் படலாம். இணையத்தில் உள்ள பதிவு செய்யும் முறையில் Bank details எல்லாம் கேட்டிருந்தார்கள். நான் இங்கே கோவில்பாளையம் யூனியன் ஆபீசை தொடர்பு கொண்டு நேரில் போய் பேசினேன். நான் ஒரு Kit க்கு பதிவு செய்தேன் (ஒருவர் ஐந்து வரை வாங்கலாம். அதாவது மொத்தம் நூறு Grow Bags) . இப்போதைக்கு பேரையும், முகவரியையும் கேட்டு பதிவு செய்து கொண்டார்கள். முன் பணம் ஏதும் செலுத்த தேவை இல்லை. எப்போது கொடுப்பார்கள், எப்படி கொடுப்பார்கள் என்று கேட்டதற்கு, இதை Contract எடுத்திருக்கும் நிறுவனம் பெப்ருவரி, மார்ச் மாதத்திற்குள் கொடுக்க கெடு இருப்பதாக கூறினார். வீட்டிலேயே கொடுத்தாலும் கொடுக்கலாம் என்றார். ஆனால் தெளிவாக விவரம் இல்லை. பொருள் வரும் வரை பணம் கொடுக்க தேவை இல்லை. அதனால் தைரியமாய் பதிவு செய்து விட்டேன். இது Rs.3300 க்கு மதிப்பு உடையதா என்றால், இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அவர்கள் கொடுத்திருக்கும் சைஸ் Grow Bags ஓன்று Rs.30 தான் பெறும. இப்படி கணக்கு போட்டாலும், Rs.1650 க்கு நஷ்டமில்லை. அது, அந்த நிறுவனம் கொடுக்கும் தரத்திலும் இருக்கிறது. எப்படி இருந்தாலும், முதல் முயற்சியை செய்ய நினைப்பவர்களுக்கு பயன்படும்.
1 comment
பார்த்து கொண்டிருக்க, இந்த மிளகாய் வானம் நோக்கி வளர்கிறது. வெளிர் பச்சை நிறத்தில் ஆரம்பித்து