read.cash Log in
@Mani

Next month Brinjal Harvest July Tamil Thootam

ஒரு வழியாக ஜூலையில் தொடங்கிய சீசன் ஒரு முடிவுக்கு வருகிறது. அடுத்தது ஜனவரி (தை) சீசனுக்கான திட்டமிடல் போய்க் கொண்டிருக்கிறது. இப்போது தான் விதைகள் எல்லாம் ஆர்டர் செய்து கொண்டிருக்கிறேன். அடுத்த சீசனை தொடங்குவதற்கு முன் இந்த சீசன் அறுவடை பற்றி ஒரு முடிவுரை கொடுத்து விடலாம். இந்த சீசனை பற்றி சொல்வதென்றால் ‘சுமார்’ என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் நிறைய கற்றுக் கொள்ள முடிந்தது. சில செடிகள் ஹிட் லிஸ்டிலும், சில ஃபளாப் லிஸ்டிலும் போனது. அதுல வழக்கம் போல கொடிகள் சூப்பர் ஃபளாப் ஆகி போனது..அதனால் மக்களே ‘பாவக்கா செடி தண்டு வீங்கி போச்சு, சுரைக்கா வெம்பி போச்சு. என்ன செய்ய’ என்று மடல் அனுப்பினால் என் பதில் ‘உங்களுக்குமா....அவ்வ்வ்வவ்’ என்று தான் இருக்கும் :) (வரும் சீசனில் இதுல ஜெயித்தே ஆகவேண்டிய கட்டாயம்.. அப்படி கொடிக்கும் நமக்கும் என்ன ஜென்ம பகை என்று தெரியவில்லை. பார்க்கலாம் :) ) இந்த சீசனின் சிறப்பு என்றால் நண்பர் பரமேசிடம் வாங்கிய நாட்டு விதைகள் கொண்டு ஆரம்பித்தது தான். முக்கியமாக தக்காளி, கத்தரி, மிளகாய் செடிகளை பெரிதும் எதிர்பார்த்திருந்தேன். வழக்கம் போல நிறைய பூச்சி தொல்லைகள். வழக்கமான பூச்சிகளை விட்டு இந்த முறை புதிய வரவுகள் நிறைய இருந்தன. ஒவ்வொன்றும் நமக்கு எதாவது ஒன்றை கற்றுக் கொடுத்து விட்டு, வந்ததற்கு செடிகளையும் காலி செய்து விட்டு போய் விட்டன. ஒவ்வொன்றாய் விவரமாய் பார்க்கலாம்,

2 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.