In my Home Plant Hot Chilly Plant Tamil Thootam
நாம ஏதாவது கண்காட்சி போனால், வீட்டுக்கு ஏதாவது வாங்குகிறோமோ இல்லையோ ஒரு ஐநூறு ரூபாய்க்காவது விதைகள் வாங்கினால் தான் வெளியே வருவது. அதிலும் இந்த ஹைப்ரிட் விதை பாக்கெட் நிறைய படம் பார்த்தே விதை பாக்கெட்டுகள் நம் கைகளில் வந்துவிடும். அது நமக்கு வேண்டிய காய்கறியா, நம்ம ஊருக்கு ஒழுங்கா வருமா என்பதெல்லாம் இரண்டாவது தான். அப்படித்தான் இந்த Hot Pepper விதையும். மிளகாய் பச்சை, ஆரஞ்சு, சிவப்பு என்று ஒரு கலவையாக மெழுகு போல அடுக்கிய அட்டை படத்தை பார்க்கவே ரொம்ப அழகாய் இருந்தது. அப்புறம் என்ன, ஒரு பாக்கெட் வாங்கியாகி விட்டது. பத்து விதைக்கு விலை வெறும் 55 ரூபாய் தான். இந்த சீசனில் மற்ற மிளகாய்கள் ரொம்பவே சொதப்பியது. காலாவதியான ஹைப்ரிட் விதையும், நண்பர் பரமேசிடம் வாங்கிய நாட்டு விதைகளும் சுமாரான விளைச்சலையே கொடுத்தது. நிறைய செடிகள் இலை சுருண்டு போய் சரியாகவே வரவில்லை (இது கற்றுக் கொள்ள வேண்டிய இன்னொரு ஏரியா). அதை எல்லாம் ஈடுகொடுக்கும் வகையில் இந்த Hot Pepper விளைச்சல் தேவையான மிளகாயை கொடுத்தது (அதனால் நான் ஹைப்ரிட் விதையை எல்லாம் பரிந்துரைக்கவில்லை.
No comments yet