Pudhu varavugal Thootam naduthal Tamil
புது வரவுகள் ஏற்கனவே நாம அசுவினி, மாவுப் பூச்சி என்று போராடிக் கொண்டிருக்க, இந்த சீசனில் புதிதாய் இரண்டு பூச்சிகள் வந்து கடுப்பை கிளப்பிவிட்டு செத்து போயின. கொடி எல்லாம் சொதப்பிக் கொண்டிருக்க மிதிபாகல் மட்டும் அழகாய் காய்த்துக் கொண்டிருந்தது. இது பொறுக்காமல் மஞ்சளாய் ஒரு பூச்சி கூட்டம் வந்து மொத்தமாய் செடியை மொட்டை அடித்துவிட்டது. கொடி முழுவதும் பரவி இலையை தின்று தீர்த்துவிட்டது. கடுப்பில் மொத்த செடிக்கும் தீ வைத்து காலி செய்தேன். கொடுமை என்னன்னா, பெரிய பாகல் சரியாய் வரலை என்று மீண்டும் விதை போட்டு அப்போது தான் முளைத்த நாற்றுகளையும் காலி செய்துவிட்டன. ஆச்சரியமாய் இந்த முறை மாமரம் கோடை சீசன் முடிந்தவுடன் மறுபடி ஜூலையிலும் பூத்தது. டிசம்பர் குளிரில் கொத்து கொத்தாய் மாம்பழங்கள் சாப்பிட்டோம் J. கோடை சீசன் அளவுக்கு இல்லை என்றாலும் பதினைந்து கிலோ அளவுக்கு காய் கிடைத்தது
No comments yet