read.cash Log in

@G4ceTech

Joined 8 May 2020 · 112 posts

120 KT

0 KT · $2.33 received · 0 KT given

Posts

@G4ceTech

Ulagalavil Corona vin thandavam உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7.84 லட்சத்தை தாண்டியது. சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், ரஷ்யா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பல்வேறு நாடுகளை சேர்ந்த 7,84,258 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 22,302,298 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 15,043,529 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், 6,474,511 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 62,035 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். * இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,766,626 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 53,014 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் 2,036,703 பேர் குணமடைந்தனர்.

@G4ceTech

Kuran enpatharkana sariyana sandru Tamil 6 முஸ்லிம்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகள் குறித்து முஸ்லிம்கள் அறிஞர்கள் தங்களது சொற்பொழிவுகளில் பேசி வந்த கர்ஜனைகளை ஹைதராபாத் எம்.பி அசத்துன் உவைசி அவர்கள் நேற்று பார்லிமண்டில் மோடி மற்றும் நூற்றுக் கணக்கான பா.ஜ.க எம்பிக்களுக்கு முன்னால் பேசி பார்லிமண்டையே ஆச்சரிப்பட வைத்துவிட்டார். அவர் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்ல முடியாத பி.ஜே.பி எம் பிக்கள் இடையில் அவரை மறித்து கூச்சலிட்டனர். பார்லிமண்ட்டில் மோடிக்கு சவால் விட்ட ஹைதராபாத் எம்.பி – உவைசி பேச்சின் தமிழாக்கம்! இருந்த போதிலும் அவர்களை சமாலித்து அசத்து உவைசி பேசியது குறிப்பிடதக்கது.

@G4ceTech

Kuran enpatharkana sariyana sandru Tamil 5 இப்படி ஒரு பெயர் சூட்டப்பட்டவரை இதற்கு முன் நீங்கள் காண முடியாது என்று அறைகூவல் விடுவது போல் இப்படி இறைவன் பேசியுள்ளான். முழு உலகிலும் எந்தக் காலத்திலும் இது இருந்ததில்லை; அது இருந்ததில்லை என்று சொல்வது மிகவும் கடினமான விஷயமாகும். ஏனெனில் நமக்குத் தெரியாமல் எங்காவது அது இருந்து தொலைத்து விட்டால் நம்முடைய மானம் கப்பலேறி விடும். கடவுளால் மட்டும் தான் இதுபோல் அடித்துச் சொல்லி இருக்க முடியும். இவ்வசனத்தைப் பொய்யாக்க யஹ்யா என்ற பெயரில் யாராவது இருந்தால் அதை வைத்தே இஸ்லாத்தைப் பொய்யாக்கி விடலாம் என்று கங்கணம் கட்டி கிறித்தவ சபைகள் தேடிப்பார்த்தும் அவர்களால் யஹ்யாவைக் கண்டுபிடிக்கவில்லை.

@G4ceTech

Kuran enpatharkana sariyana sandru Tamil 3 இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் கூட இப்படி ஒரு மனிதனால் சொல்ல முடியாது. இந்த விஷயம் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் ஜகரியா நபியிடம் இறைவன் சொன்னதாகக் கூறப்படுகிறது. யஹ்யா என்ற பெயரில் இதற்கு முன் ஒருவரும் இல்லை என்று சொன்ன பிறகு உலகில் ஏதாவது ஒரு காலத்தில் பழங்கால ஏடுகளில் யஹ்யா என்ற பெயரில் ஒருவர் இருந்து விட்டால் இறைவசனம் பொய்யாகி விடும். ஸக்கரியா நபியிடம் அல்லாஹ் இப்படிச் சொன்னதாக முஹம்மது நபி சுயமாகக் கற்பனை செய்து சொல்லியிருக்க முடியாது. அப்படிச் சுயமாகச் சொல்ல நினைத்தால் எங்காவது யஹ்யா என்ற பெயரில் ஒருவர் இருந்து விட்டால் என்னாவது என்ற தயக்கமே இது போல் பேசுவதை விட்டும் அவரைத் தடுத்து இருக்கும்.

@G4ceTech

Kuran enpatharkana sariyana sandru Tamil 2 ஸகரிய்யா நபிக்கு ஆண் குழந்தையைக் கொடுக்கும் போதே அதற்கு யஹ்யா என்ற பெயரைச் சூட்டி அல்லாஹ் வழங்குகிறான். இந்தப் பெயரை இதற்கு முன் ஒருவருக்கும் சூட்டியதில்லை எனவும் கூறுகிறான். இந்தப் பெயரை இதற்கு முன் சூட்டியதில்லை என்று அன்றைக்கு எந்த மனிதனாலும் பேச முடியாது. ஒரு மனிதன் இப்படிச் சொல்வதாக இருந்தால் அவனுக்கு உலகில் உள்ள எல்லா மொழிகளும் தெரிந்திருக்க வேண்டும். அன்று வரை உலகில் பிறந்த, பிறந்து மரணித்த ஒவ்வொரு நபரின் பெயரும் அவனுக்குத் தெரிந்திருக்க வேண்டும். பல்லாயிரம் கோடி மக்களின் பெயர்களுக்குள் யஹ்யா என்ற பெயரில் ஒருவரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு அதன் பின்னர் தான் இப்படிக் கூற முடியும்.

@G4ceTech

Kuran enpatharkana sariyana sandru Tamil 4 இப்படி ஒரு பெயரில் இதற்கு முன் ஒருவர் கூட இல்லை என்று இறைவனால் தான் சொல்லி இருக்க முடியும். இன்னும் சொல்லப் போனால் ஸகரிய்யா நபியிடம் இறைவன் இப்படிச் சொன்னதாக யூத கிறித்தவ வேதங்களில் சொல்லப்படாமல் இருந்தும் திருக்குர்ஆன் இப்படிச் சொல்கிறது என்றால் இது இறைவனின் வார்த்தை என்பதில் சந்தேகம் இல்லை. பொதுவாக குழந்தைக்குப் பெயர் சூட்டுவது இறைவன் செய்ய வேண்டிய அளவுக்கு முக்கியமானது அல்ல. அது மனிதனுக்குச் சிரமமானதும் அல்ல. அல்லாஹ் குழந்தையைக் கொடுத்து விட்டால் ஸகரிய்யா நபி பெயர் சூட்டிக் கொள்ள மாட்டார்களா? அனைத்தையும் அறிந்த இறைவனாக நான் இருக்கிறேன் என்று நிரூபிக்கவே அல்லாஹ் இப்படிச் செய்திருக்க வேண்டும். எவர் வேண்டுமானாலும் எந்தக் காலத்தில் வேண்டுமானாலும் சோதித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்

@G4ceTech

Kuran enpatharkana sariyana sandru Tamil குர்ஆன் இறைவேதம் என்பதற்கான சரித்திரச் சான்று திருக்குர் ஆன் இறைவேதம் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. இதை நம்முடைய தமிழாக்கத்தில் தெளிவாக விளக்கியுள்ளோம். அந்த வகையில் குர் ஆன் இறைவேதம் என்பதற்கான சரித்திரச் சான்றைக் கீழே தந்துள்ளோம். இது விரைவில் வெளிவரவுள்ள திருக்குர்ஆன் தமிழாக்கத்தின் 12ஆம் பதிப்பில் கூறப்பட்ட விஷயமாகும். 467. யஹ்யா என்று யாரும் இருந்ததில்லை இவ்வசனத்தில் (19:7) ஸக்கரிய்யா நபியின் தள்ளாத வயதில் அவருக்கு ஆண்குழந்தையை அல்லாஹ் கொடுத்த செய்தியைச் சொல்கிறான். திருக்குர்ஆன் இறைவேதம் என்று நிரூபிக்க இந்த ஒரே ஒருவசனமே போதுமான ஆதாரமாக அமைந்துள்ளது.

@G4ceTech

Iraivanidam kaiyendhungal Tamil End முஃமின்களின் முன் மாதிரி சொர்க்கத்தை பெறுவதற்காக இறைவனுக்கு தியாகம் செய்தவர்களின் முன்மா திரியாக அல்லாஹ் இரு பெண்களை சுட்டிக்காட்டுவது பெண்ணினத்தின் சிறப்பை எடுத்துக் காட்டும் ஒரு மகுடமாக சொல்லலாம். "என் இறைவா! சொர்க்கத்தில் உன்னிடம் எனக்கொரு வீட்டை எழுப்பு வாயாக! ஃபிர்அவ்னிடமிருந்தும் அவனது சித்திரவதையிலிருந்தும் என் னைக் காப்பாயாக! அநீதி இழைத்த கூட்டத்திலிருந்தும் என்னைக் காப்பா யாக!'' என்று ஃபிர்அவ்னின் மனைவி கூறியதால் அவரை நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் முன்னுதாரணமா கக் கூறுகிறான். இம்ரானின் மகள் மர்யமையும் (இறைவன் முன் உதாரணமாகக் கூறுகி றான்) அவர் தமது கற்பைக் காத்துக் கொண்டார். அவரிடம் நமது உயிரை ஊதினோம். அவர் தமது இறைவனின் வார்த்தைகளையும், அவனது வேதங்களையும் உண்மைப்படுத்தினார். அவர் கட்டுப்பட்டு நடப்பவராகவும் இருந்தார். அல்குர்ஆன் 66:11,12) எனவே பெண்கள் என்பவர்களை போகப் பொருளாக பயன்படுத்தாமல் குணம் நிறைந்த மங்கையாகவும் சொர்க்கத்தைப் பெற்றுத் தரும் அரிய பொக்கிஷ மாகவும் நினைத்து பெண் குழந்தைகளை மகிழ்வோடு வளர்ப்போம்.

@G4ceTech

Iraivanidam kaiyendhungal Tamil 17 உங்கள் முடியைக் களையும்வரை அவர்கüல் எவருடனும் ஒரு வார்த்தை யும் பேசாதீர்கள்'' என்று (ஆலோசனை) கூறினார்கள். உடனே, நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டு ஒட்டகங்களை குர்பானி கொடுத்து விட்டு, தம் நாவி தரை அழைத்துத் தலை முடியைக் களைந்து கொண்டார்கள். அதுவரை அவர்கüல் எவரிடமும் நபியவர்கள் பேசவில்லை. இவற்றைக் கண்டவுடன் மற்ற நபித் தோழர்களும் எழுந்து சென்று தியாகப்பிராணிகளை அறுத்து, ஒருவர் மற்றவரின் தலைமுடியைக் களையத் தொடங்கினார்கள். ஒருவர் மற்றவரை நெரிசலால் சாகடித்து விடுவார்களோ எனும் அளவிற்குப் போட்டி போட்டுக் கொண்டு (தியாகப் பிராணிகளை அறுக்கவும் முடிகளை யவும்) சென்றனர். அறிவிப்பவர் : மிஸ்வர் பின் மக்ரமா (ரலி), நூல் : புகாரி (2731,2732)

@G4ceTech

Iraivanidam kaiyendhungal Tamil 15 ஆலோசனையின் முன்மாதிரி கணவனுக்கு சிக்கல் ஏற்படும்போது அரிய ஆலோசனை சொல்லும் மந்திரியா கவும் பெண் இருப்பாள். ஹிஜ்ரி ஆறாம் ஆண்டு நடந்த ஹுதைப் பிய்யா உடன்படிக்கையின் அடிப்படையில் அந்த வருடம் உம்ரா செல்ல முடியாமல் இடையில் நின்றுவிட்டதால் நபிகளார் அவர்கள் குர்பானி பிராணி கொண்டு வந்தவர் தம் தலையை மழித்துக் கொண்டு குர்பானி பிராணியை அறுக்குமாறு கட்டளையிட்டார்கள். ஆனால் சோகத்தில் இருந்த நபித்தோழர்கள் யாரும் இக்கட் டளையை கண்டு கொள்ளவில்லை. இந்த சந்தர்ப்பத்தில் நபிகளாரின் மனைவி உம்மு ஸலமா (ரலி) அவர்கள் கொடுத்த ஆலோசனை சிறந்த பயனைத் தந்தது.

@G4ceTech

Iraivanidam kaiyendhungal Tamil 14 இதைக் கேட்ட) வரக்கா, "(நீர் கண்ட) இவர்தாம், (இறைத்தூதர்) மூசாவி டம் இறைவன் அனுப்பிய வானவர் (ஜிப்ரீல்) ஆவார்'' என்று நபியவர்களிடம் கூறிவிட்டு, "(மகனே!) உம்மை உம் சமூகத்தார் (உமது நாட்டிலிருந்து) வெளியேற்றும் அந்த சமயத்தில் நான் திட காத்திரமானவனாக இருந்தால் நன்றாயிருக்குமே! நான் அந்தத் தருணத்தில் உயிரோடு இருந்தால் நன்றாயிருக்குமே!'' என்றார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(என் சமூக) மக்கள் என்னை (நாட்டை விட்டு) வெளியேற்றவா செய்வார்கள்?'' என்று கேட்க, வரக்கா, "ஆம், நீங்கள் பெற்றுள்ள (உண்மையான வேதம் போன்ற)தைப் பெற்ற (இறைத்தூதர்) எவரும் (மக்களால்) பகைத்துக்கொள்ளப்படாமல் இருந்ததில்லை. உங்களது (தூதுவப்பணி பரவலாகும்) நாளை நான் அடைந்தால் உங்களுக்குப் பலமான உதவி செய்வேன்'' என்று சொன் னார். அதன் பின் வரக்கா நீண்ட நாள் இராமல் இறந்துவிட்டார். (அந்த முதல் வஹீயுடன்) வேத அறிவிப்பு (சிறிது காலம்) நின்றுபோயிற்று. அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் :புகாரி (3)

@G4ceTech

Iraivanidam kaiyendhungal Tamil 13 து. பின்னர் கதீஜாவிடம் நடந் தவற்றைத் தெரிவித்துவிட்டு "எனக்கேதும் நேர்ந்து விடுமோ என நான் அஞ்சுகிறேன்'' என்று சொன்னார்கள். அதற்கு கதீஜா (ரலி) அவர்கள், "அப்படியொன்றும் ஆகாது. அல்லாஹ் வின் மீதாணையாக! உங்களை ஒருபோதும் அல்லாஹ் இழிவுபடுத்த மாட் டான்; (ஏனெனில்) தாங்கள் உறவுகளைப் பேணி நடந்து கொள்கிறீர்கள்; (சிரமப்படுவோரின்) பாரத்தைச் சுமக்கிறீர்கள்; வறியவர்களுக்காகப் பாடுபடு கிறீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள்; சத்திய சோதனையில் ஆட்பட் டோருக்கு உதவி செய்கிறீர்கள் (அதனால் நீங்கள் அஞ்ச வேண்டிய தில்லை)'' என்று (ஆறுதல்) சொன்னார்கள்.

@G4ceTech

Iraivanidam kaiyendhungal Tamil 12 பின்னர் நபி (ஸல்) அவர்களை அழைத்துக் கொண்டு தம் தந்தை யின் சகோதரர் மகனான வரக்கா பின் நவ்ஃபல் பின் அசத் பின் அப்தில் உஸ்ஸா என்பாரிடம் கதீஜா (ரலி) அவர்கள் சென்றார்கள். "வரக்கா' அறியாமைக் காலத்திலேயே கிறித்தவ சமயத்தைத் தழுவி யவராக இருந்தார். மேலும், அவர் (அரபு மற்றும்) எபிரேய (ஹீப்ரு) மொழி யில் எழுதத் தெரிந்தவராக இருந்தார். எனவே, இன்ஜீல் வேதத்தை அல் லாஹ் நாடிய அளவிற்கு ஹீப்ரு மொழியி(ருந்து அரபு மொழியி)ல் எழுது வார். அவர் கண் பார்வையிழந்த முதியவராகவும் இருந்தார். அவரிடம் கதீஜா (ரலி) அவர்கள், "என் தந்தையின் சகோதரர் புதல் வரே! உங்கள் புதல்வர் (முஹம்மத்) இடம் அவர் கூறுவதைக் கேளுங்கள்' என்றார்கள். அப்போது வரக்கா நபி (ஸல்) அவர்களிடம், "என் சகோதரர் மகனே! நீங்கள் என்ன பார்த்தீர்கள்?'' எனக் கேட்டார். அதற்கு அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் தாம் பார்த்தவற்றின் விவரத்தை அவரிடம் சொன்னார்கள்.

@G4ceTech

Iraivanidam kaiyendhungal Tamil 11 மீண்டும் (தம் துணைவியார்) கதீஜா (ரலி) அவர்களிடம் திரும்பிவந்து அதைப் போன்று (பல நாள்களுக்கு வேண்டிய) உணவைத் தம்முடன் பெற்றுச் செல்வார்கள். இந்நிலை "ஹிரா' குகையில் அவர்களுக்கு சத்திய (வேத)ம் வரும்வரை நீடித்தது. (ஒருநாள்) அந்த வான வர் (ஜிப்ரீல்) நபி அவர்களிடம் வந்து, "ஓதுவீராக'' என்றார். நபி (ஸல்) அவர்கள், "நான் ஓதத் தெரிந்தவனில்லையே!'' என்று சொன்னார்கள் (பின்பு நடந்தவற்றை) நபி (ஸல்) அவர்கள் (பின்வருமாறு எடுத்துக்) கூறினார்கள்: வானவர் (ஜிப்ரீல்) என்னைப் பிடித்து நான் திணறும் அளவிற்கு இறுகக் கட்டியணைத்தார். பிறகு என்னை விட்டுவிட்டு "ஓதுவீராக'' என்றார். அப் போதும் "நான் ஓதத் தெரிந்தவனில்லையே!'' என்றேன். உடனே அவர் என் னைப் பிடித்து நான் திணறும் அளவிற்கு இறுகக் கட்டியணைத்தார். பிறகு என்னை விட்டுவிட்டு "ஓதுவீராக!'' என்றார்.

@G4ceTech

Iraivanidam kaiyendhungal Tamil 10 நபிகளாரை இறைத்தூதராக பிரகடனப்படுத்தும் திருமறைக்குர்ஆன் வசனங் கள் இறங்கியபோது பயந்து, தனக்கு ஏதும் நிகழந்து விடுமோ என்று பயந்த நபிகளாரை அவர்களின் மனைவி கதீஜா (ரலி) அவர்கள்தான் ஆறுதல் கூறி அவர்களின் ஐயத்தைப் போக்கி தேற்றினார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு ஆரம்பமாக வந்த வேத அறிவிப்பு (வஹீ) தூக் கத்தில் கண்ட உண்மைக் கனவுகளாகவே இருந்தது. அப்போது அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அது அதிகாலைப் பொழுதின் விடியலைப் போன்று (தெளிவாகவே) இருக்கும். பின்னர் தனிமையிலிருப்பது அவர்க ளின் விருப்பமாயிற்று. (எனவே) அவர்கள் "ஹிரா' குகையில் தனித்திருந்து தம் வீட்டாரிடம் திரும்பி வருவதற்கு முன் பல இரவுகள் வணக்க வழிபாடுக ளில் ஈடுபட்டு வந்தார்கள். அதற்காக (பல நாள்களுக்கு வேண்டிய) உண வைத் தம்முடன் கொண்டு செல்வார்கள்.

@G4ceTech

Iraivanidam kaiyendhungal Tamil 8 **நட்புக்கு இலக்கணம்** உலகில் ஒருவன் அன்பும் பாசமும் காட்டுவதற்கு முதலிடம் தாய் என்ற பெண்தான் என்று இஸ்லாம் கூறுகிறது. நபி (ஸல்) அவர்கüடம் ஒரு மனிதர் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் தகுதியானவர் யார்?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "உன் தாய்'' என்றார்கள். அவர், "பிறகு யார்?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "உன் தாய்'' என்றார்கள். அவர், "பிறகு யார்?'' என்றார். "உன் தாய்'' என்றார்கள். அவர், "பிறகு யார்?'' என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "பிறகு, உன் தந்தை'' என்றார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி (5971)

@G4ceTech

Iraivanidam kaiyendhungal Tamil 6 அடிமையாக இருக்கும் பெண்களுக்குக்கூட நல்லொழுக்கம் கற்றுக் கொடுத்து அந்த பெண்ணை அடிமைத்தனத்திலிருந்து விடுதலை செய்து, அவரையே திரும ணம் செய்து கொள்ளவும் இஸ்லாம் ஆர்வமூட்டி இவ்வாறு நடப்பவர்களுக்கு இரு மடங்கு கூலி உண்டு என்று சொன்னதிலிருந்து இஸ்லாம் பெண்களை எவ்வாறு மதித்துள்ளது என்பதை விளங்கலாம். சிறந்தவர் ஒரு மனிதரை நல்லவரா? கெட்டவரா? என்று எடைபோட இஸ்லாம் பெண்களையே அளவு கோலாக வைத்துள்ளது. தம் மனைவியிடம் நல்ல குணத்தில் நடந்து கொள்பவர்தான் ஆண்களிலேயே சிறந்தவர் என்று இஸ்லாம் கூறுகிறது. முஃமின்களில் முழுமையானவர் குணத்தால் அழகானவரே! உங்களில் சிறந்தவர் தம் மனைவியிடம் குணத்தால் சிறந்தவராக இருப்பவரே! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : திர்மிதி (1082)

@G4ceTech

Iraivedam mugaivan palakkam Tamil End பின்னர் பிரான்ஸிற்குச் சென்று 10 வருடங்களாக நவீன கண்டு பிடிப்புக்கள் அல்குர்ஆனுக்கு எவ்வளவு தூரம் உடன்படுகின்றன என்ற ஆய்வை மேற்கொண்டு ‘அல்குர்ஆன்இ தவ்ராத் இன்ஜீல்…. நவீன அறிவியலின் ஒளியில் புனித வேதங்கள் ஓர் ஆய்வு” எனும் நூலை வெளியிட்டார். இதைப்பார்த்த மேற்குலகு அதிர்ந்து போனது. குறுகிய காலத்துள் இப்புத்தகம் விற்றுத் தீர்ந்து போனமை குறிப்பிடத்தக்கதாகும். இன்றைக்கும் எகிப்து நூதன சாலைக்கு பல ஆய்வாளர்கள் வந்து செல்வதைக் காண்கின்றோம். இவர்களுள் மாரிஸ் புகைல் போன்று படிப்பினை பெற்றவர்களைக் காண்பதற்கில்லை என்றுதான் கூறமுடிகின்றது. எனவே அல்குர்ஆன் வெறும் விஞ்ஞான உண்மைகளை மாத்திரம் சொல்லவில்லை மனித சமூகத்துக்குத் தேவையான எத்தனையோ அரிய பல வழிகாட்டல்களை சொல்லித் தருகின்றது. இதையுணர்ந்து மனித சமூகம் அதைப்படிக்குமானால் இன்னும் பல மாரிஸ் புகைல்கள் உருவாகுவார்கள் என்பது திண்ணம் புகழ்ளுக்குரிய அர்ரஹ்மான் அல்ஹம்து லில்லாஹ்.

@G4ceTech

Iraivedam mugaivan palakkam Tamil 6 தொள்பொருள் ஆய்வாளர்கள் சத்திரசிகிச்சை நிபுணர்களென ஆரய்ச்சிக்குத் தேவையானவர்களனைவரும் ஆய்வகத்திலே குழுமியிருந்தனர். சத்திரசிகிச்சை குழுவுக்கு prof:Maurice Bucaille தலைமை தாங்கினார். பிர்அவ்ன் எப்படி மரணமடைந்தான் என்பது பற்றிய தகவல்களை கண்டுபிடிப்பதற்காக ஆய்வாளர்கள் பெரும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். இக்குழுவுக்குத் தலைமை வகித்த prof:Maurice அவர்களும் இப்பணியில் மூழ்கியிருந்தார். நல்லிரவு கழித்து ஆய்வு முடிவு வெளியாகியது. உடலில் உப்பு படிந்திருப்பதானது பிர்அவ்ன் கடலில் மூழ்கி மரணமடைந்துள்ளமைக்கான சிறந்த சான்றாகும் என்றும் கடலில் மூழ்கியவுடனே இவ்வுடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது என்றும் ஆய்வு முடிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

@G4ceTech

Iraivanidam kaiyendhungal Tamil 7 உலகத்தில் மிகச் சிறந்த பொருள் இவ்வுலுகில் பயனளிக்கும் செல்வங்களில் சிறந்தது நல்லொழுக்கமுள்ள பெண்ணவாள். மனிதன் சேமிக்கும் பொருள்களில் சிறந்த பொருளும் நல்லொழுக்கமுள்ள பெண்ணே ஆவாள். ஒரு மனிதன் சேமிக்கும் சொத்துக்களில் சிறந்த ஒன்றை அறிவிக் கட் டுமா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டு விட்டு அதுதான் நல்ல பெண் மணி என்று கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), நூல் :அபூதாவூத் (1417) இவ்வுலகம் (முழுவதும்) பயனளிக்கும் செல்வங்களே; பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது, நல்ல பெண்ணாவாள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி), நூல் : முஸ்லிம் (2911)

@G4ceTech

Iraivedam mugaivan palakkam Tamil 10 இருந்தாலும் மாரிஸ் அவர்களால் ஒரு நிமிடமேனும் தாமதிக்க முடியவில்லை. இது பற்றி அறிவதற்காக முஸ்லிம் அறிஞர்களைச் சந்தித்துக் கலந்துரையாடவென இஸ்லாமிய நாடுகளுக்குப் பயணமாகத் தொடங்கினார். அந்த சந்திப்பிலே அவர் முதலாவதாக வினவியது பிர்அவ்னின் உடல் கடலில் மூழ்கடிக்கப்பட்டபின் பாதுகாக்கப்படுவது பற்றித்தான். அப்போது சபையிலிருந்த ஒருவர் அல்குர்ஆனில் சூறா யூனுஸில் இடம் பெறும் ‘உனக்குப் பின் வருவோருக்கு நீ சான்றாக இருப்பதற்காக உன் உடலை இன்று பாதுகாப்போம். மனிதர்களில் அதிகமானோர் நமது சான்றுகளை அலட்சியம் செய்வோராகவே உள்ளனர்”. என்ற வசனத்தை ஓதிக் காண்பித்தார். இக்குர்ஆன் வசனம் மாரிஸ் புகைல் அவர்களின் உள்ளத்தையே உலுக்கியது. உடனே எழுந்து எல்லோருக்கும் முன்னால் சத்தத்தை உயர்த்தியவராக ‘நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன். அல் குர்ஆனை நம்பி விட்டேன்” என்று அவர் இஸ்லாத்தைத் தழுவினார்.

@G4ceTech

Iraivedam mugaivan palakkam Tamil 8 அப்பொழுது அங்கிருந்த இன்னொருவர் ‘பிர்அவ்ன் மூழ்கடிக்கப்பட்டதாகவும்இ மூழ்கடிக்கப்பட்ட பின் அவனின் உடல் பாதுகாக்கப்படுமெனவும் முஸ்லிம்களின் அல்குர்ஆனில் கூறப்படுகின்றதே” என்று கூறினார். இச்செய்தியைக் கேள்வியுற்ற மாரிஸ் புகைல் அவர்கள் மேலும் திடுக்கிட்டுப் போனார். ‘இது எப்படி சாத்தியமாகும்? இந்த மம்மியின் உடல் 1898ல்தான் கண்டுபிடிக்கப்பட்டது. முஸ்லிம்களின் அல்குர்ஆனோ 1400 ஆண்டுகளுக்கு முன்னரே அவர்களிடம் இருக்கின்றது. எகிப்தியப் பழங்குடி மக்கள் தமது மன்னர்கள் இறந்த பின் அவர்களின் சடலங்கள் கெட்டுவிடாமல் இருப்பதற்காக ஒரு வகை மருத்துவ முறையினைப் பயன்படுத்தியுள்ளார்கள் என்ற செய்தி சில தசாப்பதங்களுக்கு முன்னர்தான் அரேபியர் உட்பட அனைவருக்கும் தெரியவாகிற்று அதற்கு முன்னர் முஸ்லிம்களுக்கு இந்த மம்மி பற்றிய தகவல் தெரிவதற்கு வாய்பில்லாத போது இது எப்படி சாத்தியமாயிற்று?” என்று அங்கு கூடியிருந்தவர்களிடம் வினவ ஆரம்பித்தார்.

@G4ceTech

Iraivedam mugaivan palakkam Tamil 2 இந்தப் பெயரை இதற்கு முன் ஒருவருக்கும் சூட்டியதில்லை எனவும் கூறுகிறான். இந்தப் பெயரை இதற்கு முன் சூட்டியதில்லை என்று அன்றைக்கு எந்த மனிதனாலும் பேச முடியாது. ஒரு மனிதன் இப்படிச் சொல்வதாக இருந்தால் அவனுக்கு உலகில் உள்ள எல்லா மொழிகளும் தெரிந்திருக்க வேண்டும். அன்று வரை உலகில் பிறந்த, பிறந்து மரணித்த ஒவ்வொரு நபரின் பெயரும் அவனுக்குத் தெரிந்திருக்க வேண்டும். பல்லாயிரம் கோடி மக்களின் பெயர்களுக்குள் யஹ்யா என்ற பெயரில் ஒருவரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு அதன் பின்னர் தான் இப்படிக் கூற முடியும்.இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் கூட இப்படி ஒரு மனிதனால் சொல்ல முடியாது. இந்த விஷயம் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் ஜகரியா நபியிடம் இறைவன் சொன்னதாகக் கூறப்படுகிறது.

@G4ceTech

Iraivanidam kaiyendhungal Tamil 5 இருமடங்கு கூலி 1. வேதக்காரர்களில் ஒருவர் தமது (சமூகத்திற்கு நியமிக்கப்பட்ட) இறைத் தூதரையும் (இறுதித் தூதர்) முஹம்மதையும் நம்பிக்கை கொண்டார். 2. ஓர் அடிமை அல்லாஹ்வின் கடமைகளையும் தம் எஜமானரின் கடமைகளையும் நிறைவேற்றினான். 3. ஒருவரிடம் அடிமைப் பெண்ணொருத்தி இருந்து அவளுக்கு ஒழுக்கம் கற்பித்து, அதை செம்மையாகச் செய்து, அவளுக்கு கல்வி கற்பித்து, அதை யும் செம்மையாகச் செய்தார். பிறகு அவளை அடி மைத்தளையிருந்து விடு தலை செய்து அவளைத் தாமே மணந்தும் கொண்டவர். இம்மூவருக்கும் இரட்டை நன்மைகள் உண்டு என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூமூஸா (ரலி), நூல் :புகாரி (97)

@G4ceTech

Iraivedam mugaivan palakkam Tamil 5 பிர் அவ்னின் உடலும் பிரான்ஸ் நாட்டு ஆய்வாளரின் உறுதியான கருத்தும். 1981ல் பிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்குட்படுத்துவதற்காக தம்மிடம் ஒப்படைக்குமாறு பிரான்ஸ் அரசு எகிப்திடம் கோரிக்கை முன்வைத்தது. இவ்வேண்டுகோலுக்கினங்க பிர்அவ்னின் சடலம் விமானம் மூலமாக பிரான்ஸிற்குக் கொண்டு செல்லப்பட்டது. இவ்விமானத்தை வரவேற்பதற்காக பிரான்ஸின் அதிபரும் விமான நிலையத்தில் காத்திருந்தார். அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை அனைவரும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர். அரச வரவேற்பளிக்கப்பட்ட பின்னர் பிர்அவ்னின் உடல் ஆய்வகம் நோக்கிக் கொண்டு செல்லப்பட்டது.

@G4ceTech

Loan vangi veedu katta poringala Tamil 10 இல்லையென்றால் முதிர்வடைந்த தொகைக்கு 20% TDS பிடித்தம் செய்து விடுவார்கள். இப்போ சொல்லுங்க! கடன் வாங்கி வீடு வாங்கனா கிடைக்கிற பெனிபிட் பெட்டரா? இல்ல வங்கியில டெபாசிட் பண்றது பெட்டரா?? குறிப்பு: நான் வருமான வரி தணிக்கையாளன் அல்ல. இருந்தாலும் வங்கி அதிகாரிகள் மற்றும் வருமானவரித்துறை சார்ந்த நண்பர்கள் சிலரின் ஆலோசனைகளைப் பெற்று இந்த விவரங்களை அளித்துள்ளேன். இதில் தவறுகள் இருக்க வாய்ப்பிருக்கலாம். எங்கே தவறோ அதனை சம்மந்தப்பட்ட துறையைச் சார்ந்தவர்கள் திருத்தம் செய்தால் இந்தப் பதிவின் நோக்கம் முற்றுப் பெறும். வருமான வரி சம்மந்தமான பயனுள்ள தகவல்கள் தணிக்கை யாளர்கள் மற்றும் வருமான அலுவலத்தில் பணிபுரியும் அதிகாரிகள் இந்த பதிவின் பின்னூட்டமாக முன்வைக்கலாம்.. அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

@G4ceTech

Loan vangi veedu katta poringala Tamil 9 6. சரி கணக்கெல்லாம் கரெக்ட்டா போட்டுட்டீங்க!! இந்த வருமானத்துக்கெல்லாம வரி யாரு கட்றதுன்னு ஒரு கேள்வி எல்லாருக்குமே எழத்தான் செய்யும். அதுக்குத் தான் ஒவ்வொரு RD யும் முதிர்வடையும் போது 4,26,464 ரூபாயை விட்டுட்டு 15 இலட்சத்தை மட்டும் பிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. 7. TDS 10% என்று கணக்கில் கொண்டால் கூட அவ்வளவு தொகை வர வாய்ப்பில்லை. இன்னொன்று., இந்த டெபாசிட் செய்பவர் இன்கம்டாக்ஸ் assessee யாக இருக்க வேண்டும். RD முதிர்ந்த பின்னர் வரி பிடித்தம் செய்வதினால் fixed deposit ற்கு TDS கிடையாது. ஆனால்டெபாசிட்தாரர் கண்டிப்பாக தன்னு டைய பான்கார்டின் நகலை வங்கிக்குகொடுக்க வேண்டும். இன்னும் சொல்லப் போனால் இந்த RDக்கும் Form 15G or 15H பூர்த்தி செய்து கொடுத்தால் TDS பிடித்தம் இல்லாமல் போக வாய்ப்புண்டு.

@G4ceTech

Iraivanidam kaiyendhungal Tamil 4 அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : முஸ்லிம் (5126) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "யார் இரு பெண் குழந்தை களை, அவர்கள் பருவ வயதடையும்வரை பொறுப்பேற்று கருத்தாக வளர்க்கிறாரோ அவரும் நானும் மறுமை நாளில் இப்படி வருவோம்'' என்று கூறிவிட்டு, தம் விரல்களை இணைத்துக் காட்டினார்கள். அறிவிப்பவர் : அனஸ் (ரலி), நூல் : முஸ்லிம் (5127) பெண் குழந்தைகளை வெறுத்து, உயிருடன் புதைத்த காலத்தில் அவர்களை நல்ல முறையில் பாரமரித்தாலோ சொர்க்கம் உண்டு என்று இஸ்லாம் கூறு கிறது என்றால் பெண்களுக்கு இஸ்லாம் எவ்வளவு மதிப்பும் மரியாதையும் கொடுத் துள்ளது என்பதை அறியலாம்.

@G4ceTech

Iraivanidam kaiyendhungal Tamil பெண்ணினத்திற்கு சிறப்பு சேர்த்த இஸ்லாம் இவ்வுலுகத்தில் எந்த மதமும் பெண்களுக்கு கொடுக்காத சிறப் பையும் கண்ணியத்தையும் இஸ்லாமிய மார்க்கம் கொடுத் துள்ளது. பெண்கள் இந்நாட்டின் கண்கள், என்றும் ஓர் ஆணுடைய வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பாள் என்றும் ஏட்டளவில் சொல்பவர்கள் இதைப்போன்றே அடுப்பூதும் பெண்க ளுக்கு படிப்பெதற்கு? என்றும் பெண் புத்தி பின்புத்தி என்றும் சொல்லி வைத்துள்ளனர். ஆனால் இதுபோன்று பெண்களை மட்டம் தட்டாமல் பெண்களை மிகச் சிறந்தவர்களாக இஸ்லாம் மதித்து வைத்துள்ளதோடு அவர்களை அவ்வாறு மதிக்குமாறும் கட்டளையிட்டுள்ளது.

@G4ceTech

Iraivanidam kaiyendhungal Tamil 2 நற்செய்தி பெண்களை இழி பிறவிகளாகவும் பெண்களை போகப் பொருளாகவும் மட்டும் பயன்படுத்தி வந்த காலகட்டத்தில் பெண்களை உயிருடன் புதைக்க வும் செய்த கொடுமை நடந்தபோது பெண்களின் பிறப்பு ஓர் நற்செய்தி என்றும் அவர்களை உயிருடன் புதைப்பது மோசமான காரியம் என்றும் இஸ்லாம் கண்டித்தது. அவர்களில் ஒருவனுக்குப் பெண் குழந்தை பற்றி நற்செய்தி கூறப் பட்டால் அவனது முகம் கருத்து, கவலைப்பட்டவனாக ஆகி விடுகிறான். அவனுக்குக் கூறப்பட்ட கெட்ட(தெனக் கருதிய) செய்தியினால் சமுதாயத்தி லிருந்து மறைந்து கொள்கிறான். இழிவுடன் இதை வைத்துக் கொள்வதா? அல்லது மண்ணில் இதை (உயிருடன்) புதைப்பதா? (என்று எண்ணுகிறான்) கவனத்தில் கொள்க! அவர்கள் தீர்ப்பளிப்பது மிகவும் கெட்டது.