Iraivedam mugaivan palakkam Tamil 2
இந்தப் பெயரை இதற்கு முன் ஒருவருக்கும் சூட்டியதில்லை எனவும் கூறுகிறான். இந்தப் பெயரை இதற்கு முன் சூட்டியதில்லை என்று அன்றைக்கு எந்த மனிதனாலும் பேச முடியாது. ஒரு மனிதன் இப்படிச் சொல்வதாக இருந்தால் அவனுக்கு உலகில் உள்ள எல்லா மொழிகளும் தெரிந்திருக்க வேண்டும். அன்று வரை உலகில் பிறந்த, பிறந்து மரணித்த ஒவ்வொரு நபரின் பெயரும் அவனுக்குத் தெரிந்திருக்க வேண்டும். பல்லாயிரம் கோடி மக்களின் பெயர்களுக்குள் யஹ்யா என்ற பெயரில் ஒருவரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு அதன் பின்னர் தான் இப்படிக் கூற முடியும்.இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் கூட இப்படி ஒரு மனிதனால் சொல்ல முடியாது. இந்த விஷயம் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் ஜகரியா நபியிடம் இறைவன் சொன்னதாகக் கூறப்படுகிறது.
1 comment
இச்செய்தியைக் கேள்வியுற்ற மாரிஸ் புகைல் அவர்கள் மேலும் திடுக்கிட்டுப் போனார்