Kuran enpatharkana sariyana sandru Tamil 3
இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் கூட இப்படி ஒரு மனிதனால் சொல்ல முடியாது. இந்த விஷயம் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் ஜகரியா நபியிடம் இறைவன் சொன்னதாகக் கூறப்படுகிறது. யஹ்யா என்ற பெயரில் இதற்கு முன் ஒருவரும் இல்லை என்று சொன்ன பிறகு உலகில் ஏதாவது ஒரு காலத்தில் பழங்கால ஏடுகளில் யஹ்யா என்ற பெயரில் ஒருவர் இருந்து விட்டால் இறைவசனம் பொய்யாகி விடும். ஸக்கரியா நபியிடம் அல்லாஹ் இப்படிச் சொன்னதாக முஹம்மது நபி சுயமாகக் கற்பனை செய்து சொல்லியிருக்க முடியாது. அப்படிச் சுயமாகச் சொல்ல நினைத்தால் எங்காவது யஹ்யா என்ற பெயரில் ஒருவர் இருந்து விட்டால் என்னாவது என்ற தயக்கமே இது போல் பேசுவதை விட்டும் அவரைத் தடுத்து இருக்கும்.
No comments yet