Iraivanidam kaiyendhungal Tamil 11
மீண்டும் (தம் துணைவியார்) கதீஜா (ரலி) அவர்களிடம் திரும்பிவந்து அதைப் போன்று (பல நாள்களுக்கு வேண்டிய) உணவைத் தம்முடன் பெற்றுச் செல்வார்கள். இந்நிலை "ஹிரா' குகையில் அவர்களுக்கு சத்திய (வேத)ம் வரும்வரை நீடித்தது. (ஒருநாள்) அந்த வான வர் (ஜிப்ரீல்) நபி அவர்களிடம் வந்து, "ஓதுவீராக'' என்றார். நபி (ஸல்) அவர்கள், "நான் ஓதத் தெரிந்தவனில்லையே!'' என்று சொன்னார்கள் (பின்பு நடந்தவற்றை) நபி (ஸல்) அவர்கள் (பின்வருமாறு எடுத்துக்) கூறினார்கள்: வானவர் (ஜிப்ரீல்) என்னைப் பிடித்து நான் திணறும் அளவிற்கு இறுகக் கட்டியணைத்தார். பிறகு என்னை விட்டுவிட்டு "ஓதுவீராக'' என்றார். அப் போதும் "நான் ஓதத் தெரிந்தவனில்லையே!'' என்றேன். உடனே அவர் என் னைப் பிடித்து நான் திணறும் அளவிற்கு இறுகக் கட்டியணைத்தார். பிறகு என்னை விட்டுவிட்டு "ஓதுவீராக!'' என்றார்.
No comments yet