Kuran enpatharkana sariyana sandru Tamil 5
இப்படி ஒரு பெயர் சூட்டப்பட்டவரை இதற்கு முன் நீங்கள் காண முடியாது என்று அறைகூவல் விடுவது போல் இப்படி இறைவன் பேசியுள்ளான். முழு உலகிலும் எந்தக் காலத்திலும் இது இருந்ததில்லை; அது இருந்ததில்லை என்று சொல்வது மிகவும் கடினமான விஷயமாகும். ஏனெனில் நமக்குத் தெரியாமல் எங்காவது அது இருந்து தொலைத்து விட்டால் நம்முடைய மானம் கப்பலேறி விடும். கடவுளால் மட்டும் தான் இதுபோல் அடித்துச் சொல்லி இருக்க முடியும். இவ்வசனத்தைப் பொய்யாக்க யஹ்யா என்ற பெயரில் யாராவது இருந்தால் அதை வைத்தே இஸ்லாத்தைப் பொய்யாக்கி விடலாம் என்று கங்கணம் கட்டி கிறித்தவ சபைகள் தேடிப்பார்த்தும் அவர்களால் யஹ்யாவைக் கண்டுபிடிக்கவில்லை.
No comments yet