read.cash Log in
@G4ceTech

Iraivanidam kaiyendhungal Tamil 10

நபிகளாரை இறைத்தூதராக பிரகடனப்படுத்தும் திருமறைக்குர்ஆன் வசனங் கள் இறங்கியபோது பயந்து, தனக்கு ஏதும் நிகழந்து விடுமோ என்று பயந்த நபிகளாரை அவர்களின் மனைவி கதீஜா (ரலி) அவர்கள்தான் ஆறுதல் கூறி அவர்களின் ஐயத்தைப் போக்கி தேற்றினார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு ஆரம்பமாக வந்த வேத அறிவிப்பு (வஹீ) தூக் கத்தில் கண்ட உண்மைக் கனவுகளாகவே இருந்தது. அப்போது அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அது அதிகாலைப் பொழுதின் விடியலைப் போன்று (தெளிவாகவே) இருக்கும். பின்னர் தனிமையிலிருப்பது அவர்க ளின் விருப்பமாயிற்று. (எனவே) அவர்கள் "ஹிரா' குகையில் தனித்திருந்து தம் வீட்டாரிடம் திரும்பி வருவதற்கு முன் பல இரவுகள் வணக்க வழிபாடுக ளில் ஈடுபட்டு வந்தார்கள். அதற்காக (பல நாள்களுக்கு வேண்டிய) உண வைத் தம்முடன் கொண்டு செல்வார்கள்.

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.