read.cash Log in

@KingTamil

Joined 7 May 2020 · 101 posts

120 KT

0 KT · $3.44 received · 0 KT · $1.63 given

Posts

@KingTamil

Yavano Devi Yashotharan "Empire" என்ற ஆங்கில புத்தகத்தின் மொழிபெயர்ப்பு தான் இந்த யவனி. இந்த புத்தகத்தைப் பல தடவை நூலகத்தில் பார்த்திருக்கிறேன் ஆனால் கடந்த வாரம் தான் எடுத்தேன். இந்த புது வருடத்தில் நான் வாசித்த முதல் புத்தகம். வரலாற்று நாவல் என்றாலே ஒருவிதமான tension அடுத்து என்ன நடக்குமோ என்று. இது ராஜேந்திர சோழர் காலத்து கதை. அடிமைப் யவன பெண்ணான அரெமிஸ் பயிற்சிகளுக்குப் பிறகு மன்னனின் தற்காப்பு வீராங்கனயாக நியமிக்கப் படுகிறாள். அவளை அனைவரும் யவனி என்று அழைக்கின்றனர். எவருமே அவளை மதிப்பதில்லை. அவளும் தனக்கு தோன்றியதை விளைவை யோசிக்காமல்  செய்கிறாள். மன்னன் கூறும் அனைத்தையம் செய்து முடிக்கிறாள். ஔவை என்று அழைக்கப்பட்ட சோழ சேனாதிபதி அனந்தன் தான் யவனியை சிறைபிடித்து வந்தவன்.மன்னருக்கு நெருக்கமானவர் .அவருக்கு மனைவியும் குழந்தைகளும் இருந்தாலும் மந்தாகினி என்ற ஆசைநாயகி உண்டு. அவர் அவளோடுதான் இரவுகளை செலவழித்தார். மந்தாகினி போதையினால் இறந்து போகிறாள். யார் போதை பொருட்களை நாட்டுக்குள் விற்பது என்று தெரிந்து வரும்படி யவனியிடம் கூறுகிறன். அதிலிருந்து கதை அப்படியே மாறுகிறது. இறந்தவர் என்று நினைத்த அரசியார் மீண்டும் வருகிறார் . அவர்  உண்மையான அரசிதானா? ஏன் சீன அரசர் சோழ அரசர் எழுதிய கடிதங்களுக்கு சரியான பதில் எழுதவில்லை? அனைத்து வரலாற்று புதினங்களில் வரும் அதே மாதிரியான துரோகங்கள் இக்கதையிலும் உண்டு.ஆனால் இக்கதையில் பிரதான கதாப்பாத்திரம் வேறு நாட்டவர். அதுவும் ஒரு பெண் .இந்நாவலின் கதை சொல்லிகள் அரெமிசும் அனந்தனும் தான். அவர்கள் இருவரின் பார்வையில்தான் அனைத்தும் விரிகிறது.யவனிக்கு சோழர்களின்  பழக்கவழக்கங்கள் குழப்பமாக இருக்கிறது ஆனால் அவளுக்கு ஒன்று மட்டும் புரிந்தது சாதிய அடுக்குகளை மீறி ஏதும் நாடாக்கதென்று அரசரே ஆனாலும் . நாகபட்டினத்தின் கட்டமைப்பே அப்படித்தான். சோழர்களை பற்றிய வரலாற்று குறிப்புக்கள் பிரம்மிப்பை ஏற்படுத்துகிறது.நாம் பெரும்பாலும் ராஜ ராஜா சோழனை பற்றித்தான் படித்திருப்போம் ஆனால் அவரது மகனான ராஜேந்திர சோழ பூபதி தந்தையை மிஞ்சும் அளவுக்கு ஆட்சி செய்திருக்கிறார்.இக்கதையில் அவரின் கடல் படையின் வெற்றிகளைப் பற்றிய குறிப்புகள்  பல இடங்களில் வருகிறது. இவர்தான் சோழ பேரரசின் கடல் வணிகத்தை உலகம் வியக்கும் வண்ணம் உயர்த்தியவர். நான் ஒரு உணவு பிரியன்.இந்த புத்தகத்தில் உணவு பற்றி பல இடங்களில் வருகிறது. ஆப்பம் ,நெய்யில் வறுத்த வாழைப் பழம், ஆடு  மற்றும் பல உணவு வகைகள் எச்சில் வரும் அளவுக்கு சித்தரிக்கப்பட்டுள்ளது.அந்த காலத்து ஆப்பம் எப்படி இருந்திருக்கும் என்ற கேள்வி இன்னும் எனது மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது.இந்த நாவலை எழுதிய தேவி யசோதரன் இன்போசிஸில் வேலை பார்த்தவர். சோழர்கள் வரலாற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.அந்த ஈடுபாட்டின் வெளிச்சம்தான் இந்த நாவல். வாசிக்கலாம்.

@KingTamil

Thurueriya Irumbugal Tamil Interesting Story Part - 2 **அத்தியாயம் 8** வானில் இருந்த நட்சத்திரங்களை வைத்த கண் வாங்காமல் பார்த்தபடியே நின்றாள். “சொல்லுங்க?? நந்தினி யாரு அந்த ஈசன்.“ “ஈசன் தான் எல்லாமே ஈசன் தான் என்னோட உயிர் ஈசன் தான் எனக்கு?“ போதும் இந்த வார்த்தைகள் மட்டும் போதும் அவனுக்கு எல்லாமே புரிந்து விட்டது. அவன் தலையில் கூர்மையான ஆணியை அடித்து அடித்து இறக்கியது போலவே இருந்தது. “எல்லாமேனா? உங்க கணவரா கல்யாணம் ஆகலன்னு சொன்னிங்களே?“ மதன் நந்தினியிடம் மெல்ல பேச்சு கொடுத்து அவளை பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும் என்று நிறைய நாட்கள் முயற்சி செய்து ஒரு நாள் அதை கேட்டே விட்டான். அன்று தனநந்நினி மதிய உணவு மெனு ரெடி செய்து கொண்டிருந்தாள். காளான் பிரியாணி, எக் கஸ்டர்ட் டார்ட்ஸ்,கிளாசிக் சாக்லேட் மோஷஸ் செய்து கொண்டிருந்தாள். அவள் வந்ததில் இருந்தே ஒரு பங்கு கூட்டம் அதிகமாக தான் வருகிறது. இவர்கள் எப்போதும் பீட்சா,பர்கர் செய்து போர் அடித்து கொண்டிருந்தார்கள். தனா விதவிதமாக மெனு தயார் செய்கிறாள். இன்று செய்த மெனு கண்டிப்பாக இன்னோரு நாள் ரிப்பிட் செய்வது இல்லை தினம் தினம் புதுசு கண்ணா புதுசு போல தான். மதன் தனா செய்த பிரியாணியை டேஸ்ட் செய்து “வா..வாரே..வா.. இப்படி சமைச்சா அண்டா பிரியாணி எனக்கே பத்தாது போலவே“, நந்தினியின் சமையலை எப்போதுமே பாராட்டமாட்டான் மதன். அன்று அவன் பாராட்டி பேசினான், காரணம் அவளை பற்றி தெரிந்துக்கொள்ளவே ஆனால் நிஜமாகவே காளான் பிரியாணி அற்புதமாக தான் இருந்தது. “நீங்க லவ் மூவியெல்லாம் பார்ப்பிங்களா தனா? கடைசியா என்ன படம் பார்த்திங்க?” “மிட் நைட் சன் ஹாலிவுட் மூவி“ “ஓ..அது லவ் மூவியா, யாரோட பார்த்திங்க??“ “ஆமாம், என்னோட பிரண்டுகூட..“ “நீங்க ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கவே இல்ல தனா??“ சிறிது நேர அமைதி “நீங்க ஏன் இன்னும் பண்ணிக்கவே இல்ல மதன்.“ “தப்பு தான்மா நான் கேட்டேன் பாரு?“ இருவருக்கும் நடந்த உரையாடலின் போது நேவிதன் அங்கு தான் கொஞ்சம் தள்ளி இருந்தான். பல்லி ஒன்று சுவற்றில் இருந்து டுக்..டுக்.. கத்தியது. அது உணவுக்கா, இல்லை அதன் இன்னொரு துணைக்கா அந்த சத்தம் மீண்டும் நேவிதனை நிகழ்காலத்திற்கு வரவைத்தது. தனா அதே இடத்தில் இப்போது இவனை பார்த்தபடி நின்றுக்கொண்டிருந்தாள். “அப்போ அந்த படம் ஈசன் கூட தான் பார்த்திருப்பாலோ.“ இவனுக்கு இந்த சந்தேகம் வேறு. நந்தினி தொடர்ந்தாள். திருச்சி அன்று நடுஇரவு ஒரு மணி இருக்கும். தனா ஹாஸ்டலில் இருந்த ஜன்னல் அருகே அமர்ந்து ஏதோ புத்தகத்தை பிரட்டிக்கொண்டிருந்தாள். அப்போது அந்த ஜன்னலுக்கு வெளியில் சாலையில் இளைஞன் ஒருவன் பைக்கை சைடு ஸ்டாண்டு போட்டு அதில் சாய்ந்தபடி நின்று கொண்டிருந்தான். நீண்ட நேரம் அவன் நிற்பதை தனா பார்த்துக்கொண்டிருந்தாள். யார் இவன்?? ரொம்ப நேரமாக நின்றுக்கொண்டிருக்கிறானே. அப்போது தனது ஹாஸ்டலில் இருந்து யாரே ஒரு பெண் செல்ல, ஆகா இது அந்த கீழ் அறையில் உள்ள நான்காவது ரூமில் இருக்கும் ஜாஸ்மீன் தானே. இவள் நன்றாக படிக்கிறவள் ஆச்சே இவள் இந்த நேரத்தில் எங்கு போகிறாள் இப்போது தனா எழுந்து நின்று உற்று உற்று பார்த்தாள். அவளே தான் என்று சரியாக முடிவு செய்துக்கொண்டாள். அந்த இளைஞனையும் உற்று பார்த்துக்கொண்டாள். இருவரும் பைக்கில் ஏறி பறந்தார்கள். மறுநாள் காலை ஹாஸ்டலே அல்லோகல பட்டது. தனாவிற்கு புரிந்துவிட்டது. ஜாஸ்மீன் தான் காரணம் என்று. அவள் அருகில் வாயைபிளந்து கொண்டு நின்ற தன் தோழி சரண்யாவிடம் “ஜாஸ்மீன் நேத்து ராத்திரி ஒரு பையன்கூட போனாடி நான் பார்த்தேன்.“ “நீ வாய மூடு. கடைசி வருஷம் ஒழுங்கா முடிச்சிட்டு போ இப்போ போய் இப்படியே சொல்லு. அவங்க வீட்டுல இருந்து ஆளுங்க வந்துக்கிட்டு இருக்காங்க. அவங்க கண்டுபிடிச்சிக்கட்டும் நீ பேசம இரு.“ எதற்கு வம்பு இவள் சொல்லுவது சரிதான் நமக்கு ஸ்பான்சர் கொடுப்பவர் யாரோ இந்த நேரத்தில் இப்படி நாம் பிரச்சனைல மாட்டி ஏன்? ஸ்பான்சர் கிடைக்காமல் போனால் என்ன செய்வது என்று நினைத்து, தனா தன்னையே அமைதிப்படுத்திக்கொண்டாள். ஒருவாரம் கழிந்தது. படிப்பு ஒரு பக்கம் அது முடிந்ததும் சிலமணி நேரங்கள் ரெஸ்டாரண்டில் பகுதிநேரமாக வேலைப்பார்த்து கொண்டிருந்தாள் தனநந்தினி. “தனா ஒரு தோசை அன்ட் பில்டர் காஃபி“ ஆர்டர் கொடுத்தார் சர்வர் சண்முகம். ரெடி செய்து பிளேடிங் செய்தாள் அது ஒரு சின்ன ஒபன் குக் ரெஸ்டாரண்டு. அப்போது எதார்த்தமாக அவனை பார்த்தாள் தனா. “அவனே தான் இவன் மட்டும் இருக்கான் ஜாஸ்மீன காணும் ஏதும் செஞ்சிட்டானோ?“ சண்முகம் ஆர்டரை வாங்க வந்தார் “அண்ணா நான் கொடுக்குறேன் அந்த புளூ சர்ட் தானே” “ஆமாம் தனா“ ஆர்டரை எடுத்துக்கொண்டு அந்த டேபிள் அருகே சென்றாள். அந்த வாலிபன் குனிந்து மெனுக்கார்டை ஆராய்ந்து கொண்டிருந்தான். “உங்க ஆர்டர் சார்..“டேபிள் மீது வைத்தாள். “தேங்யூ“ சப்ளே செய்துவிட்டும் அவள் நகராமல் நின்றதை பார்த்தவன். தலையை தூக்கினான். எதிரே நின்ற பெண் பிம்பம் யார் இவள்?? உடலுக்கு ஏற்ற எடை, எடைக்கு ஏற்ற உயரம் இவளா சர்வர் நம்பவே முடியவே இல்லையே நம்மிடம் முதலில் ஆர்டர் எடுத்ததும் இவளா? எத்தனை லட்சனத்தில் நான் கவனிக்கிறேன். ஆனால் ஏன் இவள் நம் அருகே நிற்கிறாள். அவன் யோசனையை தூண்டிவிட்டான். அதற்குள் அவள் எதிரே இருந்த இன்னொரு இருக்கையில் அமர்ந்தாள். “யார்னு யோசிக்கிறிங்களா??“ “ஆமாம்..யார் இந்த அழகான பெண்? அதுவும் என் அருகே இத்தனை உரிமையாய் என்று யோசித்தேன்.“ சரியான வழிஞ்சலா இருக்குமோ?? இழுத்துக்கிட்டு போனது பாத்தாது போல பேசிப்பேசியே என்னையும் இழுத்துக்கிட்டு போயிடுவான் போலயே? “என்ன மேடம் யோசனை?“ “ஜாஸ்மீன் எப்படி இருக்கா?“ “ஜாஸ்மீன் நல்லா இருக்காங்க? உங்க ப்ரண்டா?“ “இல்ல ஜெஸ்ட் காலேஜ் மேட் அவ்வளவு தான்.“ “காலேஜ் மேட்டையே இப்படி விசாரிக்கிறிங்க? அன்னைக்கு ஜன்னல்கிட்ட உட்கார்ந்து புத்தகத்தை பிரட்டுன உருவம் நீங்க தானா?“ அடப்பாவி இவன் நம்பளை எப்படி கவனிச்சிருக்கான். அப்போ நம்ம பார்த்தத பார்த்திருக்கான் அதான் அதிர்ச்சிக்காட்டாம ஜாஸ்மீன் பத்திக்கேட்டதும் கூலா பதில் சொல்றானா? “நீங்க என்ன பார்த்திங்களா?“ “இல்ல மேடம்? அந்த மங்களான ஒளி, மெல்ல காற்று, ஜன்னல்கிட்ட மட்டும் ரொம்ப வெளிச்சமா இருந்தது. கண்டிப்பா ஒரு பெண்ணா தான் இருக்கனும் அதுவும் அழகான பெண்ணா தான் இருக்கனும்னு நினைச்சேன் ஆனா இவ்வளவு அழக எதிர்பார்க்கல?“ “நீங்க சாப்பிடுங்க நான் கிளம்புறேன்.“ “ஸாரி மேடம் உட்காருங்க? நான் சும்மா தான் விளையாட்டா? கோபப்படாதிங்க? நான் உங்கள பார்க்கவே இல்ல, சும்மா கெஸ்ல அடிச்சேன். நீங்க ஜாஸ்மீன கேட்டதும் கண்டிப்பா எங்கள அந்த நாள்ல பார்த்திருக்கிங்கன்னு புரிஞ்சிகிட்டு நானா தான் கோர்வையா சொன்னேன்.“ “அது சரி.. சத்தியமா நீங்க பார்க்கவே இல்லை?“ “இது என்ன சின்ன பிள்ளை தனம் சத்தியம்..சாமி சத்தியம் போதுமா?“ இப்போது தனா அவனை கவனித்தாள். நெருக்க நெற்றியை மூடிய கேசம், பட்டையான உதடுகளை தொட்ட மீசை, நல்ல கலர், உயரம் அழகாக தான் இருக்கிறான். “ஜாஸ்மீன்..“ “ஜாஸ்மீனும் நானும் ஓடி போயிட்டோம்னு முடிவு பண்ணிட்டிங்களா? நீங்க நினைக்கிற மாதிரியெல்லாம் கிடையாது. அவங்க என்னோட பெஸ்ட் ப்ரண்ட் இரண்டு வருஷமா ப்ரண்டா இருக்கோம். அவங்களுக்கு வீட்டுல கல்யாண ஏற்பாடு பண்ணிருக்காங்க அவங்க அத்தை பையனையே, அவன் சரியான டிரக் அடிக்ட்டாம். அவங்களுக்கு கல்யாணம் பிடிக்கல என்கிட்ட உதவி கேட்டாங்க தன்னை மெட்ராஸ் பஸ் ஏத்திவிடும் படியாகவும் அங்க அவங்க ப்ரண்டு இருக்காங்கன்னு அங்க போய் அவங்க செட்டில் ஆகுறதாகவும். பஸ்ட் நான் நம்பல அப்பறம் கொஞ்சம் விசாரிச்சி உண்மைய தெரிஞ்சிக்கிட்டன். உங்க ஹாஸ்டல்ல அவங்கள கண்கானிக்க ஆட்கள் நிறைய போட்டுருந்தாங்க, அதான் அந்த மிட்நைட் பிளான். அவங்கள மெட்ராஸ் அனுப்பி வச்சிட்டேன் எனக்கு தெரிஞ்ச இடத்துல வேலையும் வாங்கி கொடுத்துட்டேன்.“ மூச்சுகூட விடமால் பத்து நிமிஷத்தில் அத்தனையும் சொல்லிமுடித்தான். இவள் பே என்று வாயை பிளந்து உட்காந்திருந்தாள். இவன் சொல்வது உண்மையா?? இல்லை கதைவிடுகிறானா?? “இப்போ கூட நான் சொல்றது உண்மையான்னு தானே யோசிக்கிறிங்க?? வெயிட்“ ஒரு நிமிடம் தன் கைப்பேசியை எடுத்து அந்த தொடுதிரையை நகர்த்தி எதோ நம்பர் தேடிக்கொண்டிருந்தான். ஏதோ புதையலை கண்டுபிடித்தவன் போல அவன் கண்கள் சிரித்தது. இப்போது நம்பரை டயல் செய்து தனாவிடம் நீட்டினான்.

@KingTamil

Panai Vidili C.Ganesan இந்த புத்தகத்தின் பெயரையோ அல்லது எழுத்தாளரின் பெயரையோ இதற்கு முன் நான் கேள்விப்பட்டதில்லை. விடிலி என்பதற்கு என்ன அர்த்தமென்று எனக்கு தெரியாது. நூலகத்தில் இருந்து எடுத்து வந்தவுடன் படிக்க ஆரம்பித்தேன். என்னை கணேசன் மற்றொரு உலகத்திற்கே கொண்டு சென்றுவிட்டார். வசித்து முடியும் வரை  எதோ இனம்புரியாத மகிழ்ச்சி. பாதி படித்தவுடன் அப்பாவிடம் "விடிலி " என்றால் என்ன என்று கேட்டேன். அப்பா அதற்கு பதநீர் காய்ச்சும் பனை குடிசை என்றார். எங்களின் பூர்விகம் கன்னிராசபுரம் அங்கு எங்கு பார்த்தாலும் பனை மரங்கள்தான் சிறு வயதில் பார்த்த ஞாபகம்.இந்த நாவல் நாடார் சமூகத்தின் வளர்ச்சியைப் பற்றியது. ஒரு குடும்பத்தின் கதை சிறுவனின் பார்வையில் விரிகிறது. அவன் பள்ளியில் சேர்வதிலிருந்து தொடங்குகிறது.அவன் எல்லோருக்கும் பிடித்தவனாகிறான். ஆசிரியர் மாணவன் உறவை மிக நேர்மையாக பதிவு செய்துள்ளார் ஆசிரியர். அவனின் முதல் நண்பர்கள்,முதல் மரணம் ,முதல் தொழில் ,முதல் காதல் என அனைத்தையும் nostalgic உணர்வோடு சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.சாதிய வேறுபாடுகளும் கட்டுப்பாடுகளும் அவனின் அனைத்திலும் வெளிப்படுகிறது. அவன் வளர வளர அவன் குடும்பமும் செழிப்படைகிறது. அதற்கு அவர்களின் கடின உழைப்புதான் முக்கிய காரணம். எந்த தொழிலாக இருந்தாலும் அதை  ஆர்வமுடன் செய்தார்கள்.இவன் மட்டுமே அந்த குடும்பத்தில் படிக்கிறான். ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு கவிதையோடு தொடங்குகிறது. அதுவே அந்த அத்தியாயத்தின் போக்கை முடிவு செய்கிறது. 1940 ,1950 காலகட்டத்தைக்  கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் ஆசிரியர். கதைசொல்லியின் குடும்பம் திருச்செந்தூர் செல்லும் பகுதியின் விவரிப்பு அற்புதம். நாமும்  அவர்களோடு பயணிக்கிறோம். நான் ரசித்து வாசித்த புத்தகம் .

@KingTamil

If Cats Disappeared From The World - Genki Kawamura சில திரைப்படங்களை "feel good movie"-னு சொல்வோம். அந்த மாதிரி இந்த புத்தகம்ஒரு "feel good" வாசிப்பு. ஆனால் நம்மை பெரிதும் சிந்திக்க வைக்கிறது. ஒரு இளம் தபால்காரர் தனக்கு மூளை கேன்சர் இருக்கிறது என்று தெரிந்து கொள்கிறார்.இன்னும் சில நாட்களே உள்ளன அதனால் தான் விருப்புவதை செய்யாலாம் என்று எண்ணி ஒரு பட்டியலை(bucket list) போடுகிறார். திடீரென்று அவனை போலவே உருவமுள்ள ஒரு பேய் தோன்றுகிறது. அது அவனிடம் பேரம் பேசுகிறது அதாவது தான் அவனுக்கு இருக்கும் வாழ் நாட்களில் மேலும் ஒரு நாள் தருவதாகவும் அதற்கு அவன் பேய் ஏதாவது ஒன்றை மறைய ஒப்புக் கொள்ளவேண்டும் என்கிறது. ஒவ்வொரு முறை மறையவைக்கும் போது ஒரு நாள் கூடும்.அவனுக்கு அது என்றும் பெரிதாக தெரியவில்லை அதனால் சம்மதிக்கிறான். அந்த பேயை அலோஹா என்று அழைக்கிறான். Like love, life is beautiful because it has to end. முதலில் உலகளிலுள்ள அனைத்து தொலைபேசிகளும் மறைய வைக்கப் போவதாக சொல்லி அதற்கு முன் யாருக்காவது ஒரு தடவை அழைத்துக் கொள்ளலாம் என்கிறது அலோஹா. அவன் அவனது முன்னாள் காதலியை அழைக்கிறான்.அவர்கள் அவர்களின் உறவைப் பற்றி பேசிக் கொள்கிறார்கள். அவர்கள் ஏன் பிரிந்தார்கள் என்பதற்கு அவர்கள் இருவரும் முக்கியமான நேரத்தில் பேசிக்கொள்ளவில்லை என்பதுதான். ஆனால் அவன் அதை இப்போது தான் உணர்கிறான். `With freedom comes uncertainty, insecurity, and anxiety. Human beings exchanged their freedom for the sense of security that comes from living by set rules and routines—despite knowing that they pay the cost of these rules and regulations with their freedom.`

@KingTamil

Ninaikatha Neramillai Tamil Part-3 **டீஸர்-2** மீ ட் டிங்கில் பிஸி யாக இருந்த பிரகாஷ் வீட்டு லேண்ட் லைனில் இருந்து வந்த கால் பார்த்து யோசனையோடு எடுத்தான். **தம்பி நான் தான் கங்கா பேசறேன்**? சொல்லுங்க கங்காம்மா . என்னாச்சு? ஏன் இவ்ளோ பதட்டமா பேசறீங்க? ஏதாவது பிரச்சனையா? தம்பி காலைல இருந்தே பாப்பா ஒன்னும் சாப்படல. பசிக்கலைனு சொல்லிச்சு. திருப்பி கூப்பிடிலாம்னு பார்த்தா பாப்பா தூங்கிட்டு இருந்துச்சு சரினு நான் வந்துட் டேன். திடீர்னு பாப்பா பயங்கரமா கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணி அழுக ஆரம்பிச்சுட்டு. எனக்கு ரொம்ப பயமா இருக்கு தம்பி என்றார் பதட்டத்துடன். சரி கங்கமா நான் உடனே வர்றேன் கங்கமா என்றவன் அடுத்த பதினைந்து நிமிடத்தில் அவன் அறையில் இருந்தான். குட்டி மா என ஓடி சென்று அவளை அணைத்து கொண்டான். வேண்டாம். பயமா இருக்கு கிட்ட வராதீங்க எனக்கு ரொம்ப பயமா இருக்கு என கதறி அழுதாள் அவனின் அன்பு மனைவி மகிழ்வதனி. பிரகாஷின் இதயம் இரண்டாக பிளப்பது போல் இருந்தது. அவன் மனம் பரிதவித்தது. கடவுளே நவீன் கிட்ட என்னனு கேட்பது? அவன் தாங்க முடியாத அழகு ஏதாவது சொல்லிட்டானா என்ன பண்றது? என்ன கஷ்டம் பெண்ணே உனக்கு நான் இல்லாத நேரத்துல என்ன நடந்தது. என்னதான் நடந்தது தொலைத்தது தெரியலையே? இதுக்கு மேல முடியாது தலை வெடித்துவிடும் உணர்வுடன் நிமிர்ந்து பிரகாஷ் நவீன் என்ன நடந்துச்சு? ஏன் இப்படி சொன்ன மகிழ்க்கு என்ன ஆச்சு? அவளுக்கு என்ன பிரச்சனை சொல்லுடா? சொல்லு என்றான் பிரகாஷ்? தெரிஞ்சு என்ன பண்ண போற? என்றான் நவீன் கோபத்துடன். நான் என்னமோ பண்றேன் அதை பத்தி உனக்கு என்ன முதல்ல என்ன நடந்துச்சுன்னு சொல்லி தொலை என்ற பிரகாஷின் குரல் நடுங்க தொடங்கியது. நீ ஊருக்கு கிளம்புவதற்கு முன்னாடி மகிழ் உன்னை பார்த்துட்டு போனாளே அதற்கு அப்புறம் அவங்க சித்திக்கு எப்படியோ விஷயம் தெரிஞ்சுடுச்சு. அவளை வீட்டுக்குள்ள வச்சு பூட்டிட்டாங்க இது எதுவுமே எனக்கு தெரியாது. இதுக்கு நடுவுல உன்னை பத்தி அவ சித்தி கேட்டதுக்கு உன்னை பத்தி ஒரு வார்த்தை சொல்லல போல அப்புறம் அவங்களே அங்க இங்க விசாரிச்சு தெரிஞ்சிட்டாங்க? இவ்வளவு அழகான பையன் அதுவும் பணக்கார சம்மந்தம் இவளுக்கான மனசுல கருவி உங்களை சேர விடக்கூடாதுன்னு யோசிச்ற்காங்க. இதுக்கு மேல மகிழ் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா சொத்து கையை விட்டு போயிடும்னு அவங்களுக்கு பயம் அதிகம் ஆகிடுச்சு என்ற நவீனிடம் என்னடா சொல்ற சொத்தா என்ன சொத்து என்றான் பிரகாஷ் குழப்பத்துடன். உனக்கு விஷயமே தெரியாதா அந்த சொத்தெல்லாம் அவங்க சித்தி சித்தப்பா உடையது இல்ல அதெல்லாம் மகிழ் உடையது மகிழ்வுடைய அப்பா இறப்பதற்கு முன்னாடியே அவளுக்கு சொத்து எழுதி வச்சிட்டார். அந்த சொத்துக்காக தானே அவளோட சித்தி அவளை வளர்த்தது உனக்கும் ஒன்னு தெரியுமா பிரகாஷ் மகிழ் அவங்க அம்மா அப்பா ரெண்டு வேறு முகத்தையும் முகத்தையும் பார்த்தது கூட இல்ல தெரியுமா அவங்க அம்மாவுக்கு ஆறு மாசம் இருக்கும் போதே அவங்க அப்பா ஆக்சிடென்ட்ல இறந்துட்டாங்க அவங்க அப்பா இறந்ததுக்கு இவ ராசி அது இதனை இவ அம்மா வயித்துல இருந்த பா பேசியிருக்காங்க. இந்த அதிர்ச்சி வேதனை தாங்காம தாங்காம அவங்க அவங்க அம்மா அம்மா பிரசவத்தில் இறந்துட்டாங்க. அவங்களுக்கு அவங்க முடிவு முன்னாடியே தெரியும் போல அதனால அவங்க அப்பா சொத்து அவங்களுக்கு பிறக்க போகும் குழந்தைக்கும் எழுதி வெச்சிருக்காங்க அதனால மகி அவங்க அப்பா அம்மா ரெண்டு வேறு முகத்தையும் பார்த்தது இல்லை அது தெரியுமா உனக்கு என்ற நவீனின் குரல் கலங்கி இருந்தது டேய் என்னடா சொல்றேன் மகிழ்க்கு அம்மா அப்பா ரெண்டு வெறும் இல்லை தெரியும் ஆனால் அவங்க அம்மா அப்பா முகத்தை கூட பார்த்தது இல்லைன்னு எனக்கு தெரியாது இதெல்லாம் எனக்கு இன்னிக்கி நீ சொல்லித்தான் தெரியும் நான் அவளை புரிஞ்சுகிட்டு அவளுக்கு பாதுகாப்பா இல்லையா என்றான் பிரகாஷ் கண்ணீருடன். உனக்கு இதுல சந்தேகம் வேறயா பிரண்ட் கூட பார்க்க மாட்டேன் ஏதாவது அசிங்கமா சொல்லிட போறேன் நீ பண்ணினது முழுக்க முழுக்க தப்பு தான் அதுல உனக்கு கொஞ்சம் கூட சந்தேகம் வேண்டாம் நீ அவளுக்கு ஒரு நல்ல காதலனா இல்லை நீ எல்லாம் ஒரு மனுஷனா? காதலிச்ச பொண்ணை விட உனக்கு உன்னோட லட்சிய வெறி பணம் குறிக்கோள் இதெல்லாம் தான் உனக்கு முக்கியம் உனக்கு மகழ் மனசு முக்கியம் இல்ல லட்சியம் முக்கியம் போடா நீ பெரிய ஆளு லட்சம் கோடியில புரளு ஆனா நீ ஒரு லூசு வாழ்க்கையை தொலைச்ச முட்டாள். ஆனால் உன்னால மகிழ் வாழ்க்கை போச்சு அதை உன்னால திருப்பி தர முடியுமா? என்ன பண்ண போற. அவளை நான் என்னோட தங்கச்சியா தான் பார்க்கிறேன் ஆனா எனக்கு தெரிஞ்ச அளவு கூட காதலிச்ச உனக்கு அவளை பற்றி தெரியலை? சொல்லுடா மகிழ் வாழ்க்கைக்கு என்ன பதில். அவளை நீ நரகத்தில இருந்து காப்பாத்துவேனு அவ நம்பினா ஆனா நீ அவளை இன்னும் இன்னும் மோசமான நரகத்திலே தள்ளிட்ட என அவன் சட்டையை பிடித்தான் நவீன் கோபத்துடன்.

@KingTamil

Thurueriya Irumbugal Tamil Interesting Story **அத்தியாயம் 7** ஆகா இவள் என்ன சொல்லபோகிறாள், என் தலையில் ஏதோ பெரிய குண்டை தூக்கி போட போகிறாளோ?? இவள் இப்படி நடந்து கொள்வதை பார்க்கும் போது எனக்கு பயமாக இருக்கிறதே. பேச்சை மறைத்தான். “இங்க பேசவேண்டாம் நேரம் ஆகிடுச்சி வாங்க உங்க வீட்டுக்கு போயிடலாம் அங்க போய் பேசிக்கலாம். வண்டியில ஏறுங்க“ அவன் கோபத்தை முழுக்க அந்த வண்டியின் மீது காட்டினான். ரைஸரை டர்ர்..டர்ர்.. என்று திருவினான். டைல் லைட்டை ஆன் செய்து ஆஃப் செய்தான். தனா மெல்ல வந்து பேசன்ஜர் இருக்கையில் அமர்ந்தாள். சட்டென்று வண்டியை நகர்த்தி ரியர் பிரேக்கை அழுத்தினான். தன்னை நிதானித்து கொண்டு வண்டியை நகர்த்தினான். ஆம்புலன்ஸ் சாலைகளில் விரைந்து கொண்டிருந்தது. ராஜின் கண்கள் ஹார்ட் மானிட்டரை பார்த்தபடியே இருந்தது. அருகே இருந்த நர்ஸ் கைகளில் வழிந்த இரத்தப்போக்கை நிறுத்த டிரசிங் செய்து டிரான்ஸ்சாமிக் ஆசிட் (Tranexamic Acid) தொட்டு துடைத்து பஸ்ட் எய்ட் செய்தார், மருத்துவமனையும் வந்தது. டிராப் லெக் ஸ்ட்ரேச்சரை இறக்கி வேக வேகமாக தள்ளிக்கொண்டு ஓடினார்கள். ராஜின் பதற்றம் அதிகரிக்கவே செய்தது. ஐ.சி.யூக்குள் கொண்டு சென்றனர். டாக்டர் ராஜின் தோள்களில் தட்டி கொடுத்துவிட்டு உள்ளே சென்றார். பல்ஸ் ஆக்ஸ்மீட்டர் மூலம் அவளின் பல்ஸ் கவனிக்கப்பட்டது, பல்ஸ் லோவாக இருந்தது. வென்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் செலுத்தப்பட்டு இரத்தப்போக்குகள் நிறுத்தப்பட்டு ஸ்டிரிச் செய்யப்பட்டது. நேரம் ஓடிக்கொண்டே இருந்தது வியர்வைக்கொட்டியது ஹார்ட் பீட் படக்..படக்..எகிறியது ராஜிக்கு. டாக்டர் ஐ.சி.யூவை விட்டு வெளியே வந்தார் ராஜ் பதற்றமாக எழுந்தான். “கட் இஸ் டீபர் தென் ய கூவாட்டர் இன்ஜ் ராஜ் டோண்ட் ஒரி. டூ ஹவர்ஸ் அப்சர்வேஷன்ல இருக்கட்டும்.“ “தேங்யூ ராம்.“ தெரிந்த டாக்டர் தான் போல ராஜ் மிக சாதரணமாக பேசினான். ஆமாம் பெரிய கிரிமினல் லாயர் அவனுக்கு தெரியாத ஆட்கள் யார் தான் இருப்பார்கள். “திலிப் கிட்ட சொல்லிடுங்க அவர் வேற பதற்றத்துல இருப்பாரு.“ “கண்டிப்பா அவன் இல்லாதப்போ என்ன செய்யபோறேன்னு நினைச்சன். அவன் தான் இந்திராவோட பர்ஸனல் கேர்.“ “ஐ நோ ராஜ், டேக் கேர்.“ ராஜ் பாக்கேட்டில் இருந்த மொபைல் ரிங்டோன் மெலடியாக இசைத்தது. முகப்பில் திலிப் லோகி (loki). லோகி என்பது ராஜ் திலிப்பை அழைக்கும் செல்லபெயர் அதற்கு டெவில் என்று அர்த்தம். நிறைய நேரங்களில் அவன் ராஜிக்கு கடவுளாக தான் இருக்கிறான். ரிசிவ் கால் இணைக்கப்பட்டது. “டேய்.. ராஜ் வாட் ஹப்பன்.“ ராஜ் கலங்கினான் சிறிது அமைதி. “ராஜ் அழறியா?? உனக்காக நான் என்ன வேணும்னாலும் செய்வேன்டா? நான் உடனே கிளம்பிவரேன்டா?“ ராஜிம்,திலிப்பும் உயிர் நண்பர்கள். திலிப் பிரபலமான இதயநிபுணர், அந்த நாள் திலிப்பிற்கு கருப்பு நாள். அட்டிரியல் ஃபைபேர்லேட்டன் சர்ஜரி செய்யவேண்டி இருந்தது. சக்சஸ் ரேட் ஃமேஸி சர்ஜரி 84.3 பர்சன்டேஜ் தான் என்பது அவனுக்கு தெரியும் இருந்தாலும் பேசன்ட் அரசியல் பிரபலம் என்பதால் அவனுக்கு அதிக பிரஸர். அவன் நிறைய ஆஃபரேஷனை சக்சஸ் செய்து இருக்கிறான். அந்த நேரத்தில் அவனுக்கு ஏற்பட்ட ஸ்ரஸ் யானைக்கும் அடிச்சறுக்கும் என்பது உண்மை தானே. அவனால் அந்த ஆஃபரேஷனை சக்சஸ் செய்ய முடியாமல் போனது. கடைசியில் அந்த பேசண்ட் உயிர் இழக்க நேர்ந்தது. அதற்கு அந்த நோயாளியும் ஒரு காரணம் முதல் நாள் அளவுக்கு அதிகமான ஆல்கஹால் எடுத்துக்கொண்டிருக்கிறார் அது தான் மூலக்காரணம் ஆனால் முழு தவறையும் திலிப் மீது திருப்பினார்கள். இதனால் அவன் பெரிய பிரச்சனையில் மாட்டினான். கோர்ட் கேஸ் இப்படி அப்படி என்று அலக்கழிக்கப்பட்டான். ஒரு வழியாக தன்னுடைய ஆருயிர் நண்பன் திலிப்பை எப்படியோ எல்லா வழக்கில் இருந்தும் விடுவித்தான். நீண்ட நாட்கள் அவன் தான் மருத்துவர் என்பதையே மறந்து மது போதைக்கு அடிமையானான். அதிலிருந்தும் ராஜ் தான் மீட்டெடுத்தான். ராஜ் செய்த உதவிக்கு அவனும் பெரிய உதவி செய்து இருக்கிறான் அதை பின்னால் பார்க்கலாம். இருவரின் உரையாடல் தொடர்ந்தது. “வேண்டாம் இப்போ பரவாயில்லை திலிப். ராம் நல்லா தான் பார்த்துக்குறாரு. நீ உன் வேலைய முடிச்சிட்டு வா.“ “நீ கவலைபடாத இன்னும் இரண்டு நாள் பொறுத்துக்கோ நான் வந்துடுறேன், இந்திராகிட்ட எடுத்து சொல்லுவோம். நல்ல சைக்காலஜிஸ்ட பார்க்கலாம் அவளோட மனஅழுத்தத்த சரி செய்யலாம்.“ “எனக்கு பயமா இருக்கு திலிப் நம்ம தப்பு பண்ணிட்டோமோ?“ “டேய்.. நடந்த எதுவும் நம்ப கையில இல்லடா எல்லாத்துக்கும் அந்த ராஸ்கல் சஞ்சய் தான் காரணம். அவன தேடி கொல்லனும்டா?“ “உம்..“ “நீ அமைதியா இரு இந்திராவுக்கு எந்த பிரச்சனையா இருந்தாலும் நம்ம ஒரு கைப்பார்ப்போம். எல்லாம் முடிஞ்சிட்டு அத இந்திரா தான் புரிஞ்சிக்க மாட்டைங்கிறா?“ “எதுவும் முடியல திலிப் இப்போ தான் ஆரம்பம், நான் அந்த பொண்ண பார்த்தேன். அதுவும் இந்திராவோட ஹோட்டலையே??“ போனில் மறுபக்கம் நிரந்தர அமைதி. ராஜ் தொடர்ந்தான். “இந்திராவிற்கு எதுவும் தெரியாது நான் காட்டிக்கொள்ளவில்லை. என்னுடைய முகபாவனையில் கண்டுபிடித்தால் என்ன செய்வது என்று என் அதிர்ச்சிய நான் மறைச்சிட்டேன் திலிப்.“ “நீ சொல்றது எல்லாம் உண்மையா??“ பெரு மூச்சு ஒன்று பதிலாக கொடுத்தான் ராஜ். அந்த கைப்பேசியில் வெப்பம் ஊடேறியது. திலிப் கலங்கிப்போனான். “நான் உடனே வரேன், வந்து பார்த்துக்கலாம்?“ அழுத்தி பதில் கொடுத்தான் திலிப். அவ்வளவு தான் இருவரும் பேசவில்லை இணைப்பை துண்டித்தனர். இருவரும் பேசி முடித்து கைப்பேசிகள் அணைக்கப்பட்டது. இப்போது மொபைலை பார்த்தான் அதில் மணி பனிரெண்டை காட்டியது. இந்த இரண்டு மணி நேரத்திற்குள் எத்தனை போராட்டம். மெல்ல சாய்ந்தபடியாக நாற்காளியில் உடலை தளர்த்தினான். தனநந்தினியின் வீடு. கதவுகள் திறந்திருந்தது வீட்டில் இருந்த டியூப்லைட் வெளிச்சம் பளிச்சிட்டது பட்டாம்பூச்சி ஒன்று வெளிச்சத்தால் ஈர்க்கப்பட்டு அந்த மின்விளக்கை சுற்றியது. பாட்டி மூலையில் அமர்ந்தவாரே தூங்கி வழிந்தாள். நாய் எங்கோ கண்எட்டா தூரத்தில் ஊ..ஊ….ஊளையிட்ட சத்தம் குடிக்கொண்டிருந்த நிசப்தத்தை கொஞ்சம் களைக்க செய்தது. ஹம்..ஹம்.. மெல்ல தெண்டையில் சத்தம் எழுப்பி பேச்சை தொடங்கினான் நேவிதன். ஜன்னல் பக்கம் நின்ற தனாவின் மீது வாசலில் நின்ற வேப்பமரம் தந்த காற்று வாடிய முகத்தை மெல்லவருடி விட்டது. ஏற்கனவே களைந்த கூந்தலை மீண்டும் களைக்க அதை அவள் கைவிரல்களால் ஒடுக்கிவிட்டு கொண்டே.

@KingTamil

Ninaikatha Neramillai Tamil Part - 2 **அத்தியாயம் – 1** காலை கதிரவன் உதயத்துடன் பறவைகள் ஓசையுடன் அன்றைய தினம் விடிந்தது. சென்னையின் வழக்கமான பரபரப்பு மிகுந்த காலை. ஆறு மணிக்கே பரபரப்பு. அங்கங்கே வாகனங்களின் சத்தம். அதிகாலை நேரத்திலும் நெருக்கடியை கடந்து காரை பார்க்கிங் லாட்டில் விட்டு விட்டு மீனம்பாக்கம் ஏர்போட்டிற்குள் நுழைந்தான் நவீன். (உடனே கற்பனை குதிரையை பறக்க விடாதீங்க. ஹீரோ இல்லைனா ஹீரோயின் தான் முதல எண்ட்ரி குடுக்கணும்மா? பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த விமான நிலையத்தில்(எக்ஸிட்) அருகே நண்பனின் வரவிற்காக காத்துக்கொண்டிருந்தான். ஆறு மாதம் கழித்து தனது ஆருயிர் நண்பனை காணப் போகும் மகிழ்ச்சி துளி கூட இல்லாமல் முகம் முழுவதும் பதட்டத்துடன் காத்திருந்தான். எப்படியும் இந்த விஷயத்தை அவன் கிட்ட சொல்லி தான் ஆகணும். இதுக்கு மேல மறைக்க முடியாது. ஆனால் நண்பன் இதை எப்படி எடுத்து கொள்வான் என தெரியாமல் முகத்தில் கலவரத்துடன் இருந்தான். என்ன பண்ண முடியும்? யானை தன் தலையில் தானே மண் அள்ளி போடற மாதிரி இவனே இவன் வாழ்க்கைய சிக்கல் ஆக்கிட்டான். பண்ண தப்புக்கு அவன் கஷ்டத்தை சந்திச்சி தான் ஆகணும். ஆனா அவநோட அவசர புத்தியால ஒரு அப்பாவி பொண்னு வாழ்க்கை போச்சே என யோசித்து கொண்டிருந்தான் நவீன். ஏர்போட் உள்ளே தனது கேபின் மற்றும் செக் இன் லக்கேஜ் சரி பார்த்து எடுத்தவன் தனது அமெரிக்கன் டுரிஸ்டர் பெட்டியை தள்ளி க்கொண்டு வந்தான் சூர்ய பிரகாஷ். ( ஆமாங்க இவன் தான் நம்ம ஹீரோ) சூர்ய பிரகாஷ் ஆறடி உயரம் பார்ப்பதற்கு நல்ல நிறம், முகத்தில் ஒரு கம்பீரம் கூடவே குறும்புடன் சிரிக்கும் கண்கள். பார்த்தவுடன் பெண்களை திரும்பி பார்க்க வைக்கும் நாயகன். சுருங்க சொன்னால் அவன் ஒரு ஹண்ட்சம் ஹீரோ. தனது ரேபன் கண்ணாடியை தனது சட்டையில் சொருகியவன் நண்பனை தேட தனக்காக காத்துகிக்கொண்டிருந்த நவீனை கண்டு கொண்டான். வேகமாக அவன் அருகில் சென்று நவீனை அணைத்து எப்படி டா இருக்க? ரொம்ப நேரமா வெயிட் பண்றியா? பிளைட் லேண்ட் ஆக டைம் ஆகிடுச்சு என்ற பிரகாஷின்( இனி சூர்ய பிரகாஷ் மத்த எல்லாருக்கும் பிரகாஷ்) குரலில் பயணம் செய்த சோர்வு கொஞ்சம் கூட இல்லை. மாறாக நண்பனை ஆறு மாதம் கழித்து சந்தித்த உற்சாகத்துடன் பேசிக்கொண்டிருந்தான். ம்ம்ம் நல்லா இருக்கேன். இப்ப தான் வந்து கொஞ்ச நேரம் ஆகுது என்ற நவீனின் வழக்கமான துள்ளல் இல்லை என உணர்ந்து யோசனையுடன்நடந்தான் பிரகாஷ். என்ன ஆச்சு நவீன்? ஏன் டல்லா இருக்க? ஏதாவது பிரச்சனையா? வீட்ல எல்லாரும் நல்லாருக்காங்களா? என பதட்டத்துடன் வினவிய பிரக்ஷிடம் அதெல்லாம் ஒன்னுமில்லைடா. கொஞ்சம் டையர்டா இருக்கு என்றபடி கார் பார்க்கிங் நோக்கி சென்ற நவீனை பின் தொடர்ந்தான் பிரகாஷ். காரை நவீன் ஓட்டிக்கொண்டிருக்க அருகில் பிரகாஷ் அமெரிக்க அனுபவம் மற்றும் தொழில் சம்பந்தமாக பேசி கொண்டிருந்தான். நவீனிடம் எந்த எதிரொலியும் இல்லை என யோசனையுடன் அவனை கூர்ந்தான். கேட்டா ஏதாவது சமாளிக்க பார்ப்பான். பொறுமையா பேசிக்கலாம் என்ற எண்ணத்துடன் அமைதியானான். மகிழ் வீட்டுக்கு போயேன். அவளை பார்க்கணும் போல இருக்கு? அவ என்னை பார்த்தது சந்தோஷடதுல அவ முகம் ஜொலிக்கும் பாரு அதை பார்க்கணும் என்ற ப்ரகாஷுன் கூற்றில் சடன் பிரேக் போட்டு நிறுத்தினான் நவீன். மகிழ்க்கு கல்யாணம் முடிஞ்சுட்டு என்ற நவீனின் குரலில் முற்றிலும் உணர்ச்சிகள் துடைக்கப்பட்டிருந்தது. வேண்டாம் ப்லீஸ் சூர்யா என்னை விட்டுட்டு போகாதீங்க. எனக்கு பயமா இருக்கு. என்னையும் உங்க கூட கூட்டிட்டு போங்க. நீங்க இல்லாத வாழ்க்கைய என்னால நினைத்து கூட பார்க்க முடியாது என மகிழ் கடைசியாக தன்னிடம் பேசியது நெஞ்சில் வந்து மோதியது. தன்னை சுதாரித்த பிரகாஷ் அவளுக்கு என்னடா? அவளோட நல்ல மனசுக்கு அவ கட்டாயம் நல்லாருப்பா என்ற படி கண்களை மூடினான். சந்தோஷமாவா? எப்படி டா சந்தோஷமா இருப்பா? அவ வாழ்க்கை போச்சு. அவ சுத்தமா நல்லா இல்லை என்ற நவீனின் கர்ஜனையில் அதிர்ச்சியுடன் ஏறிட்ட பிரகாஷின் மனம் அவனை நார் நாராக கிழித்தது.

@KingTamil

Ninaikatha Neramillai Tamil Story நாயகன்: சூர்ய பிரகாஷ் நாயகி : மகிழ்வதனி சூர்ய பிரகாஷ் நாயகியை கண்டதும் காதல்..... காதலி மேல் உயிரையே வைத்திருப்பவன் எடுக்கும் ஒரு தவறான முடிவு இருவரின் வாழ்க்கை பயணத்தையே மாற்றுகிது.... விரைவில் டீஸருடன் உங்களை சந்திக்க வருகிறேன்..... **டீசர் - 1** ஏர்போட்டை விட்டு வெளியே வந்த சூர்ய பிரகாஷ் தனக்காக காத்துக் கொண்டிருந்த நண்பன் நவீனை கட்டியணைத்து எப்படி டா இருக்க என்றான்? நல்லாயிருக்கேன் என்ற நவீனின் குரலில் இருந்த மாற்றம் அவனை ஏதோ செய்தது. காரில் செல்லும் வழியில் டேய் மகிழ் வீட்டுக்கு போ அவள பார்க்கணும். டேய் அவளுக்கு கல்யாணம் முடிஞ்சுட்டு என்ற நவீனை அதிர்ச்சியோடு விழிகள் தெரிக்க பார்த்தான். ப்ளீஸ் என்னை விட்டுட்டு போகாதீங்க என்னையும் உங்க கூடவே கூட்டிட்டு போங்க என்ற கலங்கிய குரல் அவன் மனதில் வந்து சென்றது. ஓ அப்படியா அவ நல்ல மனசுக்கு அவ நல்லாருப்பா என்றான் பிரகாஷ் நெகிழ்ச்சியுடன். சந்தோஷமாவா ? அவ நல்லா இல்லை சுத்தமா நல்லாயில்ல கோபத்துடன் கர்ஜித்தான் நவீன்

@KingTamil

Medical Use of Onion Tamil Maruthuvam Part - 2 26. வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும். 27. வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும். 28. ஜலதோஷ நேரத்தில் வெங் காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும். 29. வெங்காயத்தை அரைத்து தொண்டையில்பற்றுப்போட ஏற்படும் தொண்டை வலி குறையும். 30. பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும். 31 ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும். 32. வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும். பிறகு டாக்டரிடம் செல்லலாம். 33. வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்துக்குடிக்க மூலநோய் குணமாகும். 34. காலரா பரவியுள்ள இடத்தில் பச்சை வெங்காயத்தை மென்றுதின்ன காலரா தாக்காது. 35. ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட நோய் குறையும். 36. சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம். 37. தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும். 38. காக்காய் வலிப்பு நோய் உள்ள வர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு சாப்பிட்டுவர வலிப்பு குறையும். 39. வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி.நோய் குறையும். 40. வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும். 41. தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும். 42. வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும். 43. வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும். 44. தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும் 45. வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும். 46. வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும். 47. மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது. 48. சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும். 49. வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சி யும், மூளை பலமும் உண்டாகும். 50. வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்து கிடைக்கும். Thanks for reading

@KingTamil

Medical Use of Onion Tamil Maruthuvam சின்ன வெங்காயத்தின் மருத்துவக் குணங்கள்..! வெங்காயத்துல சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம்னு ரெண்டு வகை இருக்கறது பலருக்கு தெரியும். அதேபோல வெள்ளை வெங்காயம்னு ஒண்ணும் இருக்கு. இதுல மருத்துவ குணம் நிறைஞ்சது… சின்ன வெங்காயம்தான்! ஜலதோஷம் வந்தா ஒரு சின்ன வெங்காயத்தை மென்னு தின்னு, வெந்நீர் குடிச்சா… ஜலதோஷம் குறையுறதோட தும்மலும் நின்னுடும். கூடவே… நீர்க்கடுப்பு, நீர்எரிச்சல் இதெல்லாமும் குணமாகும். நெஞ்சு படபடப்பு வந்தாலும், சின்ன வெங்காயத்தை தின்னு வெந்நீர் குடிச்சா, உடம்பு சமநிலைக்கு வந்துடும். இதய நோயாளிகளுக்கு இப்படிப்பட்ட பிரச்னைகள் வரும்போது முதலுதவி சிகிச்சையா இதை செய்யலாம். பொடியா நறுக்கின சின்ன வெங்காயத்தை நல்லெண்ணெய் விட்டு வதக்கி, தொடர்ந்து சாப்பிட்டு வந்தா ரத்தக்கொதிப்பு குறைஞ்சு, இதயம் பலமாகும். மூல நோயால அவதிப்படுறவங்க சாப்பாட்டுல அதிகமா சின்ன வெங்காயம் சேர்த்துக்கறது நல்லது. நீர்மோர்ல சின்ன வெங்காயத்தை வெட்டிப்போட்டு குடிச்சாலும் பலன் கிடைக்கும். வெளிமூலம் உள்ளவங்க, சின்ன வெங்காயத்தை வதக்கி, பிரச்னை உள்ள இடத்துல வெச்சுக்கிட்டா பலன் கிடைக்கும் (வெள்ளை வெங்காயத்தை அப்பப்போ நல்லெண்ணய் விட்டு வதக்கிச் சாப்பிட்டாலும் மூல உபத்திரவம் குறையும்). பொடுகுத் தொல்லை, முடிகொட்டுதல்னு அவதிப்படுறவங்களுக்கும் சின்ன வெங்காயம் நல்ல பலன் தரும். சின்ன வெங்காயத்தை மையா அரைச்சுக்கோங்க. இதை, நாட்டுக்கோழி முட்டையோட வெள்ளைக்கருவுல சேர்த்து, ஆம்லெட்டுக்கு அடிக்கிற மாதிரி நல்லா அடிச்சுக்கணும். இல்ல, மிக்ஸியில போட்டு ஒரு சுத்து சுத்தினாலும் சரி. இப்படி செய்யும் போது ஷாம்பு மாதிரி பொங்கி வரும். அதை அப்படியே தலையில தேய்ச்சி, அரை மணி நேரம் கழிச்சி வெதுவெதுப்பான தண்ணியில குளிக்கணும். முட்டை வாடை போவதற்க்கு, நல்ல சிகைக்காய் பவுடரை போட்டு தேய்ச்சி குளிக்கணும். வாரத்துல ஒருநாள் வீதம், ரெண்டு மாசத்துக்கு இப்படி செய்தா நல்ல பலன் கிடைக்கும். தேள் கொட்டின இடத்துல வெங்காயச்சாறை தேய்ச்சா விஷம் ஏறாது. தலை பகுதியில சொட்டை விழுந்து முடி முளைக்காம இருந்தாலும் சின்ன வெங்காயத்தை தேய்ச்சி வந்தா… காலப்போக்குல முடி முளைக்கும். ஆம்பளைங்களுக்கு மீசை பகுதியில இப்படி சொட்டை இருந்தாலும், இதே வைத்தியத்தை செய்யலாம்! மேலும் 50 வகையில் வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும்? என்பதை பார்ப்போம். 1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும். 2. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும். 3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும். 4. வெங்காயத் தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும். 5. வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும் 6. வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும். 7. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும். 8. வெங்காயச் சாற்றையும், வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும். 9. வெங்காயப், வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும். 10. வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும். 11. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும். 12. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும். 13. படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை சிவர மறைந்துவிடும். 14. திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும். 15. வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும், குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும். 16. வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும். 17.பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும். 18. வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும். 19. வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம். 20. பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது. 21. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது. 22. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும். 23. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும். 24. வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில்ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும். 25. நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.

@KingTamil

Daily Diary Notes Tamil - 1 சாலையில் ஒருவரும் இல்லை. பெரும் அமைதி. எனக்கு திடீரென்று பயம் வந்தது. பல தடவை இந்நேரத்தில் ஓடி இருக்கிறேன் ஆனால் இன்று ஏதோ ஒன்று வித்தியாசமாக தெரிந்தது. கவனத்தை மூச்சில் நிறுத்தி ஓட ஆரம்பித்தேன். மிகவும் வேகமாக ஓடினேன். எதுவும் மனதில் ஓடவில்லை. கிழக்கு கடற்கரையை அடைந்தேன். சற்று நேரம் கடல் அருகில் சென்று நின்றுவிட்டு கரையில் சில நிமிடங்கள் நடந்தேன். என்ன ஒரு புத்துணர்வு. கடல் என்றும் என்னை ஆச்சிரியப்படுத்த தவறியதில்லை. இன்றும் அப்படியே அரை நிலவில் கடல் மேலும் அழகாக இருந்தது. இந்த வாரமும் சர்ச்சில் பூசை இல்லை என்று தோன்றியவுடன் மீண்டும் ஓட ஆரம்பித்தேன். நேராக மார்கெட்டிற்கு ஓடினேன். மனதில் என்னென்ன வாங்க வேண்டுமென்று எண்ணிக் கொண்டேன். கனவாய் வாங்கவா வேண்டாமா என்ற கேள்வியுடன் மார்க்கெட்டை அடைந்தேன்.