read.cash Log in
@KingTamil more from that month

If Cats Disappeared From The World - Genki Kawamura

சில திரைப்படங்களை "feel good movie"-னு சொல்வோம். அந்த மாதிரி இந்த புத்தகம்ஒரு "feel good" வாசிப்பு. ஆனால் நம்மை பெரிதும் சிந்திக்க வைக்கிறது. ஒரு இளம் தபால்காரர் தனக்கு மூளை கேன்சர் இருக்கிறது என்று தெரிந்து கொள்கிறார்.இன்னும் சில நாட்களே உள்ளன அதனால் தான் விருப்புவதை செய்யாலாம் என்று எண்ணி ஒரு பட்டியலை(bucket list) போடுகிறார். திடீரென்று அவனை போலவே உருவமுள்ள ஒரு பேய் தோன்றுகிறது. அது அவனிடம் பேரம் பேசுகிறது அதாவது தான் அவனுக்கு இருக்கும் வாழ் நாட்களில் மேலும் ஒரு நாள் தருவதாகவும் அதற்கு அவன் பேய் ஏதாவது ஒன்றை மறைய ஒப்புக் கொள்ளவேண்டும் என்கிறது. ஒவ்வொரு முறை மறையவைக்கும் போது ஒரு நாள் கூடும்.அவனுக்கு அது என்றும் பெரிதாக தெரியவில்லை அதனால் சம்மதிக்கிறான். அந்த பேயை அலோஹா என்று அழைக்கிறான். Like love, life is beautiful because it has to end. முதலில் உலகளிலுள்ள அனைத்து தொலைபேசிகளும் மறைய வைக்கப் போவதாக சொல்லி அதற்கு முன் யாருக்காவது ஒரு தடவை அழைத்துக் கொள்ளலாம் என்கிறது அலோஹா. அவன் அவனது முன்னாள் காதலியை அழைக்கிறான்.அவர்கள் அவர்களின் உறவைப் பற்றி பேசிக் கொள்கிறார்கள். அவர்கள் ஏன் பிரிந்தார்கள் என்பதற்கு அவர்கள் இருவரும் முக்கியமான நேரத்தில் பேசிக்கொள்ளவில்லை என்பதுதான். ஆனால் அவன் அதை இப்போது தான் உணர்கிறான். `With freedom comes uncertainty, insecurity, and anxiety. Human beings exchanged their freedom for the sense of security that comes from living by set rules and routines—despite knowing that they pay the cost of these rules and regulations with their freedom.`

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.