read.cash Log in
@KingTamil more from that month

Medical Use of Onion Tamil Maruthuvam

சின்ன வெங்காயத்தின் மருத்துவக் குணங்கள்..! வெங்காயத்துல சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம்னு ரெண்டு வகை இருக்கறது பலருக்கு தெரியும். அதேபோல வெள்ளை வெங்காயம்னு ஒண்ணும் இருக்கு. இதுல மருத்துவ குணம் நிறைஞ்சது… சின்ன வெங்காயம்தான்! ஜலதோஷம் வந்தா ஒரு சின்ன வெங்காயத்தை மென்னு தின்னு, வெந்நீர் குடிச்சா… ஜலதோஷம் குறையுறதோட தும்மலும் நின்னுடும். கூடவே… நீர்க்கடுப்பு, நீர்எரிச்சல் இதெல்லாமும் குணமாகும். நெஞ்சு படபடப்பு வந்தாலும், சின்ன வெங்காயத்தை தின்னு வெந்நீர் குடிச்சா, உடம்பு சமநிலைக்கு வந்துடும். இதய நோயாளிகளுக்கு இப்படிப்பட்ட பிரச்னைகள் வரும்போது முதலுதவி சிகிச்சையா இதை செய்யலாம். பொடியா நறுக்கின சின்ன வெங்காயத்தை நல்லெண்ணெய் விட்டு வதக்கி, தொடர்ந்து சாப்பிட்டு வந்தா ரத்தக்கொதிப்பு குறைஞ்சு, இதயம் பலமாகும். மூல நோயால அவதிப்படுறவங்க சாப்பாட்டுல அதிகமா சின்ன வெங்காயம் சேர்த்துக்கறது நல்லது. நீர்மோர்ல சின்ன வெங்காயத்தை வெட்டிப்போட்டு குடிச்சாலும் பலன் கிடைக்கும். வெளிமூலம் உள்ளவங்க, சின்ன வெங்காயத்தை வதக்கி, பிரச்னை உள்ள இடத்துல வெச்சுக்கிட்டா பலன் கிடைக்கும் (வெள்ளை வெங்காயத்தை அப்பப்போ நல்லெண்ணய் விட்டு வதக்கிச் சாப்பிட்டாலும் மூல உபத்திரவம் குறையும்). பொடுகுத் தொல்லை, முடிகொட்டுதல்னு அவதிப்படுறவங்களுக்கும் சின்ன வெங்காயம் நல்ல பலன் தரும். சின்ன வெங்காயத்தை மையா அரைச்சுக்கோங்க. இதை, நாட்டுக்கோழி முட்டையோட வெள்ளைக்கருவுல சேர்த்து, ஆம்லெட்டுக்கு அடிக்கிற மாதிரி நல்லா அடிச்சுக்கணும். இல்ல, மிக்ஸியில போட்டு ஒரு சுத்து சுத்தினாலும் சரி. இப்படி செய்யும் போது ஷாம்பு மாதிரி பொங்கி வரும். அதை அப்படியே தலையில தேய்ச்சி, அரை மணி நேரம் கழிச்சி வெதுவெதுப்பான தண்ணியில குளிக்கணும். முட்டை வாடை போவதற்க்கு, நல்ல சிகைக்காய் பவுடரை போட்டு தேய்ச்சி குளிக்கணும். வாரத்துல ஒருநாள் வீதம், ரெண்டு மாசத்துக்கு இப்படி செய்தா நல்ல பலன் கிடைக்கும். தேள் கொட்டின இடத்துல வெங்காயச்சாறை தேய்ச்சா விஷம் ஏறாது. தலை பகுதியில சொட்டை விழுந்து முடி முளைக்காம இருந்தாலும் சின்ன வெங்காயத்தை தேய்ச்சி வந்தா… காலப்போக்குல முடி முளைக்கும். ஆம்பளைங்களுக்கு மீசை பகுதியில இப்படி சொட்டை இருந்தாலும், இதே வைத்தியத்தை செய்யலாம்! மேலும் 50 வகையில் வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும்? என்பதை பார்ப்போம். 1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும். 2. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும். 3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும். 4. வெங்காயத் தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும். 5. வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும் 6. வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும். 7. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும். 8. வெங்காயச் சாற்றையும், வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும். 9. வெங்காயப், வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும். 10. வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும். 11. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும். 12. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும். 13. படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை சிவர மறைந்துவிடும். 14. திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும். 15. வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும், குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும். 16. வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும். 17.பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும். 18. வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும். 19. வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம். 20. பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது. 21. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது. 22. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும். 23. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும். 24. வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில்ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும். 25. நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.