read.cash Log in
@KingTamil

Thurueriya Irumbugal Tamil Interesting Story

**அத்தியாயம் 7** ஆகா இவள் என்ன சொல்லபோகிறாள், என் தலையில் ஏதோ பெரிய குண்டை தூக்கி போட போகிறாளோ?? இவள் இப்படி நடந்து கொள்வதை பார்க்கும் போது எனக்கு பயமாக இருக்கிறதே. பேச்சை மறைத்தான். “இங்க பேசவேண்டாம் நேரம் ஆகிடுச்சி வாங்க உங்க வீட்டுக்கு போயிடலாம் அங்க போய் பேசிக்கலாம். வண்டியில ஏறுங்க“ அவன் கோபத்தை முழுக்க அந்த வண்டியின் மீது காட்டினான். ரைஸரை டர்ர்..டர்ர்.. என்று திருவினான். டைல் லைட்டை ஆன் செய்து ஆஃப் செய்தான். தனா மெல்ல வந்து பேசன்ஜர் இருக்கையில் அமர்ந்தாள். சட்டென்று வண்டியை நகர்த்தி ரியர் பிரேக்கை அழுத்தினான். தன்னை நிதானித்து கொண்டு வண்டியை நகர்த்தினான். ஆம்புலன்ஸ் சாலைகளில் விரைந்து கொண்டிருந்தது. ராஜின் கண்கள் ஹார்ட் மானிட்டரை பார்த்தபடியே இருந்தது. அருகே இருந்த நர்ஸ் கைகளில் வழிந்த இரத்தப்போக்கை நிறுத்த டிரசிங் செய்து டிரான்ஸ்சாமிக் ஆசிட் (Tranexamic Acid) தொட்டு துடைத்து பஸ்ட் எய்ட் செய்தார், மருத்துவமனையும் வந்தது. டிராப் லெக் ஸ்ட்ரேச்சரை இறக்கி வேக வேகமாக தள்ளிக்கொண்டு ஓடினார்கள். ராஜின் பதற்றம் அதிகரிக்கவே செய்தது. ஐ.சி.யூக்குள் கொண்டு சென்றனர். டாக்டர் ராஜின் தோள்களில் தட்டி கொடுத்துவிட்டு உள்ளே சென்றார். பல்ஸ் ஆக்ஸ்மீட்டர் மூலம் அவளின் பல்ஸ் கவனிக்கப்பட்டது, பல்ஸ் லோவாக இருந்தது. வென்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் செலுத்தப்பட்டு இரத்தப்போக்குகள் நிறுத்தப்பட்டு ஸ்டிரிச் செய்யப்பட்டது. நேரம் ஓடிக்கொண்டே இருந்தது வியர்வைக்கொட்டியது ஹார்ட் பீட் படக்..படக்..எகிறியது ராஜிக்கு. டாக்டர் ஐ.சி.யூவை விட்டு வெளியே வந்தார் ராஜ் பதற்றமாக எழுந்தான். “கட் இஸ் டீபர் தென் ய கூவாட்டர் இன்ஜ் ராஜ் டோண்ட் ஒரி. டூ ஹவர்ஸ் அப்சர்வேஷன்ல இருக்கட்டும்.“ “தேங்யூ ராம்.“ தெரிந்த டாக்டர் தான் போல ராஜ் மிக சாதரணமாக பேசினான். ஆமாம் பெரிய கிரிமினல் லாயர் அவனுக்கு தெரியாத ஆட்கள் யார் தான் இருப்பார்கள். “திலிப் கிட்ட சொல்லிடுங்க அவர் வேற பதற்றத்துல இருப்பாரு.“ “கண்டிப்பா அவன் இல்லாதப்போ என்ன செய்யபோறேன்னு நினைச்சன். அவன் தான் இந்திராவோட பர்ஸனல் கேர்.“ “ஐ நோ ராஜ், டேக் கேர்.“ ராஜ் பாக்கேட்டில் இருந்த மொபைல் ரிங்டோன் மெலடியாக இசைத்தது. முகப்பில் திலிப் லோகி (loki). லோகி என்பது ராஜ் திலிப்பை அழைக்கும் செல்லபெயர் அதற்கு டெவில் என்று அர்த்தம். நிறைய நேரங்களில் அவன் ராஜிக்கு கடவுளாக தான் இருக்கிறான். ரிசிவ் கால் இணைக்கப்பட்டது. “டேய்.. ராஜ் வாட் ஹப்பன்.“ ராஜ் கலங்கினான் சிறிது அமைதி. “ராஜ் அழறியா?? உனக்காக நான் என்ன வேணும்னாலும் செய்வேன்டா? நான் உடனே கிளம்பிவரேன்டா?“ ராஜிம்,திலிப்பும் உயிர் நண்பர்கள். திலிப் பிரபலமான இதயநிபுணர், அந்த நாள் திலிப்பிற்கு கருப்பு நாள். அட்டிரியல் ஃபைபேர்லேட்டன் சர்ஜரி செய்யவேண்டி இருந்தது. சக்சஸ் ரேட் ஃமேஸி சர்ஜரி 84.3 பர்சன்டேஜ் தான் என்பது அவனுக்கு தெரியும் இருந்தாலும் பேசன்ட் அரசியல் பிரபலம் என்பதால் அவனுக்கு அதிக பிரஸர். அவன் நிறைய ஆஃபரேஷனை சக்சஸ் செய்து இருக்கிறான். அந்த நேரத்தில் அவனுக்கு ஏற்பட்ட ஸ்ரஸ் யானைக்கும் அடிச்சறுக்கும் என்பது உண்மை தானே. அவனால் அந்த ஆஃபரேஷனை சக்சஸ் செய்ய முடியாமல் போனது. கடைசியில் அந்த பேசண்ட் உயிர் இழக்க நேர்ந்தது. அதற்கு அந்த நோயாளியும் ஒரு காரணம் முதல் நாள் அளவுக்கு அதிகமான ஆல்கஹால் எடுத்துக்கொண்டிருக்கிறார் அது தான் மூலக்காரணம் ஆனால் முழு தவறையும் திலிப் மீது திருப்பினார்கள். இதனால் அவன் பெரிய பிரச்சனையில் மாட்டினான். கோர்ட் கேஸ் இப்படி அப்படி என்று அலக்கழிக்கப்பட்டான். ஒரு வழியாக தன்னுடைய ஆருயிர் நண்பன் திலிப்பை எப்படியோ எல்லா வழக்கில் இருந்தும் விடுவித்தான். நீண்ட நாட்கள் அவன் தான் மருத்துவர் என்பதையே மறந்து மது போதைக்கு அடிமையானான். அதிலிருந்தும் ராஜ் தான் மீட்டெடுத்தான். ராஜ் செய்த உதவிக்கு அவனும் பெரிய உதவி செய்து இருக்கிறான் அதை பின்னால் பார்க்கலாம். இருவரின் உரையாடல் தொடர்ந்தது. “வேண்டாம் இப்போ பரவாயில்லை திலிப். ராம் நல்லா தான் பார்த்துக்குறாரு. நீ உன் வேலைய முடிச்சிட்டு வா.“ “நீ கவலைபடாத இன்னும் இரண்டு நாள் பொறுத்துக்கோ நான் வந்துடுறேன், இந்திராகிட்ட எடுத்து சொல்லுவோம். நல்ல சைக்காலஜிஸ்ட பார்க்கலாம் அவளோட மனஅழுத்தத்த சரி செய்யலாம்.“ “எனக்கு பயமா இருக்கு திலிப் நம்ம தப்பு பண்ணிட்டோமோ?“ “டேய்.. நடந்த எதுவும் நம்ப கையில இல்லடா எல்லாத்துக்கும் அந்த ராஸ்கல் சஞ்சய் தான் காரணம். அவன தேடி கொல்லனும்டா?“ “உம்..“ “நீ அமைதியா இரு இந்திராவுக்கு எந்த பிரச்சனையா இருந்தாலும் நம்ம ஒரு கைப்பார்ப்போம். எல்லாம் முடிஞ்சிட்டு அத இந்திரா தான் புரிஞ்சிக்க மாட்டைங்கிறா?“ “எதுவும் முடியல திலிப் இப்போ தான் ஆரம்பம், நான் அந்த பொண்ண பார்த்தேன். அதுவும் இந்திராவோட ஹோட்டலையே??“ போனில் மறுபக்கம் நிரந்தர அமைதி. ராஜ் தொடர்ந்தான். “இந்திராவிற்கு எதுவும் தெரியாது நான் காட்டிக்கொள்ளவில்லை. என்னுடைய முகபாவனையில் கண்டுபிடித்தால் என்ன செய்வது என்று என் அதிர்ச்சிய நான் மறைச்சிட்டேன் திலிப்.“ “நீ சொல்றது எல்லாம் உண்மையா??“ பெரு மூச்சு ஒன்று பதிலாக கொடுத்தான் ராஜ். அந்த கைப்பேசியில் வெப்பம் ஊடேறியது. திலிப் கலங்கிப்போனான். “நான் உடனே வரேன், வந்து பார்த்துக்கலாம்?“ அழுத்தி பதில் கொடுத்தான் திலிப். அவ்வளவு தான் இருவரும் பேசவில்லை இணைப்பை துண்டித்தனர். இருவரும் பேசி முடித்து கைப்பேசிகள் அணைக்கப்பட்டது. இப்போது மொபைலை பார்த்தான் அதில் மணி பனிரெண்டை காட்டியது. இந்த இரண்டு மணி நேரத்திற்குள் எத்தனை போராட்டம். மெல்ல சாய்ந்தபடியாக நாற்காளியில் உடலை தளர்த்தினான். தனநந்தினியின் வீடு. கதவுகள் திறந்திருந்தது வீட்டில் இருந்த டியூப்லைட் வெளிச்சம் பளிச்சிட்டது பட்டாம்பூச்சி ஒன்று வெளிச்சத்தால் ஈர்க்கப்பட்டு அந்த மின்விளக்கை சுற்றியது. பாட்டி மூலையில் அமர்ந்தவாரே தூங்கி வழிந்தாள். நாய் எங்கோ கண்எட்டா தூரத்தில் ஊ..ஊ….ஊளையிட்ட சத்தம் குடிக்கொண்டிருந்த நிசப்தத்தை கொஞ்சம் களைக்க செய்தது. ஹம்..ஹம்.. மெல்ல தெண்டையில் சத்தம் எழுப்பி பேச்சை தொடங்கினான் நேவிதன். ஜன்னல் பக்கம் நின்ற தனாவின் மீது வாசலில் நின்ற வேப்பமரம் தந்த காற்று வாடிய முகத்தை மெல்லவருடி விட்டது. ஏற்கனவே களைந்த கூந்தலை மீண்டும் களைக்க அதை அவள் கைவிரல்களால் ஒடுக்கிவிட்டு கொண்டே.

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.