Ninaikatha Neramillai Tamil Story
நாயகன்: சூர்ய பிரகாஷ் நாயகி : மகிழ்வதனி சூர்ய பிரகாஷ் நாயகியை கண்டதும் காதல்..... காதலி மேல் உயிரையே வைத்திருப்பவன் எடுக்கும் ஒரு தவறான முடிவு இருவரின் வாழ்க்கை பயணத்தையே மாற்றுகிது.... விரைவில் டீஸருடன் உங்களை சந்திக்க வருகிறேன்..... **டீசர் - 1** ஏர்போட்டை விட்டு வெளியே வந்த சூர்ய பிரகாஷ் தனக்காக காத்துக் கொண்டிருந்த நண்பன் நவீனை கட்டியணைத்து எப்படி டா இருக்க என்றான்? நல்லாயிருக்கேன் என்ற நவீனின் குரலில் இருந்த மாற்றம் அவனை ஏதோ செய்தது. காரில் செல்லும் வழியில் டேய் மகிழ் வீட்டுக்கு போ அவள பார்க்கணும். டேய் அவளுக்கு கல்யாணம் முடிஞ்சுட்டு என்ற நவீனை அதிர்ச்சியோடு விழிகள் தெரிக்க பார்த்தான். ப்ளீஸ் என்னை விட்டுட்டு போகாதீங்க என்னையும் உங்க கூடவே கூட்டிட்டு போங்க என்ற கலங்கிய குரல் அவன் மனதில் வந்து சென்றது. ஓ அப்படியா அவ நல்ல மனசுக்கு அவ நல்லாருப்பா என்றான் பிரகாஷ் நெகிழ்ச்சியுடன். சந்தோஷமாவா ? அவ நல்லா இல்லை சுத்தமா நல்லாயில்ல கோபத்துடன் கர்ஜித்தான் நவீன்
No comments yet