Ninaikatha Neramillai Tamil Part-3
**டீஸர்-2** மீ ட் டிங்கில் பிஸி யாக இருந்த பிரகாஷ் வீட்டு லேண்ட் லைனில் இருந்து வந்த கால் பார்த்து யோசனையோடு எடுத்தான். **தம்பி நான் தான் கங்கா பேசறேன்**? சொல்லுங்க கங்காம்மா . என்னாச்சு? ஏன் இவ்ளோ பதட்டமா பேசறீங்க? ஏதாவது பிரச்சனையா? தம்பி காலைல இருந்தே பாப்பா ஒன்னும் சாப்படல. பசிக்கலைனு சொல்லிச்சு. திருப்பி கூப்பிடிலாம்னு பார்த்தா பாப்பா தூங்கிட்டு இருந்துச்சு சரினு நான் வந்துட் டேன். திடீர்னு பாப்பா பயங்கரமா கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணி அழுக ஆரம்பிச்சுட்டு. எனக்கு ரொம்ப பயமா இருக்கு தம்பி என்றார் பதட்டத்துடன். சரி கங்கமா நான் உடனே வர்றேன் கங்கமா என்றவன் அடுத்த பதினைந்து நிமிடத்தில் அவன் அறையில் இருந்தான். குட்டி மா என ஓடி சென்று அவளை அணைத்து கொண்டான். வேண்டாம். பயமா இருக்கு கிட்ட வராதீங்க எனக்கு ரொம்ப பயமா இருக்கு என கதறி அழுதாள் அவனின் அன்பு மனைவி மகிழ்வதனி. பிரகாஷின் இதயம் இரண்டாக பிளப்பது போல் இருந்தது. அவன் மனம் பரிதவித்தது. கடவுளே நவீன் கிட்ட என்னனு கேட்பது? அவன் தாங்க முடியாத அழகு ஏதாவது சொல்லிட்டானா என்ன பண்றது? என்ன கஷ்டம் பெண்ணே உனக்கு நான் இல்லாத நேரத்துல என்ன நடந்தது. என்னதான் நடந்தது தொலைத்தது தெரியலையே? இதுக்கு மேல முடியாது தலை வெடித்துவிடும் உணர்வுடன் நிமிர்ந்து பிரகாஷ் நவீன் என்ன நடந்துச்சு? ஏன் இப்படி சொன்ன மகிழ்க்கு என்ன ஆச்சு? அவளுக்கு என்ன பிரச்சனை சொல்லுடா? சொல்லு என்றான் பிரகாஷ்? தெரிஞ்சு என்ன பண்ண போற? என்றான் நவீன் கோபத்துடன். நான் என்னமோ பண்றேன் அதை பத்தி உனக்கு என்ன முதல்ல என்ன நடந்துச்சுன்னு சொல்லி தொலை என்ற பிரகாஷின் குரல் நடுங்க தொடங்கியது. நீ ஊருக்கு கிளம்புவதற்கு முன்னாடி மகிழ் உன்னை பார்த்துட்டு போனாளே அதற்கு அப்புறம் அவங்க சித்திக்கு எப்படியோ விஷயம் தெரிஞ்சுடுச்சு. அவளை வீட்டுக்குள்ள வச்சு பூட்டிட்டாங்க இது எதுவுமே எனக்கு தெரியாது. இதுக்கு நடுவுல உன்னை பத்தி அவ சித்தி கேட்டதுக்கு உன்னை பத்தி ஒரு வார்த்தை சொல்லல போல அப்புறம் அவங்களே அங்க இங்க விசாரிச்சு தெரிஞ்சிட்டாங்க? இவ்வளவு அழகான பையன் அதுவும் பணக்கார சம்மந்தம் இவளுக்கான மனசுல கருவி உங்களை சேர விடக்கூடாதுன்னு யோசிச்ற்காங்க. இதுக்கு மேல மகிழ் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா சொத்து கையை விட்டு போயிடும்னு அவங்களுக்கு பயம் அதிகம் ஆகிடுச்சு என்ற நவீனிடம் என்னடா சொல்ற சொத்தா என்ன சொத்து என்றான் பிரகாஷ் குழப்பத்துடன். உனக்கு விஷயமே தெரியாதா அந்த சொத்தெல்லாம் அவங்க சித்தி சித்தப்பா உடையது இல்ல அதெல்லாம் மகிழ் உடையது மகிழ்வுடைய அப்பா இறப்பதற்கு முன்னாடியே அவளுக்கு சொத்து எழுதி வச்சிட்டார். அந்த சொத்துக்காக தானே அவளோட சித்தி அவளை வளர்த்தது உனக்கும் ஒன்னு தெரியுமா பிரகாஷ் மகிழ் அவங்க அம்மா அப்பா ரெண்டு வேறு முகத்தையும் முகத்தையும் பார்த்தது கூட இல்ல தெரியுமா அவங்க அம்மாவுக்கு ஆறு மாசம் இருக்கும் போதே அவங்க அப்பா ஆக்சிடென்ட்ல இறந்துட்டாங்க அவங்க அப்பா இறந்ததுக்கு இவ ராசி அது இதனை இவ அம்மா வயித்துல இருந்த பா பேசியிருக்காங்க. இந்த அதிர்ச்சி வேதனை தாங்காம தாங்காம அவங்க அவங்க அம்மா அம்மா பிரசவத்தில் இறந்துட்டாங்க. அவங்களுக்கு அவங்க முடிவு முன்னாடியே தெரியும் போல அதனால அவங்க அப்பா சொத்து அவங்களுக்கு பிறக்க போகும் குழந்தைக்கும் எழுதி வெச்சிருக்காங்க அதனால மகி அவங்க அப்பா அம்மா ரெண்டு வேறு முகத்தையும் பார்த்தது இல்லை அது தெரியுமா உனக்கு என்ற நவீனின் குரல் கலங்கி இருந்தது டேய் என்னடா சொல்றேன் மகிழ்க்கு அம்மா அப்பா ரெண்டு வெறும் இல்லை தெரியும் ஆனால் அவங்க அம்மா அப்பா முகத்தை கூட பார்த்தது இல்லைன்னு எனக்கு தெரியாது இதெல்லாம் எனக்கு இன்னிக்கி நீ சொல்லித்தான் தெரியும் நான் அவளை புரிஞ்சுகிட்டு அவளுக்கு பாதுகாப்பா இல்லையா என்றான் பிரகாஷ் கண்ணீருடன். உனக்கு இதுல சந்தேகம் வேறயா பிரண்ட் கூட பார்க்க மாட்டேன் ஏதாவது அசிங்கமா சொல்லிட போறேன் நீ பண்ணினது முழுக்க முழுக்க தப்பு தான் அதுல உனக்கு கொஞ்சம் கூட சந்தேகம் வேண்டாம் நீ அவளுக்கு ஒரு நல்ல காதலனா இல்லை நீ எல்லாம் ஒரு மனுஷனா? காதலிச்ச பொண்ணை விட உனக்கு உன்னோட லட்சிய வெறி பணம் குறிக்கோள் இதெல்லாம் தான் உனக்கு முக்கியம் உனக்கு மகழ் மனசு முக்கியம் இல்ல லட்சியம் முக்கியம் போடா நீ பெரிய ஆளு லட்சம் கோடியில புரளு ஆனா நீ ஒரு லூசு வாழ்க்கையை தொலைச்ச முட்டாள். ஆனால் உன்னால மகிழ் வாழ்க்கை போச்சு அதை உன்னால திருப்பி தர முடியுமா? என்ன பண்ண போற. அவளை நான் என்னோட தங்கச்சியா தான் பார்க்கிறேன் ஆனா எனக்கு தெரிஞ்ச அளவு கூட காதலிச்ச உனக்கு அவளை பற்றி தெரியலை? சொல்லுடா மகிழ் வாழ்க்கைக்கு என்ன பதில். அவளை நீ நரகத்தில இருந்து காப்பாத்துவேனு அவ நம்பினா ஆனா நீ அவளை இன்னும் இன்னும் மோசமான நரகத்திலே தள்ளிட்ட என அவன் சட்டையை பிடித்தான் நவீன் கோபத்துடன்.
No comments yet