read.cash Log in

@KingTamil

Joined 7 May 2020 · 101 posts

120 KT

0 KT · $3.44 received · 0 KT · $1.63 given

Posts

@KingTamil

Moodru Dinosar kalangal Tamil அதன்பின் அவள் தங்கள் அன்னை அல்ல என்று உணர்ந்து தூங்கிவிட்டன. மூன்று சிறகில்லா சிற்றுயிர்கள். ஆச்சரியமாக, அவை பறவைகள் அல்ல மூன்று டைனோசர்துளிகள் அவற்றின் பசி பயங்கரமானது. ஒருவகையான பிரபஞ்சப்பசி. அம்மாவும் அப்பாவும் மாறிமாறி வந்து ஊட்டிக்கொண்டே இருக்கின்றன. எவ்வளவு ஊட்டினாலும் போதாது. வளர்வன அனைத்தும் பசிகொண்டவை. பசி என்பது ஒரு வகை தீ. தீயால் வளராமலிருக்க முடியாது. அதற்கு திகழ்வதும் வளர்வதும் ஒன்றே. வீட்டுக்குள் மூன்று புதிய உயிர்கள். மூன்று டைனோசர்கள். ஆனால் நல்லவேளை அவற்றுக்கு சிறகு முளைத்துவிடுகிறது. பறந்தேயாகவேண்டும் என்ற நிலை வந்துவிடுகிறது. அவை டைனோசர் ஆவதில்லை. இனிய சிறிய கிள்ளைமொழிப் பறவைகளாகவே நீடிக்கின்றன

@KingTamil

Moodru Dinosar kalangal பல்லிகளை பற்றி பார்த்துக்கொண்டிருந்தேன். அவை டைனோசர் வம்சம் என்று தோன்றும். ஆனால் பல்லிகளைவிட பறவைகள்தான் டைனோசர்களுக்கு நெருக்கமானவை என்று தெரிந்துகொண்டேன். அவற்றின் கால்களும் நடையும் கழுத்தும் எல்லாமே டைனோசரின் நீட்சிகள். அலகு வந்தது, வால் அகன்றது. நேற்று காலை அருண்மொழி வந்து “குருவி குஞ்சு விரிஞ்சிருக்கு” என்றாள். “அப்டியா?நான் பாக்கலையே?”என்றேன் “கீ கீன்னு சத்தம் வந்திட்டே இருக்கு… நீ என்ன பாத்தே?”என்றாள் நான் சைதன்யாவிடம் சொன்னேன். அவள் உடனே சென்று நாற்காலியை இழுத்துப்போட்டு செல்பேசியில் புகைப்படம் எடுத்து வந்தாள். மூன்று வாய்கள் அவள் அசைவை கண்டதுமே திறந்திருக்கின்றன. அந்தப் படம் அவற்றின் அசைவால் மங்கலாகிவிட்டது

@KingTamil

Perum Sathanai Veerar Eliud Kipchoge Tamil Part 4 எலியட் கிப்சோகே ஒரு தேர்ந்த வாசகர்.அவர் பேசும்போது பல குறிப்போடு பேசுபவர்.தனது ஒவ்வொரு நாள் பயிற்சியையும் எழுதிவைத்துக் கொள்பவர்.தற்போது அவரிடம் பதினைந்து பயிற்சி ஏடுகள் உள்ளன. வருடத்திற்கு ஒன்று . ஆம் அவர் பயிற்சி ஆரம்பித்து பதினைந்து வருடங்களாகின்றன. அவருடைய ஒரு பதிவு  "***Motivation + Discipline = Consistency***". இதுவரை கிப்சோகே எந்த ஒரு ஊக்கமருந்து விசயங்களில் சிக்கதாவர். அவ்வாறே வருங்காலத்திலும் இருப்பார் என்று நம்பூவோம். பெர்லின் மரத்தான் முடிந்த பிறகு கிப்சோகே கொடுத்த பேட்டியில் வளரும் மரத்தான் வீரர்களுக்கு அவர் கூறிய அறிவுரை  "*Of course, training is important. But more important is the passion you put in it. You have to strongly believe that you are able to make it and be able to run this distance. That’s the magic of a marathon."*  ஆம் மரத்தான் என்பது ஒரு மேஜிக் தான். இந்த சாதனை கொண்டாட பட  வேண்டியது. கொண்டாடுவோம் .

@KingTamil

Perum Sathanai Veerar Eliud Kipchoge Tamil எலியட் கிப்சோகே கென்யா நாட்டுக்காரர். நான்கு பிள்ளைகளில் இவரே கடைசி.அம்மா ஒரு ஆசிரியை . தந்தையை சிறு வயதிலேயே இழந்தவர். பள்ளிக்கு தினமும் ஓடியே சென்றார். மற்ற நேரங்களில் பால் விற்று தன்னால் முடிந்த பொருளாதார பங்களிப்பை குடும்பத்திற்கு வழங்கினார். தனது பதினாறாவது வயதில் பேட்ரிக் சங் (Patrick Sang) என்ற பயிற்சியாளரை சந்தித்து தனது ஆர்வத்தை தெரிவித்தார். பேட்ரிக் சங் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவர் . பேட்ரிக் சங் கிப்சோகேவிற்கு பயிற்சி அளிக்க ஆரம்பித்தார். அவர்களது கூட்டணி இன்றும் தொடர்கிறது. எலியட் கிப்சோகே பலமுறை உலக சாதனையை நூலிலையில் தவறவிட்டவர்.இந்த சூழ்நிலையில்தான் பெர்லின் மரத்தானில் மீண்டும் தான் பங்கேற்கப் போவதாக அறிவித்தார்.அப்போதே ரசிகர்கள் இது எலியட் கிப்சோகேவின் உலகசாதனை முறை என்றனர்.

@KingTamil

Colorless Tsukuru Tazaki and His Years of Pilgrimage Part 3 Tamil முரகாமி தனக்கே உரிய பாணியில் பலவித உளவியல் விசயங்களை சுக்குரு மூலம் விவரித்துள்ளார். ஒருவனை அவன் யாரென்று எப்படி மற்றவர்கள் முடிவு செய்கிறார்கள் என்பதையும் அந்த நான்கு நண்பர்களின் முடிவுகொண்டு விவரித்துள்ளார்.கனவில் வரும் கற்பழிப்புகள் மற்றும்  தன் புதிய ஆண் நண்பருடன் உறவு பற்றிய விவரங்கள் ஏன் என்றே தெரியாமல் தவிக்கும் சுக்குரு. ஏன் இந்த கனவுகள் வந்துகொண்டே இருக்கிறது என்று அவனுக்கு புரியவே இல்லை. இந்த பயணம் மற்றும் சந்திப்புக்கள் அவனுக்கு அமைதி தந்ததா ?  என்ற கேள்வி தொங்கிக்கொண்டே இந்த நாவல் முடிகிறது. முரகாமிக்கே உரிய நடையில் முடிகிறது. என்னைப் பொறுத்தவரை சுக்குரு தனது மன அமைதியை கண்டுகொண்டான் என்றுதான் தோன்றுகிறது. ஆனால் அவன் தேடல் நிற்கவே நிற்காது. அவனுடைய குணம் அப்படிதான் அவன் அதை அறியாவிட்டாலும்.

@KingTamil

Colorless Tsukuru Tazaki and His Years of Pilgrimage காதலியின் உந்துதலால் பதினாறு வருடங்களுக்கு பிறகு தனது பால்ய நண்பர்களை ஒவ்வொருவராக சென்று பார்க்கிறான்.ஒவ்வொருவரும் தங்கள் பார்வையில் நடந்தவற்றை விளக்குகிறார்கள். அவர்கள் சொல்லும் காரணம் அவனுக்கு அதிர்ச்சியளிக்கிறது. அவர்களின் ஒற்றுமைக்காக அவன் பலிகடாக்கப்படுகிறான்.ஒன்றன்பின் ஒன்றாக தனது ஆழ்மனதில் இருந்த ரகசியங்களும் அவனுக்கு வெளிப்படுகிறது. தான் யார்? தனது கடந்த காலம் எத்தகையது ? என பல கேள்விகள் அவனுள் எழுகிறது.அவன் தன்னைப்பற்றி மேலும் பல விவரங்களை தெரிந்துகொள்கிறான். மற்றொரு முக்கிய கதாப்பாத்திரம் ஹைடா. நீச்சல் குளத்தில் சந்தித்து நண்பனானவன். அவர்கள் இருவரும் மிகவும் நெருங்கி பழகுகிறார்கள். ஹைடவும் திடீரென அவனை விட்டுச் செல்கிறான். அவன் ஏன் அப்படி செய்தான்? அவனுக்கு இவன்மேல் காதலா? அல்லது சுக்குருவின் கனவு ஹைடாவிற்கு எவ்வகையிலோ தெரிந்தா? பல கேள்விகளுடன் அந்த உறவு முடிகிறது.ஹைடாவிற்கும் மற்ற நான்கு நண்பர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றபோது ஏன் இந்த ஹைடா கதாப்பாத்திரம் இடையில் வருகிறது?

@KingTamil

Perum Sathanai Veerar Eliud Kipchoge Tamil Part 3 இந்த பெர்லின் மரத்தானைப் பொறுத்தவரை சிறப்பு என்னவென்றால்  கிப்சோகே எந்த திட்டமுமின்றி ஓடியதுதான். எனக்கு அப்படிதான் படுகிறது. ஏனென்றால் தொடக்கமுதல் இறுதிவரை அவரின் வேகம் குறையவே இல்லை. ஒரு இடத்தில் கிப்சோகேவிற்கு தண்ணீர் கிடைக்கவில்லை மற்றும் படிப்படியாக pacemakers-சும் ஒருவர்பின் ஒருவராக நின்றுவிட்டனர்.இருந்தும் கிப்சோகே எந்த சலனமும் அடையாமல் ஓடினார் அவரது ஒரே எதிரி நேரம்தான். அவர் சோர்வடைந்ததற்கான எந்த அறிகுறியும்(தோல்பட்டை சுருங்குவது, கால்கள் தடம் மாறுவது ) இல்லாமல் இறுதிக் கோட்டைக்  கடந்தார் . கடந்த பிறகும் நிற்காமல் ஓடி தனது பயிற்சியாளரை கட்டித் தழுவினார். அந்த புகைப்படம் ஒரு ஆவணம் .இனி வரும் வீரர்களுக்கு அது ஊக்கத்தைக் கொடுக்கும்.

@KingTamil

Perum Sathanai Eliud Kipchoge Tamil Part 1 நான் மிகவும் எதிர்பார்த்த மரத்தான் பந்தயம் இந்த வருட பெர்லின் மரத்தான்தான் அதற்கு காரணம் எலியட் கிப்சோகே. மரத்தான் தொடங்குவதற்கு சில நாட்கள் முன்னரே உலக சாதனைப் பற்றிய பேச்சுக்கள் தொடங்கின அது மேலும் ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டியது. Nike-ன் இரண்டுமணிக்குள் மரத்தான் பந்தயத்தில் முதலாவதாக வந்தவர்தான் இந்த எலியட் கிப்சோகே. அது மட்டும் அவரது சாதனை அல்ல. இவர் பங்கேற்ற 11 மராத்தானில் 10ல் முதலிடம். இப்போது பல நிபுணர்கள் இவரே அகச் சிறந்த மரத்தான் வீரர் என்கின்றனர். ***Only the disciplined ones in life are free. If you are undisciplined, you are a slave to your moods and your passions - Kipchoge***

@KingTamil

Perum Sathanai Veerar Eliud Kipchoge Tamil Part 2 எதிர்பார்த்தது போல எலியட் கிப்சோகே உலக சாதனை புரிந்தார். ஆனால் யாரும் எதிர்பார்க்காதது அவர் எடுத்துக்கொண்ட நேரம்  - 2:01:39 (மனுசன் மெஷின் மாதிரி ஓடிருக்காப்ல ). இதில் மேலும் ஆச்சிரியமென்றால் இறுதி 17 கிலோமீட்டர் அவர் ஒருவரே தனியாக ஓடியதுதான். அவரோடு எந்த pacemaker-ம் ஓடவில்லை.  Pacemakers என்பவர்கள் முன்னிலையில் இருக்கும் வீரர்களுக்கு ஊக்கம் தருவதற்காக அவர்களுடைய வேகத்திலேயே சில கிலோமீட்டர்கள் ஓடுபவர்கள். வெவ்வேறு வேகத்திற்கு வெவ்வேறு pacemakers உண்டு. கீழே எலியட் கிப்சோகேவின் பெர்லின் மரத்தான் ஐந்து கிலோமீட்டர் அதாவது ஒவ்வொரு ஐந்து கிலோமீட்டரைக் கடப்பதற்கு கிப்சோகே எடுத்துக்கொண்டது சராசரியாக 14:24:90 நிமிடங்கள்(!). மேலேயுள்ள புள்ளிவிவரத்தில் மற்றொன்று முக்கியமானது அவர் இரண்டாது பாதியை முதல் பாதியைவிட விரைவாக கடந்தது. இதற்கு முந்திய உலக சாதனை நேரம் 2:02:57 . டெனிஸ் கிமெட்டோ என்பவரால் 2014 பெர்லின் மரத்தானில் நிகழ்த்தப்பட்டது.இப்போது அதை கிப்சோகே 2:01:39-ஆக குறைத்துள்ளார். அதாவது முந்தையதை விட 78 வினாடிகள் குறைவு. இந்த மாதிரி உலக சாதனைகளுக்கிடையே  பெரிய வித்யாசம் வருவது 1967-ற்கு பிறகு இப்போதுதான்.

@KingTamil

Colorless Tsukuru Tazaki and His Years of Pilgrimage Part 4 Tamil எல்லா முரகாமியின் நாவலிலுள்ளது போல இதிலும் இசை முக்கிய கதாப்பாத்திரம்.இந்த நாவலில் பிரான்ஸ் லிஸ்ஸ்ட்டின்  (Franz Liszt ) Le mal du pays என்ற இசைக்கோவை வந்து கொண்டே இருக்கிறது. இந்த இசைக்கோவை  "Years of Pilgrimage" என்ற தொகுப்பில் உள்ளது. அற்புதமான பியானோ இசை இந்த நாவலை வாசிக்கும்போது பெரும்பாலும் நான் இந்த இசையைக் கேட்டேன் . நாவலில் இரண்டு விசயங்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது . முதலாவது சுக்குருவின் வேலை - இரயில் நிலையம் வடிவமைப்பது. ஜப்பானில் ஒவ்வொரு ரயில் நிலையமும் ஒரு குட்டி கவிதையைப் போல அதிலும் நாகனோவிற்கு செல்லும் வழியிலுள்ள நிலையங்கள் மேலும் அழகு.சுக்குரு தன் வேலையை விரும்பி செய்கிறான். இரண்டாவது அவன் வார இறுதியில் தவறாமல் செய்யும் நீச்சல். நீச்சல் அவனுக்கு ஒரு புது உலகத்தைக் காட்டுகிறது. நீச்சலைப் பற்றி முரகாமி மிகவும் அழகாக எழுதியுள்ளார். நாவலில் சில இடங்களில் தட்டையான எழுத்துநடை இருந்தாலும்  பல இடங்களில் கவித்துவமான எழுத்துநடை நல்ல வாசிப்பு அனுபவத்தைத் தருகிறது. https://www.youtube.com/watch?v=XZlO_mNYCL8

@KingTamil

Colorless Tsukuru Tazaki and His Years of Pilgrimage அது என்னவோ தெரியல  ஹருகி முரகாமி புத்தகம் என்றால் என்னை அறியாமலே வாசிக்க ஒரு ஆர்வம் . அந்த ஆர்வத்தில்தான் இந்த புத்தகத்தைப்  பார்த்தவுடன் வாசிக்க ஆரம்பித்தேன். இவருடைய முக்கிய கதாபாத்திரங்களில் ஒரு விதமான dullness இருக்கும் இதிலும் அப்படித்தான். சுக்குரு ஒரு என்ஜினீயர் ரயில் நிலயம் வடிவமைப்பவன். முப்பத்தியாறு வயதானவன்.அவனது வாழ்கை ஒரேவிதமான வழக்கங்களை (monotonous routine ) கொண்டது. அவனது தற்போதைய காதலி அவனைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக அவனது கடந்த காலத்தைப் பற்றி கேட்கிறாள். சுக்குரு தனது நெருங்கிய நண்பர்கள் தன்னை திடீரென ஒதுக்கி வைத்துவிட்டார்கள் தானும் ஏன் எதற்கு என்று கேட்கவில்லை என்கிறான். சுக்குரு தன்னிடம் எந்த தனித்திறமையும் கலையறிவும் இல்லை என்று நம்புபவன்.மற்றவர்களோடு சரியாக பழகாதவன். அவர்கள் ஐந்துபேர் மூன்று ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள்.அவர்கள் ஒரு கட்சிதமான பென்டகன் (Pentagon )போல. அவர்களுக்குள் ஒரு எழுதப்படாத விதி தங்களுக்குள் யாரும் dating செய்யக்கூடாது.சுக்குருவை தவிர அனைவரின் பெயர்களிலும் வண்ணத்தின் பெயருள்ளது. அதுவே தன்னை அவர்களிடமிருந்து பிரித்துக்காட்டுகிறது என்று நினைக்கிறான். ஏன் அவர்கள் தன்னை திடீரென ஒதுக்கிவைகிறீர்கள் என்று கேட்க தைரியமில்லாதவன்.

@KingTamil

Pedik comparify Tamil நேற்றே இன்று கண்டிப்பாக ஓட வேண்டுமென்று முடிவு செய்துவிட்டேன். ஓட தொடங்கியபோது "முத்து மணி மாலை" ஆரம்பித்தது. எனக்கு பிடித்த பாடல்களில் ஒன்று. அப்படியே "சின்ன கவுண்டர்" படம் மனதில் தோன்றியது. நான் எப்போது அந்த படம் முதலில் பார்த்தேன் என்று ஞாபகமில்லை. இப்போது இந்த படம் மனதில் வரக் காரணம் ஏதோ ஒரு சேனலில் "சின்ன கவுண்டர்" ,"தேவர் மகன் " போன்ற படங்களுக்கு பெரிதாக ஏதும் எதிர்ப்பு வரவில்லை ஆனால் "அசுரன்" பரியேறும் பெருமாள்" போன்ற படங்களுக்கு ஏன் பெரிய எதிர்ப்பு வருகிறது என்று ஒருவர்  கேட்டார். உண்மைதானே!  அசுரன் படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி மனதில் ஓடியது. என்ன ஒரு வெறித்தனம். அந்த மனிதனின் வாழ்நாள் கோபம்.தனுஷ் ஒரு மகா நடிகன்.

@KingTamil

Machan missai vicharuva Tamil மழை மேகம். குளிர் காற்று. ஓட ஆரம்பித்தவுடன் ஈரக் காற்று முகத்தில் அறைந்தது. ஓடிய கொஞ்ச நேரத்திலேயே இன்று இரவு செய்ய வேண்டிய அப்டேட் பற்றிய எண்ணம் வந்தது. இந்த கஸ்டமர் எப்பவுமே ஐந்து மணிக்கு மேல்தான் இதை செய் அதை செய்யென்று சொல்வார்கள். மற்றொரு இம்சை அவர்கள் ஆறு மணிக்குமேல் எந்த கேள்விக்கும் பதில் சொல்லமாட்டார்கள். அதனாலேயே வேகமாக ஓடினேன். எந்த எந்த புத்தகங்களை நூலகத்திற்கு திருப்பிக் கொடுக்க வேண்டுமென்று எண்ணம் வந்தது. பல புத்தகங்களைப் படித்தாயிற்று இன்னும் இரண்டு புத்தகங்களைப்  படிக்க வேண்டும். ரஸ்யா பற்றிய இரண்டு புத்தங்கள் அப்படியே உள்ளன. கண்டிப்பாக படிக்க வேண்டுமென்று எண்ணிக் கொண்டேவீட்டை அடைந்தேன்.

@KingTamil

Ayothi thirpu patri oru alsal Tamil ஓட ஆரம்பித்தவுடன் மனதில் தோன்றியது அயோத்தி தீர்ப்புதான் . தீர்ப்பை முழுவதுமாக இன்னும் படிக்கவில்லை.படிக்க வேண்டும்."A People's Constitution - Rohit De" என்ற புத்தகம்தான்  ஞாபகத்தில் வந்தது. இன்னும் முழுவதும் படிக்கவில்லை. சிக்னலில் நின்றிருக்கும் போது ஒரு பெண் சிவப்பு விளக்கு வந்த பிறகு வேகமாக ஓடிக் கடந்தார். நான் திருத்திரு என்று பார்த்துக் கொண்டிருந்தேன். சிக்னல் மாறிய பிறகு நான் அவரைக் கடந்து சென்றேன். அவர் என்னைப் பார்த்து கைகட்டிச் சிரித்தார். எதற்கு சிரித்தார் என்றே தெரியவில்லை. டிராபிக் விதியை மதித்ததற்கா என்று எண்ணிக்கொண்டே வீட்டை அடைந்தேன்.

@KingTamil

Katru vanga ponen oru kavithai Tamil பெடோக் ஜெட்டியை (jetty) தாண்டும்போதுதான் கவனித்தேன் என்னை தொடர்ந்து ஒருவர் என் பின்னால்  ஓடி வந்து கொண்டிருந்தார். நான் வேகத்தைக் அதிகரித்தேன்.அவரும் அதிகரித்தார்.இப்படியே அடுத்த நான்கு கிலோமீட்டர் ஓடினோம். நான் அவர் என்னைத் தாண்டி ஓடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தேன்.முடிவில் அவர் நின்றுவிட்டார். நான் திரும்பி வரும்போது அவரைப் பார்த்து கை அசைத்தேன் அவரும் திரும்பி சிரித்தார். நன்றாக விடிந்துவிட்டது. பெரும் எண்ணிக்கையில் மக்கள் ஓடிக்கொண்டிருந்தனர். கிழக்கு கடற்கரை பூங்காவில்  வரவர கூட்டம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. வேறு எங்கு சென்று ஓடலாம் என்று எண்ணிக்கொண்டே வீட்டை அடைந்தேன்.

@KingTamil

Manjil indha pavai endrum Tamil நேற்று ஓடவில்லை .ஞாயிறு இரவு முழுவதும் அலுவலக வேலை. ஓட ஆரம்பித்தவுடன் ஞாபகத்தில் வந்தது இரண்டு விசயங்கள். முதலாவது "Why the slowdown is in the Mind " என்று தலைப்பில் விவேக் கவுல் எழுதிய கட்டுரைதான். கிட்டத்தட்ட அனைத்து தொழில்களிலும் தொய்வு.  விவேக் கவுல் ஒவ்வொரு துறையாக அலசுகிறார். எக்கனாமிக்ஸ் தெரியாத எனக்கே ஓரளவு இந்த கட்டுரை புரிந்தது. என்னதான் அரசு செய்து கொண்டிருக்கிறது?! அவர் கூறுவது போல slowdown சென்று சொல்லியே slowdown ஆகியது என்று ஒருசில துறைகளைத் தான் சொல்லமுடியும். இரண்டாவது "The Telecom Tain Wreck" என்ற தலைப்பில் நவதா பாண்டே எழுதிய கட்டுரை. ஒரு துறையை எப்படியெல்லாம் வழிநடத்தக் கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டு இந்தியா டெலிகாம் இண்டஸ்ட்ரி தான். எப்படி அடுத்தடுத்து அரசுகள் தவறு மேல் தவறு செய்திருக்கிறார்கள் .இன்னும் செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதற்கு இத்துறை ஒரு எடுத்துக்காட்டு. இந்த இரண்டு கட்டுரைகளும் mint asia பத்திரிக்கையில் வந்துள்ளது. இந்த பத்திரிக்கையை முழுவதும் வாசிக்க வேண்டுமென்று எண்ணிக் கொண்டே அலுவலகம் அடைந்தேன்.

@KingTamil

Murth ina makkal Tamil ஓட ஆரம்பித்தவுடன் நினைவில் வந்தது குர்து மக்கள்தான். எல்லா பக்கங்களிலும் தாக்குதல். உலகத் தலைவர்கள் பெரும்பாலும் மக்களின் விருப்பங்களைக் கேட்பதில்லை.அப்படியே ராஜன்குறை மற்றும் யமுனா ராஜேந்திரனின் முகநூல் சண்டை ஞாபகத்தில் வந்தது. தேவையில்லாத ஒன்று. "ராஜராஜ சோழன் நான் " பாடல் ஒலிக்க ஆரம்பித்தபோது கவனம் அதில் சென்றது அப்படியே "Alex in Wonderland" ஜேசுதாஸ் பற்றிய யூடுப் வீடியோ ஞாபகத்தில் வந்தது. அலெஸ் ஒரு நல்ல மேடை நகைச்சுவை பேச்சாளர்.  நான் சிங்கப்பூர் வந்த பிறகுதான் இந்த மாதிரி  ஸ்டண்ட் அப் காமெடி பார்க்க ஆரம்பித்தேன். Kevin Hart, Russel Peters ,Joe Wong , Eddie Murphy மற்றும் பலரின் வீடியோவை பார்க்க ஆரம்பித்தேன். ஒரு மணி நேரத்திற்கு மேல் ஒரு கூட்டத்தைக் சிரிக்க வைப்பது எளிதல்ல. இவர்கள் அதை அழகாக செய்கிறார்கள். Alex in Wonderland முழுவதும் பார்க்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டே வீட்டைச் சென்றடைந்தேன்.

@KingTamil

Strange Weather in Tokyo Tamil Novel Part II சுசிக்கோ  பல முறை பல விசயங்களை பேச நினைத்து பேசாமல் போகிறாள்.ஆசிரியரோ தேவைக்கு அதிகமாக ஒரு வார்த்தை பேசமாட்டார். ***If not kept in check, night-time thoughts are prone to amplification.***  இருவரும் கதை முழுவதும் எதேட்ச்சையாகத்தான் சந்தித்துக் கொள்கிறார்கள் . சுசிக்கோ தன்னை அறியாமல் ஆசிரியரிடம் மிகவும் நெருக்கமாகிறாள். அவளுக்கு ஒருசில ஆண்களோடு உறவிருந்தது ஆனால் எதுவும் திருமணம் வரை செல்லவில்லை. ஆசிரியரோடு பழகும் போது அவளோடு படித்த ஒருவனோடு தொடர்பு ஏற்படுகிறது.அவனோடு இருந்தாலும் அவளுக்கு ஆசிரியரின் நினைப்பே வருகிறது. அவளே பல கேள்விகள் கேட்டுக்கொள்கிறாள். அவளோட தனிமைதான் இந்த உறவுக்கு காரணம் என்று நான் நினைக்கின்றான்.ஆசிரியருக்கோ(sensei) அவளை பற்றி அப்படி எண்ணம் இல்லை. அவர் தனது மனைவின் வாழ்கைப் பற்றி கூறுகிறார். ***It seemed as if we had ended up in a time that didn’t exist anywhere.*** அனைத்தையும் இருவரும் தெரிந்து கொண்டபின்னர் அவர்கள் "official relationship "என்று தங்களின் உறவை சொல்லிக்கொள்கிறார்கள்.சில ஞாபகங்கள் சில எதிர்பார்ப்புகள் என்று அவர்களின் நட்பு அப்படியே தொடர்கிறது.ஒரே அமர்வில் படிக்கக்கூடிய புத்தகம். மிக அழகாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது .கதை அப்படியொன்றும் புதிதானது இல்லைதான் ஆனால் சொல்லிய விதம்தான் சிறப்பு. ஒரு மெல்லிய புன்னையுடன் வாசிக்கக்கூடிய புத்தகம். அங்கங்கே ஹைக்கூ கவிதைகள் கதைக்கு மேலும் அழகு.கதையின் மற்றொரு சிறப்பு அதில் வரும் உணவைப் பற்றிய விவரிப்பு. ***Even a cracked pot has a lid that fits.*** வாசிக்கலாம்.

@KingTamil

Sanjaram S.Ramakrishnan Tamil Story Part II அந்த ஊர்க்காரர்கள் அவர்களை கட்டி வைத்து அடிக்கிறார்கள். பூசாரி அவர்கள் கட்டுகளை அவிழ்த்து  உதவி செய்கிறார். விழா மேடையை தீவைத்து விட்டு தப்பித்து சொல்கிறார்கள். அவர்கள் ஊர் ஊராக சுற்றுகிறார்கள். இந்த சுற்றல் வாழ்க்கைதான் நாவலின் கதை. ஒவ்வொரு அத்தியாமமும் ஒரு ஊர்பெயரில் தொடங்குகிறது. கரிசல் காட்டில் தொடங்கிய கதை கொடுமுடி, தொடுமாக்கல், தாம்பரம், வேப்பங்காடு, கோவை, நடுக்கோட்டை, மருதூர், டெல்லி, லண்டன் என பல இடங்களுக்கு பயணிக்கிறது.ஒவ்வொரு ஊரிலும் ஒரு கதை. எஸ்.ரா கதைக்குள் கதை சொல்வதில் வல்லவர் . அவருடைய மற்ற நாவல்களைப் போல இதிலும் அப்படியே.பல வகையான கதாப்பாத்திரங்கள் வருகின்றன ,ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைச் சொல்லிச் செல்கின்றனர். எங்கே சென்றாலும் அவர்களுக்கு இகழ்ச்சிதான். சாதியை சொல்லி திட்டுதல் ,பேசியே கூலியை கொடுப்பதில்லை ,திருமண வீட்டில் சாப்பிட போராட்டம் மாறும் பல இன்னல்கள்.  குழிக்கரை பிச்சையா, நல்லடை சண்முக சுந்தரம், வல்லம் தெட்சிணாமூர்த்தி,ஒதியூர் கண்ணுச்சாமி, சாமிநாதபிள்ளை, தன்னாசி போன்ற பல நாதஸ்வர ஜாம்பவான்கள் வருகிறார்கள். அவர்கள பற்றிய விவரங்கள் ஒவ்வொன்றும் அற்புதமானவை. "எப்படி  இருந்திருக்காங்க  இப்படி ஆயிட்டாங்களே " என்று மட்டும்தான் என்னால் சொல்ல முடிகிறது. இந்த புத்தகம்  சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளது. எஸ் ரா அதற்கு தகுதியானவர் என்பதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்

@KingTamil

The Great FireWall China Tamil Part II சீனாவில் Facebook ,கூகிள் மற்றும் ட்விட்டர் இல்லை .அதற்கு பதிலாக அவர்களால் அவர்களுக்கென்றே உருவாக்கப்பட்ட Baidu , WeChat மற்றும் Alibaba உள்ளன.  இந்நிறுவனங்கள்  மக்களின் அனைத்து இணைய செயல்பாடுகளையும் சீன அரசோடு பகிர்ந்து கொள்கின்றன.  சீன அரசு தனது விதிமுறைகளை ஏற்காத வெளிநாட்டு  நிறுவனங்களை அங்கே இயங்க அனுமதிக்கவில்லை. கூகிளின் கதை அதற்கு நல்ல எடுத்துக்காட்டு .சீன அரசையோ அல்லது சீனர்களைப் பற்றியோ ஏதாவது தவறாகவோ அல்லது மாற்றுக் கருத்தோ வெளியிட்டால் உடனே சீன அரச தீவிர நடவடிக்கை எடுக்கிறது. சீனாவிற்குள் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் சீன அரசு மாற்று கருத்து கொண்டவர்களை இணையம் மூலம் தண்டிக்கிறது. இதை பல எடுத்துக்காட்டுகளுடன் விளக்கியுள்ளார் ஜேம்ஸ் . சீனாவின் இந்த இணைய கட்டுப்பாட்டுத் திட்டம் மற்ற சர்வாதிகார அரசுக்கு பெரும் வரப்பிரசாதம். உகாண்டா ரஷ்யா போன்ற நாடுகள் சீனாவிடம் இருந்து இந்த டெக்னாலஜியை வாங்கி பயன்படுத்த ஆரம்பித்துவிட்டன. மற்ற நாடுகளில் மக்கள் இந்த மாதிரியான கட்டுப்பாடுகளை மிகவும் தீவிரமாக எதிர்த்தனர் ஆனால் பெரும்பான்மையான சீனர்கள் அப்படி எதிர்க்கவில்லை. அது ஒரு புரியாத புதிர். ஒரு சில நாட்கள் facebookயும் கூகிளையும் தடை செய்தாலே நாம் வெகுண்டு எழுகிறோம். டெக்னாலஜி எப்படியெல்லாம் நமது அனைத்து செயல்பாடுகளிலும் முக்கிய பங்கு பெறுகிறது  அதை எவ்வாறு அரசாங்கங்கள் கட்டுப்படுத்துகிறது என்பதை இந்த புத்தகத்தை விட தெளிவாக சொல்லிவிட முடியாது . அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம் .

@KingTamil

Strange Weather in Tokyo Tamil Novel ***If the love is true, then treat it the same way you would a plant- feed it, protect it from the elements- you must do absolutely everything you can. But if it isn’t true, then it’s best to just let it wither on the vine.*** மற்றொரு அழகிய ஜப்பானிய நாவல். அது என்னவோ தெரியல ஜப்பானிய நாவல்கள் என்றால் எனக்கு தனி விருப்பம்.புத்தகக் கடையில் இந்த புத்தகத்தின் அட்டை என்னை மிகவும் கவர்ந்தது. உடனே வாங்கி வாசிக்க ஆரம்பித்தேன்.  இது சுசிக்கோ என்ற பெண்ணுக்கும் அவளது பள்ளி ஆசிரியருக்கும் இடையே நடக்கும் கதை. இருவரும் bar-ல் சந்திக்கிறார்கள். அடிக்கடி சந்திக்கிறார்கள்.சுசிக்கோ திருமணமாகாதவள்.  தனக்கென்று ஒரு வீட்டில்  ஓரளவு  வாழ்வை திருப்திகரமாக வாழ்ந்து கொண்டிருப்பவள். பள்ளி ஆசிரியர் (sensei ) ஓய்வு பெற்றவர்,அவரும் தனியாக வாழ்கிறார்.  எப்போதும் கையில் ஒரு briefcase வைத்திருப்பார்.ஒரு ரசனையான மனிதர் .எதையும் ரசித்து ருசித்து அனுபவித்து செய்பவர். ***Everyone causes trouble for someone at some point in their lives.*** இந்த இருவரும் ஒருவரை ஒருவர் எவ்வாறு தெரிந்து புரிந்து கொள்கிறார்கள் என்பதுதான் இந்த புத்தகத்தின் கதை.இருவருக்கும் பல விசயங்களில் ஒரே மாதிரியான ரசனை. கதை நிகழும் இடம் டோக்கியோ மற்றும் சுற்றுப்புறம். முக்கியமான இடம் அந்த bar. மிக சில வரிகளில் மிக அழகாக இந்த இடங்களை ஹிரோமி விவரித்துள்ளார்.

@KingTamil

Running with Fresh mind Tamil மழை மேகம். குளிர் காற்று. ஓட ஆரம்பித்தவுடன் ஈரக் காற்று முகத்தில் அறைந்தது. ஓடிய கொஞ்ச நேரத்திலேயே இன்று இரவு செய்ய வேண்டிய அப்டேட் பற்றிய எண்ணம் வந்தது. இந்த கஸ்டமர் எப்பவுமே ஐந்து மணிக்கு மேல்தான் இதை செய் அதை செய்யென்று சொல்வார்கள். மற்றொரு இம்சை அவர்கள் ஆறு மணிக்குமேல் எந்த கேள்விக்கும் பதில் சொல்லமாட்டார்கள். அதனாலேயே வேகமாக ஓடினேன். எந்த எந்த புத்தகங்களை நூலகத்திற்கு திருப்பிக் கொடுக்க வேண்டுமென்று எண்ணம் வந்தது. பல புத்தகங்களைப் படித்தாயிற்று இன்னும் இரண்டு புத்தகங்களைப்  படிக்க வேண்டும். ரஸ்யா பற்றிய இரண்டு புத்தங்கள் அப்படியே உள்ளன. கண்டிப்பாக படிக்க வேண்டுமென்று எண்ணிக் கொண்டேவீட்டை அடைந்தேன்.

@KingTamil

Sanjaram Tamil Story Novel ஓடுவதற்கு ரெடியாகுமுன்பே heart rate monitor-ஐ பைக்குள் வைத்து விட்டேன். இன்றும் வானம் மேக மூட்டத்துடன் இருந்தது. மெதுவாகதான் ஓடவேண்டும் என்று முடிவெடுத்து மிக மெதுவாக ஓடினேன். "ஹவா ஹவா "  பாடல் ஆரம்பித்தவுடன் ஒரு புத்துணர்வு தொற்றிக்கொண்டது. வேகம் என்னை அறியாமலேயே கூடியது.பாட்டு முடியும் போது புளியம்தோப்பு பழனியின் பாடல்கள்தான் மனதில் வந்தது. இந்த இரு குரல்களுக்கும் ஒருவிதமான வசீகரம். சிறுவயதில் எங்கள் பெரியப்பா புளியம்தோப்பு பழனியின் பாடல்களை கேசட் பிளேயரில் அடிக்கடி போடுவார்.அப்படியே பெரியாப்பாவின் ஞாபகம் வந்தது. என் பெற்றோரை அடுத்து அதிகம் நேசிக்கும் முந்தின தலைமுறை நபர். அப்பாவின் பெரியம்மா பையன்.பெரும் ரசனைக்காரர். அனைத்தையும் ரசித்து செய்பவர்.பெரியப்பா பாடுவதை கேட்பது ஒரு சுகம். எனக்கு தெரிந்து ஊரில் புத்தகம் படிக்கும் சிலரில் பெரியப்பாவும் ஒருவர். பெரியப்பா மூலம் தான் இந்தியா டுடே ,தமிழன் எக்ஸ்பிரஸ் மற்றும் பல மாத/வார பத்திரிகைகள் அறிமுகமானது.மீனவர்கள் பற்றிய ஏராளமான புத்தகங்களை வைத்திருப்பார்.  ஊருக்கு எப்போது சென்றாலும் முதலில் போகும் வீடு பெரியப்பா வீடுதான். பெரியப்பாவை நினைத்துக் கொண்டே அலுவலகம் அடைந்தேன். https://www.youtube.com/watch?v=lrusoeIvetQ https://www.youtube.com/watch?v=y4gdYO5cwTk

@KingTamil

The Great FireWall China Tamil Part 1 சீனாவின் இணைய கட்டுப்பாடு எல்லோருக்கும் தெரிந்ததுதான் ஆனால் எவ்வாறு சீன கம்யூனிச அரசு அதை வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருக்கிறது என்பது ஒரு புரியாத புதிர்.இந்த புத்தகம் அதற்கு பதில் சொல்ல முயற்சித்திருக்கிறது. இணையம் பரவலாக உபயோகத்தில் வந்தவுடன் பலரும் எதிர்பார்த்தது செய்திகளும் மக்கள் தொடர்பும் அனைவருக்கும் எளிதாகவும் தடையில்லாமலும் கிடைக்குமென்று. அது ஓரளவு நடந்ததென்றாலும் பல நாடுகள் இணையத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தன ஆனால் யாரும் சீனாவைப்போல் வெற்றிபெறவில்லை. சீன இணைய வளர்ச்சிக்கு முக்கிய காரணம் அமெரிக்க நிறுவனங்கள்தான். அவைதான் இணைப்புக்கு தேவையான அனைத்து hardwares மற்றும் சாப்ட்வேர்களை கொடுத்தார்கள்.  சீன அரசு  விரைவிலையே இணையத்தின் சக்தியைப் புரிந்து கொண்டனர். இதில் என்ன கொடுமையென்றால் அந்த சாப்ட்வேர் மற்றும் hardware - லேய in-build சென்சார் இருந்தன . படிப்படியாக கட்டுப்பாடுகளை விதித்தனர். இணைய கட்டுபாட்டிற்கென்றே அரசில் தனி பிரிவுகள் தொடங்கப்பட்டன. இணையம் பெரிதாக அரசும் அதைப் பெரிதாக கட்டுப்படுத்தியது.

@KingTamil

Hector & The Search For Happiness - Francois Lelord Tamil Novel Part 1 ஹெக்டர் ஒரு மனநல மருத்துவர். எல்லோரின் கவலைகளையும் பொறுமையுடன் கேட்பவர்.கேள்விகளைக் கேள்விகளால் எதிர் கொள்பவர்.  அவரிடம் வரும் அனைவருமே தாங்கள் மகிழ்ச்சியாகவில்லை என்றே கூறுகிறார்கள். அதனால் மகிழ்ச்சி என்றால் என்ன என்று அறிய ஒரு பயணம் செய்கிறார் அது தான் இந்த நாவலின் கதை. ***“The basic mistake people make is to think that happiness is the goal!”*** முதலில் சீனா செல்கிறான் அங்கு அவனது நண்போனோடு சுற்றுகிறான். அவன் நண்பன் வேலை வேலை என்று அலைபவன் . அதற்கு  அவன் கூறும் காரணங்கள் நம்மில் பலருக்கும் பொருந்தும். ஒரு பெண்ணோடு உறவு கொள்கிறான் அவளின் கதையைக் கேட்டு வருந்துகிறான். ஒரு புத்தத் துறவியை சந்திக்கிறான். அவர் பயணத்தின் இறுதியில் தன்னை வந்து சந்திக்குமாறு சொல்கிறார்.அடுத்து ஒரு ஆப்பிரிக்க நாட்டிற்கு செல்கிறன் அங்கு மற்றொரு நண்பனை சந்திக்கிறான். அவன் ஒரு மருத்துவர். மற்றொரு பெண்ணையும் அங்கு சந்திக்கிறான் ஏழ்மையில் இருந்தாலும் அவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் அந்த நிகழ்வுகளை மகிழ்ச்சியா இல்லையா என்று எழுதிவைத்துக் கொள்கிறான். அமெரிக்கா செல்கிறான் அங்கு தனது முன்னாள் காதலியின் வீட்டில் தங்குகிறான். அவளை தான் சரியாக புரிந்துக் கொள்ளவில்லை என்று எண்ணுகிறான். அவளது கணவன் மகிழ்ச்சியை கணக்கிட  ஒரு பார்முலா உருவாக்கலாம் என்று சொல்லி தான் எழுதிய பட்டியலைக் கேட்கிறான். இருவரும் சேர்ந்து ஒரு பார்முலா உருவாக்க முயல்கிறார்கள். ஹெக்டருக்கும் மகிழ்ச்சி பற்றி ஆராய்ச்சி செய்பவருக்கும் நடக்கும் உரையாடல் ஹெக்டரை தன் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்க வைக்கிறது. பயணம் முடிந்து அவன் புத்துயிர் பெற்று  மீண்டும் தனது மனநல மருத்துவத்தை தொடங்குகிறான். தனது காதலியுடன் வாழ்வை இனிதாக ஆரம்பிக்கிறான். பயணம் அவனை மாற்றியது .  இந்த கதையில் எதையுமே ஆழமாக ஆராயவில்லை எல்லாமே மேலோட்டமாக சொல்லப்படுகிறது. அதுவே இப்புத்தகத்தை சிரமமில்லாமல் படிக்க முடிகிறது என்று நான் நினைக்கிறேன்.வாசிக்கும் போது  பல இடங்களில் சத்தமாக சிரித்தேன். இந்த புத்தகம் பிரெஞ்சில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளது .ஒரே அமர்வில் வாசிக்க கூடிய புத்தகம்.

@KingTamil

Daily Walking Habits Tamil வாக்மேன் இல்லாமல் ஓடலாம் என்று முடிவு செய்து அப்படியே அது இல்லாமல் ஓடினேன். நல்ல வெய்யில். சீராக ஒரே வேகத்தில் ஓடினேன். வாசித்துக் கொண்டிருக்கும் "நான்காம் சுவர்" புத்தகத்தில் வருபவர்கள் மனதில் வந்து கொண்டே இருந்தார்கள். அந்த மாதிரி பலரை நானும் பார்த்திருக்கிறேன். அலுவலகம் வரும் வரை வேறு எதையும் எண்ணவில்லை. ஒரு விதமான கம்பீரம் ஒரு வகையான சோகம் கலந்த இசை. எனக்கு நாதஸ்வரத்தையும் வித்துவான்களைபயும் பற்றி ஒன்றும் தெரியாது. பலமுறை கேட்டதுண்டு. இதுவே நாதஸ்வரத்திற்கும் எனக்கும் உள்ள உறவு. ரத்தினம் என்ற நாதஸ்வர கலைஞர் பிடரியில் அடி வாங்குகிறார். இதுவும் இந்த சொற்களோடு "தாயோளி, நிறுத்துறா, சாமிக்கு யாரு வில்லு குடுக்கிறதுங்கிற பிரச்சனையே முடியல,

@KingTamil

Sanjaram S.Ramakrishnan Tamil Novel Story நான் கிளாசிக்கல் இசை கேட்க ஆரம்பித்தப் போது வாங்கிய முதல் இரண்டு இந்திய இசை சிடிக்கள் திருவாரூர் ராஜரத்தினம் பிள்ளையின் நாதஸ்வர இசை தொகுப்பும் விக்கு விநாயகத்தின் கடம் இசை தொகுப்பும்தான். நாதஸ்வர இசைக்கு ஒரு விதமான ஈர்ப்பு தன்மை உண்டு. ஒரு விதமான கம்பீரம் ஒரு வகையான சோகம் கலந்த இசை. அதுக்குள்ளே வாயில வச்சி ஊத ஆரம்பிச்சிட்டீங்க" .இந்த முதல் பத்தியிலேயே .எஸ்.ரா நாவலின் கதையை சொல்லிவிடுகிறார். இந்த நாவல் நாதஸ்வர கலைஞர்களின் இன்றைய நிலையை தெளிவாக பிரதிப்பலிக்கிறது. பக்கிரி மற்றும் ரத்தினம் இருவரும் நாதஸ்வர கலைஞர்கள். ஒரு ஊர் திருவிழாவிற்கு சென்றபோது மேல் சாதியினருக்கு இடையே நடந்த சண்டையில் இவர்கள் சிக்கிக் கொள்கிறார்கள்

@KingTamil

Running without Aim Tamil மழை மேகம். ஓட ஆரம்பித்தபோதே இந்தியாவின் புதிய அணு ஆயுதங்களான "Arihant-class" நீர்முழ்கி படை(Arihant class submarine fleet) மற்றும் அக்னி ஐந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (Agni - 5 intercontinental ballistic missile) பற்றிதான் எண்ணத்தில் தோன்றியது.இந்த இரண்டு ஆயுதங்களின் விலை கிட்டத்தட்ட 14 பில்லியன் அமெரிக்க டாலர். இது தேவைதானா? ஏற்கனவே இருக்கும் பல அணு ஆயுதங்களே போதுமானதுதான். இந்தியாவிடம் கிட்டத்தட்ட 10 அக்னி-III (5000 கி மீ  செல்லக் கூடியது),16 அக்னி-II(2000 கி மீ  செல்லக் கூடியது) 20 அக்னி-I (குறுகிய தூரம்) மற்றும் 24 ப்ரித்வி-II (Prithvi-II) உள்ளது. அனைத்தும் பாக்கிஸ்தான் மற்றும் சீனாவை நோக்கியே நிறுத்தப்பட்டுள்ளது என்று படித்த ஞாபகம்.   இந்திய இராணுவத்தை நவீனமாக்க இந்த பணத்தை உபயோகித்தால் நன்றாக இருக்குமென்று நினைத்துக் கொண்டே அலுவலகத்தை அடைந்தேன்.

@KingTamil

How Democracies Die - Steven Levitsky & Daniel Ziblatt ஒரு நாடு எப்படி ஜனநாயகத்திலிருந்து சர்வாதிகாரத்திற்கு மாறுகிறது என பல எடுத்துக்காட்டுகளுடன் விளக்குகிறார்கள் ஆசிரியர்கள்.  சர்வாதிகார நடத்தையின்  நான்கு அறிகுறிகள் என ஆசிரியர்கள் கூறுவது: 1.Rejection of ( or weak commitment to) democratic rules of the game.   ஜனநாயக விதிகளை நிராகரித்தல். 2.Denial of the legitimacy of political opponents.  எதிர்கட்சிகளை சட்டவிரோதமாக்குதல். 3.Toleration or encouragement of violence. வன்முறையை ஆதரித்தல். 4.Readiness to curtail civil liberties of opponents including media. ஊடகங்கள் மற்றும் சமூகத்தினரின் தனி உரிமைகளை குறைப்பது இன்று உலகத்தில் பல நாடுகளின் தலைவர்கள் மேல கூறியுள்ளவற்றை செய்கிறார்கள். இன்று இது பெரும்பாலும் வலதுசாரிகளால் மேற்கொள்ளப்படுகிறது. ஐரோப்பா மற்றும் லத்தின் அமெரிக்க நாடுகளின் அரசியலைப் சார்ந்து தான் இந்த புத்தகத்தை எழுதியுள்ளனர்.  அமெரிக்காவில் அரசியலமைப்பு எவ்வாறு பல உருவாக்கப்பட்டது அதை அரசியல் கட்சிகளும் தலைவர்களும் எப்படி பயன்படுத்தினர் என்பதை விரிவாக எழுதியுள்ளனர். “Institutions become political weapons, wielded forcefully by those who control them against those who do not. This is how elected autocrats subvert democracy—packing and “weaponizing” the courts and other neutral agencies, buying off the media and the private sector (or bullying them into silence), and rewriting the rules of politics to tilt the playing field against opponents. The tragic paradox of the electoral route to authoritarianism is that democracy’s assassins use the very institutions of democracy—gradually, subtly, and even legally—to kill it.” அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டதை விட குறிப்பிடப்படாதது அதிகம். அதனால் தலைவர்கள் சிலவற்றை எக்காரணத்தைக் கொண்டும் செய்வதில்லை அதற்கு சட்டத்தில் இடம் இருந்தாலும். அப்படிதான் பெரும் பிரச்சனைகளை அமெரிக்க கட்சிகள் எதிர்கொண்டன. ஆனால் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அது மாறி தேர்தல் வெற்றியே கட்சிகளின் ஒரே குறிக்கோளானது. அதனால் அனைத்து வகையான மீறல்களும் தொடங்கின. ஒரு நல்ல ஜனநாயகத்திற்கு முக்கியம் பரஸ்பர சகிப்புத்தன்மை (Mutual toleration ) மற்றும் நிறுவன பொறுமை (Institutional forbearance) என்கிறார்கள் இவ்விருவரும்.  பரஸ்பர சகிப்புத்தன்மை என்பது "the idea that as long as our rivals play by constitutional rules, we accept that they have an equal right to exist, compete for power and govern. We may disagree with , and even strongly dislike, our rivals, but we nevertheless accept them as legitimate.This means our political rivals are decent, patriotic, law abiding citizens that they love our country and respect Constitution just as we do." நிறுவன பொறுமை (Institutional forbearance) என்பது "avoiding actions that , while respecting the letter of the law, obviously violates its spirit. When norms of forbearance are strong, politicians do not use their institutional prerogatives to the hilt, even if it is technically legal to do so, for such action could imperil the existing system." நாம் இந்த அளவுகோல்களை பல நாடுகளின் அரசியலில் பொருத்தி பார்த்தால் தெரியும் இன்று ஜனநாயகம் எப்படி இருக்கிறதென்று. அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம் .

@KingTamil

IF Cat Disappeared From the world இரண்டாவது அனைத்து திரைப்படங்களும்  மறைய வைக்கப் போவதாக சொல்லி அதற்கு முன் அவன் விரும்பிய படத்தை ஒருமுறை பார்க்கலாம் என்கிறது. அவன் "Limelight" என்கிற சார்லி சாப்ளின் படத்தை தேர்வு செய்து முன்னாள் காதலி வேலை செய்யும் திரை அரங்கிற்கு செல்கிறான். ஆனால் அங்கு சென்றபின் தான் தெரிகிறது. அந்த dvd கவரில் ஒன்றும் இல்லையென்று. அப்போது தன் அப்பாவோடு பார்த்த திரைப்படம் ஞாபகத்தில் வருகிறது. அவனுக்கு கண்ணீர் வழிந்தோடுகிறது. மூன்றாவதாக அனைத்து கடிகாரங்களையும்  மறையவைக்கிறது அலோஹா. அவன் நேரமே ஒன்று இல்லாததாக உணர்கிறான். நேரம் என்பதை மனிதன் இயற்கைக்கு எதிராக ஏற்றுக் கொண்டுவிட்டான் என்று எண்ணுகிறான்.  அவனது அப்பா கடிகாரங்கள் சரி செய்பவர். அவருக்கு என்ன ஆகும்?நான்காவதாக அனைத்து பூனைகளையும் மறையவைக்கிறது அலோஹா. அப்போது அவன் அவனுக்கும் பூனைகளுக்குமான உறவைப் பற்றி சிந்திக்கிறான். அவனது தாய் இறந்த பிறகு அவனோடு இருப்பது ஒரு பூனை மட்டும்தான் . அவனது தாய் ஒரு பூனை வந்த பிறகே மீண்டும் புத்துயிர் பெற்றாள். அவன் வாழ்க்கையில் பூனைகள் பெரும் பங்கு வகிக்கிறது. அவனுக்கு தனது பூனையின் இழப்பை தாங்கிக் கொள்ள முடியவில்லை. கதையின் இடையில் அவனின் பூனை அவனோடு பேசுகிறது. ***Love has to end. That’s all. And even though everyone knows it they still fall in love. I guess it’s the same with life. We all know it has to end someday, but even so we act as if we’re going to live forever.*** இறுதியாக அவன் இந்த உலகைவிட்டு மறைவதற்கு முன் தன் அப்பாவிற்கு கடிதம் எழுத ஆரம்பிப்பதோடு கதை முடிகிறது. அப்பா நான்கு தெரு தாண்டிதான் இருக்கிறார் ஆனால் கடந்த நான்கு வருடங்களில் ஒருமுறை கூட அவரை சென்று பார்க்கவில்லை . எப்பவோமே நாம் நம் அருகில் இருப்பதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவே மாட்டோம்  ஆனால் அது அல்லது அவர்கள் இல்லாமல் போகும்போது தான் அதன்/அவர்களின் சிறப்பை நாம் உணர்வோம். நாம் வாழ்வில் எது முக்கியம் என்று நாம்தான் முடிவு செய்ய வேண்டும். சிறந்த உறவுகள்தான் வாழ்க்கை மிகவும் முக்கியம் இக்கதையும் அதையே சொல்கிறது .