Moodru Dinosar kalangal Tamil
அதன்பின் அவள் தங்கள் அன்னை அல்ல என்று உணர்ந்து தூங்கிவிட்டன. மூன்று சிறகில்லா சிற்றுயிர்கள். ஆச்சரியமாக, அவை பறவைகள் அல்ல மூன்று டைனோசர்துளிகள் அவற்றின் பசி பயங்கரமானது. ஒருவகையான பிரபஞ்சப்பசி. அம்மாவும் அப்பாவும் மாறிமாறி வந்து ஊட்டிக்கொண்டே இருக்கின்றன. எவ்வளவு ஊட்டினாலும் போதாது. வளர்வன அனைத்தும் பசிகொண்டவை. பசி என்பது ஒரு வகை தீ. தீயால் வளராமலிருக்க முடியாது. அதற்கு திகழ்வதும் வளர்வதும் ஒன்றே. வீட்டுக்குள் மூன்று புதிய உயிர்கள். மூன்று டைனோசர்கள். ஆனால் நல்லவேளை அவற்றுக்கு சிறகு முளைத்துவிடுகிறது. பறந்தேயாகவேண்டும் என்ற நிலை வந்துவிடுகிறது. அவை டைனோசர் ஆவதில்லை. இனிய சிறிய கிள்ளைமொழிப் பறவைகளாகவே நீடிக்கின்றன
1 comment
Dont understand the language! But it would be something great!