read.cash Log in
@KingTamil

Strange Weather in Tokyo Tamil Novel

***If the love is true, then treat it the same way you would a plant- feed it, protect it from the elements- you must do absolutely everything you can. But if it isn’t true, then it’s best to just let it wither on the vine.*** மற்றொரு அழகிய ஜப்பானிய நாவல். அது என்னவோ தெரியல ஜப்பானிய நாவல்கள் என்றால் எனக்கு தனி விருப்பம்.புத்தகக் கடையில் இந்த புத்தகத்தின் அட்டை என்னை மிகவும் கவர்ந்தது. உடனே வாங்கி வாசிக்க ஆரம்பித்தேன்.  இது சுசிக்கோ என்ற பெண்ணுக்கும் அவளது பள்ளி ஆசிரியருக்கும் இடையே நடக்கும் கதை. இருவரும் bar-ல் சந்திக்கிறார்கள். அடிக்கடி சந்திக்கிறார்கள்.சுசிக்கோ திருமணமாகாதவள்.  தனக்கென்று ஒரு வீட்டில்  ஓரளவு  வாழ்வை திருப்திகரமாக வாழ்ந்து கொண்டிருப்பவள். பள்ளி ஆசிரியர் (sensei ) ஓய்வு பெற்றவர்,அவரும் தனியாக வாழ்கிறார்.  எப்போதும் கையில் ஒரு briefcase வைத்திருப்பார்.ஒரு ரசனையான மனிதர் .எதையும் ரசித்து ருசித்து அனுபவித்து செய்பவர். ***Everyone causes trouble for someone at some point in their lives.*** இந்த இருவரும் ஒருவரை ஒருவர் எவ்வாறு தெரிந்து புரிந்து கொள்கிறார்கள் என்பதுதான் இந்த புத்தகத்தின் கதை.இருவருக்கும் பல விசயங்களில் ஒரே மாதிரியான ரசனை. கதை நிகழும் இடம் டோக்கியோ மற்றும் சுற்றுப்புறம். முக்கியமான இடம் அந்த bar. மிக சில வரிகளில் மிக அழகாக இந்த இடங்களை ஹிரோமி விவரித்துள்ளார்.

1 comment

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.