Machan missai vicharuva Tamil
மழை மேகம். குளிர் காற்று. ஓட ஆரம்பித்தவுடன் ஈரக் காற்று முகத்தில் அறைந்தது. ஓடிய கொஞ்ச நேரத்திலேயே இன்று இரவு செய்ய வேண்டிய அப்டேட் பற்றிய எண்ணம் வந்தது. இந்த கஸ்டமர் எப்பவுமே ஐந்து மணிக்கு மேல்தான் இதை செய் அதை செய்யென்று சொல்வார்கள். மற்றொரு இம்சை அவர்கள் ஆறு மணிக்குமேல் எந்த கேள்விக்கும் பதில் சொல்லமாட்டார்கள். அதனாலேயே வேகமாக ஓடினேன். எந்த எந்த புத்தகங்களை நூலகத்திற்கு திருப்பிக் கொடுக்க வேண்டுமென்று எண்ணம் வந்தது. பல புத்தகங்களைப் படித்தாயிற்று இன்னும் இரண்டு புத்தகங்களைப் படிக்க வேண்டும். ரஸ்யா பற்றிய இரண்டு புத்தங்கள் அப்படியே உள்ளன. கண்டிப்பாக படிக்க வேண்டுமென்று எண்ணிக் கொண்டேவீட்டை அடைந்தேன்.
No comments yet