Perum Sathanai Veerar Eliud Kipchoge Tamil
எலியட் கிப்சோகே கென்யா நாட்டுக்காரர். நான்கு பிள்ளைகளில் இவரே கடைசி.அம்மா ஒரு ஆசிரியை . தந்தையை சிறு வயதிலேயே இழந்தவர். பள்ளிக்கு தினமும் ஓடியே சென்றார். மற்ற நேரங்களில் பால் விற்று தன்னால் முடிந்த பொருளாதார பங்களிப்பை குடும்பத்திற்கு வழங்கினார். தனது பதினாறாவது வயதில் பேட்ரிக் சங் (Patrick Sang) என்ற பயிற்சியாளரை சந்தித்து தனது ஆர்வத்தை தெரிவித்தார். பேட்ரிக் சங் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவர் . பேட்ரிக் சங் கிப்சோகேவிற்கு பயிற்சி அளிக்க ஆரம்பித்தார். அவர்களது கூட்டணி இன்றும் தொடர்கிறது. எலியட் கிப்சோகே பலமுறை உலக சாதனையை நூலிலையில் தவறவிட்டவர்.இந்த சூழ்நிலையில்தான் பெர்லின் மரத்தானில் மீண்டும் தான் பங்கேற்கப் போவதாக அறிவித்தார்.அப்போதே ரசிகர்கள் இது எலியட் கிப்சோகேவின் உலகசாதனை முறை என்றனர்.
No comments yet