அதற்கு காரணம் சினிமா என்பது என் ஊகம். 2.0 போன்ற ஒரு படம் வந்தால் சிலலட்சம் வாசகர்கள் உள்ளே வருகிறார்கள். ஆயிரம்பேர் அதிகரிக்க எஞ்சியோர் விலகிவிடுவார்கள். இதன் வழியாகவே நவீன இலக்கிய அறிமுகம் அடைந்து வாசிப்பவர்களும் பலர் உண்டு
பத்தாண்டுகளில் மிகமிக நிறைவான ஓர் அறிவுச்சூழல் இதைச்சூழ்ந்து உருவாகியிருக்கிறது – எந்த ஊடக ஆதரவும் இல்லாமல். இன்று தமிழகத்தில் நவீன இலக்கியம் -தீவிர அறிவுத்துறை சார்ந்த மிகப்பெரிய ஊடகம் இந்த தளம்தான்.
ஆகவே வெறுப்பாளர்கள் எப்போதுமே குமுறிக்கொண்டு இருக்கிறார்கள். இப்போதுகூட வாசகர்கடிதம் எழுதும் ஒருவரை இன்ஸ்டகிராமில் அல்லது லிங்கடினில் அடையாளம் கண்டுகொண்டால் வசைகள் அனுப்பும் வழக்கம் தமிழ்ச்சூழலில் நீடிக்கிறது. சமீபத்தில் ஒருவருக்கு ‘பார்ப்பன சங்கி நாயே’ என்று தொடர்ந்து வசை. அவர் அழாக்குறையாக மின்னஞ்சல் போட்டார் – ‘சார் நான் ஒரிஜினல் துளுவ வெள்ளாளன் சார்!”
எழுதுகிறார்கள் என்பது. இரவு கதை பிரசுரமாகி காலையில் கண்விழித்தால் கடிதங்களைப் பார்ப்பது உற்சாகமானது