கொரோனா காலம் என்பதனால் உள்ள வேறுபாடு என்பது வெளிநாடுகளில், குறிப்பாக அமெரிக்காவில் வசிக்கும் வாசகர்கள் நிறைய எழுதுகிறார்கள் என்பது. இரவு கதை பிரசுரமாகி காலையில் கண்விழித்தால் கடிதங்களைப் பார்ப்பது உற்சாகமானது. கொரோனோ இல்லாவிட்டால் இவர்கள் எழுதியிருக்க மாட்டார்கள். இவர்களில் பலர் முறையாக இலக்கியம் பயின்று ஆய்வுப்பணி செய்பவர்கள் என்பதனால் அவர்களின் பார்வை புதிதாக இருக்கிறது
கடிதங்கள் நிறைய வருகின்றன. ஆனால் மொத்தமாகவே ஏறத்தாழ முந்நூறுபேர்தான் எழுதுபவர்கள். இந்த தளத்தின் வாசகர்களில் இருநூறில் ஒருவர் என்ற விகிதம். மிகமிகக்குறைவு என்றே சொல்லவேண்டும்.
இதன் வாசகர்களின் எண்ணிக்கையும் பரப்பும் நீங்கள் எண்ணுவதை விட பலமடங்கு அதிகம். பொதுவாக இலக்கியச்சூழல், சமூகவலைத்தளச் சூழலுக்கு வெளியே இருக்கும் வாசகர்கள் முக்கால்பங்குக்கும் மேல்.
நகைமுகன் மற்றும் லூப் , எனக்கு மிகவும் பிடித்த கதைகளாக லூப் மற்றும் நகைமுகன் இரண்டையும் சொல்வேன்