Puliketh Travel Novel Part 2

3 13
Avatar for rmktamilsoft
4 years ago

பார்க்கத்தான் காரமாக தெரிந்தது ஆனால் அவ்வளவு காரம் இல்லை. நூடுல்ஸ் சற்று சவுக் சவுக் என்றிருந்தது. ஆனால் அனைத்தையும் சேர்த்து சாப்பிடும் போது மிகவும் ருசியாக இருந்தது. இந்த பாட் தாய் (pad thai) தாய்லாந்தின் அனைத்து பகுதிகளிலும் கிடைக்கும். தெரு ஓரங்களில் வண்டிகளில் விற்றுக் கொண்டிருப்பார்கள். இது தாய்லாந்தின் தேசிய உணவு வகைளில் ஒன்று. இதற்கு பல வரலாறு உள்ளது. நான் கேள்விப்பட்டது வரை இதன் base ஆகிய நூடுல்ஸ் சீனாவில் இருந்து வந்ததென்றும் உலகப்போரின் போது உணவு தட்டுப்பாடு ஏற்பட்டது. அப்போது கிடைத்தவற்றை ஒன்று சேர்த்து செய்ததுதான் இந்த பாட் தாய் (pad thai). சிங்கப்பூரில் கிட்டத்தட்ட அனைத்து food court-லும் கிடைக்கும்.

அறை தயாரானதும் அங்கு சென்றோம் எங்கள் அறை குன்றின் கீழ் இருந்தது. உண்மையில் அது அறை இல்லை அது ஒரு கூடாரம். மிகவும் அழகாக இருந்தது . என் பிள்ளைகளுக்கு மிகவும் பிடித்திருந்தது.ஏசி இல்லை ஒரேயொரு பேன் மட்டும்தான் இருந்தது. ஏசி கூடாரத்திற்கு மூன்று மடங்கு கட்டணம் அதிகம். எங்களுக்கு அது தேவையில்லை என்று தோன்றியது.

மாலை வரை ஓய்வு நாங்கள் தூங்கினோம். என்ன செய்யலாம் என்று எண்ணிக் கொண்டிருந்த போது ஹோட்டலின் வரவேற்ப்பாளர் நடக்கும் தூரத்தில்தான் ரவாய் கடற்கரை என்றார். நாங்கள் கடற்கரையை அடையும்போது தண்ணீர் உள்ளே சென்றிருந்தது (low tide). அழகான கடற்கரை அரை மணி நேரம் கடற்கரையில் நடந்தோம். இதமான காற்று மற்றும் வெள்ளை மணல் புத்துணர்ச்சியைக் கொடுத்தது. இருட்ட ஆரம்பித்தது சாப்பிட்டுவிட்டு கூடாரத்திற்கு செல்வதாக முடிவு செய்து உணவகத்தைத் தேடினோம். கடல் உணவு விடுதியை தேர்வு செய்து அங்கு சென்றோம். எனக்கு அங்கு சாப்பிட்டதில் பிடித்தது oyster தான். oyster-னா தமிழ என்னன்னு தெரியல.

ஆலிவ் எண்ணெயில் பூண்டும் சோயா சாசும் கலந்து சுடப்பட்டது. அற்புதமான சுவை . மிகவும் மெதுவாக ரசித்து சாப்பிட்டேன். பணியாளரிடம் இது எங்கிருந்து வந்தது என்று கேட்டேன் அவர் அருகில் இருக்கும் தீவிலிருந்து என்றார். நான் சிங்கப்பூரில் இந்த அளவிற்கு சுவையாக oyster சாப்பிட்டதில்லை. ஹிரோஷிமாவில் சாப்பிட oyster தான் நான் இதுவரை சாப்பிட்டதிலேயே சிறந்தது.

4
$ 0.50
$ 0.50 from @KingTamil
Avatar for rmktamilsoft
4 years ago

Comments

Kamma Karayila Umma kodukkava ena ne koduthuvach

$ 0.00
4 years ago

Nila kayuthu neram nall neram anthivanam sivakka vanthu adu mayile

$ 0.00
4 years ago

கடல் உணவு விடுதியை தேர்வு செய்து அங்கு சென்றோம். எனக்கு அங்கு சாப்பிட்டதில் பிடித்தது oyster தான். oyster-னா தமிழ என்னன்னு தெரியல varigal

$ 0.00
4 years ago