கரீம் ஒரு அற்புத பிறவி.அவன்தான் மற்ற சிறைவாசிகளுக்கு நேரம் சொல்லி. அவனால் நேரத்தை துல்லியமாக சொல்ல முடியும். தொழுகை நேரத்தை அவனே மற்றவர்களுக்கு சொல்கிறான் .அவனது சத்தமும் கொஞ்சம் கொஞ்சமாக நிசப்தமாகிறது.ஒரு விதத்தில் கரீம் தான் அவர்களின் நம்பிக்கையும் கூட. அவனது இறப்பு அவர்களைப் பெரும் துயரத்தில் ஆழ்த்துகிறது .மற்றொருவன் ஆச்சார் அவன் ஒரு முன்னாள் போர் வீரன். எப்போதும் அடுத்தவர்களை வசைபாடிக்கொண்டே இருக்கிறான். அவனுக்கு எழுத படிக்க தெரியாது. அவனுக்கும் சலீமிற்கும் நடக்கும் உரையாடல் பல விசயங்களை நாம் புரிந்து கொள்ள உதவும். ஆச்சாருக்கு சலீம் குரானை வாசிக்க கற்றுக்கொடுக்கிறான். அவனும் கற்க ஆரம்பிக்கிறான். இருந்தாலும் அவனது வெறுப்பு குறையவே இல்லை.சலீம் கூறுவது போல "பசியைவிட வெறுப்பே அங்கு பலரைக் கொன்றது".
மற்றொரு கதை சலீமிற்கும் அவனது தந்தைக்குமான உறவு. அவனது தந்தை சலீம் தன் மகனே அல்ல என்கிறான்.தன் மகன் ஒரு போதும் அரசருக்கு எதிராக போராடுபவன் அல்ல என்கிறார். சலீமை பொறுத்தவரை அவனது தந்தை அரச மாளிகை கோமாளி.அவனது அம்மாவும் சரி அவனும் சரி அந்த மனிதனை வெறுக்கவில்லை.சிறையில் சலீம் அனைவரையும் அன்பு செய்ய கற்றுக்கொள்கிறான்.இக்கதையில் ஒளியின்மைற்கு முக்கியான பங்கு உண்டு. ஒளி இல்லாததால் ஒருவன் எவ்வாறு உளவியல் பூர்வமாக பாதிக்கப்படுகிறான் என்பதை இக்கதை தெள்ளத்தெளிவாக கூறுகிறது. ஒரு சிறிய வெளிச்சம் கூட அவர்களை பல மடங்கு ஊக்கப்படுத்துகிறது.
கவிதையுமாய் அவரது எழுத்து என்னுள் பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தியது. பிறகு