மீண்டும் ஒருமுறை திருத்தமாய் அவற்றைக் கற்றுக்கொள்வோம். தமிழ் என்பதை முதற்சொல்லாகக் கொண்டே இவற்றை விளக்கிவிடுகிறேன்.
ஒரு சொல்லை அடுத்து வல்லின எழுத்துகளில் தொடங்கும் சொல் தோன்றினால், முதற்சொல்லின் ஈற்றில் வல்லின மெய் மிகுவது வலிமிகுதல் ஆகும்.
கசடதபற என்னும் வல்லின எழுத்து வரிசைகளில் ட,ற ஆகிய எழுத்து வரிசைகளில் சொற்கள் தொடங்குவதில்லை. அதனால் அவை கழிய, கசதப ஆகிய நான்கு வல்லின எழுத்துகளில் தொடங்குபவை ஒரு சொல்லை அடுத்து வந்தால்... வல்லின மெய்யெழுத்து மிகுமா, மிகாதா என்பதை முடிவு செய்யும் அறிவைப் பெறவிருக்கிறோம்.
எழுத்துகளால் ஆகியது, பொருள் தருவது - இதைச் சொல் என்கிறோம். பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என்று சொற்கள் வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன.
தமிழும் கலாச்சாரமும் என்று விரித்துப் பொருள்கொள்ளும்படி ஆசிரியர் எழுதியிருக்கிறா