எடுவர்டோ கலேனோ லத்தீன் அமெரிக்க எழுத்தாளர். கால்பந்து எழுத்தாளர்களிலேயே அதிகம் விரும்பி வாசிக்கப்படுபவர் .நான் அப்படிதான் அவரின் "Soccer in Sun and Shadow" புத்தகத்தை வாசித்தேன். எள்ளலும் கவிதையுமாய் அவரது எழுத்து என்னுள் பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தியது. பிறகு அவரின் "Memory Of Fire " புத்தங்களை வாசிக்க ஆரம்பித்தேன். அப்புத்தகங்களை முடிப்பதற்குள் நான் இந்த புத்தகத்தைப் நூலகத்தில் பார்த்தேன். உடனே எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். வாசித்து முடித்தவுடன் தோன்றியது இந்த புத்தகத்தை வாங்கி என் மகளுடன் வாசிக்கவேண்டுமென்று.
நமக்கு வரலாறென்பது வெற்றிபெற்றவர்களின் பார்வையில் இருந்துதான் எப்போதும் சொல்லுப்பட்டதுண்டு.இது சற்று வித்தியாசமான உலக வரலாறு. வருடத்தின் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு வரலாற்று நிகழ்வை கலேனோ விவரிக்கிறார்.பெரும்பாலான நிகழ்வுகள் எனக்கு தெரியாதவை. ஒடுக்கப்பட்டவர்களின் வரலாறு இது. மனித வாழ்வின் அவலத்தை மிக எளிதாக எல்லோரும் சிந்திக்கும் அளவிற்கு எழுதி இருக்கிறார். மீண்டும் மீண்டும் லத்தீன் மற்றும் மாயா நாகரீகத்திற்கு செல்கிறர். எவ்வளவு உண்மைகள்!
கலேனோ இந்த புத்தகத்தில் எல்லாவற்றையும் பற்றியும் எழுதியுள்ளார். காலனித்துவம் ,ஏகாதிபத்தியம் ,முதலாளித்துவம் , பெண்ணுரிமை என அனைத்தையும் சிறு வரலாற்று நிகழ்வுடன் விவரித்துள்ளார்.
நான் இந்த புத்தகத்தைப் நூலகத்தில் பார்த்தேன். உடனே எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன்