காலம். கையில் பணம் இல்லை.
பிடித்த பொருளை வாங்க முடியவில்லை.
இப்போது எல்லாம் இருக்கிறது.
மனம் இல்லை
இன்று வேகமாக ஓட வேண்டுமென்று முடிவு செய்திருந்தேன் அதுபோல வேகமாகவே ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட ஒரே வேகத்தில் ஓடி முடித்தேன். மனதில் வேறு ஏதும் வரவில்லை. சுவாசத்தில் தான் எண்ணம் முழுதும் இருந்தது.
பச்சை சிக்னல் எங்கெல்லாம் வந்ததோ அந்த வழியிலேயே ஓடினேன். கேம்பங்கான் முதல் பிடோக் வரை சற்று செங்குத்தான பாதை. மிகவும் சிரமப்பட்டு ஓடினேன். கட்டிட வேலைகள் நடந்து கொண்டிருந்தன. "Church of Our Lady of Perpetual Succour " வந்தவுடன் தொப்பியை கழட்டிவிட்டு "அருள் நிறைந்த மரியே" சொல்லிவிட்டு ஓடினேன். இந்த கோவிலுக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்புண்டு.
இது சற்று வித்தியாசமான உலக வரலாறு. வருடத்தின் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு வரலாற்று நிகழ்வை கலேனோ விவரிக்கிறார்.