3
30
நான் அதை உண்மையென்று உணர்ந்தேன். ஆனால் வேறு வழியில்லை என்று சொன்னேன். “வேறு வழியில்லை என்று நானும் சொல்லவருகிறேன். அவர்களை கலைத்தால் இப்பணி நிகழாது என்பது இருக்கட்டும். கலைப்பதை அவர்கள் எதிர்த்தால் என்ன செய்வது? அவர்களை எவரைக்கொண்டு கலைப்பது? அவர்களைக் கொண்டே அவர்களை அடக்க முடியுமா என்ன? இந்தப் பெருந்திரளில் இன்று ஏவலரும் காவலரும் குடிகளும் கலந்து ஒன்றாக இருக்கிறார்கள். இங்கு அரசப்படை ஒன்று இல்லை என்பதை மறக்கவேண்டியதில்லை” என்றார் சுருதன். நான் ஒன்றும் சொல்லாமல் திகைப்புடன் பார்த்துக்கொண்டிருந்தேன். பின்னர் நெடுமூச்சுடன் “உண்மை” என்றேன்.
தீயவை நிகழுமென்ற அச்சம் என்னை ஆட்டிப்படைத்துக்கொண்டே இருந்தது. எக்கணமும்