எப்போது? எதையும் உசாவவில்லையே?” என்றார். சாத்யகி “எங்கே செல்வதற்கு?” என்றார். “நேற்று மாலை நான் அவனிடம் பேசினேனே” என்றார் கிருதவர்மன். “இம்முடிவு சற்றுமுன்னர் எடுக்கப்பட்டது” என்றேன்.
“என்ன நடந்தது?” என்று சாத்யகி கேட்டார். “அவர் சற்றுமுன் நிமித்திகரை அழைத்து எங்கு செல்லக்கூடும் என்று கேட்டார். அவர்கள் கூறியதும் அக்கணமே ஆணை பிறப்பித்துவிட்டார்” என்றேன். சாத்யகி “அறிவிலி!” என்றார். “அந்நிமித்திகரின் வடிவில் எவர் வேண்டுமானாலும் வந்து அந்த எண்ணத்தை சொல்லமுடியும். ஒவ்வொன்றுக்கும் குலமூத்தார், நிமித்திகர், படைத்தலைவர், அமைச்சர், குடித்தலைவர் என்ற ஐந்து தரப்பினரின் சொல் கேட்காமல் அரசன் எந்த முடிவையும் எடுக்கக்கூடாது. ஐம்பேராயம் தலைக்கொள்ளலே அவன் கடன்” என்றார்.
மேய்ச்சல் விலங்குகள் விரைவிலேயே விளையாடுவதை நிறுத்திக்கொள்கின்றன