நான் அவர்களுக்காகக் காத்து அங்கேயே பாலையின் ஒரு சிறு மணல் மேட்டில் அமர்ந்திருந்தேன். அத்தனைக்கு அப்பாலும் அவர்கள் இருவரும் விளையாட விரும்புவதைப் பற்றி எண்ணிக்கொண்டேன். மேய்ச்சல் விலங்குகள் விரைவிலேயே விளையாடுவதை நிறுத்திக்கொள்கின்றன. வேட்டை விலங்குகள் எத்தனை வளர்ந்தாலும் விளையாடிக்கொண்டே இருக்கின்றன. போர்வீரர்கள் விளையாடாமல் இருக்க முடியாது. துரத்தாமல், வெல்லாமல் அமைய முடியாது.
தொலைவில் அவர்கள் இருவரும் வருவதை கண்டேன். ஒருவரோடொருவர் பேசிச் சிரித்துக்கொண்டு இணையாக இரு புரவிகளில் ஊர்ந்து வந்தனர். அவர்களுக்குப் பின்னால் செம்புழுதிப் படலம் சிறகென எழுந்திருந்தது. அவர்களின் புரவிகளுக்கு இருபுறமும் முயல்கள் சேர்த்து கட்டப்பட்டு தொங்கின.
முதுமையின் கஷ்டத்தை கூறி, அந்த முதிய காலத்தில் நீ வந்து என்னை காக்க வேண்டும் என்கிறார் அருணகிரி