பாலையில் சில நாட்களாக வேட்டை உணவைத்தான் உண்டு கொண்டிருந்தோம். வேட்டைக்கென வில்லவர்களை இரவுகளில் பாலையில் அனுப்பி முயல்களையும் பாலைவனப் புல்வெளியில் வளரும் சிறிய மறிமான்களையும் கொண்டுவந்தோம். பொதுமக்களுக்கு பாலை நிலக்கழுதைகளும் பறவைகளும் கூட உணவாயின. துவாரகையில் இருந்து காலொடிந்தும் உடல் புண்பட்டும் வெளியே வந்த புரவிகளை உண்ணலாம் என்று சாம்பனின் அணுக்கரான அசுரகுலத்தவர் சொன்னார்கள். ஆனால் அவ்வாறு குதிரையை உண்ட பின் நம்மிடம் இசைந்திருக்கும் குதிரைகளை ஆளமுடியாது, அவை முரண்கொள்ளும் என்றார் அமைச்சர் ஸ்ரீகரர்.
4
30
திங்கள், அரவு, நதி சூடிய பரமர் (சிவன்) தந்த குமாரா, மேய்ச்சல் விலங்குகள் விரைவிலேயே விளையாடுவதை நிறுத்திக்கொள்கின்றன