எனில் இவர்களை நன்கு அறிந்த எவரோ வழி காட்டுகிறார்களா? ஆணைகளை எவரேனும் பிறப்பிக்கிறார்களா?” என்று சுருதன் கேட்டார். ”இல்லை. இத்திரளின் முகப்புக்குச் சென்று அதை நான் கவனித்தேன். எவரும் வழிகாட்டவில்லை. ஆணைகள் எதுவும் எழவும் இல்லை. ஆனால் வழி அறிந்த சிலர் தன்னியல்பாகவே முன் நிரையை அடைகிறார்கள். அவர்கள் உடல்மொழியிலும் அசைவுகளிலும் இருக்கும் உறுதி பிறர் அவரை தொடர வைக்கிறது. அவர்கள் இந்த நீளுயிரியின் உணர்கொம்புகளாக தங்களை மாற்றிக்கொண்டுவிட்டிருக்கிறார்கள்” என்றார் முத்ரன். “எனில் ஒன்றும் செய்வதற்கில்லை. அத்திசையை தொடர்ந்து செல்வது மட்டும்தான் வழி” என்றார் சுருதன்.
ஆனால் ஃபானுவிடம் அதையே மாற்றிச் சொன்னார். “நாம் சென்றுகொண்டிருக்கும் வழியை நான் கண்காணித்துக்கொண்டிருக்கிறேன், அரசே. உரிய ஆணைகளை திரள்முகப்புக்கு அனுப்பிக்கொண்டும் இருக்கிறேன். இதுவரை சரியான திசையிலேயே சென்றுகொண்டிருக்கிறோம்…” ஃபானு “எவரேனும் மாற்றுச் சொல் உரைத்தார்களா?” என்றார். “இல்லை, அனைவரும் திரளிலேயே மிதப்பவர்களாக வந்துகொண்டிருக்கிறார்கள். கிருஷ்ணைக்கு தெரிந்திருக்கும், பிரஃபாச க்ஷேத்ரம் செல்லும் வழிதான் இது என்று.” ஃபானு “எனில் நன்று… நமக்காக ஊழ் தெரிவுசெய்த இடம்போலும் இது” என்றார். பின்னர் “இனி எவரும் நான் பிழையாக அழைத்துச் செல்கிறேன் என்று சொல்லிவிட முடியாதல்லவா? இது மக்களின் தெரிவு” என்றார்.
குற்றச்சாட்டை மதுரை மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் வைத்துள்ள ஒரு செய்தியும் பத்திரிகைகளில்