காவலர்தலைவன் இரண்டு ஒற்றர்களை அழைத்துவந்தான். முதிய ஒற்றரான முத்ரன் சுருதனை வணங்கினார். “முத்ரரே, இன்று துவாரகையின் அரசராக விளங்கும் ஃபானுவின் பொருட்டு என் ஆணை இது. இந்தப் பாதையைப் பற்றி உமக்குத் தெரிந்ததை சொல்க!” என்றார் சுருதன். “ஆம், நான் இப்பகுதியில் நெடுங்காலம் பணியாற்றியிருக்கிறேன். இந்நிலத்தை நன்றாகவே எனக்குத் தெரியும்” என்றார் சுருதன். “எனில் கூறுக, இப்போது நாம் செல்லும் வழி சரிதானா? இவர்கள் தங்களை எப்படி வழிநடத்திக்கொள்கிறார்கள்? உளம்போன போக்கில் கால்களை செலுத்துகிறார்களா?” என்றார். “இல்லை இளவரசே, அதைத்தான் நான் விந்தையுடன் நினைத்துக்கொள்கிறேன். வழியை நன்கு தேர்ந்து அறிந்திருக்கும் நான் எப்படி தெரிவு செய்வேனோ அதே போன்று திசையும் நிலமும் தெரிவு செய்து அவர்கள் சென்றுகொண்டிருக்கிறார்கள்” என்றார் முத்ரன்.
4
23
அந்நிலத்தில் பரவியிருந்தார்கள் என்றாலும் அவர்களிடையே ஒருங்கிணைப்பு முற்றாக இல்லாமலாகிவிட்டிருந்தது