3
18
பிரஃபாச க்ஷேத்ரத்திற்கான பயணம் முதலில் கட்டற்ற ஒற்றைப்பெருக்காக இருந்தது. எவரும் எவரையும் வழி நடத்தவில்லை. எவரும் தலைமை அளிக்கவும் இல்லை. ஒவ்வொருவரும் தங்களுக்குள்ளிருந்து எழுந்த ஆணையொன்றுக்கு அடிபணிந்தவர்கள்போல சென்றனர். திரள் நீரென்று ஆவதை முன்பும் பலமுறை பார்த்திருந்தவன் நான் என்றாலும் அப்போதும் திரளுயிர் என்ற ஒன்று உருவாகிவிட்டதுபோல் தோன்றியது. அந்தப் பெருக்கு ஒரு பாம்புபோல் ஒற்றை உடலாக மாறியது. சரிவுகளில் நெளிந்திறங்கியது. மேடுகளில் சுழன்று ஏறியது. தேங்கி இரண்டாகவோ மூன்றாகவோ ஒழுகி வழி கண்டடைந்து நின்று ஒருங்கிணைந்துகொண்டது.
இங்கு நிலப்பகுதியை நன்கு அறிந்த ஒற்றர் சிலர் என் அறிதலில் உள்ளனர்